Skip to content
Post Views: 684
“ஏண்டி காலேஜ் முடிஞ்சு ஒரு ஒரு மாசம் ஆகுது சும்மா வீட்ல கடந்து ஒரு வேலை செய்யாம நைட் ஃபுல்லா ஒரே போன்ன நோண்டிட்டு இருக்க வேண்டியது. காலையில எழுப்புனா எந்திரிக்காம தூங்க வேண்டியது இதே உனக்கு பொழப்பா போச்சு இப்ப வந்து உங்க அப்பனுக்கு குளிக்க வெண்ணி வச்சு குடுடி” என்று தனது மகள் கீதாவை கத்திக் கொண்டிருந்தாள் சுதா
“ஏம்மா காலையிலேயே கத்திட்டு இருக்க இந்தா வரேன்” என்றவளின் சத்தம் மட்டும் வந்ததே தவிர அவள் வரவில்லை அதில் கடுப்பான சுதா, “எரும மாடு ஏழு கழுதை வயசாயிட்டு இன்னும் எந்திரிக்காம என்னடி பண்ற இப்ப இங்க வர போறியா இல்லையா. இவ வயசுல புள்ள கல்யாணம் பண்ணி எவ்ளோ அழகா குடும்பத்தை பார்க்குது இவளும் தான் இருக்காளே. இந்த சோம்பேறிய கல்யாணம் பண்ணி அடுத்து வீட்டுக்கு அனுப்பலாம்னு பார்த்தாலும் இந்த ஆளு அசைய மாட்டேங்குறான். இவளை எப்படி தான் கர சேக்க போறேனோ ஆண்டவா ” என்று அவளின் வீட்டு வாசலில் நின்று உள்ளே பார்த்து கத்தி கொண்டு இருந்தவளிடம்,
“அக்கா இங்கே இந்திரா அவங்க வீடு எங்க இருக்கு” என்று தனது முன்னே நின்று கேட்டவனை திரும்பிப் பார்த்தாள் சுதா.
ஹீரோ ஹோண்டா பைக்கில் நீட்டாக அயர்ன் பண்ணிய சட்டையை இன் பண்ணி நீட்டாக தலை சீவி பார்ப்பதற்கு ஆபிஸர் போல இருந்தவனை பார்த்து, “இந்திரா வீடு அதுதான் தம்பி’ என பக்கத்து வீட்டை கைகாட்டி விட்டு, “நீங்க யாரு பாக்க ஆபிஸர் போல இருக்கீங்க எதுக்கு அவள தேடி வந்து இருக்கீங்க” என்றாள் யோசனையுடன்
Advertisement
“அது ஒன்னும் இல்லக்கா பைனான்ஸ்ல இருந்து வரேன் அவங்க எங்ககிட்ட லோன் வாங்கிட்டு ரெண்டு மாசமா கட்டாம இருக்காங்க அதான் என்னன்னு கேட்டுட்டு போகலாம் வந்தேன்”என்றான் அவன்.
“ஓ லோன் ஆபீஸரா எந்த லோன்னு ”
“ஆமாக்கா கேபி லோன்”
Advertisement
“கேபி னா அந்த கந்தன் பைனான்ஸ் தான”என்றாள் சந்தேகமாக
Advertisement
“ஆமா க்கா”என்று அவன் செல்ல
“அது சரியான பிராடு கம்பெனி ஆச்சே அதுல போய் இவ எப்படி லோன் வாங்குனா. நான் சாரா பைனான்ஸ்ல தான இவள லோன் வாங்க சொன்னேன் எப்படி அங்க போய் லோன் வாங்குனான்னு தெரியலையே” என்று புலம்பிக்கொண்டு எதிர்வீட்டில் நடப்பதை எட்டிப் பார்த்தாள்.
Advertisement
“டேய் கண்ணா எப்படி இருக்க ஹாஸ்டல்ல இன்னைக்கு என்ன சாப்பாடு” என்று சமையல் வேலை செய்துக் கொண்டு ஹாஸ்டலில் தங்கி படிக்கும் சபாஷிடம் போனில் கேட்டாள் இந்திரா.
“நான் நல்லா இருக்கேன் மா இன்னைக்கும் வழக்கம் போல இட்லி சாம்பர் தான் மா. நீங்க காலையில என்ன பண்ணுனீங்க ”
“ இப்பதான் நான் எந்திரிச்சேன் காப்பி போட்டு இருக்கேன். காலையில சாப்பாடுக்கு நேற்று மீந்து போன சாதம் கொஞ்சம் இருக்கு அது கூட ஏதாவது தொட்டுக்க பாத்துக்க வேண்டியது தான்”
“என்னம்மா நீ பழச சாப்பிடாதான்னு உனக்கு எத்தனை தடவை சொல்ல. தனியா இருக்கிறதுனால உன் இஷ்டத்துக்கு ஒரு நேரம் மட்டும் சாப்பாடு பொங்கி மூன்று நேரமும் வச்சு சாப்பிடுறியா. அப்படி பண்ணாதமா உன் உடம்புக்கு எதாவது வந்துச்சுன்னா என்ன பண்ணுவ தனியா வேற இருக்க உடம்ப பாத்துக்கோ மா” என்றான் கண்டிப்புடன் சுபாஷ்.
“சரிடா சோறு பொங்கி சாப்பிடுறேன் போதுமா உடனே ஓவரா பேசாத”
“சரிமா சூடா பொங்கி தின்னுங்க. இந்த வீக் எண்டு வர பாக்கேன் என்ன இப்போ வைக்கவா டைம் ஆச்சு காலேஜ் போக”
“ சரிடா உடம்ப பாத்துக்கோ நான் போன வைக்கிறேன் ஃப்ரீ டைம்ல கால் பண்ணு சரியா”
“ சரிமா பாத்துயிரு தனியா இருக்கிற மாதிரி ஃபீல் ஆச்சுன்னா அக்காவ ரெண்டு நாள் கூப்பிடுக்கோ இல்லனா நீ அவ வீட்டுக்கு போ சரியா பாய் மா”என்றான் சுபாஷ்.
“சரி டா பாய்” என்று போன் காலை ஆப் செய்துவிட்டு, “இந்த பையன் வரவர பெரிய மனுஷன் மாதிரியே பேசுறான். ம் இப்பதான் இவங்க ரெண்டு பேரையும் கைல தூக்கின மாதிரி இருக்கு அதுக்குள்ள ரெண்டு பேரும் ரெண்டு திசைக்கு போய்டாங்க. முருகா என் பிள்ளைகளுக்கு எந்த கஷ்டமும் கொடுக்காம அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில நல்ல ஆரோக்கியத்தோட சந்தோசமா வச்சுக்கோ. எனக்கு வேற எதுவும் தேவையில்லை இதை மட்டும் எப்படியாவது நிறைவேற்றி தந்தரு கடவுளே” என்று மனதார வேண்ட அப்போது,
“ அக்கா இந்திரா அக்கா வீட்ல யாராவது இருக்கீங்களா கொஞ்சம் வெளிய வாங்க” என்று அழைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தாள்.
“ யாரு தம்பி நீ காலையிலேயே என் பேர சொல்லி கூப்பிட்டு இருக்க யார் தம்பி நீ” என்றாள் தனது வீட்டில் முன்னே நின்ற புதியவனை பார்த்து
“ நீங்க தான் இந்திரா வா”
“ ஆமா நான் தான் இந்திரா எதுக்கு என்ன கூப்பிடுற”
“ ஓ நீங்க தான் அதுவா அக்கா நாலு மாசத்துக்கு முன்னாடி கேபி பைனான்ஸ்ல லோன் எடுத்தீங்களே ஞாபகம் இருக்கா உங்களுக்கு”
“ ஆமா லெட்சுமி அக்காவுக்கு எடுத்துக் கொடுத்தேன் அதுக்கு என்ன தம்பி”
“அதுக்கு என்னவா ஒரு மாசம் மட்டும் தான் லோன் டியூ கட்டிருக்கீங்க. அதுக்கு அடுத்து உள்ள முன்னு மாசம் கட்டவே இல்ல. என்ன நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க லோன் எடுத்தா ஒழுங்கா கட்ட மாட்டீங்களா என்னம்மா இது உங்கள நம்பித்தான நாங்க காசு கொடுக்கோம் நீங்க கரெக்டா கட்ட வேண்டாமா”
“ சார் என்ன சொல்றீங்க அதெல்லாம் கரெக்டா லட்சுமி அக்கா கட்டியிருப்பாங்களே”
“ யாரு லட்சுமி என்ன லட்சுமி நீங்க தானே லோன் வாங்குனீங்க நீங்க கையெழுத்து போடாம உங்க பேருக்கு லோன் வந்து இருக்குமா”
“ சார் நான் தான் லோன் வாங்குனேன் லட்சுமி அக்காவுக்கு தான் நான் எடுத்து கொடுத்தேன் சார் அந்த காச”
“ எனக்கு அதெல்லாம் தெரியாது மா. உங்களுக்கு லோன் எடுத்து கொடுத்த ஆளு மாறி போய்ட்டாங்க வேற ஊருக்கு. இப்ப நான் புதுசா வந்திருக்கேன். நீங்க ரெண்டு மாசமா டியூ கட்டல அதைக் கேட்க நான் வந்து இருக்கேன் நீங்க எப்ப கட்டுவீங்க அதை மட்டும் சொல்லுங்க மிச்சபடி வேற பேச்சு வேண்டாம்”
“சார் நான் எடுக்காத லோனுக்கு நான் ஏன் சார் காசு கட்டணும். நான் லட்சுமி அக்காவுக்கு தான் எடுத்து கொடுத்தேன் அவங்க தான் கட்டுவாங்க நீங்க லட்சுமி அக்கா கிட்ட என்னன்னு போய் கேளுங்க” என்றாள் கோவமாக இந்திரா.
“ இங்க பாருங்க லட்சுமினு எனக்கு யாரையும் தெரியாது. இங்கே லோன் உங்க பேர்ல தான் இருக்கு நீங்க சைன் பண்ணி உங்க அக்கவுண்ட்ல தான் காசு ஏறி இருக்கு நீங்க யாருக்கு எடுத்து கொடுத்தீங்கணு எங்களுக்கு தேவையே இல்லை. எங்களுக்கு தேவை காசு நீங்க தான் கட்டணும் உங்க காசுக்கு நீங்கதான் பொறுப்பு எப்ப தரீங்க அதை மட்டும் சொல்லுங்க தேவையில்லாம என்கிட்ட பேசாதீங்க” என்றான் கரராக அவன்.
“ சார் என்ன சார் சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல. லட்சுமி அக்கா தான் சார் காசு கட்டு வாங்க எனக்கு தெரியாது சத்தியமா அந்த காச நான் வாங்கவே இல்ல சார் நம்புங்க’
“ இங்க பாருங்க நீங்க பொய் சொல்றீங்களா உண்மை சொல்றீங்களா அதெல்லாம் எங்களுக்கு தேவையே இல்ல உங்க பேர்ல லோன் இருக்கு நீங்க தான் கட்டணும் நான் ஈவினிங் வருவேன் அதுக்குள்ள லோன் அமௌன்ட எடுத்து வைங்க சரியா ஈவினிங் குள்ள காசு வரலைன்னா நான் இப்ப பேசுற மாதிரி டீசண்டா பேசமாட்டேன் அப்ப எப்படி பேசுவேன்னு எனக்கே தெரியாது. ஒரு லட்ச ரூபாய் லோன் வாங்கிட்டு கட்டாம டிமிக்கி குடுக்கலாம்னு பாக்குறீங்களா விடமாட்டேன். ஊருக்கு எப்படி நாலு பேர் சேர்ந்து கிட்டு நம்ம தாழிய போட்டு அறுக்காங்க. காலையிலேயே இவங்களோட ஒரே ரோதனையா போச்சு. அந்த மேனேஜர் பச்ச தண்ணி வாயில வைக்க விடமடக்கான். ஈவினிங் குள்ள காசு வரலைன்னா அப்ப தெரியும் செய்தி” என்று கத்தி விட்டு அடுத்த கஸ்டமரை பார்க்க சென்றான் அவன்.
அவன் செல்லும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுதா, “ ஏய் இந்திரா என்ன இது அவன் என்னென்னமோ சொல்லிட்டு போறான். உன்ன நான் சாரா லோன் ஆபீஸ்ல மட்டும் தானே லோன் வாங்க சொன்னேன் நீ எப்படி கேபி லோன்ல மாட்டின” என்றாள் தலையில் கை வைத்து அமர்ந்திருந்த இந்திராவிடம்
“ என்னத்த சொல்ல அக்கா என் பொண்ணு கல்யாணத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் தேவைப்பட்டுச்சு. அந்த லட்சுமி அக்கா கிட்ட போய் கேட்டேன். அவங்க தான் சாரா லோன் ஆபிஸ்ல கேட்டா அவ்ளோ அமௌன்ட் கிடைக்காதுன்னு சொல்லி இந்த லோன் ஆபிசுக்கு என்ன கூட்டிட்டு போனாங்க”
“சரி அப்ப எடுத்த அமௌன்ட்க்கு லோன் கட்ட வேண்டியது தான”
“எங்க அக்கா நான் ஒரு லட்ச ரூபா லோன் எடுத்தேன் நான் எடுத்தது வெறும் 20000 லோன் தான். அதுக்கு கரெக்டா 3ஆம் தேதி கட்டிடுறேன்”
“என்னடி சொல்ற அவன் எதோ ஒரு லட்ச ரூபாய் லோன் எடுத்திருக்கனு சொல்லிட்டு போறான் யாருக்கு எடுத்துக் கொடுத்த எப்படி ஒரு லட்ச ரூபாய் லோன் உனக்கு தந்தாங்க ஃபர்ஸ்ட்”
“ அதாங்க எனக்கும் புரியல நான் லட்சுமி அக்காக்கு ஒரு லோன் எடுத்து கொடுத்தேன் அதுவும் 20000 லோன் தான் இவன் ஏதோ ஒரு லட்சம் லோன் சொல்லிட்டு போறான் எனக்கு ஒண்ணுமே புரியலக்கா”
“ சரி சரி பொலம்பாத வா லட்சுமி அக்கா வீட்ல போய் என்னன்னு விசாரிப்போம்”
என்று இருவரும் அவளின் லட்சுமி வீட்டை நோக்கி சென்றனர்.
அங்கே லட்சுமி வீட்டின் முன் பெரிதாக பூட்டு தொங்க அவளின் வீட்டின் முன்பு ஆறேழு பெண்கள் கூட்டமாக நின்று கத்திக்கொண்டு இருந்தனர்.
error: Content is protected !!