Skip to content
Post Views: 3,570
அத்தியாயம் 4
“அம்மா..அம்மா..”
Advertisement
“——————”
“அம்மா..அம்மா.. அம்மா…”
Advertisement
Advertisement
“எதுக்கு டா பாத்ரூம்ல இருந்தது அம்மா அம்மான்னு ஏலம் விடுற?“
“என்னம்மா.. தண்ணீ இப்படி மெதுவா வருது.. இது என்ன தண்ணீ பைப்ல என்னமோ மாட்டி வச்சிருக்கீங்க?”
Advertisement
“டேய்.. அது நம்ம கருணா பண்ணது.. தண்ணீர் சேமிப்பான்.. வாட்டர் சேவர்”
“இவ்வளவு மெதுவா தண்ணீ வந்தா எப்படி குளிக்கிறது?”
“சும்மா நீயும் உங்க அப்பாவும் தண்ணீர் திறந்து விட்டுட்டு குளிக்க வேண்டியது.. மாசம் வாட்டர் பில் எவ்வளவு வருதுன்னு தெரியுமா? இரண்டு நாள்ல பழகிடும்.. சும்மா கத்திட்டு இருக்காமா சீக்கிரம் குளிச்சிட்டு வா.. எனக்கு அடுப்படியில் வேலை இருக்கு?” என்று கூறி சென்றுவிட்டார் தமயந்தி.
“சை.. இந்த குட்டி பிசாசால என் நிம்மதியே போகுது..” என்று கடுப்பாக குளித்து விட்டு வந்தான் பாரி.
பாத்ரூம் மட்டும் அல்ல, வீட்டு அடுப்படி முதல் கொள்ளை புறம் வரை அனைத்து குழாய்களுக்கும் தண்ணீர் சேமிப்பானை பொருத்தி இருந்தாள் கருணா. இரண்டு பழைய பிளாஸ்டிக் ஜுஸ் பாட்டல்களை வைத்து அவளே தயார் செய்திருந்தது.
வில்வாவுக்கும் இதே நிலைமை தான்.
அன்று இருவரும் வழக்கம் போல கருணாம்பிகையை குறை கூறிக்கொண்டே பள்ளிக்கு வந்து சேர்ந்தார்கள்.
அன்று இடைவேளையின் போது இருவரும் பள்ளி கழிப்பறைக்கு சென்றால், அவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்றது கருணாவின் தண்ணீர் காப்பான்.
அதன் பயன்பாட்டையும் அதன் பலன்களையும் விளக்குவதற்காக, அன்று ஒரு நபரையும் நிற்க வைத்திருந்தார்கள்.
“விடாது கருப்பு… மாதிரி நம்மளை ‘விடாது கருணா…’ டா “என்றான் பாரி.
“ஆமா பாரி, நம்ம வீட்டில அவ சொல்றதை கேக்கறாங்க சரி.. ஸ்கூல்ல எப்படி டா கேக்கறாங்க?”
“என்னமோ போடா.. நம்ம ப்ரொஜெக்ட்டை பெஸ்ட்டா பண்ணி, இந்த தடவை நம்மளை பத்தி எல்லாருக்கும் நிரூபிக்கணும் வில்வா”
“கண்டிப்பா செய்வோம் பாரி.. நீ கவலை பாடாத..”
இவர்கள் புலம்பும் அளவிற்கு தண்ணீர் வராமலில்லை. சேமிப்பான் மூலம் வரும் போது காற்றையும் உள்ளே புக விட்டு, கொஞ்சம் வேகத்தை குறைத்து, தண்ணீரை சிறிய சல்லடை மூலம் வருமாறு வடிவமைத்திருந்தாள். தண்ணீர் சர்ர் என் வராமல் பூ போல தூவலாக வரும்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அறிவியல் கண்காட்சி மிகவும் ஆரவாரமாக தொடங்கியது.
சிலர் தனியாகவும் சிலர் இரண்டு இரண்டு பேராக சேர்ந்தும் ப்ரொஜெக்ட்களை செய்து அதை கண்காட்சியில் வைத்திருந்தார்கள். சிறிய மாடல் வைத்து அவர்கள் செய்ததை விளக்கம் கூறினார்கள்.
கருணாம்பிகை அவள் உருவாக்கிய தண்ணீர் காப்பான்களை கண்காட்சியில் வைத்திருந்தாள். அதனுடன் நில்லாமல், கடந்த பதினைந்து நாட்களாக அவர்கள் பள்ளியில் அதை பொருத்தி இருந்ததும் அதனால் ஏற்பட்ட சேமிப்பையும் அழகாக கணக்கிட்டு விளக்கமாக சார்ட்டில் எழுதி வைத்திருந்தாள்.
சென்னையில் இவர்கள் பள்ளி இருந்த பகுதியில் தண்ணீர் கஷ்டம். தினமும் டேங்கர் லாரி தான் வாங்கிக்கொண்டிருந்தது பள்ளி. கருணாவின் தண்ணீர் காப்பான் பொருத்திய பிறகு, மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் மிச்சமாகி இருந்தது. அதைத்தான் அழகாக குறிப்பெடுத்து விளக்கி இருந்தாள். இதை பள்ளியில் அமுல் படுத்துவதற்கு தான் சீதாலட்சுமி மிஸ்ஸை படுத்தி கொண்டிருந்தாள். எந்த ஒரு விஷயத்தையும் அமுல் படுத்துவது கடினம் தானே. அதுவும் ஆறாம் வகுப்பு மாணவி சொல்லுவதை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டு செயற்படுத்துவது கடினமான விஷயம் அல்லவா?
அடுத்ததாக அவள் செய்த ஒரு விஷயம் அனைவர் மனதையும் கவர்ந்தது.
கண்காட்சியில் பங்கு பெறாத மாணவர்கள், சுயமாக ப்ராஜெக்ட் செய்ய முடியாத குழந்தைகள் என்று ஒவ்வொரு குழுவிலும் சிலர் இருந்தார்கள். அவர்களை சீயர் பாய்ஸ் அண்ட் கிர்ல்ஸ் போல நிற்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அதாவது ஜிகு ஜிகு ஆடைகள் அணிந்து, நிற்க வைக்கபடுவார்கள். அவர்கள் கையில் ஜிகு ஜிகு என்று கலர் பேப்பர்களோ, பூங்கொத்து போன்றதோ கொடுத்து மற்ற மாணவ்ர்களை உற்சாக படுத்த கூறுவார்கள்.
அந்த அந்த குழு நுழைவு வாயில் நின்று அனைவரையும் வரவேற்பது.. அவ்வப்பொழுது உள்ளே ஒரு ரவுண்டு ஆடிக்கொண்டே செல்வது போல செய்ய வேண்டும்.
அனைத்து மாணவர்களும் பங்கு பெற வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கூறி இருந்ததால் இந்த ஏற்பாடு. இது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் தான்.
இவர்கள் குழுவிலும் முதலில் அந்த ஏற்பாடு தான்.
கருணாம்பிகை தான், “என்ன மிஸ் இது அநியாயம்? இது எல்லாம் ஒரு வேலையா? அதுவும் இல்லாமல் அந்த டிரஸ்க்கு ஆயிரம் ரூபாய் வேற கேட்டிருக்கீங்க?” என்று வந்தாள் சாந்தி மிஸ்ஸிடம்.
“உனக்கு என்ன பிரச்சனை? நீ தான் ப்ராஜெக்ட் செஞ்சிருக்க இல்ல?” என்றார் சீதாலட்சுமி மிஸ் குறுக்கே வந்து.
“அநியாயம் எங்கு நடந்தாலும் தைரியமா தட்டி கேக்கணும்னு சாந்தி மிஸ் தான் சொல்லி கொடுத்திருக்காங்க”
“இதுல என்ன அநியாயம்? அவங்க ப்ராஜெக்ட் செய்யல.. இருந்தாலும் அவங்களும் பங்கு பெறனும் என்பதற்காக தான் இந்த ஏற்பாடு. இதுக்கு எங்களை பாராட்டணும்.. அவங்களுக்கும் சந்தோசம் தான். நீ எதுக்கு தேவை இல்லாமல் இப்ப நடுவுல புகுந்து சண்டைக்கு வர?”
“சந்தோசம் அப்படின்னு உங்ககிட்ட சொன்னாங்களா மிஸ்?”
“—————————-”
“அந்த ஜிகு ஜிகு டிரஸ் வேற எதுக்காச்சும் போட முடியுமா?”
“—————————-”
“மத்த குழுக்கள் செய்யட்டும் மிஸ். நாம வேற யோசிக்கலாம்.”
“சரி நீயே என்ன செய்யலாம் சொல்லு.. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்குள்ள ப்ராஜெக்ட் செய்ய முடியாது இல்ல?”
“இப்ப நம்ம குழுவுல பன்னிரெண்டு பேர் தான் இருக்காங்க.. அவங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு விஞ்ஞானி போல மாறு வேஷ டிரஸ் போடலாமே மிஸ். அவங்களை பற்றிய செய்திகளை ஒரு சார்ட்டில் எழுதி ரெடி பண்ண சொல்லலாமே”
“வாவ்.. நல்ல யோசனை கருணா.. நீ போய் எல்லாரையும் கூட்டிட்டு வா.. நாம பேசி முடிவு செய்வோம்”
இந்த யோசனை கேட்டதும் அந்த பன்னிரண்டு மாணவர்கள் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி தெரிந்தது.
“இவங்களுக்கு உதவி செய்ய மத்த மாணவர்களையும் சேர்த்து விடலாம் மிஸ். உங்களுக்கும் கஷ்டமா இருக்காது இல்ல?” என்று மிஸ்ஸுக்கும் வேலையை குறைக்கும் யோசனை கூறினாள்.
இதில் வில்வா பாரி இருவரையும் சேர்த்து விட்டாள்.
இதனால் மாணவர்கள் மத்தியில் கருணாவிற்கு நல்ல பெயர் கிடைத்தது. அனைவருக்கும் பிரியமானவள் ஆகி போனாள்.
அறிவியல் கண்காட்சியில் இவர்களது குழுவே முதல் பரிசை பெற்றது.அன்று தனது சிறப்புரையில் தாளாளர் கருணாம்பிகையை தனியே குறிப்பிட்டு பாராட்டினார்.
தண்ணீர் காப்பான் செயல் பாடு பற்றி அனைத்து மாணவர்களும் கற்றுக்கொண்டு அவர்கள் வீட்டில் உபயோகிக்க வேண்டும் என்றும் கூறினார்.
பாரியும் வில்வாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
அவர்கள் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு செய்த ப்ராஜெக்ட் பலரால் பாராட்ட பட்டாலும் இப்படி தனியாக சிறப்பு பாராட்டு பெறவில்லை.
“டேய், நாம கஷ்டப்பட்டு ஒரு மாசம் இந்த ப்ரொஜெக்ட செஞ்சோம்.. எவ்வளவு செலவு வேற .. இவ ரெண்டு பழைய பிளாஸ்டிக் பாட்டில் வச்சு எல்லா பெயரையும் தட்டிட்டு போய்ட்டா டா..”
“ஆமாடா.. அவளுக்கு எப்பவுமே அதிர்ஷ்ட்டம்”
“அதுவும் இல்லாமல் இந்த குழு தான் அனைத்து மாணவர்களையும் சரியாக பயன் படுத்தி இருக்கிறார்கள். இந்த குழு ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். விஞ்ஞானி போல உடை அணிந்து அவர்கள் பற்றிய செய்திகளை கூறியது தனி பாராட்டுதலுக்கு உரியது. மற்ற குழுக்களும் இதில் இருந்து கற்று கொள்ள வேண்டும். அடுத்த முறை சீயர் பாய்ஸ் கிரல்ஸ் எல்லாம் இருக்க கூடாது” என்று சாந்தி மிஸ்ஸயும் சீதாலட்சுமி மிஸ்ஸயும் மேடைக்கு அழைத்து பாராட்டினார் முதல்வர்.
“என்ன மிஸ்.. இப்ப என சொல்றீங்க?” என்றார் சீதாலட்சுமி மிஸ் சாந்தி மிஸ்ஸிடம்.
அவர் சிரித்து கொண்டே கருணாவை தோளோடு அனைத்து கொண்டார்.
“டேய் வில்வா.. நிஜமா சொல்றேன்.. உன் தங்கச்சி இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லடா”
“ஆமா பாரி.. வேற எங்கயாச்சும் பொறந்திருக்கலாம்”
“டேய் அது இல்லடா.. நீ வேணா பாரு.. அவ நிச்சயம் ஒரு பெரிய தலைவரா தான் வருவா.. “
“அப்ப நம்ம என்னடா ஆவோம்?”
“அது தெரியலை டா.. டாக்டர் படிப்போமா?”
“டாக்டரா? அது கஷ்டம் இல்லையா?”
“சரி.. நீ என்ன யோசிச்சு வச்சிருக்க?”
“சோஸியல், சயின்ஸ், மேத்ஸ், இங்கில்ஷ் இல்லமா என்ன டா படிக்கலாம்?”
“இது எல்லாம் விட்டா தமிழ் தான் படிக்கணும்.”
“தமிழ் எனக்கு பிடிக்கும் தான்.. ஆனா செய்யுள் எல்லாம் கஷ்டமா இருக்கு.. லகர ழகரம் தகராறு பண்ணுது.. ஒற்று பிழை நிறைய வருது… அதான் யோசனையா இருக்கு”
பாரி ‘நங்’ என்று அவன் தலையில் ஒரு கொட்டு வைத்து,”பேசாம வாடா.. நானே நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து யோசிக்கிறேன்.. நீ ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பாரு..” என்று அவனை அழைத்து சென்றான்.
அன்று முழுவதும் இருவர் வீட்டிலும் கருணாவின் பெருமையை பேசி பேசி பாரி வில்வா இருவரது காதில் இருந்தும் புகை வர வைத்தார்கள்.
நொந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் பாரியும் வில்வாவும்…
————————–
error: Content is protected !!