Skip to content
Post Views: 1,451
அத்தியாயம் 5
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான ஈகோவில் ஒன்றாக இந்த விவகாரமும் இருந்தது.
தினேஷ் தேசிய சாதனைகள் புரிந்திருந்தும் உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்து விட்டதாக “ஒரு பருக்கை சோறில் பெரிய பூசணிக்காயை மறைத்தது” இந்திய தடகள சம்மேளனம்.
எல்லா இடத்திலும் அரசியல் தான். திறமைக்கு முன்னுரிமை கொடுத்தால் விளையாட்டு துறையில் இந்தியா எங்கோ சென்றிருக்குமே!
Advertisement
தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்களும் தினேஷ் விஷயத்தை கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு இரண்டெழுத்து நடிகை அரசியல் பிரமுகருக்கு ஆசை நாயகியாய் இருப்பதை எழுதவே இடம் போதவில்லை.
ஒரு சில பத்திரிகைகளில் மட்டுமே பெட்டி செய்தியாக வந்திருந்தது.
உடைந்து போய் ஊமையாக அழுது கொண்டிருந்த தினேஷை விடுதியில் உள்ள நண்பர்களே சிரமப்பட்டு தேற்ற முற்பட்டனர்.
Advertisement
நண்பர்கள் சமூக வலைதளங்களில் #give chance to Dinesh # என்று ஹேஷ் டேக் செய்து உலக அளவில் டிரெண்டிங்கில் கொண்டு வந்தனர்.
Advertisement
நீ வேணும்னா பாரு தினேஷ் இந்த செலக்க்ஷன் லிஸ்ட் track and field ல் பெருசா வின் பண்ண போறதில்ல…சங்கு தான்…கேவலமா இருக்குடா இவனுங்க அட்ராசிட்டிட்டீஸ். இதுல கூட பாலிடிக்ஸ் பண்றாணுங்க! உயிர் நண்பன் கார்த்திக் அவனுக்காய் அக்கறை கொண்டு பேசினான்.
டேய் அப்படி சொல்லாதடா…! காழ்ப்புணர்ச்சி வேண்டாம் கார்த்தி… “யார் விளையாடினா என்ன…?
இந்தியாக்கு மெடல் வரணும் அவ்வளவு தான்…”கண்கள் ஜொலிக்க பேசினான்.
Advertisement
தெற்காசிய விளையாட்டு போட்டியில் 100,200 மீட்டர் பிரிவில் சென்ற ஆறு பேரில் இருவர் மட்டுமே இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். அதில் பஞ்சாப்பை சேர்ந்தவர் மட்டுமே வெள்ளி வென்றார்.
நேரலையில் கண்டு கொண்டிருந்த தினேஷிற்கு கண்களில் நீர் பொல பொலவென்று உதிர்ந்தது.
“ச்ச… சப்ப நாடெல்லாம் கோல்டு அடிச்சுட்டு போகுது. நம்ம பயலுக இப்படி சொதப்பி வச்சிட்டானுகளே..!” இவனுக விளையாடவா போறானுக…? புது புது நாட்டை சுற்றி பார்த்து ஷாப்பிங் பண்ணிட்டு நல்லா என்ஜாய் பண்ணிட்டு வர தான் போறானுக…கார்த்தி புலம்பினான்.
ச்சீ… இப்படி பேசாதே கார்த்தி.. நீ ஈஸியா சொல்ற! அப்படி இல்லை கார்த்தி… இது போல பெரிய விளையாட்டு போட்டிகளில் பன்மடங்கு திறமை உள்ளவங்க தான் வெல்ல முடியும்.
அன்றைய நாள் நமக்கான நாளாக இருந்தால் தான் அச்சீவ் பண்ண முடியும். தன் அனுபவத்தை கூறினான்.
போடாங்க… விளக்கம் சொல்ல வந்துட்டான்….! தோத்து போய் முகத்தை தொங்க போட்டுக்கிட்டு ஏர்போர்ட்டில் வந்திறங்கும் போது மீடியாகாரன் கேட்பான்… அப்போ சொல்லுங்க உங்க ஒன்ரையனா விளக்கத்தை…
“————–“
இன்னும் இன்னுமாய் வெறி கொண்டு வேங்கையாய் மாறி சீறி பாய்ந்தான் தினேஷ்.
100 மீ பிரிவில் புதிய தேசிய சாதனை படைத்தான்.
இம்முறை “அவன் சாதனையை கை கொண்டு சூரியனை மறைத்து விட முடியாதது போல் மறைக்க இயலவில்லை.”
பாரிசில் நடைபெற உள்ள உலக சான்பியன்ஷிப் தடகள போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள அவன் பெயர் பட்டியலில் இடம்பெற்றது.
செய்தி கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்தான். எத்தனை நாள் ஏக்கம் இது! புது உத்வேகத்துடன் கலந்து கொண்டான்.
நண்பர்கள் பேராசிரியர்கள், கோச் என்று எல்லாரும் உற்சாகமூட்டினார்கள்.
இது போல சான்ஸ் திரும்ப கிடைக்கும்னு சொல்ல முடியாது. இதில் நீ உன்னை நிரூபித்தே ஆகவேண்டும் என்றார் கோச் பாஸ்கர்.
தாத்தா பாட்டி ஆசீர்வதித்து வழி அனுப்பினர். பயணசெலவை நடிகரின் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது.
மிகப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விமானம் ஏறினான். உள்ளுக்குள் ஒரு நடுக்கம், பரவசம். ஏதேதோ வார்த்தையில் வடிக்க முடியாத உணர்வுகள்.
கடும் போட்டி… உலகின் தலைசிறந்த தேசிய சாதனையாளர்கள் குவிந்து இருந்தனர்.
நம்மால் முடியுமா என்று துளியும் அவன் அஞ்சவில்லை. எதிரிகள் என்று அவன் யாரையுமே எண்ணவில்லை. அணியின் பயிற்சியாளர் ஒவ்வொரு நாட்டு வீரரின் திறமையையும் வெற்றி பட்டியலையும் எடுத்து கூற…. தினேஷ் அதை கண்டு கொள்ளவேயில்லை.
இந்தியாவிற்காக நான் வந்தது போல் அவர்கள் நாட்டிற்காக அவர்கள் வந்துள்ளனர். போட்டிகளம் முடிவு செய்யட்டும் யார் வெற்றியாளர் என்று…
தோல்வி பற்றிய எண்ணமே துளி கூட இல்லாது களம் கண்டான்.
200 மீ இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டான்.
அவன் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காகிவிட்டது. ஆளுக்கு ஆள் ஆலோசனை வழங்கியும் தைரியம் சொல்லியும் உற்சாகமூட்டினார்கள்.
விசையினின்று புறப்பட்ட தோட்டா போல் சீறி பாய்ந்தான்… இதோ… இதோ… தொட வேண்டிய வெற்றி கோடு… அவன் கண்களுக்கு எல்லை கோடு தெரியவில்லை மூவர்ண கொடியே தெரிந்தது காதில் ஜன கண மன அதி கேட்க துவங்கியது…. இதோ… இதோ… நெருங்கி விட்டான்… அந்தோ 00.46 நொடியில் அந்த சீனன் முந்தி தன்வலது காலை தூக்கி வெற்றி கோட்டில் வைத்து விட்டானே.
தினேஷ் இரண்டாம் இடம் பிடித்து ஓடுகளத்தில் மடங்கி சரிந்து அழ தொடங்கி விட்டான்.
என்னால் முடியவில்லையே…!! என் தேசத்திற்கு பெருமை தேடி தர இயலவில்லையே…. விம்மி துடித்தான். அவன் தோல்வியை அவனால் ஏற்கமுடியவில்லை. என் தேசம் தோற்றதாக அர்த்தமாகிவிடுமே….
பயிற்சியாளர் ஓடி வந்து அவனை அணைத்து தேற்றினார்.
தினேஷ் நீ புதிய இந்திய சாதனை படைத்திருக்க…முகம்மது அனஸ் யாஹியா ரெக்கார்டை பிரேக் பண்ணியிருக்க.
கண்டிப்பா நீ இன்னும் பெரிய வெற்றி பெறுவாய்… அவனுக்கு ஆறுதல் மொழிந்தார்.
யாரின் ஆறுதல் மொழியும் அவன் ரணத்தை ஆற்றவில்லை.
பதக்கம் பெறும் நிகழ்வில் அவன் நிமிர்ந்து பார்க்கவே இல்லை… அந்த வெள்ளி பதக்கத்தை ஏற்க அவன் மனம் ஒப்பவில்லை.
சீனாவின் தேசிய கீதம் இசைக்கப்பட அவன் கண்களில் வெள்ளப் பெருக்கு நிற்கவே இல்லை.
என் தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேண்டுமே…. நான் ஏன் தோற்றேன் இன்னும் கொஞ் சம் வெறித்தனமாய் ஓடியிருக்க வேண்டுமோ…. மனம் பிதற்றியது.
——-தொடரும் ——
error: Content is protected !!