Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 22 3

காரில் பின் சீட்டில் பார்கவியும், அன்புமும்  அமர்ந்திருக்க.. இரண்டு பேரும் ஸ்ரீஜெயத்தை பார்த்து   மௌனமாக இருந்தனர்..

ஒரு மணி நேரம் முன்பு நடந்ததை.. பார்கவி அன்பிடம்  சொல்ல..



Advertisement

 தன் மாமனை  கட்டி அணைத்து அழுதான் மருமகன்..

“மாம்ஸ், மாம்ஸ் உனக்கு குடும்பம் இருங்கு மாம்ஸ். உன் பெண்ணை  நான் கல்யாணம் பண்ணி இருக்கேன், நான் எவ்வளவு  பெரிய பாக்கிய  சாலி” என்றவன்..

Advertisement

பக்கத்தில்  நின்று  இருந்த  பார்கவியை அணைத்தவன். “என்  மாமா  பொண்ணுடி நீ”  என்று அவளின்  நெத்தியில்  முத்தமிட்டு..

Advertisement

டாக்டர் ஹரியை பார்ப்பு  “மாப்பிள்ளை உனக்கு  நான் மச்சான்” என்று கூறி அணைத்தான்.. “என் மாம்ஸ் பையன் நீ, என் உயிரில் பாதி நீ” என்று  பேச..

Advertisement

ஹரிக்கு  அவ்வளவு  சந்தோஷம்.. தனக்கு  தாய் மட்டுமே என்று  இருந்தவனுக்கு இன்று தந்தை, கூட பிறந்தவள், உயிர் தோழன் போல மச்சான் கிடைத்து இருக்க. அவனுக்கு ஒரு நெகிழ்ச்சி ஆன தருணம். அனைவரும்  மனநிறைவான   சந்தோஷத்தில் மஞ்சுவை பார்க்க சென்று கொண்டிருந்தனர்…

ஹரிவேலை பார்க்கு இடத்தில் இருந்து மஞ்சு இருக்கும் இடம் மிக தூரம்,, விடியல் காலை 5  மணி போல வந்து சேர்ந்தனர் அந்த புத்தர்  கோவிலுக்கு..

ஹரி காரை நிறுத்தியவுடன்.. அனைவரும் கீழே இறக்க.. “இங்கே தான் அம்மா இருக்காங்களா” என்று பார்கவி கேட்க..

 “அம்மா 5.30 மணிக்கு யோகா கிளாஸ் எடுக்க வந்து இருப்பாங்க.. வீட்டுல இப்போ இருக்க மாட்டாங்க”. என்றான் ஹரி..

“வாங்க அம்மாவை போய் பார்க்கலாம்”  என்று பார்கவி கிளம்ப..

அவளின் கையை பிடித்து இலுத்த அன்பு,,”முந்திரி கொட்ட வா” என்று அவளை இலுந்தவன், “அங்கே பாரு” என்று ஸ்ரீஜெயத்தை  காண்பித்தவன்.. “25  ந்து  வருசமா என் மாமா  ஒரு  பொண்ணையும் பார்த்தது  இல்லை, இப்போ தான் கடவுள் கருணை காட்டி  என் அத்தை கிடைச்சுருக்காங்க   அவங்க  ரெண்டு  பேரும்  முதல்ல சேர்ந்து பேசிக்கட்டு நீ வா” என்று அவளை பிடித்து இலுக்க..

“எப்படி  போகனும் ஹரி”  என்றார் ஸ்ரீஜெயம்..

“அதோ பா, அந்த பில்டிங் யோகா மையம் போட்டு இருக்குள  அங்க தான், அம்மா இருப்பாங்க  போங்க”.. என்றான் ஹரி..

“நீங்களும் வாங்க நாம  எல்லாரும் போகலாம்”..

“மாம்ஸ்  25 ஞ்சு  வருசம் கழிச்சு   அத்தையை  பார்த்து  சைட்டடிக்க போற,  போய் நல்லா  அத்தையை பார்த்து சைட்டடிச்சுட்டு கூட்டிட்டு வா, நாங்க எதுக்கு கரடி மாதிரி, நாங்க வீட்டுக்கு போகலாம்” என்க..

பார்கவி ஸ்ரீஜெயத்தை பார்த்து நிற்க.. “வா இட்லி  போகலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு  காரில் ஏறி ஹரியோடு  வீட்டிற்கு செல்ல…

ஸ்ரீஜெயம்  வேகமாக  நடந்து  அந்த  கட்டிடத்திற்கு  சென்றார்..

அந்த பெரிய ஹாலில்  ஆண்கள், பெண்கள் என் நூற்றுக்கு மேற்பட்டவர் இருக்க.. ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்கு  தனி இடம் என்பது  பிரித்து வைத்திருக்க..

ஆண்கள் இருக்கும்  இடத்திற்கு சென்று  அமர்ந்து கொண்டார் ஸ்ரீஜெயம்.. அனைவருக்கும்  உட்கார்ந்து யோகா செய்ய கனமான விரிப்பு விரித்து இருக்க.. அதில் சென்று அமர்ந்து கொண்டார்…

அமர்ந்து கொண்டே மஞ்சுவை அவர்  தேட.. அவள் இவர் கண்ணீல் படவே இல்லை..

அந்த வளாகம் ஐநூறு, ஆயிரம் பேர் அமர கூடிய பெரிய ஹால் போல் இருக்க.. எல்லா இடங்களிலும்  புத்தர் தவம் செய்யும்   படம்  போல் வரைய பட்டிருந்தது.. சில  யோகா  ஆசனம் செய்வது போல் சில படங்கள் வரைந்திருந்தது..

அனைவரும் பேசிக்கொண்டே இருக்க..

 “வாழ்க வளமுடன்,, வாழ்க வளமுடன்”  என்று  மைக்கில் தன்னவள் குரல் கேட்டு மேடை பக்கம்  திரும்பி பார்க்க.. அந்த  பெரிய மேடையில்  மைக் முன்னே அமர்ந்திருந்தாள் மஞ்சு..

அவள் வாழ்க வளமுடன் என்று சொன்னவுடன்.  அனைவரும் அவளுக்கு திருப்பி வாழ்க வளமுடன் என்று சொல்லி விட்டு அமைதியாகி விட..

மஞ்சுவா இது என்று சொல்லும் அளவிற்கு இருந்தாள். அவளுக்கு 40  வயதுக்கு மேல் இருக்கும், ஆனால்  அவளை பார்த்தாள் 25 அல்லது 30  வயதுக்கு  மேல்  சொல்ல  முடியாது ,,அந்த  அளவிற்கு இளமையாக  சுடிதார் அணிந்து இருந்தாள் மஞ்சு..

மஞ்சு மைக்கில் பேச தொடங்கினாள்.. ஸ்ரீஜெயம்  கண்களை மூடி அவரின் பாப்புவின் குரலை கேட்க ஆரம்பித்தார்..

“அனைவருக்கு  இனிமையான  காலை வணக்கம்,,  இங்கே யோகா  செய்ய வந்தவர் அனைவரும், வாழ்க வளமுடம்,  அவர்களின்  குடும்பம் வாழ்க வளமுடம்,, இந்த உலகத்தில் உள்ள அனைவரும் வாழ்க வளமுடன்” என்றவன் “இறை வாழ்த்து” என்று ஒரு பாடலை பாடியவள்..

“நமது மூச்சையை யே கவனிப்போம்,  அனைவரும் கண்களை மூடி.. நாடி சுத்தி செய்வோம்,. இடது கை சின் முத்திரையையும், வலது கையையில்  நாசிகா முத்திரையை  வைத்து,  வலது நாசி வழியே மூச்சை இலுத்து, இடது பக்கமாக  மூச்சை இலுத்து விடவும்..  பின்பு இடது பக்க மூச்சை இலுத்து வலது பக்கமாக விடவும் இதே போல  10 முறை   செய்யவும்.. என்று சொன்னவள்.

அடுத்தது,  கைபயிற்சி”,  என்று மேடையில்   அமர்ந்து கொண்டு  சொல்ல, மஞ்சுவின் பக்கதில் இருந்த  பெண்  கை பயிற்சி செய்து   காண்பிக்க.. அதே போல் தெரிந்தவர் அவர்களாகவே செய்ய, புதிதாக வந்தவர் மேடையில் செய்வதை  பார்த்து செய்ய.. அடுத்தது கால் பயிற்சி என்று சில யோகா சனம் செய்ய. அடுத்தது,  கண்பயிற்சி, நரம்பு தசை மூச்சுப்பயிற்சி, மகராசனம், காயகல்பம், இன்னும் சில பயிற்சிகளை செய்யவர்..

“ரிலாக்ஸ்”  என்று மஞ்சு சொல்ல அனைவரும் மல்லாக படுத்து கொள்ள. சில தியான   பாடலை பாட  அனைவருக்கு அவ்வளவு  புத்துணர்சியாக இருக்க..

அனைவரும்    தியானம் முடிந்து மெல்ல கண்ணை திருந்து,,  பார்க்க உடம்பு  ஏதோ லேசானது  போல் இருக்கும்..

“அனைவருக்கும்  இந்த நாள் பல நன்மைகள் நிறைந்த நாளாக  அமையட்டும் வாழ்க வளமுடன்”  என்று ஒரு அறைக்கு சென்று விட..

ஸ்ரீஜெயம்  மஞ்சுவை தேடி அருகில் வருவதற்குள் அவள்  அறைக்கு  சென்று விட்டாள்..

பின்பு  மைக்கில் ஒரு பெண்  “அமைதி  வேண்டுபவர், மஞ்சு அம்மாவிடம் பேச, உங்களின்  பெயரை குடுத்து விட்டு காத்திருக்கவும் என்று சொல்ல..

ஸ்ரீஜெயம் மைக்கில் பேசிய பெண் பிள்ளையிடம்  மஞ்சுவை  பத்தி விசாரிக்க..

“மஞ்சு அம்மா  வா உட்காருங்க,, அம்மா கிட்ட பேசலாம்” என்றவள்.. ஸ்ரீஜெயதிடம் “மஞ்சு அம்மா கிட்ட தனியா பேசலாம்,  அமைதிவேண்டுபவர் என்று இங்கு, ஒரு அறை இருக்கு அங்கே சென்று மஞ்சு அம்மாவிடம் உங்க குறைகளை கதைக்கலாம், அம்மா நீங்க சொன்னதை இந்த பிரபஞ்சம் கிட்ட சொல்லுவாங்க, உங்க பிரத்தனை நிறை வேறும் சரியா”,, என்றவள்  “உங்க பேரு என்ன? ஊரு என்ன?,, உங்க போன் நம்பர்,  என்று அனைத்தையை கேட்டு எழுதியவள்.. மேம் கூப்பிடுவாங்க..

நீங்க உங்க குறைகளை மஞ்சுமா விடம் சொல்லலாம்,, அவங்க கேட்டுப்பாங்க.. சிலருக்கு பதில் சொல்லுவாங்க.. சிலருக்கு பதில்  சொல்ல மாட்டாங்க.. அவங்க வாழ்க வளமுடன் என்று அம்மா சொன்னவுடனே வெளியில் வந்துடனும்” என்று அனைவரிடமும் கூற..

“நீங்க நாளாவது ஆளு சார்” என்று   அப்பெண் ஸ்ரீஜெயத்திடம்  சொல்லி  சென்று விட.

அனைவரும் உள்ளே சென்று வெளியே வரும் பொழுது மலர்ந்த  முகத்தோடு வர.. குழப்பமாக அமர்ந்திருந்தார்   ஸ்ரீஜெயம்.

“சார் நீங்க போகலாம்” என்று  ஒரு பெண் வந்து சொல்ல..

உள்ளே சென்றார்  ஸ்ரீஜெயம். அந்த ரூம்பில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை.  ஒரு பெண்  உள் அறையில் இருந்து வந்தவள்.. வாங்க என்று  ஒரு அறைக்கு அழைத்து சென்றவள்.. “இங்கே உட்காருங்க”.. உங்க குறையை சொல்லுங்க அம்மாவிற்கு கேட்கும்”  என்று சொல்லி சென்று விட..

ஸ்ரீஜெயம் சுற்றி பார்த்தவர்,, யாரோ பக்கத்தில்  அமர்ந்து இருப்பது போல உணர . சுத்தி பார்க்க  அவரின் முன் ஒரு தடுப்பு கதவு போல் இருக்க..

அந்த  கதவின் பக்கத்தில்  தியானத்தில்  அமர்ந்திருந்தாள், மஞ்சு..

அவன்  வந்ததை உணர்ந்தவள்,, சொல்லுங்க “உங்க பேர் என்ன?….

இஷ்டம் இருந்த  சொல்லலாம் இல்லைனாலும் பரவாயில்ல”. என்றவளிடம்.

“என் பெயர் ஸ்ரீஜெயம், என்னை பிடிச்சவங்க என்னை ஸ்ரீ ன்னு கூப்பிடவாங்க.. நான்”.. என்றவர் “ஒரு பெரிய தவறு செய்து விட்டேன்,,  ஒரு  பொண்ணு வாக்கு குடுத்துட்டு, அந்த வாக்க  காப்பாத்த  தவறிட்டேன்,,”..

மஞ்சுவுக்கு  அந்த  குரலை  கேட்டவுடனே இது என் ஸ்ரீ யின்னு  குரல் போலாவே இருக்கு என்று நினைக்க..

அவனே அவன் பெயர் சொல்லி பேசிக்கொண்டு இருப்பதை கேட்டுக்கொண்டிருந்தாள்..

அவனின் குரல் கேட்டு என் ஸ்ரீ வந்து விட்டார்  என்னை தேடி, என்றவளின் கண்ணீல்  இருந்து கண்ணீர் வடிய… அழ கூடாது என்று அவளை அவளே சமாதானம் பண்ணி கொண்டு,,  “என்ன வாக்குன்னு  நாங்க தெரிஞ்சுக்கலாமா”  என்றவளின் குரல் கமர..

“அவள கல்யாணம் பண்ணீங்கிறேன் சொல்லிட்டு  நான் துபாய் போயிட்டேன்,, அவ சூழ்நிலை  எனக்கு தெரியாது…

நான் ஊருக்கு வந்து அவள பத்தி விசாரிச்சப்போ.. அவளுக்கு கல்யாணமாகி, பெண் குழந்தை பிறந்து  இறந்துட்டான்னு  சொன்னாங்க,,   அன்னைக்கே நான்  பாதி செத்துட்டேன்,,  அவ கல்யாணம் பண்ணி நல்லா வாழ்ந்து உயிரோட இருந்திருந்தாவது, நான் நிம்மதி இருந்திருப்பேன்,,   அவள் இந்த உலகத்தில் இல்ல எங்கே போன, என்னை எப்படி மறந்து இன்னொரு வாழ்க்கை ஏற்று, குழந்தை பிறந்து  இறந்துட்டான்னு நெனச்சு கவலையோட  வாழ்ந்துட்டு இருந்தேன்…

அவ போன, அவ மேல வச்ச என் காதல் போகுமா,  போகாது.. என் மஞ்சுவை  நான் இன்னும் என் மனசுல சுமந்துட்டு  இருக்கேன்.. எங்க வீட்டுல என்னை  கல்யாணம் பண்ண எவ்வளவோ முயற்சி பண்ணாங்க,, என் மஞ்சுவை தவிர வேற எந்த பொண்ணையும் தொடது இந்த கை,,  என் மஞ்சு  இறந்துட்டா, என்னை விட்டு போயிடாடா  என்று நெனச்சு  வாழ்ந்துட்டு இருந்தேன்.. நேத்துதான் என் மகன் ஹரியை பார்த்தே அப்படியே என்னை போலவே  இருக்கான் என் மகன்,,  அப்போதான் எனக்கு விசயம் தெரிஞ்சது.. என் மஞ்சு சாகல உயிரோட இருக்க என்று..”என் மஞ்சு எனக்கு கிடைப்பாளா”  என்று ஸ்ரீ ஜெயம்  கண்ணீரோடு கேட்க..

“வாழ்க  வளமுடன்” என்று தனது பேச்சை முடித்து கொண்டாள் மஞ்சு, ஸ்ரீஜெயம் “பாப்பூ” என்று  அழைக்க.. கண்ணீரோடு  அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்  மஞ்சு……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!