Skip to content
Post Views: 1,605
ஸ்ரீஜெயத்துக்கு சாயங்காலம் ஹரியிடம் இருந்து ஒரு மெஜேஜ் வந்திருந்தது…
அப்பா.. என்று முதலில் டைப்பண்ணி இருந்தவன்.
Advertisement
‘ நீங்களும், அம்மாவும் உங்க வாழ்க்கையை வாழுங்க எனக்காக, உங்க வாழ்க்கையை, நீங்க காம்பர் மைஸ் பண்ண வேண்டாம்’ என்று நிறுத்தியவன்..
Advertisement
‘உங்க வாழ்க்கையில இன்னொரு உறவு வந்தா, நான் ரொம்ப சந்தோஷ படுவேன்.. என்று நிறுத்தி இருந்தான்..
Advertisement
அன்பு மாமனுக்கு போன் போட்டு பேசியவன்..
Advertisement
“பார்கவி உங்க போனுக்கு மெஜேஜ் போட்டு இருக்க மாம்ஸ் படிங்க” என்று அழைப்பை துண்டித்து இருக்க..
ஸ்ரீஜெயம் மகள் அனுப்பிய மெஜேஜை திறந்து பார்த்து படித்தவர்.. முதலில் சிரித்தவர், தன் இரு பிள்ளைகள், தங்கள் இருவருக்காக நினைப்பதை நினைத்து பெருமை கொண்டார்..
அந்த மெஜேஜில் ‘ஸ்ரீ ப்பா, நீங்களும், அம்மாவும் சந்தோசமாக இருக்குறத பார்த்தது கப்பறமா தான். நாங்க எங்க வாழ்க்கையை தொடங்குவோம், எனக்கு இன்னொரு தம்பியோ, தங்கையோ வந்தா நான் ரொம்ப சந்தோஷா படுவேன்” என்று மகள் டைப்பண்ணி அனுப்பி இருந்தாள்.
ஸ்ரீஜெயத்துக்கு மஞ்சுவுடன் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்து இருந்தார்.. ஆனால் குழந்தையை பத்தி நினைக்க வில்லை, இன்று அவர் பிள்ளைகள் அதற்கு ஆதரவு தெரிவிக்க, அவரும் தடையின்றி மஞ்சுவுடன் வாழ தொடங்கினார்.
இருவரும் சந்தோஷமாக வாழ தொடங்கினார்.. இருவரின் முகத்தை பார்த்த நளினிக்கு அவ்வளவு சந்தோசம்.. தம்பி கண்முண்ணே துணையோடு வாழ்வதே பெரும் சந்தோசம் அவருக்கு..
பெரியசாமி, கமலியின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருந்தது..
மொத்த சொந்தமும் கூடிஇருந்தது.. ஹரியும் வந்திருந்தான்.. முன் வரிசையில் அமர்ந்திருந்தவன் தன் அம்மாவை பார்த்து ரசித்திருந்தான், பட்டுபுடவையில், கழுத்து நிறைய நகை போட்டு. தலைநிறைய பூ வைத்து. அண்ணன் மகன் கல்யாணத்துக்கு அங்கேயும், இங்கேயும் அழையும் தாயை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்..
தன் முன் பாவடை தாவணியில் ஒரு பெண் வந்து நிற்க.. என்ன என்பது போல் ஹரி அப்பெண்ணை பார்த்தான்..
“ஹரி மச்சான் மாமா உங்களை பேம்மிலி போட்டோ எடுக்க கூப்பிடுறாங்க வாங்க”. என்று அழைக்க..
“இல்லை நான் வரலை” என்றவனை..
“வாங்க மச்சான்” என்று உரிமையோடு கைபிடித்து அழைத்த பெண்ணை பார்த்தவனுக்கு, ஒரு இனம்புரியாத சுகம் மனதில் பரவ..
இது யாரு என்னை மச்சான்னு கூப்பிடுற என்று பார்க்க..
அனைவரும் பேம்மிலி போட்டோ எடுக்க அமர்ந்திருக்க.. அவனை கைபிடித்து அழைத்து சென்றாள். ஸ்ரீஜெயத்தின் தங்கை மகள் காயத்ரி.
ஸ்ரீஜெயத்தின் பக்கத்தில் அவனை நிறுத்தி விட்டு பெண்களோடு சேர்ந்து நின்று கொண்டாள்..
ஹரிக்கு அப்பெண் தன் கையை பிடித்து உரிமையோடு இலுத்து வந்தது, பிடித்து இருக்க. நீண்ட நேரம் அப்பெண்ணை பார்த்த ஹரியிடம் வந்த அன்பு..
“என்ன மாப்புள அந்த பொண்ணை அப்படி பாக்குற”..
“யாரு அன்பு அந்த பொண்ணு”..
“டேய் உனக்கு முறை பொண்ணுட அவ, பேரு காயத்ரி, பெங்களுருல வேலை பாக்குற, அப்பா இல்லாத பொண்ணு, உங்க அப்பா தான் அந்த பிள்ளையை படிக்க வைக்குறாரு”..
“ஓ…” என்றவன்..
ஸ்ரீஜெயத்தின் அருகில் சென்று நிற்க.
“என்ன ஹரி என்றார் மகனை பார்த்து” தூரத்தில் நின்று இருந்த காயத்ரியை கை காண்பித்தவன்..
“எனக்கு அந்த பொண்ணா பிடிச்சு இருக்கு பா” என்ற மகனை பார்த்தவர்..
“வீட்டுக்கு போய் பேசலாம்” என்று மகனை அனுப்பி வைத்தார்.
காயத்ரிக்கு ஏற்கனவே அண்ணன் மகனை கல்யாணத்துக்கு வீட்டில் பேசி முடித்திருக்க. மகன் சொன்னதை எப்படி நிறைவேத்தி வைக்க என்று குழப்பத்தில் இருந்தார்..
அனைவரும் பெரியசாமி திருமணம் முடிந்து ஸ்ரீஜெயம் வீட்டில் இருக்க..
ஸ்ரீஜெயமின் தங்கை சீதா “அண்ணா உன் மருமகளை என்னென்னு கல்யாணம் வேண்டமாம் பாரினுக்கு வேலைக்கு போறாலாம் நீ கேளு இதெல்லாம் நம்மலுக்கு ஒத்து வருமா, ஒலுங்க அவளை பெரிய அண்ணா பையனை கல்யாணம் பண்ண சொல்லு” என்றார் கண்கலங்கியபடியே..
“சீதா பொறுமை இரு நம்ம பொண்ணு தானே பேசிக்கலாம்” என்று ஸ்ரீஜெயம். “நீ என்னாட சொல்லுற” என்றார்.. காயத்ரியை பார்த்து..
அவளோ அமைதியாக இருக்க..
“பதில் சொல்லுடி” என்றார் சீதா மகளை..
அவளோ பேசமுடியாமல் அமர்ந்திருக்க..
“வாடா பாப்பா” என்ற ஸ்ரீஜெயம் அவரின் பக்கத்தில் உட்கார வைத்து கேட்க..
“மாமா” என்றவள். “எனக்கு பாரின் போக ஆப்பர் வந்து இருக்கு.. நான் கண்டிப்பா போவேன்” என்றவளை.
பாய்ந்து வந்து அடித்து இருந்தார் சீதா.. “உனக்கு வாழ்க்கை முக்கியமா, வேலை முக்கியமா டி? வர்ற வாழ்க்கை உதராத, அப்பறம் கஷ்ட படுவ”..என்று சொல்வதற்க்குள்..
“சின்ன பாப்பா, பிள்ளையை வையாத” என்றார் ஸ்ரீஜெயம்..
“அண்ணா” என்றவர்,, “என் புருஷன் இவ 12 படிக்கும் போது இறந்துட்டாரு,, நீ தான் இவள படிக்க வச்ச,, பெரிய அண்ணன் நீ போட்டது போதும், பிள்ளையை கட்டி வைய்யுன்னு சொல்லுறாரு, இவ கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்குற” என்று அழுதவரை..
“நீ கடைசியா என் சொல்லுறடா காயத்ரி” என்றார் ஸ்ரீஜெயம்..
“எனக்கு பாரின் போகனும் அவ்வளவு தான்”..
“அண்ணா நான் ஏற்கனவே பெரிய அண்ணா கிட்ட கேட்டேன்,, அண்ணே பாரின் எல்லாம் போக கூடாது, வேலைக்கே போக கூடாதுண்ணு சொல்லிருச்சு, இவள கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் நடத்த சொல்லு” என்ற தாயை பார்த்த,, காயத்ரி, தாயின் அருகில் வந்து..
“நான் சொல்லுறதுக்கு நீங்க பதில் சொல்லுங்க மா,, நான் கல்யாணம் பண்ணி போயிட்டா, நீயும், தம்பியும் என்ன பண்ணுவீங்க”.
“அது என் பாடு, உன் வாழ்க்கையை நீ பாரு, நாங்க எங்கள பாத்துக்குவோம், என் அண்ணன் ஸ்ரீஜெயம் இருக்கார் டி, அவர் பாத்துப்பார்”..
“மா”, என்றவள்.. “மாமா இதுவரைக்கு செஞ்சது போதும், இனி நம்ம குடும்பத்தை நான் பாத்துக்குவேன், தம்பியை நான் படிக்க வச்சுட்டு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றவளை..
கண்ணீர் மல்க பார்த்து தாயை பார்த்தவளுக்கு கண்ணீர் வர..
“எப்படி பட்ட பிள்ளையை பெத்து வச்சு இருக்க, சீதா அவ வாழ்க்கையை அவ இனி பாத்துப்பா, நீ எதுவும் சொல்லாதே பிள்ளையை” என்றார் ஸ்ரீஜெயம்..
“அண்ணா அவ பேசுறது சரி,, பாரின் போயிட்டு வர மூனு வருஷம் ஆகும், அதுக்கு அப்பறம் எப்படி மாப்பிள்ளை அமையும் வயசு ஏறுதுல, அவள கல்யாணம் பண்ணிட்டு பாரின் போக சொல்லு”.. என்க.
“அம்மா சொல்லுறது சரிதானே டா காயத்ரி” என்ற மாமானை பார்த்தவள்.
“தான் யாரவேணுமுன்னாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன், மாமா ஆனா நான் பாரின் போகனும் அவ்வளவு தான்” என்று கூற.
“நான் பெரிய அண்ணா கிட்டா பேசிட்டேன் அவர் இவ பாரின் போக சம்மதிக்க மாட்டார்” என்ற தாயை பார்த்தவள்..
“நான் பாரின் போக யாரு ஓகே சொல்லுறாங்கலோ அவங்கள நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”.. என்றவளை பார்த்த ஹரி..
“எனக்கு ஓகே நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்,நீ பாரின் போயிட்டு வா” என்றவனை மொத்தம் குடும்பமும் பார்க்க..
சீதாவை பார்த்த ஸ்ரீஜெயம், “அப்பறம் என்ன சீதா என் சம்பந்தியாக சம்மதமா” என்று கேட்க..
“அண்ணா உன் பையனுக்கு என் பொண்ணை குடுக்க நான் புண்ணியம் பண்ணி இருக்கனும்” என்றவளை பார்த்து சிரித்தவர்..
காயத்ரியை பார்க்க,, “மாமா” என்றவள், ஸ்ரீஜெயம் கேட்கும் முன் “நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன் மாமா” என்றவள் மாமானை அணைத்து கலங்கியவளை..
“வாடா ஹரி” என்று மகனை பக்கத்தில் அழைத்தவர்,, “உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ண சம்மதம் தானே”.. என்று இருவரிம் கேட்க..
ஹரி காயத்ரியை பார்த்துக்கொண்டே “எனக்கு ஓகே பா, உங்க தங்கை பொண்ணு கிட்ட கேளுங்க” என்று சொல்ல..
“எனக்கும் ஓகே தான் மாமா” என்று கூற.. யாருக்கும் தெரியாமல் காயத்ரியை பார்த்து ஒன்றை கண்ணடித்தாள் ஹரி..
அவள் இவனை பார்த்து குனிந்து கொள்ள, “அழகி” என்று அவளை அழைக்க.. அவள் நிமிர்ந்து பார்க்க “நான் ஓகேவா உனக்கு” என்று கேட்க..
“நேத்தே எனக்கு ஓகே தான், நீங்க தான் இப்போ கேட்குறீங்க” என்றவளை..
“உம்ம்ம்..” என்றவனை..
“உம்ம்…” என்று தலையாட்டி இருந்தாள்..
அடுத்த மாதம் இருவரும் திருமணம் என்று பேசி முடிக்க.. ஸ்ரீஜெயம் மஞ்சுவை தேட..
“எங்கடா அம்மா” என்றார் பார்கவியை பார்த்து..
“அம்மா தூங்குறாங்க பா, உடம்பு சரியில்லபா,அது தான் தூங்க சொன்னேன்” என்று கூற..
இங்கே ஒரு கல்யாணமே பேசிமுடிச்சாச்சு இவ தூங்குறாளா.. என்னாச்சு இவளுக்கு என்று அறைக்கு வந்து பார்க்க. அனைத்து சன்னல்களையும் மூடிவிட்டு அறையை இருட்டாக்கி கட்டிலில் சுகமாக தூங்கும் மனைவியை பார்த்தவர். பக்கத்தில் உட்கார்ந்து மஞ்சுவின் தலையை வருடி விட..
error: Content is protected !!