Skip to content
Post Views: 1,656
இருவரும் போனை எடுத்து நலமாக இருப்பதாக சொல்ல..
ஆதிநாரயணன் உடனே கிளம்பி வந்திருந்தவர், இருவரை பார்த்த பின்னே நிம்மதி அடைந்தவர், “வீட்டிற்கு போகலாம் மாப்பிள்ளை” என்று அழைக்க..
Advertisement
“இல்ல அங்கிள் டாக்டர் மார்னிங் போக சொல்லி இருக்காரு” என்று கூற.. “சரி” என்றவர்,, இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியில் சென்று அமர்ந்திருந்தார்..
Advertisement
ஸ்ரீஜெயம் அன்பிடம் “லோகேஷன் சேர் பண்ணு” என்றவர் போனை வைத்திருக்க..
Advertisement
“நீ எங்க இருக்க மாமா” என்று அன்பு மெசேஜ் பண்ணியிருந்தான்..
Advertisement
“இலங்கை” என்று மெசேஜ் அனுப்பி இருந்தார்..
ஸ்ரீஜெயத்திற்கு லெகேஜனை அனுப்பிவிட்டு பார்கவிடம் “பாத்தீயா என் மாமாவை எவ்வளவு வேகமா கிளம்பி இருக்காரு” என்று அன்பு சிரிக்க..
“இப்பா எல்லாமே போனிலே இருக்கு, செய்தி பார்க்கிறது, டிக்கெட் எடுக்குறது, அப்பறம் என்ன எல்லாமே நம்ம கையில இருக்கு, அப்போ எல்லாமே வேகமா தானே நடக்கும்,, ஸ்ரீப்பாவுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும், அது தான் நமக்கு ஒன்னும் நடந்தவுடனே அவரால இருக்க முடியல கிளம்பி வர்ரார்”…
“இப்போவெல்லாம் என்னவிட உன்ன தான் ஸ்ரீப்பா ரொம்ப பிடிக்கும்” என்றான்..
அவளோ “அதெல்லாம் இல்ல ஸ்ரீப்பா நம்ம எல்லார் மேலயும் பாசமா இருப்பார்” என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே..
அன்பு போன் அடித்தது “ரூம் நம்பர் என்னடா” என்றார் ஸ்ரீஜெயம்..
“62 டு மாம்ஸ்”என்றான்..
“சரி வை” என்றவர்.
அவர்கள் இருக்கும் அறைக்கு நோக்கி வர.. ஆதிநாரயணனை பார்த்தவர் “பிள்ளைகள் எப்படி இருக்காங்க” என்றார்..
இவ்வளவு விரைவாக இந்தியாவில் இருந்த வந்தவரை பார்த்து ஆச்சரிய பட்டவர், பாசம் எவ்வளவு தூரம் இருந்தாலும் இலுத்து வந்து விடும் போல என்று உணர்ந்தவர், “நல்லா இருக்காங்க” வாங்க என்று உள்ளே அழைத்து சென்றார்..
பார்கவி பார்த்த ஸ்ரீஜெயம் “பாப்பா எப்படி இருக்கடா”.. என்றார்..
“ஸ்ரீப்பா” என்றவள் அவரை அணைத்துக்கொண்டு அனைத்தையும் சொல்ல..
“அழதாட பாப்பா அப்பா பாத்துக்கிறேன்” என்றவர்.. அன்புவை பார்த்து முறைக்க..
அவனோ வாய்விட்டு சிரித்தான்..
“சிரிக்காதடா பிள்ளைய பயம் பண்ணி வச்சு இருக்க, பாவம் பிள்ள எப்படி அழுவுற பாரு” என்றவரை..
ஆதிநாரயணன் பார்கவியை கண்யிமைக்காமல் பார்த்திருந்தாள். தன்னிடம் இப்படி நடந்து கொள்ளவில்லை பார்கவி.. எவ்வளவு உரிமையோடு ஸ்ரீஜெயத்திடம் பேசுகிறாள், இது தான் இரத்த பந்தமோ என்று நினைத்தவர், ஸ்ரீஜெயம் ஊருக்கு செல்லும் முன் பார்கவியை பற்றி அவரிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்க..
“அடி பட்டது எனக்கு ஹாஸ்பெட்டல் இருக்கிறது நானு ஆன உங்க பொண்ண மட்டும் விசாரிக்கிறீங்க மாம்ஸ்” என்றான் அன்பு..
“உனக்கு என்னடா நல்லா தானே இருக்க, என் பிள்ளை தான், கஷ்டபட்டு உன்ன நெனச்சு அழறா”என்றவர்.. சோர்ந்து இருந்த அன்புவை பார்த்து “எல்லாரும் சாப்டீங்களா சாப்பாடு வாங்கிட்டு வரவா”… என்றார்..
அன்பு “கொஞ்ச நேரம் ஆகட்டும் மாம்ஸ் டாக்டர் கிட்ட கேக்கனும் நிறைய தண்ணீ குடிச்சேன்”.. என்று சொல்ல..
அன்பு அருகில் வந்த ஸ்ரீஜெயம் அவனை அணைத்துக்கொண்டு அழுதார், “ஏன்டா எல்லாரையும் பயம் பண்ணிட்டா, நம்ம உயிர் முக்கியம் இல்லையா, உனக்கு ஏதாவது ஆச்சுன்னு நாங்க என்ன பண்ணுவோம்”.. என்று சிறுபிள்ளை போல மருமகனை அணைத்து கண்ணீர் விட..
“இதுக்கு பார்கவியே பரவாயில்ல போல, மாம்ஸ் நான் நல்லா இருக்கேன்”..
“போடா” என்றார் வேதனையான குரலில்..
கதவை தட்டி விட்ட வந்த நர்ஸ், “அன்பு சார் டாக்டர் உங்கள இத சாப்பிட சொன்னார்” என்று கஞ்சி உள்ள டப்பாவை அவனிடம் தர.
பார்கவியை பார்த்தவள் “மேம் இது உங்களுக்கு” என்று ஒரு கவரை தந்துவிட்டு செல்ல..
“யாருப்பா அந்த டாக்டர் இப்படி அக்கரையா உணவு எல்லாம் குடுத்துவிடுறார்” என்றார் ஸ்ரீஜெயம்..
“அவருதான் அன்புவை தண்ணீல இருந்து தூக்கிட்டு வந்தார் ஸ்ரீப்பா” என்றாள்..
“அப்படியா!” என்றவர்.. “வா பார்கவி டாக்டரை பார்த்து நன்றி சொல்லிட்டு வரலாம்” என்று ஸ்ரீஜெயம் கிளம்ப..
ஆதிநாரயணன் “நான் மாப்பிள்ளையோடு இருக்கேன் நீங்க போயிட்டு வாங்க” என்றார்.
“சரி” என்று இருவரும். டாக்டர் அறை நோக்கி செல்ல..
டாக்டர் ரொம்ப பிசியாக இருந்தார் அவருக்காக நிறைய நோயாளிகள் காத்திருக்க..
வைத்தியம் பார்த்துக்கொண்டு இருந்தான் மருத்துவன்..
ஒரு மணி நேரம் கழித்து இவர்களை உள்ளே அனுப்ப..
முதலில் பார்கவி உள்ளே செல்ல, அவளின் பின்னாடி ஸ்ரீஜெயம் வந்தார்..
பார்கவியை பார்த்த மருந்துவன் “வாங்க சிஸ்டர்”என்றவன் அவளின் பின்னாடி வந்த ஸ்ரீஜெயத்தை சரியாக பார்க்காமல் “வாங்க சார்” என்றிருந்தான்..
பார்கவி சென்று டாக்டர் முன் போட பட்டிருந்த சேரில் அமர..
ஸ்ரீஜெயம் கதவின் பக்கத்திலே நிற்பதை பார்த்த டாக்டர் அவரை நிமிர்ந்து பார்க்க.. ஆச்சரிய பட்டு போனான்..
தனக்கு இன்னும் 10 வயது கூடினால் எப்படி இருப்பேனோ அப்படியே ஒருவரை பார்த்தவன்.
என்ன அதிசயம் என்று எழுந்து வந்தவன் “வாங்க சார்” என்று மீண்டும் அழைக்க..
ஸ்ரீ ஜெயம் டாக்டரையே பார்த்து நிற்க.. பார்கவி இருவரை பார்த்தவள் “இரண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க” என்றாள்..
“ஆமாம் சிஸ்டர் எனக்கே ஆச்சரியமா இருக்கு, இந்த உலகத்தில் 7 பேர் ஒரே மாதிரி இருப்பாங்க என்று சொல்லுவாங்க, நாங்க இரண்டு பேரும் மீட் பண்ணிட்டோம் இன்னும் 5 பேர் எங்க இருக்காங்களோ” என்று சிரிக்க..
ஸ்ரீஜெயம் சேரில் அமர்ந்து டாக்டரை பார்த்து “நன்றி டாக்டர் என் மருமகனை காப்பாற்றியதுக்கு” என்று சொல்ல..
“அது எங்க கடமை சார், அன்புக்கு எங்க இலங்கையே நன்றி சொல்லும் பாருக்க, அவர் உயிரை கூட பெருசா நினைக்காமல் எல்லார் உயிரையும் காப்பாற்றி இருக்காரு, நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்” என்றான்..
இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு, “டாக்டர் உங்க பேர் என்ன?”..
“நான், ஸ்ரீஹரிஹரன்” என்றான்..
அவன் பேரை கேட்டவுடன், ஸ்ரீஜெயத்திற்கு இந்த பெயரை தன்னவள் நமக்கு ஆண் குழந்தை பிறந்தாள் ஸ்ரீ ஹரிஹரன், என்று பெயர் வைக்கனும், பெண் பிள்ளை பிறந்தாள் ஸ்ரீஹரிணி என்ற பெயர் வைக்கனும், உங்க பெயரை சேர்த்துதான் நம்ம பிள்ளைகளுக்கு பேர் வைக்கனும் என்று சொல்லியது நினைவு வர..
“அங்கிள், அங்கிள்” என்று ஹரி அழைப்பதை கேட்டு சுயநினைவு வந்தவர்..
“நல்ல பேருப்பா உன் பேரு, உன் அம்மா, அப்பா உன்னை நல்லா வளத்து வச்சு இருக்காங்க”என்றவர்..”அம்மா, அப்பா என்ன பண்ணுறாங்க தம்பி” என்றார்..
“அப்பா இல்ல, அம்மா யோகா டிச்சர்” என்றான்..
“நல்லது டாக்டர் தம்பி, நீங்க எப்பையும் நல்லா இருக்கனும் பா” என்றார்.
“தாங்யூ அங்கிள்” என்றவன்..
பார்கவியை பார்த்து “நீங்க எங்க அம்மா முக ஜாடை மாதிரி இருக்கீங்க, ஒரு நாள் எங்க அம்மாவை பார்க்க எங்க வீட்டுக்கு வரனும்” என்றான்..
“கண்டிப்பா வர்ரேன் டாக்டர்” என்று பேசிவிட்டு இருவரும் கிளம்ப..
ரூம்கதவை தட்டி விட்டு, உள்ளே வந்தா ஆதிநாரயணன் பார்கவியை பார்த்து “எவ்வளவு நேரம் ஆச்சு பாரு” என்க..
டாக்டரிடம் “எங்க அப்பா” என்று பார்கவி ஆதிநாரயணனை அறிமுகம் படுத்திவைக்க”..
“ஹாய் சார்” என்ற டாக்டரையும், ஸ்ரீஜெயத்தையும் மாறி, மாறி பார்த்தவர்.. இரண்டு பேரும் ஒன்று போல இருப்பதை பார்த்தவர்.
“நீ, நீ ” என்றவர்.. மனதில் ஏதோ தோன்ற,, “உன் பேரு என்னபா” என்றார் ஆதிநாரயணன்..
“ஸ்ரீஹரி ஹரன் அங்கிள்”.. என்றான் மருத்துவன்..
“ஸ்ரீ,,யா!” என்றவர்..
“உங்க அம்மா பேரு!”..
“அம்மா மஞ்சு, மஞ்சும்மா” என்றான் சிரித்துக்கொண்டே..
“ஏன் அங்கிள் எங்க அம்மாவை உங்களுக்கு தெரியுமா”?..
ஆதிநாரயணனுக்கு எங்கோ மணியடித்தது, உடனே கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தவர்..
“அம்மா போட்டோ இருக்க” என்று கேட்க..
எதற்கு என்பது போல் பார்த்தவன்..
தன் மொபைலில் உள்ள தாயின் போட்டோவை ஆதிநாரயணிடம் காட்ட…
போட்டோவை பார்த்த ஆதிநாரயணன் தாவி அணைத்திருந்தார் ஸ்ரீ ஹரியை.. என்ன என்பது போல் அனைவரும் பார்த்து நிற்க..
ஸ்ரீஜெயத்திடம் டாக்டர் ஹரியை காண்பித்து, மஞ்சு பையன் உங்க இரத்தில் பிறந்தவன் என்று அறிமுகம் படுத்தி வைக்க..
ஸ்ரீஜெயம் அதிர்ச்சியாக ஹரியை பார்க்க.. அவனும் அவரை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்..
பார்கவி ஆதிநாரயணிடம் “என்னப்பா சொல்லுறீங்க என்றவள், மஞ்சு அம்மா இருக்காங்களா என்றாள்”…
“ஆமாம் மா உன் கூட பிறந்தவன் இவன், இவனுக்கு ஹார்ட் பீட் சரியா துடிக்கல.. ஐசியுவுல இருந்தான்.. உங்க அம்மா மஞ்சுவுக்கு இரண்டு குழந்தை பிறந்தது தெரியாது,, உன் தாத்தாவுக்கு பயந்துகிட்டு ஐசியுவுல இருந்த இவன்ன மட்டும் தூக்கிட்டு ஊரவிட்டு போயிட்டா நாங்க தேடாத இடம் இல்லை.. என்றவர்..
ஸ்ரீஜெயம் முன் பார்கவியையும், டாக்டர் ஹரி ஹரனையும் நிற்க வைத்த ஆதிநாரயணன்.. “எனக்கு மஞ்சுவுக்கு கல்யாணம் ஆகல..
உங்க மஞ்சு, உங்களுக்காக இரண்டு உயிரா சுமந்த பெத்து வச்சு இருக்காங்க, இதோ இவங்க இரண்டு பேரும் தான் உங்க பிள்ளைகள்” என்று அவர் முன் நிறுத்த..
“மஞ்சு” என்று கதறி அழுதார் ஸ்ரீ ஜெயம், அவர் கதறலை தாங்க முடியா பிள்ளை,, “அப்பா” என்று அழைத்து அணைத்திருக்க..
தனக்கு யாருமே இல்லை என்றிருந்தவருக்கு , பொக்கிஷம் போல் பிள்ளைகள் கிடைத்திருக்க.. பொக்கிஷத்தை கொடுத்தவள் எங்கே?..
“என் பாப்பு எங்கடா இருக்கா”?….
error: Content is protected !!