Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே ஏனடி நுழைந்தாய்?

என்னுள்ளே💞9

அத்தியாயம் _9

தன்னை தேடி ஹாஸ்டல் வரை வர வேண்டிய அவசியம் என்ன?

யோசனையோடும் தயக்கத்தோடும் வெளியே வந்தாள் .

காருக்குள் இருந்து கை அசைத்து அருகில் வருமாறு அழைத்தான் .



Advertisement

காருக்கருகில் வந்து நின்றாள் .

உள்ளே வருமாறு சைகை செய்தான் .

கார் கதவை திறந்து உள்ளே ஏறினாள் .

Advertisement

என்ன ஸார் …என்னை தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க ?

Advertisement

ஏன் காரணம் இருந்தால் தான் வரணுமா ?

கண்டிப்பா ….நீங்க என்ன வேலை இல்லாம வெட்டியாவா இருக்கீங்க ?

வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் இருந்தது அவள் பதில் .

Advertisement

” ஏன் ஊருக்கு போகல ?  “

” எனக்கு போக தோனலை …! “

“ஏன் ? “

வேலை பார்க்கிற இடத்தில் மட்டும் தான் நீங்க என்னோட ஓனர் .

அடிபட்ட பார்வையுடன் அவளையே பார்த்தான் .

சரி நான் கிளம்பறேன் ..அவள் கார் கதவை திறந்தாள் .

ஏய் ..இரு …இரு …!

அவள் கேள்வியாய் நோக்கினாள் .

என் வீட்டில்  எல்லோரும் புது டிரெஸ் போட்டு பலகாரம் சாப்பிட்டு சந்தோஷமா தீபாவளி  கொண்டாடும் போது ….நீ மட்டும் ஹாஸ்டலில் தனியா இருக்கியே ….?

“அதுக்கு ? “

இது அம்மா பண்ணின சுழியம் , வெள்ளை பணியாரம் …சூப்பரா இருக்கும் டேஸ்ட் பண்ணி பாரு .

“இதை கொடுக்கவா வந்தீங்க ? “

அதுக்கு மட்டும் இல்லை …இதுக்கும் தான்  கையில் ஒரு பையை திணித்தான் .

” என்ன இது …? “

” பிரிச்சு பாரு ! “

நான் செலக்ட் பண்ணின ஸாரியா ? நினைத்தேன் .

ஹலோ …செலக்ட் பண்ணினது தான் நீ …வாங்கினது நான் .

அதுக்கு ?

இந்த வைட் வித் ரெட் ஸாரியை உனக்கு போட்டு காமிக்கும் போதே …நான் உனக்கு இதை பிரசன்ட் பண்ணனும் முடிவு பண்ணிட்டேன் .

ஸாரி …நான் நேத்து சொன்னது தான் . சேரி யார் வாங்கி கொடுத்தாலும் வாங்கிக்க கூடாது …
அவனிடமே திருப்பி கொடுத்தாள் .

நான் வாங்கி கொடுத்தால் வாங்கிக்கலாம் .

நீங்க என்ன ஸ்பெஷல் ? நீங்க எனக்கு யாரோ லிஸ்டில் தான் இருக்கீங்க !

யார் யாருக்கோ ஸாரி வாங்கி கொடுக்க முடியாது . ஸோ …நீ எனக்கு யாரோ லிஸ்டில் இல்லை .

இது உனக்கு நான் விருப்பப்பட்டு வாங்கினது .
ப்ளீஸ் வாங்கிக்கோ …அவள் கை பிடித்து திணித்தான் .

அவள் வாங்காமல் முரண்டு பிடித்து கார் கதவை திறக்க …ஸ்வாதி சொல்றதை கேள்…அவள் கரம் பற்றி இழுத்தான் .

கையை விடுங்க …மாகாளி ஸ்வரூபம் தரித்து இடது கையை ஓங்கினாள் .

அசையாமல் அப்படியே …அவளையே பார்த்து கொண்டிருந்தான் .

விடுங்கன்னு சொல்றேன் இல்லை ….உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை …உருவி கொள்ள போராடினாள் .

ச்சீ …உங்களை போய் நல்ல மனுஷன்னு நம்பினேனே …அவள் கண்ணில் நீர் திரண்டது .

சட்டென்று அவள் கையை விட்டவன் …ஸ்டியரிங்கில் முகம் புதைத்து கொண்டான் .

கோபத்தில் மூச்சு திணற …கார் கதவை திறந்து கொண்டு வெளியே போய் விட்டாள் .

பிரபாவிற்கு தன்னை நினைக்க …நினைக்க ஆத்திரமாய் வந்தது .

தன்னிடம் நெருங்காதவள் பின் தன் மனம் ஏன் போகிறது  என்று அவனுக்கு புரியவில்லை .

இது நடக்குமா ? கை கூடுமா …என்றெல்லாம் ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்து இருக்கிறான் .

ஆனால் முடிவு தான் எட்டப்படவில்லை .

நெடு நேரம் இருக்கும் நிலையிலேயே இருந்தவன் …தாயிடம் இருந்து போன் வரவே …கிளம்பினான்.

“——–“

ஸ்ரீமதி அண்ணன் கரம் பற்றி கெஞ்சினாள் .

அண்ணா என்னை நல்ல இடத்தில் வாழ வச்சிட்டு …நீங்க இப்படி வாழ்க்கையே இல்லாம இருக்கீங்களே …அவள் கண்ணீரில் கரைந்தாள் .

அண்ணா …அம்மா ஹெல்த் கண்டிஷன் உங்களுக்கு புரியலையா ?

சாப்பிடாம …அழுது ஓய்ந்து ..Low Bp  யில் இருக்காங்க . இப்படியே இருந்தா அம்மாக்கு ஏதாவது ஆகிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு .

நீங்க ஒரு கல்யாணத்தை பண்ணி அவங்களுக்கு சந்தோஷத்தை கொடுங்க . அவனிடம் கை கூப்பினாள் ஸ்ரீமதி .

இதை தவிர உனக்கு வேற பேச்சே இல்லையா ? கோபத்துடன் தன் அறைக்குள் நுழைந்து …ஓங்கி அறைந்து கதவை சாத்திவிட்டு கட்டிலில் விழுந்தான் .

தான் டீன் ஏஜ் பையன் இல்லை …உருகி உருகி காதலை சொல்ல ….முப்பத்து மூன்று வயதாகிவிட்டதே …!

எப்படி என் காதலை சொல்ல ? நெற்றி பொட்டில் அடித்து கொண்டான் .

ஸ்வாதியை கட்டாய படுத்துகிறோமோ என்றும் தோன்றியது .

அவள் கண்ணீரோடு போனது …அவன் மனதை பிசைந்தது .

ஸாரி என்று மெசேஜ் பண்ணிவிட்டு படுத்து கொண்டான் .

கல்யாணி பாலாஜிக்கு அழைத்து பேசினார் .

ஸ்ரீமதி கணவர் ஒரு பெண் பார்த்து வைத்திருப்பதை சொன்னார் .

அவனுக்கு யாரையாவது பிடித்திருந்தால் சொல்லட்டும் எனக்கு ஓகே தான் . ஜாதி , குலம் , அந்தஸ்து பார்க்காமல் ஏத்துக்கிறேன்

எனக்கு என் பிள்ளை தனி மரமா நிற்க கூடாது அவ்வளவு தான் .

ஒன்னு அவனுக்கு யாராவது பெண்ணை பிடித்தால் சொல்லட்டும் …இல்லையா மாப்பிள்ளை பார்த்திருக்கிற பெண்ணை ஓகே சொல்லட்டும் .

அதெல்லாம் முடியாது …நான் இப்படியே தான் இருப்பேன்னு சொன்னா …நான் இந்த கொடுமை எல்லாம் கண்ணால் பார்க்காமல் எங்கேயாவது போய் தொலையறேன் .

ம்மா…இவ்வளவு காலம் பொறுமையா இருந்தீங்க ..இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இருங்க .

கண்டிப்பா அவன் தனி மரமா நிற்க மாட்டான் .

சீக்கிரம் அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் .

அவன் மனசுல ஏதோ இருக்கு . அவனுக்கு நாம் கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும் என்று கல்யாணி அம்மாவிற்கு சமாதானம் சொன்னான் .

“———“

அவன் அனுப்பிய ஸாரி மெசேஜை வெறித்து  பார்த்து
கொண்டிருந்தாள்

பிரபா ஸார் ஏன் இப்படி நடந்துக்கிறார் ? அவர் உணர்ச்சிகளை தூண்டும்படி நான் ஏதேனும் நடந்து கொண்டேனா ?

தன்னையே கேட்டு கொண்டு …விடை தேட முயன்றாள் .

மொபைல் அலறி அடங்கியது …பிரபாவாய் இருக்குமோ யார் என்று எடுத்து பார்த்தாள் .

பாலாஜி அழைத்திருந்தான் .

மீண்டும் போன் ரிங்காகவே ..எடுத்து காதில் வைத்தா

ஸ்வாதி உங்களால் என் எனக்கு ஒரு காரியம் ஆகணும் !

சொல்லுங்க ஸார் …நான் என்ன பண்ணனும் ?

உங்களுக்கு வாட்சப்பில் ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன் பாரும்மா .

நான் தான் மேரேஜில் இன்ட்ரஸ்ட் இல்லைனு சொல்லிட்டேனே !

வெயிட் உனக்கு பார்க்கலைம்மா …உன் ஓனருக்கு ..!

என்ன ஸார் சொல்றீங்க ?

ஆமா ஸ்வாதி …பிரபாவிற்கு பார்த்திருக்கும் பெண் போட்டோ உனக்கு அனுப்பி இருக்கேன் .

நாங்க எவ்வளவு சொன்னாலும் …மேரேஜ் வேண்டாங்கிறான் . நீ சொன்னா கேட்டுப்பான்னு தோணுது .

உன் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கான் .

யாரோ ஒரு பெண் அவன் மனதில் இருக்காளோன்னு சந்தேகமா இருக்கும்மா .

ஸ்வாதிக்கு வியர்க்க தொடங்கியது .

நான் எப்படி சொல்லி …அவள் தடுமாறினாள் .

நீ சொன்னா கண்டிப்பா கேட்டுப்பான் .

ஸ்வாதிக்கு ஏனோ மனதில் நடுக்கம் பரவியது .

சொல்லி பார்க்கிறேன் ஸார் . ..அவள் போனை கட் பண்ணினாள் .

வாட்சப்பில் வந்திருந்த பெண்ணின் போட்டோ பார்த்தாள் .

பெண் மிக அழகாக இருந்தாள் .

ஸ்வாதிக்கு இதயம் வலித்தது .

தனக்கு ஏன் வலிக்கிறது என்று தோன்றாமல் இல்லை .

விடை தெரியா விட்டால் பரவாயில்லை . அவளுக்கு தான் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு காரணம் தெரியுமே !

“———-“

இயல்பாய் மறுநாள் வேலைக்கு கிளம்பினாள் .

வேலையில் தன்னை முழு மூச்சாய் ஈடு படுத்தி கொண்டாள் .

பாலாஜி சொன்னது நினைவிற்கு வந்தது . பிரபா சாரிடம் பேச வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் .

பிரபா சார் லைஃப்ல ஏதோ பிரச்சனை போல…அது தான் இன்னும் மேரேஜ் பண்ணிக்காம இருக்கார் .

ஏதாவது லவ் பெயிலியர் ஆக இருக்குமோ ?

இருக்கும் …ஸார் பர்சனாலிட்டிக்கும் , அந்தஸ்திற்கும் நிறைய பெண்கள் விரும்பி இருப்பார்கள் .

பாலாஜி ஸாரிடம் கேட்போமா ?

ச்ச்சே …அவர் பாஸ்ட் ஹிஸ்டரி தெரிந்து நாம என்ன பண்ணப் போறோம் .

அத்துமீறி எழுந்த ஆர்வத்தை அடக்கி கொண்டு …
வேலையில் தீவிரமானாள் .

“——-“

பிரபாவிற்கு வேலையில் மனம் ஒட்டவில்லை .

ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் நாம் மனநோயாளி ஆகி விடுவோமோ ? பயந்தான் .

நண்பனின் நிலை எண்ணி பாலா மிகுந்த வேதனை அடைந்தான் .

உனக்கு என்னடா பித்தா பிரச்சனை ?

மேரேஜ் உன் சொந்த விஷயம் …நான் இல்லைனு சொல்லலை ..அதுக்காக உன் ஹெல்த்தை கவனிக்காம இருக்கியே …?

உன்னால தான் அம்மாவோட ஹெல்த் கண்டிஷனும் ஓர்ஸா இருக்கு .

பாஜி …நான் எல்லாத்தையும் விட்டுட்டு எங்காவது போயிடவா …? சிவந்த கண்களுடன் நண்பனின் தோள் சாய்ந்தான் .

டேய் பித்தா அடி வாங்க போற …!

கஷ்ட பட்ட காலத்தில் கூட தைரியமா இருந்த….இப்போ உயர்ந்த இடத்தில் இருக்கும் போது என்னடா பேச்சு இது ….நண்பனை அதட்டினான் .

பித்தா …உன் மனசுல என்னவோ இருக்கு . அது கண்டிப்பா நடக்கும்  .

ஏன்னா என் பித்தா தவறான எந்த முடிவும் எடுக்க மாட்டான் .

உன் ஆசை நிறைவேறும்டா …எப்பாடு பட்டாவது நான் நிறைவேற்றுவேன் ….மனதில் உறுதி ஏற்றான் .

“———-“

ஸ்வாதி பிரபாவிற்கு மெயில் பண்ணி கொண்டிருந்தாள் .

ஒரு வேளை இந்த வேலையை விடும் சூழல் வந்தால் ….?

பிரபா சாருக்கு நம்மால் முடிந்த ஆலோசனை ….

தன் யோசனையை ….அது கொடுக்க போகும் பலனை விலாவரியாக எழுதி அனுப்பினாள் .

மெயில் பார்த்த பிரபா …அதை அப்படியே பாலாவிற்கு பார்வர்டு பண்ணினான் .

டேய் பாஜி …உனக்கு மெயில் பண்ணி இருக்கேன் பார்த்துட்டு போன் பண்ணு என்று கால் பண்ணி விபரம் சொன்னான் .

பாலா பார்த்துவிட்டு….அடுத்த நிமிடமே பிரபாவிற்கு அழைத்தான் .

இருவருகுமே ஸ்வாதியின் யோசனை சூப்பர் என்று தோன்றியது .

” அவள் ஐடியா சீப் அன் பெஸ்ட் .. “

“———–“

ஸ்வாதி தலைவலி என்று சுக்கு மல்லி காஃபி அருந்தி கொண்டிருந்தாள் .

அவள் அமர்ந்த சேர் அருகே …அவன் வந்து அமர்ந்தான் .

ஹாய் ஸ்வாதி என்ற குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் .

அவன் கண்களில் விஷம் இருந்தது .அவள் கண்களில் பயம் இருந்தது .

உன்னை யார் இங்கே வர சொன்னது ? அவளுக்கு தொண்டை வறண்டது .

உன்னை பார்க்க தான் வந்தேன் . அவன் கண்களில் தெரிந்தது அப்பட்டமான காமம் .

நான் பழைய ஸ்வாதி இல்லை …உன்னை கொன்னுடுவேன் .அவள் அடிக்குரலில்  சீறினாள் .

ஆமா நீ பழைய ஸ்வாதி இல்லை ….இப்போ இன்னும் மினுமினுப்பா …காஷ்மீர் ஆப்பிள் பிரெஷ்ஷா இருக்க….அவன் அருவெறுப்பாய்  சிரித்தான் .

ச்சீ …போடா வெளியே …அவள் எழுந்து நின்றாள் .

ஷ் …இப்போ எதுக்கு கத்தி கலாட்டா பண்ற ?

இப்போ போறேன் …ஆனா அடிக்கடி வருவேன் .

பை ….செல்லம் …அவள் கன்னத்தை தட்டி விட்டு போனான் .

கூனி குறுகி நின்றாள் ஸ்வாதி .

CCTV யில் மானிட்டர் பண்ணி கொண்டிருந்த பிரபா கொதித்து விட்டான் .

டாமிட் …எவ்வளவு தைரியம் அவனுக்கு …!

யார் அவன் ? வெறித்தனமாய் காரை முடுக்கினான் கூடுவாஞ்சேரி நோக்கி .

——-தொடரும் —–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!