Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 25 2

மஞ்சு என்னவென்று பார்க்க அந்த அறையில் நிறைய சாமி படங்கள், மற்றும் இறந்து போன ஸ்ரீஜெயமின் தந்தை, தாய், தாத்தா, பாட்டி என்று நிறைய போட்டோக்கள்   இருக்க, அனைத்து  பார்த்து நின்றவளை. “வா” என்று பக்கத்தில் அழைத்தவன், ஒரு  போட்டோ முன் நின்று “இது தான் உங்க மருமகள், எப்பாடா கல்யாணம் பண்ண போறேன்னு எத்தன வாட்டி கேட்டீங்க எம்மா, இங்கே பாருங்க உங்க வீட்டு  மருமகள கூட்டிட்டு வந்திருக்கேன் பாருங்க” என்றவன்.  அவனின் தாயின் புகைபடம் முன் நின்று  பேசிக்கொண்டு  இருந்தவனை பார்த்த மஞ்சுவிடம், “அம்மா”  என்று தனது தாய் புகைபடத்தை காண்பித்தான், போட்டோவை பார்த்து நின்றவளை, தோளோடு அணைத்து கொண்டவனின் குரல் நடுங்க.. “ஸ்ரீ பா வேண்டாம்” என்று கூற..

“என்னை எத்தன வாட்டி கல்யாணம் பண்ண சொல்லி கேட்டாங்க தெரியுமா என் அம்மா பேச்சி, நான் உன்ன மனசுல வச்சுக்கிட்டு யாரையும் கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டேன்,,  அவங்க என்னால தான் சீக்கிரம் இறந்தாங்க, நான் கல்யாணம் பண்ணல என்ற வேதனையிலயே போய் சேர்ந்துட்டாங்க,, என்றவன்.. “வா மஞ்சு” என்று தன் தாய் போட்டோவின் முன் விழுந்து வணங்கியவன்,, “உன் ஆசை  நிறைவேறச்சா பேச்சியம்மாள்”  என்று தன்  அன்னை போட்டோ முன் பேசியவன், “இது என் அப்பா” என்றவன்,  “கும்புட்டுக்கோ” என்றான், அவன் சொன்னதை செய்தவள், “நீங்க வாங்க ஸ்ரீ” என்று அவனை அந்த அறையில் இருந்து அழைத்து வந்தவள் அவனுக்கு தண்ணீர் கொடுத்து  கொஞ்சம் அமைதியாக அமர வைத்தாள்.. ஸ்ரீஜெயம் ரொம்ப  எமோஷனலாக இருந்தான். தண்ணீர் கொடுத்து அவன் தலையை கோதி விட.. தன் வயிற்றில் முகத்தை வைத்து அழுத்தி கொண்டவனை தலைகோதிய படியே இருந்தவளை, இடுப்போடு கட்டிக்கொண்டான் ஸ்ரீஜயம்..



Advertisement

“தனிமை எத்தனை கொடுமை தெரியுமா பாப்பூ, எத்தனை நாள் தனியா  யாரும் இல்லாம இத்த வீட்டுல ஆனாதை மாதிரி இருந்து இருக்கேன் தெரியுமா, ரொம்ப கொடுமை பாப்பூ,, ஏதோ என் அக்கா, அன்பு இருக்குறதால  நான்  உயிரோட இருக்கேன்”, என்றவுடன்.. “ஸ்ரீ” என்றவள். “வேண்டாம் நான் இருக்கேன் ஸ்ரீ”  என்று அவனை  அணைத்துக்கொள்ள..

Advertisement

“நான் உன் கூட கனவில் வாழ்ந்துட்டிருந்தேன்  பாப்பூ, டெய்லி என் கனவில் வந்திருவா பாப்பூ அதுக்காகவே  சீக்கிரம் தூக்கிருவேன் பாப்பூ”  என்றவரை நெத்தி முட்டி முத்தமிட்டவள், அவர் தலைகோதி விட்டு அவர் பேசுவதை  கண்கலங்கி கேட்டு கொண்டிருக்க..

Advertisement

ஸ்ரீஜெயம் போன் ஒலித்தது,  எடுத்து பேசியவர். “சரிடா , சரி வர்றேன்” என்றவர்.. “பாப்பூ கடை வரைக்கும் போயிட்டு வர்றேன், ஒரு வேலை” என்றவர் அவள் கன்னத்தை தட்டி  கொடுத்து விட்டு  “தூங்கு” என்று சொல்லிவிட்டு  சென்றிருந்தார்…

Advertisement

மஞ்சுவுக்கு தூங்கும் எண்ணமே இல்லை.. வீட்டை சுற்றி பார்க்க நிறைய அறைகள் காலியாக இருந்தது, சில அறைகளில் பழய பொருள்கள் எல்லாம்  போட்டு மூடி வைத்திருந்தனர்.. ஸ்ரீஜெயம்  அறை மட்டும் நவீன முறையில் அனைத்து வசதிகளுடன் இருக்க..

அதை பார்த்து சிரித்தவள்..

மாடி ஏறி இருந்தாள், அதில் சில அறைகள் இருக்க.. ஒரத்தில் ஏதோ சைக்கிள் போல் இருந்தது  யார் சைக்கிள்   இது  இங்கே  ஏன்  இருக்கிறது என்று அதன் மேலே போட்டிருந்த துணியை எடுத்து பார்த்தவள் அதிர்ச்சியாகி நின்றாள்.

என் சைக்கிள்,, நான் அன்று மில்லுக்கு  வந்த போது எடுத்துக் கொண்டு வந்த சைக்கிள் இங்கே எப்படி என்று நினைத்தவள். கீழே ஸ்ரீஜெயத்தின் “பாப்பூ, எங்கே இருக்கேன்”  என்று குரல் கேட்டவுடன், சைக்கிளை மூடி வைத்தவள் வேகமாக கீழே செல்ல..

ஸ்ரீஜெயம் கையில் நிறைய கவரோடு அவளை தேட.. மாடியில் இருந்து ஓடி வந்தவளை பார்த்தவர்.. “மெதுவா வா பாப்பூ” என்றார்..

அவளோ அவர் முகத்தை பார்க்காமல் இருக்க..

“இந்தா பாப்பூ இதுல பழம், ஸ்னாக்ஸ் இருக்கு, பால் காய்ச்சி எடுத்துட்டுவர்றேன் நீ ரூம் போ” என்க..

அவளோ அவர் குடுத்த   கவரை வாங்கியவள் ஒன்றும் பேசாமல் அறையை நோக்கி சென்றவள், கவரை ஓரமாக வைத்துவிட்டு..

கண்ணீல்  நீர் நிற்க வில்லை மஞ்சுவுக்கு. என் சைக்கிளை இந்த வருடமாக வைத்திருக்கிறறா.

 ஸ்ரீ என்றவளுக்கு அழுவதை  தவிர  செய்ய முடியவில்லை..

ஸ்ரீஜெயம் வரும் சத்தம் கேட்டு கண்களை துடைத்தவள் அமைதியாக திரும்பிக்கொண்டாள்..

“பாப்பூ, பால் குடிக்கிறீயா”..

“இப்போ வேண்டாம்” என்றவளின் குரலை வைத்தே “அழுதீயா”. என்று கேட்டுக்கொண்டே அவளின் அருகில் வர..

“இல்லை” என்றவள் தலை குனிந்து கொள்ள..

அவள் அருகில் வந்தவர் பால் டம்புளரை டேபிள் மேல் வைத்தவர் அவளின் முகத்தை தன் முகம்  நோக்கி  இலுத்து பார்க்க வைக்க.. தன் முகத்தை பார்க்க மறுத்த கண்களை பார்த்தவர்.. “பாருடி” என்றார்..

பெரிய கேவலோடு   “ஸ்ரீ” என்று கத்தியவள்  அவரை அணைத்து கொண்டு அழுக,, அவள் அழுவதற்கு காரணம் புரியாதவன்..  “ஏன்டா பாப்பூ அழற என்னாச்சு” என்று ஸ்ரீஜெயம் கேட்க.. மீண்டும் அழுதவளை..

“இப்போ  சொல்லபோறீயா இல்லையா”..

“ஸ்ரீ” என்றவள் தேம்பி படியே. “மாடியில, மாடில”. என்றவளை..

“மாடியில என்ன?”…

“என் சைக்கீளை பார்த்தேன்”  என்று அழுது கொண்டே சொன்னவளை..

அழுத்தமாக  முத்தமிட்டவர்..

“உன் சைக்கீளை பார்த்து நீ ஏன் அழுவுற சந்தோசம் தானா படனும்”..

“போங்க ஸ்ரீ, எத்தனை வருஷம அத பத்திரமா எடுத்து வச்சு இருக்கீங்க,, என்னால அத பார்த்தது, அழுகையை   அடக்க முடியல”..

“ஏய் பாப்பூ அது ஒரு சைக்கிள் அதுக்கு போய் ஏன் இவ்வளவு எமோஷனல் பாப்பூ டேக் ஈசி  மா”,, என்றவன்..

கண்மூடி அவளை தன் மேல் போட்டுக்கொண்டு  கட்டிலில் சாயந்திருக்க..

“ஏன் என் சைக்கிளை இவ்வளவு நாள் பத்திரமா வச்சு இருக்கீங்க”..

“அது நீ அன்னைக்கு விட்டு போன, சரி பத்திரமா இருக்கட்டுமுன்னு சொல்லி வீட்டுக்கு எடுத்துட்டு வந்தேன், வெளியில வச்ச எல்லாரும் பாத்திருவாங்க  நெனச்சு என் ரூம்புல வச்சிருந்தேன்.. என் ரூம் ஆல்ரேஷன் பண்ணும் போதுதான் மேலே கொண்டு போய் வச்சேன்”..

ஸ்ரீஜெயம் கண்மூடிய படியே பேச.. மஞ்சு அவரை பார்த்துக்கொண்டே அவர் மார்பில் தலை வைத்திருக்க..

சில நொடிகள் அமைதியாக இருந்த ஸ்ரீஜெயம்  “எத்தனை தடவை தனியா  அந்த சைக்கிள் கிட்ட பேசி இருக்கேன், தெரியுமா பாப்பூ”  என்றவரின் குரல் கமர..

“ஸ்ரீ”  என்றவள்.. “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் அதை கேட்ட என்னால முடியாது” என்றவன்..

ஸ்ரீஜெயத்தின் முகம் முழுவதும் ஆவேசமாக முத்தமிட.. அவள் கொடுப்பதை கண்மூடி அனுபவித்தவர் முத்தம் நிற்று போகவும்,

கண்திறந்து பார்த்தவரை, பார்க்க முடியாமல் கண்மூடியவளை. தன் முத்தங்களால் அவளை  கொஞ்சி தீர்க்க, போதும் என்பது போல் தள்ளியவளை.. இன்னும் தொடங்கவே  இல்லை என்றார்..

“அவ்வளவு பிடிக்கும் என்னை”.. என்றவளிடம்..

“காட்டவா” என்று  காது மடலை உறசிகொண்டே முத்தம் வைத்தவரிடம் “ஊம்” என்று சம்மதம் தர.

இருவரின் அணைப்பு  கூடிக்கொண்டே போக.. இருவரும்  வேறு  உலகத்துக்கு சென்று கொண்டிருக்க.. இருவரும் ஒன்றாக மாறும் நேரம்.. “ஸ்ரீ” என்றவள்.. ” எனக்கு இன்னும் மென்சஸ் நிக்கல” என்று சொன்னவள் “குழந்தை வந்துட்டா”..  என்று பேச்சை நிறுத்த..

“குழந்தை வந்துட்டா வரட்டும், பெத்துக்கலாம்டி”..  என்று சரசம் பேசி இணைய…

“ஸ்ரீ” என்று அவரிடம் இருந்து விலக பார்க்க..

“ஏய் இருடி ஒரு நிமிசம்” என்றவர்..

அவரின் போனை எடுத்து  ஹரி பண்ணிய  மெஜேஸை காட்ட..

அதை படித்த மஞ்சுவின்  முகம்  சிவந்து போக, “போதுமா” என்றவர் “இரு ஒரு நிமிசம்” என்றவர்.. அன்புவும், பார்கவியும்  அனுப்பிய  மெஜேஸ்சை  காட்ட..

மஞ்சு “ஆ”  என்பது  போல் பார்த்த மனைவியை  தன்னவள் ஆக்கி கொண்டார் ஸ்ரீஜெயம். மஞ்சுவின் வெக்க  சிரிப்பை  பார்த்துக்கொண்டே அவளிடம் இணைத்தவர்..

“பயம்  போயிருச்சா, இனி எதுவும் கேட்க மாட்டீயே”.. என்று 25 து வருஷ ஒட்டு மொத்த   காதலை மஞ்சுவிடம்  காட்ட, அவனின்   நேசத்தில் மிரண்டு போன மஞ்சு,..”போதும்”..என்று அவரை தள்ளி விட..

“ஏய்  இன்னும்  பேலன்ஸ் இருக்குடி” என்று   ஸ்ரீஜெயம் சிரிக்க…

“நாளைக்கு பாத்துக்கலாம் ஸ்ரீ” என்றவள்.. அவனின் மார்பில்  படுத்து கண்மூட…

“பாப்பூ”..

“ஊம்…”.. என்றாள் கண்மூடிய படியே.

“உனக்கு ஏதாவது கஷ்டமா இருக்க”..

நிமிர்ந்து பார்த்த மஞ்சு, ஸ்ரீஜெயத்தில்  இதழில் மெல்ல முத்தமிட்டு, எனக்கு வருத்தமில்லை  என்பதை காட்டி விட்டு மீண்டும் அவர் மார்பில் தலை சாய்த்து படுத்து விட..

ஸ்ரீஜெயம் அவள் நெத்தில் முத்தமிட.. கண் மூடியே படியே, “இது எத்தனாவது  முத்தம் ஸ்ரீ”..

“அது இருக்கும்  ஒரு லட்சத்துக்கு  மேல”..

“சீ…..”  என்றவளின்.

இதழில் “லட்சத்தில் ஒன்னு” என்று முத்தம் வைக்க..

குழுங்கி சிரித்தவளை அணைத்தவாறே  கண்மூடினார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!