Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uyir Niraigiraen Azhaga

உயிர் நிறைகிறேன் அழகா-34

அத்தியாயம்-34

ஓங்கிய கையை கட்டுப்படுத்தி, கீழே இறக்கினான்..அந்த அடி அவள் மேல் பட்டிருந்தால், பிரசவத்துக்கு முன்பே, அவள் சொன்னது போல ஆகி இருக்கும். அவ்வளவு வேகம் இருந்தது அவனிடம்..

அவளின் அதிர்வை பார்த்தவன்..அவளை இழுத்து, இறுக்கி அணைத்தான்..அவள் கன்னம் தாங்கி, இதழோடு இதழ் சேர்ந்தான்.. இதை எதிர்பார்க்காத மதி,இன்பமாய் அதிர்ந்தாள்..

நொடிகள் நிமிடங்களாக மாறிய பொழுது அவள் நடு முதுகில், சுரீர் என்று ஒரு வலி தாக்கியது..

அவன் தோள்களை பிடித்திருந்த அவள் கைகள், தன் வலியால் அதை இறுக பற்றியது..



Advertisement

அதில் வித்தியாசம் உணர்ந்தவன்,அவள் முகம் பார்த்தான்..வலியால் சுளித்திருந்த புருவத்தை கண்டு,

“என்ன ஆச்சு மதி??”

இப்பொழுது அவள் முகம், பழைய நிலைக்கு திரும்பி இருந்தது..

Advertisement

“ஒன்னும் இல்ல வரு..லேசா வலிச்ச பீஃல்”

Advertisement

“என்ன சாதாரணமா சொல்லுற??வா, ஹாஸ்பிடல் போலாம்..”

அவன் முகத்தில் பதட்டம்..

“இந்த நேரத்துல, இப்படி அடிக்கடி, லேசா வலிக்கும் வரு..கொஞ்ச நேரம் பார்ப்போம்..திரும்ப வலி வந்தா சொல்லுறேன்..”

Advertisement

அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.. ஏனோ அவனை விட்டு விலக மனம் வரவில்லை அவளுக்கு.

அவனும், அவளின் வயிறு அனுமதித்த அளவு இறுக்கிக் கொண்டான்..

மீண்டும் ஒரு மின்னல் வலி தாக்கியது..இந்த முறையும், அவளின் அணைப்பின் வித்தியாசத்தில் அதை கண்டவன்..

“வா, உடனே ஹாஸ்பிடல் போலாம்..”

அவளை கைகளில் ஏந்திக் கொண்டு, கீழே வந்தான்..

“சூடுனால கூட வலிக்கும் வரு..எதுக்கும், அத்தை கிட்ட சொல்லி, கஷாயம் வச்சு குடிச்சு பார்க்குறேன்..”

அவளை கூடத்தில் அமர வைத்து விட்டு, மரகதத்தை கூட்டி வந்தான்..

அவளை பார்த்தவர்..

“வயிறு இறங்கி தான் இருக்கு.எதுக்கும், கஷாயம் தரேன்..”

உள்ளே சென்று, கஷாயம் செய்து எடுத்து வந்தார்..

அதற்கிடையில் ஒரு வலி வந்தது அவளுக்கு..

கஷாயம் குடித்த பிறகும், வலி  வருவது நிற்கவில்லை..அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்..

ராஜாவின் மனதில், இனம் புரியாத பயம்..
அங்கு பிரசவ அறைக்குள் செல்லும் வரை, அவன் கையை பிடித்துக் கொண்டே வந்தவள்,அறை வந்தும், கையை விடவில்லை..

 

 

[the_ad id=”6605″]

 

 

 

செவிலியர்,
“சார், நாங்க பார்த்துக்குறோம்,விடுங்க..”

கையை பிடித்திருந்தது என்னவோ மதி,இவனுக்கும் விட மனமில்லை..

அவன் முகம் பார்த்து, அவனின் பயம் உணர்ந்தவள்..

“பயப்படாதீங்க வரு..எனக்கு ஒன்னும் ஆகாது..உங்க கூட நெறைய வருஷம் வாழனுமுன்னு, எனக்கு ஆசை இருக்கு..நல்லபடியா திரும்பி வருவேன்..”

கண்கள் கலங்க, அவள் கைகளில் அழுத்தம் கொடுத்து, உள்ளே அனுப்பினான்..

மரகதம் அவனுக்கு, ஆறுதல் கூறிக் கொண்டே இருந்தார்..

பாண்டியும்  தகவல் அறிந்து வந்தான்..
கண்களை மூடி, சுவரில் தலை சாய்த்து நின்றவன் தோளை தொட்டான்..

அந்த உணர்வில் கண் திறந்தான் ராஜா..

கலங்கி சிவந்த விழிகளை கண்ட பாண்டி,

“மாப்பு,என்ன இது??மதிக்கு ஒன்னும் ஆகாது..”

“ஆகக் கூடாது..எனக்கு அவ வேணும்..நான் என்ன செஞ்சேன்னு, அவ என் மேல இவ்ளோ காதல் வச்சான்னு தெரியாது..ஆனா, திரும்ப அந்த காதல், எனக்கு வேணும்..எனக்கு மட்டும் வேணும்..”

அவன் பதிலில், அவனை வியந்து பார்த்தான் பாண்டி..

இவ்வளவு நாள், அவன் கோபமாய் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருந்தான் பாண்டி..

சில மணி நேர காத்திருப்புக்கு பலனாய், அதிகாலை வேளையில், அவன் மகன், இந்த பூவுலகில் அவதரித்தான்..

குழந்தையின் அழு குரலில், அனைவர் முகத்திலும் பரபரப்பு..

வெளியே வந்த செவிலியர்,
“ஆண் குழந்தை  பிறந்துருக்கு சார்.ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க…”
அறிவித்து விட்டு சென்றார்..

“ஏலே ராசா, உங்க அப்பாவே திரும்ப வந்து, உனக்கு மகனா பிறந்துட்டாரு லே..”

மரகதத்தின் மகிழ்ச்சி, அவர் குரலில் தெரிந்தது..

சிறிது நேரத்தில் அனைவரும் உள்ளே சென்றார்கள்..

அனைவரும் தொட்டிலின் அருகே சென்று, குழந்தையை ஆவலோடு பார்த்தார்கள்..ரோஜா குவியல் போல இருந்தது குழந்தை..

குழந்தையை ஒரு நொடி பார்த்து விட்டு, மதியின் அருகே விரைந்தான் ராஜா..

மயக்கத்தில் இருந்தவளின் தலையை கோதினான்..

அதில் கண் விழித்த மதி, மெல்லிய புன்னகையோடு,
“குழந்தை, யார் மாதிரி இருக்கு வரு..??”

“உன்ற மாமனார் மாதிரி தான்..”

மாமியாரிடம் இருந்து பதில் வந்தது..

கணவனும் மனைவியும் கண்களாலேயே பேசிக் கொண்டார்கள்..

அகல் வந்து, குழந்தையை பார்த்து விட்டு சென்றாள்..

மீனாவுக்கு விஷயம் சொல்லப் பட்டு, அன்று இரவு வந்தாள் அவள்..

“உன் மகனுக்கு ரொம்ப அவசரம் டி.. இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கேன்னு பார்த்தா, நான் வாரத்துக்குள்ள பிறந்துட்டான்..”

மகிழ்வாய் சலித்துக் கொண்டாள் அவள்..

மறுநாள் சேகர் வந்தார், கூடவே பிரமிளாவும்..

மரகதமே ஆச்சர்யமாய் பார்த்தார்..

இருவரையும் மகிழ்ச்சியாய் வரவேற்றாள் மதி..

“வாங்க ப்பா.. பிரமி ம்மா.. நல்லா இருக்கீங்களா..??”

அவளை கண்டு ஒரு நொடி, கண் இமைக்காமல் பார்த்தவர்..அவள் இரு கன்னங்களையும் பற்றி, நெற்றியில் முத்தமிட்டார்..

இப்பொழுது அனைவர் முகத்திலும் வியப்பு..

வெகு நாள் பழகியது போல, அவளிடம் பேச ஆரம்பித்து விட்டார் பிரமிளா..
பிரமிளாவை முன்பே, புகைப்படத்தில் பார்த்திருக்கிறாள் மதி..

அவரின் சகஜ பேச்சில், அவளும் தயக்கம் விலகி, பேச ஆரம்பித்தாள்..

மன்னிப்பை வார்த்தையால் சொல்லாமல், செய்கையில் உணர்த்திக் கொண்டிருந்தார் அவர்..

மதுவின் நிலை அவருக்கு, பல அனுபவ பாடங்களை தந்திருந்தது..
மதுவை போலவே இருக்கும் அவளை, பிரித்துப் பார்க்க முடியவில்லை அவரால்..
இவ்வளவு நாள் அவளை, ஒதுக்கி வைத்ததற்கு வருந்தினார்..

மருத்துவமனை உணவகத்தில் அமர்ந்திருந்தார்கள், ராஜாவும் சேகரும்,

“மது, எப்படி இருக்கா மாமா??”

“நல்ல முன்னேற்றம் ராஜா..அவளோட ஒத்துழைப்பை, யாருமே எதிர் பார்க்கல..சீக்கிரம் குணம் ஆகனுமுன்னு, ரொம்ப தீவிரமா இருக்குறதா, டாக்டர்ஸ்ஸே சொல்லுறாங்க..இன்னும் ஒரு மாசத்துல, வீட்டுக்கே கூட்டிட்டு போகலாமுன்னு சொல்லிட்டாங்க..”

“அந்த அமித்லாலை, சும்மாவா விட்டீங்க மாமா..”

 

 

[the_ad id=”6605″]

 

 

சற்று மௌனம் காத்தவர்..

மது, இங்க வந்த உடனேயே, அவன் எனக்கு ஒரு வீடியோ அனுப்புனான் ராஜா..

அவ போதை மருந்தோட தாக்கத்துல, ஒரு பார்ட்டில, பயங்கர கலாட்டா பண்ணி இருக்கா..

அதை அனுப்பிட்டு,இது சாம்பிள் தான்.. எனக்கு எதிரா உங்க சுண்டு விரல் அசைஞ்சா கூட, இன்னும் இது மாதிரி நெறைய இருக்கு..

உங்க பொண்ணு ஹிஸ்டிரியா பேசன்ட்,ட்ரக் அடிக்ட்,என்னை கொல்ல பார்த்தான்னு சொல்லி, உள்ள தூக்கி போட்டுடுவேன்..அதுக்கு மருத்துவ சான்று, நாலு சாட்சி எல்லாம், தயாரா இருக்கு..

இனி, உங்க வழியை நீங்க பார்த்திங்கன்னா, என் வழியை மட்டும் நான் பார்ப்பேன். அப்படின்னு சொன்னான்..

எனக்கு அவன் கூட மோத தெம்பில்லை.. என் பொண்ணு சரி ஆகி வந்தா போதுமுன்னு விட்டுட்டேன்..”

“என்ன மாமா,அதுக்காக அவனை அப்படியே விட சொல்லுறீங்களா??இதே மாதிரி, எத்தனை பேர் வாழ்க்கையை கெடுப்பானோ..?? சமூக கிருமி அவன்.
அன்னைக்கு மதுவை கூட்டிட்டு வரணுமுன்னு தான், அவனை சும்மா விட்டேன்..இல்ல, என் ஆத்திரம் தீர, நாலு அறையாவது விட்டுட்டு வந்துருப்பேன்..”

“மதுவும், அதே தான் சொல்லுற ராஜா..அவனை சும்மா விட கூடாதுன்னு..என் பொண்ணு கண்ணுல, அப்படி ஒரு கோபம் அப்போ..

மத்த நேரத்துல எல்லாம், சாதாரணமா பேசுறா..
என் பொண்ணா இதுன்னு?? ஆச்சர்யமாய் இருக்கு..
அவ்ளோ அமைதி ஆகிட்டா..
அவ துறுத்துறுப்பு எல்லாம், எங்க போச்சுன்னே தெரியல..
அவ அமைதி ஆனாதை நினைச்சு சந்தோஷப் படவா..இல்ல, அவ குணம் தொலைஞ்சு போச்சுன்னு வருத்த படவா, தெரியல..”

பெரு மூச்சு விட்டார்..

“விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிச்சுருக்கேன், மது கிட்ட கையெழுத்து வாங்கி..அவனும் சம்மதிச்சுட்டான்..
ஆனா, இன்னும் ஒரு வருஷம் ஆகலை கல்யாணம் ஆகி..அதுனால, கிடைக்க லேட்டாகும்ன்னு வக்கீல் சொல்லுறார்..”

“அது இருக்கட்டும் மாமா..அவனை எதாவது செய்யனும்..”

“அவன் நம்மள விட, செல்வாக்கான ஆளு ராஜா..என்ன செய்ய முடியும்..??எம் பொண்ணு முழுசா வந்ததே போதும் எனக்கு..
மதுவும், உன்னை மாதிரி தான் சொல்லுறா…

ஏதோ, அவனுக்கு எதிரா ஆதாரம் வச்சுருந்தாளாம்..அது இருந்தா, இந்நேரம் அவனை உள்ள தள்ளி இருப்பேன்..

அது வேணும் எனக்கு..அவன் வீட்டுல இருக்கு..யாராவது விட்டு, எடுத்துட்டு வர சொல்லுங்க..
அப்புறம் நான் பார்த்துக்குறேன்னு, புலம்பிட்டே இருக்கா..”

புருவம் சுருக்கியவன்..

“என்ன ஆதாரம்??”

“ஏதோ, பென்ட்ரைவ்வாம்..
அவ பெட்டுக்கு கீழே, ஏதோ சீக்ரெட் லாக்கர்ல இருக்கு..எனக்கு வேணுமுன்னு, அதே தான் சொல்லுறா..

அவன் வீட்டுக்குள்ள ஒரு தடவை போய்ட்டு வந்ததே பெருசு..இனி ஒரு முறை, எப்படி போக முடியும்??இப்போ இன்னும், பாதுகாப்பு அதிகம் ஆக்கி இருப்பான்..
எவ்ளோ பெரிய ரிஸ்க் அது..”

சற்று பரபரப்பான ராஜா,
“மாமா,என் கிட்ட தான் இருக்கு அந்த பென்ட்ரைவ்..நான் மறந்தே போய்ட்டேன்..அவ அந்த நிலையிலயும், அதை எடுத்துட்டு தான் வருவேன்னு பிடிவாதம் பிடிச்சு, எடுத்துட்டு வந்தா..
வீட்டுல தான் இருக்கு..நான் எடுத்து தரேன்..அவனை, வெளியவே வர முடியாத அளவு உள்ள போடுங்க..”

சேகரின் முகத்திலும், ஒளி தோன்றியது..

அன்று இரவே அதை வாங்கிக் கொண்டு சென்னை திரும்பினார்கள்..

சென்னை மருத்துவமனையில்..

இருளை வெறித்த படி நின்றாள் மது..

அவள் மனதில், கனல் எரிந்து கொண்டிருந்தது..

பிறந்ததிலிருந்து ராணி போல வளர்க்கப்பட்டவள் அவள்..

அவள் கேட்கும் முன்பே அவள் ஆசைப்பட்டது கிடைக்கும்..
பணம் மட்டுமே வாழ்க்கையில் முக்கியம் என்று, பிரமிளாவால் சொல்லி வளர்க்கப்பட்டாள் அவள்..

அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பின், அன்னை தந்தையின் சண்டைகள் புரிந்தது..
இருவருக்கும் பிடிக்கவில்லை என்று அறிந்து கொண்டாள்..

அடிக்கடி பிரமிளா அவளிடம் கூறும்,
“தகுதி இல்லாத மனுஷனை கட்டி, கஷ்டப்படுறேன்”

என்னும் வார்த்தை, அவள் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது..
தகுதி என்பது, பணம் என்று போதிக்க பட்டு வளர்ந்தாள்..

பணம் உள்ளவனை கல்யாணம் செய்தால் தான், மகிழ்ச்சி கிடைக்கும் என்று மனதில் பதித்து கொண்டாள்..

அதற்கு பிறகு அவள் மனதை பாதித்த அடுத்த விஷயம்,அவள் பிறந்த நாள் அன்று அவள் தந்தை, அவளோடு இருக்க மாட்டார்..

ஏன் என்று அன்னையிடம் கேட்டாள்..

“உன் அப்பாக்கு மூளை குழம்பி போய்டும் அன்னைக்கு. ஆகாத சாவஹாசம் தேடி போய்டுவார்..”

இதே போன்று பதில், வேறு வேறு வார்த்தைகள் வடிவில் கிடைக்கும்..

அவரை வர வைக்கவே,தன் பிறந்த நாள் அன்று, சரியாய் உண்ணாமல், பைக் எடுத்துக் கொண்டு தோழர் தோழியரோடு சுற்றி, மயங்கி விழுந்து, அவரை வர வைத்தாள்..

அதன் பிறகு, அவர் எங்கும் போகாமல் அன்னையின் மூலம் பார்த்துக் கொண்டாள்..

அவருக்கு தன்னை விட, யாரும் முக்கியமாய் இருக்க கூடாது என்று நினைத்தாள்..

கல்லூரியில் அடி எடுத்து வைத்த பிறகு, அவள் பின்னே சுற்றிய அனைவரிடமும், பணம் என்ற ஒற்றை தகுதி வைத்து பழகினாள்..

காதல் எல்லாம் சுத்த பொய் என்று நம்பினாள்..
அவளின் நட்புகளும் அவளை போலவே இருந்ததில், அவள் செய்வது சரி என்றே உறுதியாய் நம்பினாள்..

அனைவரிடமும் சகஜமாய் பழகினாலும், ஒரு எல்லைக்குள் நிறுத்தினாள்..

மனம் போன போக்கில் பப்,பார்ட்டி என்று சுற்றினாள்..
அந்த சமயத்தில் தான், அவள்  தோழன் ஒருத்தன் குடித்து விட்டு, விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் இருப்பதாய் தகவல் கிடைத்து, பார்க்க சென்றாள்..

அங்கு, தன்னை போலவே ஒரு பெண்ணை கண்டது பெரிய அதிர்ச்சி என்றால், அதை விட அதிக அதிர்ச்சி, தன் தந்தை அந்த பெண்ணிடம், பரிவோடு பேசிக் கொண்டிருந்தது..

அவர் செல்லும் வரை பொறுத்திருந்து, அவளை நெருங்கி பேசிய பிறகு,அவளின் அஸ்திவாரமே ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது..

அந்த பெண்ணும் இவளும் ரெட்டை பிறவியாம்..
தான் நினைத்தது போல,அவள், பார்ன் வித் சில்வர் ஸ்பூன் அல்ல.. ஒரு ஏழை தாய்க்கும், நடுத்தர வர்க்க தந்தைக்கும் பிறந்தவள்..

இது தன் அன்னைக்கு தெரிந்தால்,அவளை தூக்கிப் போட்டு விடுவார்..

அவளின் நிலை தலை கீழ் ஆகி விடும்..
அதன் பிறகு இவளை போல, வேலை பார்த்து உழைத்து, மாத வருமானம் எதிர் பார்த்து, வாழ்க்கை நடத்துவதை, அவள் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை..

மதியின் மகிழ்ச்சியை கண்டு கோபம் வந்தது..தந்தையின் மீது ஆத்திரம் வந்தது..இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டாரே என்று..

‘இவளுக்கு என்ன??என் உடன் பிறந்தவள் என்று சொல்ல மகிழ்ச்சியாய் தான் இருக்கும்..எனக்கு தான் இப்படி ஒரு சகோதரி,என் பின்புலம் வெளியே தெரிந்தால் என்ன ஆகுமோ என்று, பயமாய் இருக்கிறது..’

அவளிடம் பேச்சு கொடுத்து, இந்த விஷயம் தன் தாய்க்கு தெரியாது என்று தெரிந்து கொண்டாள்..

யார் மூலமும் இந்த விஷயம் வெளியே வராது என்று உறுதி படுத்திக் கொண்டு,அவள் அலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சென்றாள்..

அதன் பிறகு, பணக்காரனை திருமணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம்,  இன்னும் வலுப் பெற்றது..

 

[the_ad id=”6605″]

 

 

 

அன்னைக்கு விஷயம் தெரிந்தாலும், பணக்காரனை மணந்தால், அங்கு மகிழ்வாய் வாழலாம் என்று முடிவெடுத்தாள்..

அதன் பிறகு அவளுக்கு, கரிகாலனால் பிரச்சனை ஏற்பட்டு, அவளை அவள் தந்தை, அவளின் அத்தையின் கிராமத்துக்கு செல்ல சொன்ன போது,அதை அறவே வெறுத்தாள்..

அதை தடுக்க என்ன செய்யலாம் என்று தீவிரமாய் யோசித்து,மதியை அங்கு அனுப்பலாம் என்று முடிவு செய்தாள்..

முதல் முறை பேசிய போதே, தந்தையின் உடல்  நிலை பற்றி, மதி கூறி இருந்தாள்..

அதை வைத்து அவளை அனுப்பி விடலாம் என்று நம்பினாள்..
அவளை பார்த்தால்,தந்தைக்காக எதுவும் செய்வாள் என்று தோன்றியது..

அவளின் எண்ணம் பலித்தது.. அவளை செண்டிமெண்ட்டாக பேசி,  அவள் திட்டத்துக்கு சம்மதிக்க வைத்து, இருவரும் அந்த மாலில் மாறி, இவள் பெங்களுர் சென்றாள்..

அங்கு தோழர் தோழியர் உதவியோடு, வெளிநாட்டுக்கு சென்றாள்..

மதியை, அலைபேசி மூலம் இயக்கி கொண்டிருந்தாள்..சில நேரம் முரண்டினாலும் மதி, இவள் சொல்படி கேட்டாள்..

இவள் திட்டமும், எந்த பிசகும் இன்றி நிறைவேறியது..
வெளிநாடு சென்றதும், தன் அன்னைக்கு மட்டும், தான் வெளிநாட்டில் இருப்பதை தெரிவித்தாள்..

உன் அப்பாவுக்கு விஷயம் தெரிந்தால், என்று கேட்ட அவருக்கு, மாற்று ஏற்பாடு செய்து விட்டதாய் மட்டும் கூறினாள்..

யாரை அனுப்பினேன் என்று கூறாமல்..

அவள் தந்தைக்கும், வெளிநாடு செல்லும் வேலை வந்து விட்டதால்,இவளுக்கு அதிக சிரமம் இல்லாமல் போனது..

அங்கு நண்பர்களோடு சுற்றும் பொழுது தான், அமித்தை சந்தித்தாள்..பேசி பழகியதில், அவன் மிக பெரிய கோடீஸ்வரன் இந்தியாவிலேயே என்று தெரிந்தது..

அதன் பிறகு நண்பர்கள் நாடு திரும்பிய பின்னும், அவனோடு சுற்றி கொண்டு, இவள் அங்கேயே தங்கி விட்டாள்..

இவள் மீது கொண்ட ஆசையில், அவன் இவளை நெருங்கும் போதெல்லாம், திருமணம் முடித்தால் தான், இதற்கு சம்மத்திப்பேன் என்று உறுதியாய் பல முறை கூறியதால்,அவனும் வேறு வழி இன்றி, திருமணத்திற்கு சம்மதித்தான்..

அந்த நேரத்தில், அவன் ஏற்கனவே திருமணம் ஆகி, மனைவியை இழந்தவன் என்பதெல்லாம், அவளுக்கு பெரிதாக தெரியவில்லை..
அதன் காரணங்களையும் ஆராயவில்லை..

அன்னையிடம் மட்டும் விஷயம் சொன்னாள்..
மிக பெரிய பணக்காரன் என்பதிலேயே, அவரின் பல கேள்விகள், அவருக்குள்ளேயே புதைந்து கொண்டது..

அவர் தான் மதுவிடம், மும்பைக்கு சென்று, அங்கேயே திருமணம் முடித்து, பதிவு செய்து விட்டு, இங்கு வரும்படி கூறினார்..

அப்பொழுது தான் அவள் தந்தையை சமாளிக்க முடியும் என்று கூறினார்..
அவர் சொல்படி செய்து விட்டு, இங்கு வந்தாள் மது..

அதன் பிறகு அனைத்தையும், பிரமிளா பார்த்துக் கொண்டார்..
திருமணமும் நடந்தது..

உடனேயே தேன் நிலவுக்கு, வெளிநாடு சென்றார்கள்..
அங்கும் சில நாள் பொழுது, அவளுக்கு இனிமையாய் தான் கழிந்தது..

அதன் பிறகு, அமித்தின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது..
அவளுக்கு பணம் மட்டும் தந்து விட்டு, அவன் எங்கோ தனியே சுற்றினான்..

முதலில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவள்..
அவளுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கிறது, வேறு என்ன என்று விட்டு விட்டாள்..

சிறிது சிறிதாக அவன் அவளை, இரவில் கூட தவிர்த்து விட்டு, வெளியே தங்கினான்..
சந்தேக விதை விழுந்தது..

புது மனைவி மயக்கத்தில், அவன் மடிக்கணினியின் கடவுச்சொல்லை, அவளிடம் கூறி இருந்தான்..

அதை போட்டு, ஒரு நாள் இரவு முழுதும் குடைந்து ஆராய்ந்ததில் கிடைத்த தகவல்கள் எல்லாம், அவள் கனவிலும் நினைக்காதது.

அவனின் பணத்தில் முக்கால்வாசி, கடத்தல் வேலைகளில் கிடைப்பது தான்..

போதை பொருள் கடத்தல்,குழந்தைகள் கடத்தல்,வீட்டை விட்டு காதலனை நம்பியோ, நடிப்பு ஆசையிலோ ஓடி வரும் பெண்களை கடத்தி, வெளிநாடுகளுக்கு விற்பது..

அனாதை குழந்தைகளின் உடல் உறுப்புகளை விற்பது..
போன்ற, அத்தனை அரசாங்கத்துக்கு விரோதமான அனைத்து விதமான வேலைகளும் செய்தான்..

அதை எல்லாம், தன் பென்ட்ரைவ்வில் பதிந்து கொண்டாள்..
அவளுக்கு சமூகத்தை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை..

அவன், அவளை மீறி சென்றால்,அவனை மிரட்ட, அதை எடுத்து வைத்தாள்..

அதன் பிறகு, அவனுக்கு தெரியாமல் அவனை பின் தொடர்ந்ததில்,இங்கும், அவனின் சட்ட விரோத தொழில் சம்மந்தமாய் தான் சுற்றுகிறான் என்று தெரிந்து கொண்டாள்.. கூடவே, பல பெண்கள் சாவஹாசமும் அவனுக்கு இருப்பதை அறிந்து கொண்டாள்..

அவனின் சட்ட விரோத தொழில் பற்றி கூட, அவள் அப்பொழுது கவலை படவில்லை..

வேறு பெண்களோடு இருக்கும் தொடர்பை ஏற்றுக் கொள்ள முடியாமல், சண்டை இட்டாள்..

அங்கு இருந்த வரை, கொஞ்சம் இவளுக்கு பணித்தது போல இருந்தான்..
இவள் சொல்படி கேட்பதாய் கூறினான்..

இங்கு திரும்பி வந்த பிறகு, அவன் கோட்டைக்குள் நுழைந்த பிறகு, முற்றிலும் மாறி விட்டான்..அவன் உண்மை முகம் அறிந்து கொண்டாள் பெண்..

காட்டு மிருகத்தை விட கொடிய முகம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!