Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

TNK-22-3

“மேடம் நாங்க மேனேஜர பாக்க வந்து இருக்கோம். அவரை இப்ப மீட் பண்ண முடியுமா” என்று வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம் கேட்டாள் சுதா.

 அந்த பெண் கூட்டமாக வந்து இருக்கும் இவர்களை சந்தேகமாக பார்த்துக் கொண்டு, “இருங்க மேடம் நான் கேட்டு சொல்றேன்” என்று உள்ளே சென்று மேனேஜரிடம் கேட்க வர

“சார் இவங்க தான் நான் சொன்னவங்க சார்”என்றான் கலெக்ஷன் ஏஜென்ட் சிசிடிவி இவர்களை பார்த்து மேனேஜரிடம்

“ஓ இவங்க தானா ரினா அவங்கள ஒரு முன்னு பேர மட்டும் வர சொல்லு. சிவா நீங்க கொஞ்சம் வெளியே இருங்க ”என்ற மேனேஜர் அந்த பெண்ணிடம் அந்த கலெக்சன் ஏஜென்டை வெளியே போக சொன்னார்.



Advertisement

“ஓகே சார்”என்றவள் இங்கே

 வந்து, “இத்தனை பேர் உள்ள போக முடியாது ஒரு ரெண்டு மூணு பேரு மட்டும் போங்க” என்று சொல்லி சுதா இந்திரா சரஸ்வதி இவர்களை மட்டும் உள்ளே அனுப்பினாள்.

“வாங்கம்மா எதுக்கு என்ன தேடி வந்து இருக்கீங்க” என்று எதுவும் தெரியாதது போல் மூவரையும் பார்த்து கேட்டார் புதிதாக வந்த மேனேஜர்.

Advertisement

“சார் இதுக்கு முன்னாடி இருந்த மேனேஜர் ஆங்.. ரத்தினம் சார் அவர் எங்கே” என்று கேட்டாள் சரசு.

Advertisement

“அவரு வேலைய விட்டு போய்ட்டாரு மா. உங்களுக்கு இப்போ என்ன வேணும் எதுக்கு கூட்டமா இங்க வந்து இருக்கீங்க”

“இல்ல சார் அது வந்து..” என எப்படி சொல்லவென்று தெரியாமல் இந்திரா தயங்கி கொண்டு இருக்க

 அப்போது புதிதாக உள்ளே வருவது போல் கதவை தட்டி விட்டு உள்ளே வந்த கலெக்ஷன் ஏஜென்ட் இவர்களை பார்த்து, “சார் இவங்க தான் அந்த லட்சுமிங்குற லேடிக்கு லோன் எடுத்து கொடுத்ததா சொல்லி கட்டாம இருக்கவங்க சார்” என்றான் மேனேஜரிடம்.

Advertisement

“ஓ நீங்கதானா அவங்க”

“சார் இவங்க என்ன சொல்றாங்கன்னு எங்களுக்கு புரியவே இல்லை. கொஞ்சம் இங்க என்ன நடக்குதுன்னு எங்களுக்கு தெளிவா சொல்லுங்க சார்” என்றாள் சுதா.

“இங்க பாரு மா நான் இந்த பிரான்ஞ்க்கு மாறி ஒரு வாரம் தான் ஆகுது இங்க வந்து பார்த்த பிறகு தான் தெரியுது உங்க ஊர்ல ஏழு பேரு எடுத்த லோன் அமௌன்ட்ல ஒரே ஒரு டியூ மட்டும் தான் கட்டி இருக்கீங்க. அதுக்கு அடுத்த உள்ள மூணு மாசமா யாரும் ஒரு டியூ கூட கட்டல. அதனாலதான் இன்னைக்கு கலெக்சன் ஏஜென்ட் உங்க வீட்டுக்கு அனுப்பி அமௌன்ட் வாங்கிட்டு வர சொன்னேன்” என்றார் மேனேஜர்.

“சார் ஆனா நாங்க எடுத்த லோனுக்கு நாங்க கரெக்டா அமௌன்ட் கட்டிறோம் சார் இதெல்லாம் லட்சுமி அக்கா எடுத்த லோன். அப்ப அவங்க தானே கட்டணும். நாங்க கையில காசு வாங்கல அப்படி இருக்கும் போது நாங்க எப்படி சார் கட்டுவோம்” என்றாள் இந்திரா.

“ இங்க பாருங்க மா நீங்க பேசுறது எல்லாம் எனக்கு புரியுது. தனி ஒரு மனிதனா நீங்க சொல்றத நான் ஒத்துக்குவேன். ஆனா இங்க உள்ள மேனேஜரா நீங்க சொல்றத என்னால ஏத்துக்க முடியாது ஏன்னா உங்க பேர்ல தான் லோன் எடுத்து இருக்காங்க அப்போ அதுக்குள்ள அமௌன்ட் நாங்க உங்ககிட்ட தான் கேட்க முடியும் அதை விட்டுட்டு ஏதோ ஒரு லட்சுமி கிட்ட நாங்க எப்படி வந்து கேட்க முடியும். நீங்க இப்படி பேசும்போதே நல்லா படிச்ச ஆளா தெரியுது. அப்படி இருக்கும்போது நீங்க எப்படி ஒரு லேடி நம்பி இவ்வளவு அமௌன்ட் லோன் எடுத்து கொடுத்தீங்க” என்றார் இந்திராவை பார்த்து சந்தேகமாக

“ சார் நான் அவங்களுக்கு வெறும் 20000 லோன் தான் எடுத்துக் கொடுத்தேன் சார் காலைல இவர் வந்து சொல்ல போய் தான் எனக்கே தெரியுது ஒரு லட்ச ரூபாய் லோன் நான் அவங்களுக்கு எடுத்துக் கொடுத்தேனு” என்றாள் அங்கே நின்று இருந்த ஏஜெண்டை கைகாட்டி மேனேஜரிடம்.

“ என்னம்மா செய்றீங்க உங்க பேர்ல ஒரு லட்சத்தி அம்பதாயிரம் லோன் தான் இருக்கு. நீங்க என்ன இருபதாயிரம் லோன் எடுத்து கொடுத்தேனு சொல்றீங்க”என்றார் குழப்பமாக அவர்

“ சார் உண்மையா தான் சார் நான் சொல்லுறேன். அவங்களுக்கு இருபதாயிரம் மட்டும் தான் எடுத்து கொடுத்தேன்”

“என்னம்மா சொல்றீங்க உங்க பேரு தானே மிஸஸ் இந்திரா தாமஸ்”

“ஆமா சார் நான் தான் அது”

“இங்க பாருங்க உங்க பேர்ல எவ்வளவு ரூபா இருக்குன்னு” என்று அங்கு இருந்த சிஸ்டமில் அவளின் பெயரில் உள்ள லோன் அமௌன்டை அவளிடம் காட்டினார்.

 அங்கே டிஸ்ப்ளேயில் தெரிந்ததை பார்த்தவள், “ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயா. பாத்தீங்களா க்கா எப்படி இவ்வளவு பெரிய அமௌன்ட் என்னால கட்ட முடியும். இவங்க பொய் சொல்றாங்க க்கா நான் வெறும் இருபதாயிரம் மட்டும் தான் எடுத்துக் கொடுத்தேன். நீங்க எல்லாம் சேர்ந்து என்னை ஏமாத்த பாக்கீங்க என்னால் அவ்வளவு அமௌன்ட் தர முடியாது. அக்கா வாங்க அக்கா நம்ம எல்லோரும் போய் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் இவங்க எல்லாம் சேர்ந்து நம்மளை ஏமாத்த பாக்கறாங்க” என்று கத்தியவள் குரல் கேட்டு உள்ளே நுழைந்த அந்த ஆபீஸ் எம். டி கந்தன், “இது என்ன ஆபிசா இல்ல வேற எதுவா ஏன் இப்படி கத்திட்டு இருக்கீங்க உங்களுக்கு எல்லாம் என்ன வேணும்” என்றவர் அப்போதுதான் எதிரே நின்றிருந்த இந்திராவை பார்த்து, “ ஏம்மா நீ ராஜேந்திரன் தங்கச்சி தான” என்றார்.

ஆமாம் என்பதைப் போல் தலையை ஆட்டினாள் இந்திரா.

“ஓ நீதானா” என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவர், “என்ன பிரச்சனை மேனேஜர்”

“ சார் பழைய மேனேஜர் கிட்ட இவங்க ஒரு லட்சத்து 50 ஆயிரம் லோன் எடுத்திருக்காங்க ஆனா இப்போ வந்து நான் இருபது ஆயிரம் லோன் தான் எடுத்தேன் ஒரு லட்சத்து ஐம்பதாயிர ரூபாய் வாங்கவே இல்லைன்னு சொல்லி சண்டை போடுறாங்க”

“ சார் உண்மையான வெறும் இருபது ஆயிரம் லோனுக்கு தான் நான் கையெழுத்து போட்டேன் இந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நான் வாங்கவே இல்ல சார். ப்ளீஸ் சார் நம்புங்க என்னால இவ்வளவு பெரிய அமௌன்ட் கட்ட முடியாது. நான் இவ்ளோ அமௌன்ட் வாங்கவே இல்லை சார். இவங்க பொய் சொல்றாங்க சார் என்ன நம்புங்க” என்று கையெடுத்து கும்பிட்டு கந்தனிடம் கெஞ்சினாள் இந்திரா.

“என்ன சொல்றீங்க மிஸஸ் இந்திரா தாமஸ் உங்களால ஒரு லட்சத்து ஐம்தாயிரம் ரூபாய் கட்ட முடியாதா. நீங்க எவ்வளவு பெரிய ஆளு உங்களால கேட்க முடியாதா. உங்க அண்ணன்கிட்டயும் உங்க அப்பா கிட்டையும் இல்லாத காசா. உங்க பேர்ல கூட நிறைய சொத்து இருக்குல” என்றார் குழப்பமாக கந்தன்.

“சார் அ..து அ..து” என்ன சொல்வது என்று தெரியாமல்  அவள் தடுமாற

 அவளின் நிலையை பார்த்த கந்தன், “ ப்ளீஸ் எல்லாரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்க இவங்க என் பிரண்டோட தங்கச்சி தான் என்னன்னு கேட்டுட்டு உங்க எல்லாரையும் கூப்பிடுறேன்” என்று சொல்லி இந்திராவை தவிர மற்ற பெண்கள் மற்றும் கலெக்ஷன் ஏஜென்ட் என அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, அங்கே நின்றிருந்த மேனேஜரை பார்த்து, “ மிஸ்டர் பிரேம் நீங்களும் கொஞ்சம் வெளியே போங்க. நாங்க கொஞ்சம் பர்சனலா பேசணும்” என்றான் இந்திராவை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டு கந்தன்.

“சரி சார்” என்று சொல்லி வெளியே போக சென்றவன் தனது சட்டை பையில் இருந்து பேனாவினை எடுத்து அந்த மேஜையில் இருந்த பென் ஸ்டாண்டில் நிற்க வைத்த  மேனேஜர் ஒருவித ஆராய்ச்சி பார்வையுடன் பயத்துடன் நின்ற இந்திராவையும் மற்றும் கண்ணில் வெறியுடன் நின்ற கந்தனையும் பார்த்துக் கொண்டு சென்றான்.

 

 பத்து நிமிடம் கழித்து வெளியே வந்த இந்திராவை பார்த்து அவளை நெருங்கியவர்கள், “என்ன இந்திரா என்னாச்சி அந்த சார் என்ன சொன்னார்”என்றாள் சரஸ்வதி.

“அந்த காசு நம்ம கட்ட வேண்டாம்ல. அவங்களை எப்படியாவது கண்டுபிடிச்சாங்க தான”என்றாள் கமலி.

“ஆமா இந்த சார உனக்கு அப்பவே தெரியுமா. உங்க அண்ணனோட பிரண்டாமே நம்ப கஷ்டத்தை சொன்னியா. எங்களால இது கட்ட முடியாது அதனால இத தீர்த்து வைக்க வழி சொல்லுங்கன்னு கேட்டியா.அவர் ஏதாவது சொன்னாரா” என்றாள் பத்மா

“நாங்க எத்தன பேரு கேக்கோம் நீ ஏன் இப்படி பொம்மை மாதிரி நிக்க. ஏதாவது வாய தொறந்து சொல்லு இந்திரா”

 என அனைவரும் ஒரு எதிர்பார்ப்புடன் அவளிடம் கேட்க யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் அப்படியே அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறுகிறாள் இந்திரா.

 

“ என்னாச்சு சுதாக்கா இவ ஏன் இப்படி போறா” என்றாள் குழப்பத்துடன் சரஸ்வதி.

“ஒருவேளை அவளுக்கு மட்டும் கழிச்சி விட்டுருப்பாங்களா இருக்கும் அதனால தான் நம்ம கிட்ட எதுவும் சொல்லாம ஊம மாதிரி வீட்டுக்கு போறாக்கா அவ” என்றாள் சரோஜா.

“ இருந்தாலும் இருக்கும் இவ அப்பன் வேற கோடீஸ்வரன். அவங்களுக்கு ஒரு லட்சம் ஒரு பெரிய மேட்டரா. இவ என்ன நம்மளை மாதிரி ஒருவேளை சோத்துக்கு சீங்கி அடிக்கிற குரூப்பா என்ன” என்றாள் கமலி.

“ஏய் இந்திரா அப்படி கிடையாது. தேவை இல்லாம பேசுறீங்க வாங்க வீட்டுக்கு போவோம் அவ போற போக்கு சரியில்லை” என்று சொன்ன சுதா அவர்களை வீட்டிற்கு அழைக்க

“ என்ன க்கா நீங்க இதுக்கு ஒரு முடிவு தெரியாம நாங்க எப்படி இங்கிருந்து வருவோம் வாங்கடி நம்ம போய் போலீஸ் டெக்ஷன்ல கம்ப்ளைன்ட் கொடுப்போம். இவங்கள நம்புனா நம்ம காரியம் நடக்காது” என்றாள் பத்மா.

“ ஆமா அதுவும் கரெக்ட் தான் வாங்க நம்ம போலீஸ் டெக்ஷன் போவோம்” என்று சொல்லி சுதாவை தவிர மற்ற அனைவரும் காவல் நிலையம் நோக்கி செல்ல, “போங்கடி நீங்க எல்லாம் மனுஷங்களா. ஒருத்தரை பத்தி யோசிக்காம எப்படி எல்லாம் பேசுறீங்க. நல்ல வருவீங்க” என்று அவர்களை திட்டிக்கொண்டு இந்திராவின் வீட்டை நோக்கி சென்றாள் சுதா.

 

 

 

 “இந்திரா இந்திரா எங்கடி இருக்க” என்று சாத்திருந்த வீட்டினை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தாள் சுதா.

 வீட்டில் உள்ள அவள் எங்கும் இல்லாததால் பின்புறம் இருந்து கிணறு பக்கத்தில் வந்து பார்த்தால் அங்கே வாயில் நுரைத்தள்ளி சுயநினைவு இன்றி விழுந்து கிடந்தவளை பார்த்து,

“ ஐயோ இந்திரா பாவி..மக என்னடி காரியம் செஞ்சிருக்க…

இந்திரா இங்க பாருடி கண்ண திறந்து பாரு…” என்று பதறி கொண்டு அவளை தனது மடியில் படுக்க வைத்து அவள் கன்னத்தில் தட்டி பார்த்தாள். அப்போதும் சுயநினைவு வராததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள் சுதா. 

 

@@@@@@@@@@@

 

 

அந்த இருட்டு அறையில் முகம் முழுவதும் வியர்த்து வடிய என்ன பேசுவது என்று தெரியாமல் அடுத்து என்ன நிகழுமோ என்று பயத்துடன் தனது முன்னே இருந்தவனை பார்த்து விழி பிதுங்கி போய், “ ஐயோ இவனா அப்பா முருகா எப்படியாவது இவன்கிட்ட இருந்து என்னை காப்பாத்துப்பா” என்று மனதில் வேண்டிக் கொண்டு இருந்தான் அவன்.

“ என்ன மிஸ்டர் கர்த்தர் எப்படி இருக்கீங்க” என கண்ணில் ஸ்கூலருடன் ஸ்டைலாக, “ என்கிட்ட இருந்து நீ அவ்வளவு சீக்கிரம் தப்பிச்சிடுவியா” என்று அவன் கடைசி முடிவுடன் அவனை சுற்றி வளைத்திருந்தான் அந்த திரு. முருகன் @ திருக்குமரன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!