அவள பார்த்து அப்பறம் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாங்க..டிர்ப்ஸ் ஏத்தி செக் பண்ண, அவ மாசமா இருக்குறது தெரிஞ்சது..
மஞ்சு அப்பா என் பொண்ணா? இப்படி என்று அதிர்ச்சியானவர்
அவன் யாருன்னு உன் பொண்ணுகிட்ட கேளு?.. அவனை வெட்டி பலி போடணும் போ என்று மஞ்சு அம்மாகிட்ட சொல்ல ..
Advertisement
மஞ்சுவின் தாய்க்கு ஒன்றும் புரியவில்லை.. தன் மகளா, நம்ப முடியவில்லையே, அவள் யாரிடம் பேசமாட்டாளே ஆண்களை கண்டால் இரண்டடி தல்லி நிற்பாள், பின்பு எப்படி என்று கோபம் வர.. உன் வயித்துல உள்ள பிள்ளைக்கு யார் அப்பன் சொல்லுடி. என்று மஞ்சுவின் தாயும், தந்தையும் அவளை அடிக்க.. வலி தாங்க முடியாமல் கத்தியவளின் குரல் கேட்டு டாக்டர் வந்தார்..
Advertisement
ஏன் மா மாசமா இருக்குற பொண்ண அடிக்கிறீங்க?..
Advertisement
அவ கர்பத்துக்கு யார் காணரமுன்னு சொல்ல மாட்டேங்குறா,, “கண்டிப்பா அவன் வேற சாதிக்கார பயதான்”, இல்லண்ணா இவ சொல்லியிருப்பா, சொல்லுடி என்று மீண்டும் அடிக்க போக, அடிப்பதை தடுத்த டாக்டர் அவங்க ஏற்கனவே சாப்பிடாம வீக் இருக்காங்க,, இதுல நீங்க வேற அடிச்சா குழந்தைக்கு பாதிக்கும் என்று டாக்டர் சொல்ல..
Advertisement
“இந்த குழந்தையே வேண்டாம் டாக்டர்.. கருவிலே கலச்சுருங்க”.. என்று மஞ்சுவின் தந்தை சொல்ல..
“இல்ல சார் அது முடியாது 5 மாசம் மேல ஆச்சு.. குழந்தை நல்லா வளந்துருக்கு, கழச்ச இரண்டு உயிருக்குமே ஆபத்து” என்றார் டாக்டர். சாகட்டும் என்று மனதில் நினைத்தவர்.. அவளை கொல்ல மனம் வரவில்லை.. மீண்டும் “சொல்லு” என்று மிரட்ட.. கல் போல அமர்ந்து இருந்த மகளை பார்த்தவர்.
இவளை இனி என்ன செய்வது.. என்று யோசித்த, மஞ்சுவின் தந்தை. வெளியில் சொல்ல முடியாது. அவட்ட இன்னொரு வாட்டி கேளு.. அவ வயித்துல வளருர பிள்ளைக்கு யார் அப்பன்னு, நம்ம ஆளுகள இருந்த கண்டிப்பா கல்யாணம் பண்ணி வைப்பேன்.. இல்ல வேறு பயலுக இருந்த இவளை சேர்ந்து வெட்டி தாமிரபரணி ஆத்து போடுறேன். என்க..
இது வெளியில் தெரிந்தால். எவ்வளவு அவமானம். தன் இருமகன்களை நல்ல இடத்தில் பெண் எடுத்து திருமணம் முடிந்து பேரபிள்ளைகளோடு ஓரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்..
டக்கென்று இலங்கை உள்ள உறவுகாரநண்பனின் நினைவு வர..
உடனே அவருக்கு போன் செய்து கேட்க.. அவர் சித்த வைத்திய சாலை வைத்திருப்பதால்.. இலங்கைக்கு அழைத்து வரும் மாரு சொல்ல..
இலங்கையில் தன் நண்பன் மகனுக்கு மஞ்சுவை கல்யாணம் பண்ணபோறோம், என்று ஊர்காரர்களிடம் சொல்லி விட்டு, மகன்களின் எல்லாம் முடிவு ஆனது வாங்க, பேரபிள்ளைகள் சிறுவராக இருக்க. யோகாவும் நிறைமாதமாக இருப்பதால். மகன்களிடம் சொல்லி விட்டு, இலங்கைக்கு மஞ்சுவை அழைத்துவந்தார்..
மஞ்சுவுக்கு தந்தையிடம் கூற தோன்றியது ஸ்ரீஜெயம் தான், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா என்று.. நான் கூறினால் உடனே ஸ்ரீ ஜெயம் வீட்டிற்கு சென்று சண்டை போடுவார், பஞ்சாயத்தை கூட்டுவார்,, ஏற்கனவே இரு தெரு மக்களுக்கு ஆகாது , ஸ்ரீஜெயம் இப்போ இங்கே வர முடியாது, அவர்கள் வீட்டிலும் கல்யாணம் முடியாத பெண் பிள்ளை இருக்க. எது நடந்தாலும் என்னோடு போகட்டும் என்று அமைதியாக இலங்கை வந்து சேர்ந்தாள்..
ஆதிநாரயணனின் தந்தை சித்த வைத்திய சாலை வைத்திருப்பதால்.. மஞ்சு அங்கேயே தங்கி விட்டாள்.. ஆதிநாரயணனும், அவர் தந்தையும் குழந்தையின் தந்தை யார் என்று கேட்க.. சொல்ல மாட்டேன் என்றிருந்தாள் மஞ்சு…
மஞ்சுவின் தந்தை சித்த வைத்தியசாலையிலே மகளை விட்டு விருதுநகர் வந்து விட்டார்.. தன் மகளை ஏமாற்றியது யார் என்று கண்டு பிடிக்க.. ஆனால் அவரால் கண்டு பிடிக்க முடியவில்ல..
மஞ்சுவிடம் வந்து கூறுவார்.. நீ சொல்லலன என்ன? குழந்தை முகத்தை வச்சே சொல்லியிருவேன் அவன் அப்பன் யார் என்று சொல்ல..
மஞ்சுவுக்கு பயம் கூடியது. எங்கே என் பிள்ளை அவர் சாடையில் பிறந்து விட்டால், கண்டு பிடித்து விடுவாறே என்று. எண்ணி வருத்தத்தில் இருந்தாள்..
ஆதிநாரயணின் தந்தை மஞ்சுவின் நாடி பிடித்து பார்த்ததில் மஞ்சுவுக்கு ரெட்டை பிள்ளைகள் என்று கண்டு கொண்டவர்.. கருவில் உள்ள ஒரு குழந்தைக்கு துடிப்பு சரியாக துடிக்க வில்லை என்று உணர்ந்தவர்.. குழந்தை பிறந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து, அவளை தனது ஆசிரமத்தில் வைத்து பார்த்துக்கொள்ள..
ஆதிநாரயணன் மஞ்சு தனியாக இருக்கும் போது பார்த்திருக்கிறார்,, அவள் அடிக்கடி யாரிடமோ ஸ்ரீ, ஸ்ரீ என்று அழைத்து தனியாக பேசியதை கேட்டிருக்கிறார்..
அவளின் காதலன் பெயர் ஸ்ரீயாக இருக்குமோ என்று நினைத்திருந்தார்..
மஞ்சுக்கு பிரவச வலி வந்து. ஹாஸ்பெட்டலில் சேர்த்திருக்க..
இரண்டு குழந்தைகள் என்பதால் அவளுக்கு நார்மல் டெலிவரி ஆகாது, அதனால மஞ்சுவுக்கு ஆப்ரேஜன் பண்ணி குழந்தைகளை எடுத்தனர்.. முதலில் பிறந்தது பார்கவி தான்.. ஆதிநாரயணனின் தந்தை ஒரு அவசர வேலையாக வைத்திய சாலையில் இருக்க.. பார்கவியை முதலில் வாங்கி ஆதிநாரயணன் தான்.. பச்ச குழந்தையை வாங்கியவருக்கு சொல்ல முடியாத சந்தோஷம்.. அவரின் தாய் சிறு வயதில் இறந்திருக்க.. அவர் ஒருவர் மட்டுமே வீட்டில். இன்று பார்கவியை கையில் வாங்கியவருக்க அந்த பெண் குழந்தையை பார்த்து ஏனோ சொல்ல முடியாத பாசம்.. அடுத்த ஐந்து நிமிடம் கழித்து ஆண் குழந்தையை பிறந்திருக்க. ஆதிநாரயணனுக்கு அவரின் தந்தை ஏற்கனவே இரண்டு குழந்தைகள் என்று சொல்லி இருக்க, குழந்தை எப்படி இருக்கு என்று கேட்க,, “குழந்தைக்கு ஹார்ட் பீட் மெதுவாக துடிக்கு சார், டூ டேஸ் இங்குபெட்டரில் இருந்தா சரியாகிரும்,” என்று பிறந்த ஆண் குழந்தையை தூக்கிகொண்டு ஐசீயூவில் வைத்திருந்தனர்..
மஞ்சு இரண்டு நாளாக மயக்கத்தில் இருந்தாள்..
மஞ்சுவின் தந்தைக்கு குழந்தை பிறந்தது தெரியவந்து அவளை பார்க்க வந்திருந்தார்.. மகள் மயக்கத்தில் இருக்கிறாள் என்று நினைத்தவர்..
அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு , “நீ சொல்லாட்டி என்ன, உன் குழந்தையின் முகத்தை வைத்தே கண்டு பிடிச்சிடுவேன் அவன் அப்பன் யாருன்னு” என்றவர்.. “குழந்தையின் முகம் வேற ஜாதி கார பயமாதிரி தெரியட்டும், குழந்தையோடு உன்னையும் சேர்ந்து கொல்லுறேன் இரு “.. என்று சொல்லி சென்றிருக்க…
அப்போது தான் சுயநினைவு வந்த மஞ்சு தன் குழந்தையை ஏதாவது செய்து விட்டாள் என்ன செய்வது, என்று நினைந்து.. உடல் வலி உயிர் போக,, நடு இரவு குழந்தையை தேடி சென்றவள்..
ஐசியுவில் இருந்த மகனை பார்க்க செல்ல.. அங்கே இருந்த ஒரு நர்ஸ் மேம் உங்கள தேடி வரலாமுன்னு நெனச்சேன் உங்க பையனுக்கு ஹார்ட் பீட் சரியா துடிக்குது,, பசியில அழறான் உங்காருங்க என்று அவளை அமர வைத்து அந்த பெண் ஹரியை தூக்கி வந்து மஞ்சுவிடம் கொடுக்க.. மெல்ல அழுதுகொண்டு இருந்த மகனை வாங்கியவள் அவனின் முகத்தை பார்க்க.. அச்சு அசல் தன்னவன் முக ஜாடையில் இருந்த மகனை பார்த்தவள், மகனை மார்போடு அணைத்து அழுதிருந்தாள்..”ஸ்ரீ வந்துட்டீங்களா ஸ்ரீ என்கிட்ட, உங்களாள பார்க்க வர முடியாதுன்னு, உங்க ஜாடையில உங்க மகனை அம்மாவா பார்த்துக்கோன்னு அனுப்பி வச்சீங்களா ஸ்ரீ” என்று அழுதவள்..
மகன் அவளின் மார்போடு முட்டி பாலுக்கா அழுவதை உணர்ந்தவள்.. “சாரிடா ஸ்ரீ குட்டி”. என்றவள் மகனுக்கு அமுதூட்ட.. உடல் சிலிர்த்தது பெண்ணுக்கு.. தன் மகன் தனக்கு இருக்கிறான், இனி நான் அழமாட்டேன் எனக்கு நீ இருக்கடா கண்ணா.. உன் அப்பா என் ஸ்ரீ, நம்மலை தேடி கண்டிப்பா வருவார் என்று குழந்தையிடம் பேசியவள்…
நர்ஸ் மஞ்சுவிடம் “உங்க ஹஸ்பென்ட பேரு ஸ்ரீ யா மேம்”.
“உம்” என்று தலையாட்டியவள்..
“எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா”?,,
“என்ன மேம்”?.
“எங்க அப்பா என்னையும், என் குழந்தையும் கொல்ல கூட துணிவார்,, நான் இங்கே இருந்து போகனும்”,, என்றவளை..
பார்த்த நர்ஸ் “மேம் நான் புதுசா இன்னைக்கு தான் வேலைக்கு வந்தேன்.., எனக்கு பயமா இருக்கு.. மேம்” என்றவளிடம் “நீ பயப்படாதே என்னை பின் வாசலில் மட்டும் கொண்டு போய் விடு போதும்” என்க.
மஞ்சுவை பார்க்க பாவமாக இருக்க, “வாங்க மேம் என்று அவளை யாருக்கும் தெரியாமல் பின் வாசலில் விட..
அந்த வழியாக வந்த பஸ்சில் ஏறி சென்று விட்டாள். அவளை யாரும் தேடிவராத இடத்திற்கு..
அய்யோ பாவம் அவளுக்கு இரண்டு குழந்தை பிறந்தது தெரியாது.. அந்த புது நர்ஸ்சுக்கும் எதுவும் தெரியாது என்பதால். அவளும் சொல்லவில்லை இவளுக்கு பிறந்தது ஒரு பிள்ளை என்று நினைத்து இவளும் சென்று விட. பார்கவி ஆதிநாரயணன் வீட்டில்… ஆதிநாரயணன் மகளாக வளர்ந்தாள்.. மஞ்சுவின் தந்தை குழந்தையை கேட்க. குடுக்க முடியாது என்று விட்டான்,, என்றாவது மஞ்சு குழந்தையை தேடிவருவாள் என்று காத்திருந்தான்..
ஸ்ரீஜெயத்திடம் அனைத்தையும் சொல்லி முடித்தார், ஆதிநாரயணன்.. ஆதிநாரயணனை கட்டி அணைத்த ஸ்ரீஜெயம் “உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்.. என் பார்கவியை உங்க பிள்ளை போல் வளத்து வச்சு இருக்கீங்க.. நன்றி” என்றார்..
“அது எனது கடமை,பெண் இல்லா எங்க வீட்டில் வந்த முதல் பெண் பிள்ளை , என் பார்கவி தான், இப்பையும் இவ தான் எங்க வீட்டு பிள்ளை” என்றார்..
“கண்டிப்பா உங்க பிள்ளை தான் அவ”.. என்றவர்..
ஹரியை பார்த்து “நான் என் மஞ்சுவை பார்க்கனும்” என்றார்…
“வாங்கப்பா” என்று தனது காரில் அழைத்து வந்து கொண்டிருந்தான் மகன்.
மகன் கார் ஓட்ட, முன் சீட்டில் கண் மூடி அமர்திருந்தார் ஸ்ரீஜெயம்.. அவ்வப்போது அவர் கண்ணீல் இருந்து வரும் கண்ணீரை துடைத்து கொண்டு வந்தார்..