Niththirai Kalaiththa Maayaval 4
இதுவரை :
அவளை ரௌடிகளிடம் இருந்து காப்பாற்றியவன்…. அவளுக்கு பயண சீட்டு வாங்கவும் உதவு செய்து… தன் ஊர் நோக்கி பயணிக்கிறான் அன்பு…..
இனி :
Advertisement
வருஷங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆக
அவன் வருவான் என்று காத்திருந்தேன்
Advertisement
அவன் குரல் கேட்கும் திசைகளில் எல்லாம்
Advertisement
புது புது கோலம் போட்டு வைப்பேன்
என் தாவணி வயதுகள் போச்சு
ஒரு ஆயிரம் வளர்பிறை ஆச்சு
Advertisement
அந்த ராட்ஷசன் என் வரவில்லை
இன்னும் பூங்கொடி சாய்ந்திட வில்லை
என் இருபது போகும் எழுபதும் ஆகும்
அவனை விடமாட்டேன்
என் மடியினில் ஒரு நாள் தலை வைத்து தூங்கும்
மழலை நான் பார்ப்பேன்
எதோ கேட்க வந்த அன்பு அப்போது அழுத குழந்தையின் அழுகையில் அமைதி ஆகி விட….
அந்த குழந்தையை சமாதானம் செய்தவள்… அது பசியினால் தான் அழுகிறது என்று புரிந்து கொண்டு அவ்வழி வந்த பாலை வாங்கினால்…
இம்முறை மறந்தும் அன்பு பணம் தர முயற்சிக்க வில்லை… அவள் போக்கில் விட்டு விட்டான்… கைபேசியை எடுத்து பாட்டு கேட்க ஆரம்பித்தான்….
பாலை ஆற்றில் குழந்தைக்கு கொடுக்க போக… அது கொஞ்சம் குடித்து பின் அவளை பார்த்து
“அம்மு நீ பால் குதி…நா போதும்” என்றது அந்த மழலை மொழியில்…
குழந்தை பேசும் கொஞ்சும் மொழியில் அவளின் துன்பங்கள் எல்லாம் பறந்தது போல் இருந்தது அவளுக்கு…
“நான் குடிச்சிட்டேன் தங்கம்… நீங்க குடிங்க” என்று மீதம் இருப்பதை பருக வைக்க அவள் முயற்சிக்க
அதுவோ சடாரென்ன அவள் மடியை விட்டு இறங்கி… அந்த ஆடும் ரயிலின் ஆதாரத்திற்கு ஏற்ப அதுவும் ஆடிய படியே எதிரே அமர்ந்திருந்த அன்பிடம் சென்றவள்
ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவனை அழைக்க… யாரோ என்று பார்க்க… அவன் முன் நெஞ்சுக்கு நடுவே கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தாள்
“என்ன ” என்பதை போல் அவன் கேட்க
அவளோ.. “நீ…நீ… நீங்க சாப்டீகளா? பால் வேணுமா? “
தன் முட்டை கண்ணை உருட்டி கொண்டு அவன் முன் திக்கி திணறி பேசும் அவளை பார்த்தவனுக்கு ஏனோ அவளை வாறி அணைத்து முத்தம் இட வேண்டும் போல் இருந்தது….
அதை செய்ய அவளை தூக்கி முத்தமிட… அவளோ “சீய்ய்ய் எதிச்சீய்ய் என்பதை போல் முகம் வைக்க “அதை பார்த்தவனுக்கு இன்னும் ஆசையாய் வந்தது…
கையில் தூக்கியவன்… “பாப்பா பேரு என்னமா “என்றான் என்றும் இல்லாத பாச குரலில்…
அதுவோ “வைஷு” என்றது மிகவும் பெருமிதமாக…..
சிறிது நேரம் குழந்தையுடன் விளையாடி அவளுக்கு வேடிக்கை காண்பித்து கொண்டு இருந்தான்….
இவற்றை எதிரில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தவளுக்கோ…” இவனுக்கு சிரிக்க கூட தெரியுமா” என்பது போல் வியப்பாக பார்த்து கொண்டு இருந்தாள்…
பின் குழந்தையை வாங்கி கொண்டவள்… சில மன சலங்களுடனே அவளின் பயணம் தொடர்ந்தது…
அடுத்த 24 மணி நேரமும் அப்படியே பேச்சு வார்த்தை ஏதும் இன்றி சென்றது….. கழிவறை போகும் நேரம் மட்டும் அவனை அழைத்து குழந்தையை அவனிடம் குடுத்து விட்டு சொல்லுவாள்… அதை தவிர அவர்களுக்குள் உரையாடல் எதுவும் பெரிதாக நடக்க வில்லை…
தான் இறங்க வேண்டிய திண்டுக்கல் ரயிலில் நிலையம் வந்து விடவும்…. இறங்கியதும் சமாளிக்க போகும் பிரெச்சனையை நினைத்து பயம் கொள்ள தான் செய்தது அன்பிற்கு…
அவளிடம் கூறி விட்டு செல்ல நினைத்தவன்….
அவன் கடந்த ஐந்து நிமிடமாக தன் சாமான்களை எடுத்து வைத்து கொண்டு இருந்தவனை பார்த்தவள்… அவன் இறங்க போகிறான் என்பதை புரிந்து கொண்டவள்…
அவன் வாசல் வரை சென்று நன்றி கூறினாள்… தன்னுடைய பாக்கை கீழே வைத்து இறங்கியயவனனை எதோ தயக்கத்தோடு பார்த்தவளை என்ன என்பதை போல் பார்த்தவன்
“அந்த கடையில் தண்ணீர் பாட்டில் ஒன்று வாங்கி கொண்டு வந்து தர முடியுமா…ரயிலில் கிடைக்கும் தண்ணீர் சுத்தமாக இருப்பதாக தோன்றவில்லை.. குழந்தைக்கு சேராது” என்றாள்
சரி என்பதை போல் அவன் கடை பக்கம் செல்ல… அவனுடைய பையை பார்த்து கொள்ள ரயிலை விட்டு கீழே இறங்கி கையில் குழந்தையுடன் பையை பார்த்து கொண்டாள்…
பாட்டிளை வாங்கி வந்தவன் அவளின் கையில் குடுக்க…. தயங்கியபடியே
“இப்போ நீங்க எங்க போவீங்க? எங்க இருப்பீங்க?”
[the_ad id=”6605″]
“எனக்கு மதுரையில் தெரிந்த தோழி ஒருத்தி இருக்கிறாள்… அவள் வீட்டில் தங்கி கொள்வேன்…. உங்கள் உதவிகளுக்கு நன்றி” என்று முடித்து கொண்டாள்
அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே… “டேய் அன்பு ” சந்தோச குரலுடன் அவனை யாரோ அழைக்க… திரும்பியவன்
“மாமா… எப்படி இருக்கீங்க?” என்று அன்புடன் காட்டி அணைத்தான் அவனின் மனம் ராமன்
பின் அருகில் வீட்டில் வேலை செய்யும் பெருமாளும் நின்றிருக்க அவரையும் நலம் விசாரித்தான்….
பெருமாளுடன் அன்பு பேசி கொண்டு இருக்கும் போது ராமனின் பார்வை அங்கு குழந்தையுடன் நின்று கொண்டு இருந்தவளையே அலசி கொண்டு இருக்க…
“ஒரு வேலை இந்த பொண்ணு தான் அந்த பொண்ணோ…. அப்போ கைல இருக்க குழந்தை யாரோடது” இவர் ஒரு புறம் யோசித்து கொண்டு இருக்க…
அங்கு சமயம் பார்த்து வந்து சேர்ந்தார் டிக்கெட் அதிகாரி…. இதை அன்பு எதிர் பார்க்க வில்லை தான்….
“Mr.and mrs. அன்புக்கினியான்…. உங்களோட மீதி பணம்… எங்கே நான் வருவதற்குள் கிளம்பிட போறீங்கனு அவசரமா வந்தேன் ” மொத்த குட்டையையும் குழப்பி விட்டார்….
அவர்களை குழப்பமாய் பார்த்த இருவரும்… செய்வது அறியாது கையை பிசைந்து கொண்டு நிற்க…
“அட என்ன அப்டி பார்க்குறீங்க… உங்க குழந்தைக்கான பயண சீட்டு வாங்கினத்தோட பாக்கி இது… வாங்கிக்கோக”கிட்ட தட்ட கையில் திணித்து விட்டே சென்றார்….
“நெனச்சேன் தம்பி… இது நம்ப வீட்டு மருமகளா தான் இருக்கும்னு… ஆன கைல குழந்தை இருக்கவும் கொஞ்சம் குழம்பிட்டேன்…. கெட்டிக்காரன் மாப்பிளை நீ…. பொண்டாட்டி மட்டும் கூட்டிகிட்டு வாறேனு பார்த்த குழந்தையும் சேர்த்து பெத்துக்கிட்டு வந்து இருக்க “
இது எதோ பெரிய சாதனை போல் ராமன் பெருமை பேச…
அன்பு செய்வதறியாது நிற்க… அவளோ மிரட்சியுடனே அவனை பார்த்து கொண்டு இருந்தாள்….
அதற்குள் ராமனோ பல யூகிப்புகள் செய்து விட்டு இருந்தார்….
“மருமகளை நல்லா சேலை கட்டி புது பொண்ணு போலவே கூட்டிட்டு வந்து இருக்க மாப்பிள்ளை… என்ன அம்மாவை சமாதானம் செய்ய தானே இந்த ஏற்பாடு எல்லாம்”
“ஆன பொண்ணு மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா மாப்பிளை… கண்டிப்பா அக்கா இவளை எதுப்பாக பாரேன்”
மகிழ்ச்சி துள்ளலில் அவர் பேசி கொண்டு இருக்க….
“சரி வாங்க மாப்பிளை… இப்போ கெளம்புனலே அஞ்சு மணி நேரம் ஆகும் வீட்டுக்கு போக… கார் வெளிய தான் இருக்கு… உன் பொஞ்சாதிய கூட்டிட்டு வா கிளம்பலாம்”
அவளை அன்பாகவும் பெருமையுடனும் பார்த்து கொண்டு இருந்த பெருமாளை “பெருமாளு என்ன நின்னுகிட்டு இருக்க…பெட்டி எல்லாம் கார்ல கொண்டு போயி வை” என்று உத்தரவை பறக்க விட்டவர்…. முன் நோக்கி நடக்க
தயங்கி நின்ற அன்பை பார்த்தவர்… “என்ன மாப்பிளை… அம்மாக்கு பயப்படுறியா…. வா மாப்பிள… அக்காவை நாம சமாளிச்சிடலாம்… மருமகளை வானு கூட்டிட்டு வா பா?”
அவர் சொன்னதும் “வா” என்று ஒற்றை வார்த்தை உதித்தவன்
அதை எதிர் பாராத அவள்… சற்று அதிர்ச்சியுடனே நிற்க….
அதை கண்டவன் அவள் மெல்லிய கைகளை அவனின் வலுவான கரங்களால் பிடித்து கிட்டத்தட்ட இழுத்து கொண்டே சென்றான்…..
வழி அனுப்பி நன்றி சொல்ல வந்தது ஒரு குத்தமாயா என்றானது அவளுக்கு….
மாயம் தொடரும்
