Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ஜன கண மன-4

அத்தியாயம்  4

தினேஷ் பிரத்யேக அக்கடமியில் சேர்ந்து பயிற்சி பெறவில்லை. அவனுக்கு கோச், டயட்டீஷியன் என்று யாரும் இல்லை.

கிடைப்பதை உண்பான். வெறித்தனமாய் ஓடுவான் அவ்வளவு தான். அவனுள் தகித்த ஏதோ ஒரு தீ அவனை சுடர் விட வைக்கிறது. அவனுக்கு முறையான வழிக்காட்டி என்று யாருமில்லை

பத்தாம் வகுப்பில் தொன்னூறு சதவீத மதிப்பெண் பெற்று அதிலும் சாதித்தான்.



Advertisement

அவன் விளையாட்டு திறன் அறிந்து சென்னையிலுள்ள பிரபல பள்ளிகள் இலவச சீட் கொடுப்பதாக அழைத்தது.

தலைவர் மகன் பிரசன்னா கூட… “தினேஷ் இது நல்ல சான்ஸ் விட்டுடாதே… “அங்கே எடுகேஷனுக்கு பெஸ்ட் டீச்சிங் கிடைக்கும் அதே போல் உன்னோட ஸ்போர்ட்ஸ்கு பெஸ்ட் கோச்சிங் கிடைக்கும் என்று அறிவுரை வழங்கினான்.

தினேஷ் அனைத்து வாய்ப்புகளையும் துறந்து அரசு பள்ளியிலேயே மேல்நிலை படிப்பை தொடர்ந்தான்.

Advertisement

இப்போது சீனியர் பிரிவில் களம் காண்கிறான். மாநில அளவில் கடும்போட்டி… ஓரிரு முறை தோல்வி… ஒரு சில முறை இரண்டாமிடம் மூன்றாமிடம்.

Advertisement

PET ஆசிரியர் சகாயராஜ் அவனுக்கு மிகப்பெரிய தூணாய் நின்று தாங்கினார்.

“தினேஷ் எடுத்த எடுப்பில் முதலிடம் பிடித்தால் அடுத்து சாதிக்க எதுவும் இருக்காது. இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பிடித்தவனுக்கே முதலிடத்தை நோக்கிய இலக்கு இருக்கும்.” அவர் பேச்சில் புது உத்வேகம் கொண்டான்.

இப்போது கந்தவேலோடு குமரன்,சரண்யா வருகின்றனர் மணியார் பாளையத்திற்கு.தாத்தா பாட்டியை  பார்க்க.. அந்த சாக்கில் தினேஷை பார்க்க…

Advertisement

தினேஷ் இந்த உறவு சிக்கலில் கவனம் பதிக்காது ஓடுகளத்தில் தான் கவனம் பதித்தான்.

அவன் மனதிலும் மூளையிலும் எதற்கும் இடம் இல்லை.

தந்தையோ, சிற்றன்னை பிள்ளைகளோ.. வந்தால் வரட்டும் வராவிட்டால் போகட்டும் என்பதே அவன் நிலைப்பாடு.

அன்பாக நடத்தியிருந்தால் தானே அவன் ஏங்கி தவிக்க….

“———“

முதலில் தோல்வி கண்டு அழுதவன், சுருண்டு படுத்தவன் தோல்வியை விட சிறந்த ஆசான் யாருமில்லை என்பதை உணர்ந்து கொண்டான்.

தன் முனைப்பு அவனுக்கு அதிகம். தனக்கு யாருமில்லை. நம்மை நாமே தான் தேற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலை வரும்போது எந்த வலியையும் எளிதாக ஜீரணிக்க முடியும்!

அவன் வீட்டு சிறு அலமாரி பரிசு கோப்பைகளால் நிறைந்து வழிந்தது. சாறிதழ்கள் மாட்ட இடம் இல்லாது அடுக்கி வைக்க பட்டிருந்தது கை உடைந்த பழைய நாற்காலியில்.

இந்த பரிசுகளில் அவன் துளிகூட மகிழ்ந்ததில்லை. சாதிக்க நினைத்ததில் எள்முனை அளவு கூட இன்னும் சாதிக்கவில்லை என்று திடமாக உணர்ந்தான்.

“———“

தினேஷ் நீ விளையாட்டு தான் வாழ்க்கை என்று முடிவு பண்ணிட்டா அதற்கேற்ற கோச்சிங் இருக்கணும் என்றார் சகாயராஜ் ஆசிரியர்.

தமிழக தடகள அமைப்பில்(Tamil Nadu Athletics Association) சேர்ந்து பயிற்சி பெற அறிவுறுத்தினார்.

நல்ல மதிப்பெண்ணுடன் பனிரெண்டாம் வகுப்பு முடித்து சென்னை நந்தனம் அரசு கலை கல்லூரியில்

B. Com corporate secrataryship சேர்ந்தான்.

கூடவே தமிழ்நாடு தடகள சங்கத்தில் இணைந்து பயிற்சி பெற விண்ணப்பித்தான்.

அவன் பெற்ற வெற்றிகளை பட்டியலிட்டு அவனுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வரே TNAA தலைவர் திரு தேவாரம் அவர்களிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்தார்.

இப்போதெல்லாம் ஓடுகளம் தான் அவனுக்கு போர்க்களம்.

குருட்டடியாக தன் போக்கில் விளையாண்டு கொண்டிருந்தவன். பிசிக்கல் பிட்னசிற்கு முக்கியத்துவம் தருவது பற்றி அப்போது தான் உணர்ந்தான்.

பிட்னசிற்கு ஏற்ற உணவு வகைகளை உண்ணும் அளவிற்கு அவனுக்கு பொருளாதார வசதி இல்லை. விடுதி உணவு தான் அவனுக்கு தேவாமிர்தம்.

ஜிம்மிற்கு சென்று ஒர்க் அவுட் செய்ய சொன்னார் கோச் பாஸ்கர்.

கல்லூரியில் பணமும் மனமும் கொண்ட மாணவர்கள் தங்களால் இயன்றதை செய்தனர்.

பல சாதனையாளர்களுக்கு பின்னே அழகிய நட்பு இருக்கும்.

அது நிரந்தரம் அல்லவே… தினேஷ்கு ஸ்பான்சர் கிடைக்கவில்லை.எனவே கல்லூரி நிர்வாகம்  கல்வி அறக்கட்டளை நடத்தி வரும் பிரபல நடிகரை தொடர்பு கொண்டது. அவரும் தினேஷை நேரில் அழைத்து பாராட்டி உனது பயிற்சிக்கு எவ்வளவு செலவு என்றாலும் எங்கள் அறக்கட்டளை ஏற்று கொள்ளும் என்று வாக்குறுதி கொடுத்தார்.

அவனுக்கு பயிற்சி அளிக்கும் பாஸ்கர் அவனது திறமை கண்டு மெய் சிலிர்த்தார்.அவனுக்கு பெரிய எதிர்காலம் உண்டு என்று தன் அனுபவத்தில் கண்டுணர்ந்தார்.

அவன் ஒரு நிமிஷம் சுணங்கினாலும் பாஸ்கர் அவனை தட்டிக் கொடுத்து எழ வைத்துவிடுவார்.

கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான ஷைனி வில்சன் பயிற்சி நேரத்தில் தினேஷின் ஓட்டத்தை பார்த்து வாவ் என்று கூறினார்.

தன் சொந்த மாநிலமான கேரளாவில் அவன் புகழை பாடி கொண்டிருந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் என்ற பையன் பெரிய அளவில் சாதிக்க போகிறான் என்றார்.

கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் பரிசுகளை அள்ளி வந்தான்.

“———“

தேசிய அளவிலான போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை அவன் பதிவு செய்தாலும் இந்திய தடகள அமைப்பு தமிழனான தினேஷிற்கு  தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கவில்லை.

தினேஷ் நொறுங்கி போனான்… தமிழக முதல்வரும் தடகள துறையும் அவன் புறம் நின்றது.

அவனது தேசிய சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர் வட இந்தியர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பா? இதிலும் வடக்கு வாழ வேண்டும் தெற்கு தேயவேண்டுமா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

எங்கெங்கு நோக்கிலும் எல்லா மீடியாவிலும் இதே பேச்சு!

——-தொடரும் ——-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!