Skip to content
Post Views: 2,596
ஜதி தரும் அமுதம்
Advertisement
அத்தியாயம் -3
Advertisement
யாழினியும், விஜயேந்திரனும் மூன்று நாள்களாக ஐதராபாத்தை சுற்றித்திருந்தார்கள்.
Advertisement
மகளின் டான்ஸ் சோவிற்கு வராமல் இருந்தர்க்கு , மகளை அழைத்தைக்கொண்டு ஐதராபாத்தில் உள்ள மால், பார்க், கேம் சோ வென்று அவளை சந்தோஷப்படுத்திக் சமதானம் பண்ணி இருந்தான்.
Advertisement
யாழினி ஸ்கூல் போக ஆரம்பித்து இருந்தாள்.. விஜயேந்திரன் அவன் ஆபிஸ் வேலையில் மூழ்கி இருந்தான்.
யாழினி வார இறுதியில் டான்ஸ் பள்ளிக்கு செல்ல.. அவள் சொல்லிய அந்த டான்ஸ் மாஸ்டர் இன்னும் வராமல் இருந்ததால், வீடு வந்தவள், தந்தைக்கு போனில் அழைக்க.
மகளின் அழைப்பை ஏற்றவன். “சொல்லுற பங்காரம்” என்றிருந்தான்.
“நானா, நான் சொன்ன டான்ஸ் மாஸ்டர் இன்னும் வரல”.
“எந்த டான்ஸ் மாஸ்டர் டா”..? என்ற கேட்ட தகப்பனின் மேல் கோபம் கொண்டவள்..
“போங்க” என்று அழைப்பை அனைத்திருந்தாள்..
விஜயேந்திரனுக்கு மகளிடம் சொல்லிய இப்போது ஞாபகம் வர..
யாழினியை போனில் அழைக்க.. அவள் கோபத்தில் போனை எடுக்காமல் அமர்ந்திருந்தாள்.. மகளுக்கு வாட்சப்பில் மெஜேஸ் அனுப்பி இருந்தான். ‘சாரி பங்காரம் நெக்ஸ்ட் வீக் கண்டிப்பா அந்த டான்ஸ் மாஸ்டர், இருப்பாங்க”என்று டைப்பண்ணி அனுப்பியவன்.
தன் பீ, ஏ பிரகாஷ்சை அழைத்தவன்.. “ஸ்ரீரங்கபட்டிணத்துல ஒரு லேடி டான்ஸ் மாஸ்டர் இருக்காங்களாம், நீ போய் அவங்ககிட்ட நல்லா விதமா பேசி, நம்ம அகடாமியில டான்ஸ் மாஸ்டரா 2 வருசம் இருக்குற மாதிரி அக்ரிமென்டு போட்டு கூட்டிட்டு வா” என்று கூற.
“சரி, சார்” என்றவன்..
“எனக்கு கன்னட தெரியாதே?”..
“டேய் அவங்க தழில் தான் உனக்கு கொஞ்சம் பேச தெரியுமல”..
“உம் சார் ” என்றவன் இரவே கிளம்பி விட்டான்..
இரவு பெங்களுரு வந்து சேர்ந்தவன், ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியவிட்டவன்,, காலை காரை புக் பண்ணி ஸ்ரீ ரங்கபட்டிணத்துக்கு வந்து விட்டான்.
மிக குளுமையாக இருந்தது, எங்கு பார்த்தாலும் தண்ணீர், ஆறு, பசுமை, பார்த்தபடியே இருந்தவன்,, நேற்று அவன் மனைவிடம் ஒரு வேலை விசயமாக ஸ்ரீரங்கபட்டிணத்துக்கு செல்ல போகிறேன் என்று சொன்னவனிடம்..
ஸ்ரீ ரங்க நாத பெருமாளை கண்டிப்பாக வணங்கி விட்டு வாங்க என்று மனைவி சொல்லியது, ஞாபகம் வர..
முதலில் ரங்கநாதரை பார்க்க சென்றான், கருவரையில் பாம்பின் ஏழு தலைமுடிகளால் உருவாக்கபட்டு ஆதிசேஷனின் சுருள்களில் விஷ்ணு படுத்தவாரு காட்சி தந்தார். பெருமாள் கால் பக்கத்தில் அவரது மனைவி லட்சுமி அமர்த்திருக்க.
பக்கவாட்டில் ஸ்ரீதேவி, பூதேவி, பிரம்மா, என்று இன்னும் சில தெய்வங்கள் இருக்க, அனைத்து தெய்வங்களையும் வணங்கிவிட்டு வந்தான், சிலர் இக்கோவிலை பத்தி சொல்லியது இவன் காதில் விழுந்தது.
இக்கோவில் வைணவதலம், இதை பூலோக வைகுண்டம் என்று அழைக்கின்றனர்…ஓர் அளவுக்கு பெரிய கோவிலாக இருந்தது அக்கோயிலை சுற்றி வந்தவனுக்கு. மனைவியை அழைத்துக்கொண்டு இன்னொரு முறை வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டே வெளியே வந்தவன்..
ஊரில் பெண் டான்ஸ் மாஸ்டர் வீடு என்று விசாரிக்க..
“அதுவா” என்று கிருஷ்ணப்பா வீடை காண்பிக்க..
அவர் வீட்டை நோக்கி சென்றான் பிரகாஷ்..
வீடு பழய காலத்து வீடாக இருந்தது..
இவன் வாசலில் இருந்த படியே, “மேம், மேம்” அழைக்க..
ஒரு வயதான பாட்டி வெளியே வந்து, “யாரு, யாரு பேக்கு” என்று கன்னடத்தில் கேட்க. அவர் யாரு என்று கேட்டதில் புரிந்து கொண்டவன்..
“டான்ஸ் மாஸ்டர்” என்று கூற.
“வைஷுவா” என்றார்..
இவன் “ஆமாம்” என்று தலையாட்ட.
ரோட்டில் டுவீலரில் போன ஒருவனை அழைத்த அந்த பாட்டி.. பிரகாஷ்சை காண்பித்து, “வைஷு கிட்ட கூட்டிட்டு போ” என்க..
“சரி, ஆயா”.. என்றவன்.
“வாங்க சார்”…என்று தனது பைக்கில் ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரம் அழைத்து வந்தவன். ஒரு பெரிய கேட்டின் முன் பைக்கை நிறுத்தி…..
“உள்ளே இருப்பாங்க, போங்க” என்று சொல்ல..
‘எங்கே”?.. என்றான் பிரகாஷ்… “இது அவங்க தோட்டம் உள்ளே போங்க இருப்பாங்க”…என்று அவன் கிளம்பிவிட..
கேட்டை திறந்தவன் உள்ளே வைஷுவை தேடி சொல்ல..
அவன் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை யாரும் தெரியவில்லை, நிறைய பழ மரங்கள், நெல், காய்கறிகள், பூந்தோட்டம் என வரிசையாக வர.. அனைத்தையை கடந்து சென்று வைஷுவை தேடிக்கொண்டே வர, மழை மெல்ல தூர ஆரம்பித்தது.. ஏதோ பேச்சுக்குரல் கேட்பது போல் உணர்ந்தவன், சத்தம் வந்த திசை நோக்கி செல்ல..
ஒரு இடத்தில் இருவரும் மட்டுமே வேலை செய்து கொண்டு இருப்பதை பார்த்தவன்..
“ஹலோ, ஹலோ எஸ்கூஸ்மி” என்று அவர்களிம் பேச்சை ஆரம்பித்தான், வைஷுவும், அவள் தாத்தா கிருஷ்ணப்பாவும் நிமிர்ந்து பார்த்து யார் நீ என்பது போல் அவனை பார்க்க..
கிருஷ்ணப்பா “யாரு நீனு”?. என்று கேட்க…
“ஹலோ சார், நான்” என்றவன் தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டு. “வைஷு டான்ஸ் மாஸ்டரை பார்க்கணும்” என்று கூற.
“என் பேத்திதான் அங்கே இருக்கா பாரு” என்று சொல்லிவிட்டு.. ஒரு பெரிய பிளாஸ்டிக் ட்ரேயில் தக்காளி செடியில் இருந்து, தக்காளியை பறித்து போட..
பிரகாஷ் வைஷுவை நோக்கி சென்றான்..வைஷு குனிந்து கொண்டு செடிக்கு கீழ் இருந்து உருலகிழங்கை மண்னை நோண்டி எடுத்துக்கொண்டு இருந்தவள். இவனை பார்த்து என்ன என்பது போல் பார்க்க..
இவங்க டான்ஸ் மாஸ்டரா? என்று தோன்றியது அவனுக்கு . மங்கி போன, பாவாடை சட்டையில் இருந்தவள். தலையில் மேல் ஒரு பெரிய கேப் அணிந்து இருந்தாள். மழைவந்தால் தலை நனையாத வாறு. அவனை நிமிர்ந்து பார்த்து நிற்றவளிடம் “மாஸ்டர்” என்று கேட்க..
“யாரு நீ” என்றாள்?…
அவன் தன்னை அறிமுகம் படுத்திக்கொள்ள..
மறுபடியும் “என்ன விசயம்” என்றால் வேலை செய்து கொண்டு இருக்கும் போது தொந்தரவு தருவது போல் அவனை பார்த்து..
“மேம் நீங்க டான்ஸ் மாஸ்டர் வைஷு தானே”?..
“இல்லை” என்றவன் உருலகிழங்கை சாக்கு பையில் அள்ளி போட..
“மேம் நீங்க டான்ஸ் மாஸ்டர் தான், எனக்கு தெரியும், தாத்தா சொன்னார்”, என்றவன்.
“கம்யா, உங்க அக்கா பொண்ணுதானே?”…
“ஆமாம், அதனால உனக்கு என்ன”?..
“மேம், நீங்க தானே கம்யாவுக்கு டான்ஸ் சொல்லிக்குடுத்து வின் பண்ண வச்சிங்க”…
அவனை பார்த்து முறைந்தவள்.
“நீ சொல்ல வேண்டியத, சொல்லிட்டு கிளம்பு எனக்கு வேலை இருக்கு” என்றாள்..
“மேம்” என்றவன், “ஐதராபாத்தில் உள்ள டான்ஸ் அகடாமியில டான்ஸ் டிச்சரா வரனும் மேம் நீங்க”..என்றான்.
“சாரி” எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல நீங்க கிளம்பலாம்”.. என்று கூற.
“மேம் எவ்வளவு சேலரியின்னாளும் எங்க வீ. பி சார் தர்றேன்னு சொல்லி இருக்காரு”. என்றான் பிரகாஷ்…
“நீங்க மாசத்துக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் டான்ஸ் சொல்லி தர வர மாட்டேன் கிளம்பு” என்றாள்..
அவள் சொல்லியதை கேட்டு அதிர்ச்சியானவன், “மேம் நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் வீ. பி சார் கொடுப்பார்.. ஆனா ஒரு கோடி என்பது கொஞ்சம் அதிகம் மேம்”.. என்று கூறியவனை பார்த்து.
“டேய் சொன்னது புரியலயே, உனக்கு?.. வர விருப்பம் இல்லண்ணு அர்த்தம்,. மழையில நனைஞ்சு உடம்பு கெடுத்துக்காத இடத்தை காலிபண்ணு.. எனக்கு வேலையிருக்கு” என்றவள். அடுத்த காய்களை பறித்து கூடையில் போட..
“மேம்” என்று கூற..
“இந்த ஸ்ரீ ரங்கபட்டிணத்து ஊர விட்டு நான் எங்கேயும் வரமாட்டேன். நீ கிளம்பலாம்”. என்றவள்.
“தாத்தையா” என்று குரல் குடுக்க.. அவர் பறித்து வைத்திருந்த, காய்களை எடுத்து வந்து வைஷுவின் வண்டியில் வைக்க.
இவள் பறித்த, எடுத்த காய்களை மூட்டையில் கட்டி தூக்கி வந்தவள்.. கிருஷ்ணப்பாவின் அருகில் வந்தவள், அவளின் ஸ்கூட்டியில் பின்னாடி கயர் வைத்து மூட்டையை கெட்டியவள், வண்டியின் முன்னாடி தக்காளி ட்ரேயை வைத்தவள்..
“நீங்க வீட்டுக்கு போங்க தாத்தையையா, நான் சந்தையில இந்த காய்யை வித்துட்டு வர்ரேன்” என்று கிளம்பி விட..
போகும் பேத்தியை பார்த்து நின்ற பிரகாஷிடம் “வா” என்று அவரின் வண்டியில் ஏற்றிக்கொண்டு ஊருக்குள்ளே விட்டவர், “பத்து மணிக்கு பெங்களூருக்கு போதும் ரெயில் வரும் கிளம்பு” என்று கூறி கிருஷ்ணப்பாவும் கிளம்பிவிட.
பிரகாஷ் உடனே விஜயேந்திரனுக்கு போன் பண்ணி நடந்த விசயத்தை சொல்ல..
“என்ன?. ஒரு கோடி குடுத்தாலும் வரமாட்டேளா? யாருடா அவ”? என்று கோபப்பட்டவன்..
” டேய், அந்த பொண்ணு மேரிடா, இல்ல அன் மேரிடா,?.. மேரிட்ணா அவ புருஷன் கிட்ட டீல் பேசு, மேன்”..
வைஷ்ணவியை பற்றி ஊரில் தெரிந்ததை வைத்து அவள் திருமணம் ஆகவில்லை என்று கூற..
“சார் அந்த மேடமுக்கு மேரேஜ் ஆகல”..
“அவங்க அம்மா, அப்பா கிட்ட பேசு”..
“சார் அவங்க தாத்தா பாட்டி கூட இருக்காங்க, இந்த ஊர விட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.. அது மட்டும் இல்ல சாடர்டே, சன்டே இலவசமா சின்ன பிள்ளைகளுக்கு டான்ஸ் சொல்லி தர்றாங்க”..
என்ன சொல்லுறான் இவன்,, இந்த காலத்துல இலவசமா என்று யோசித்தவன்..
“நீ என்ன பண்ணு, அந்த ஒரு கோடி ரூபாய் காசு குடுத்தாலும் வரமாட்டேன்னு சொன்னா அந்த மூஞ்சியை போட்ட எடுத்து எனக்கு அனுப்பு, நான் பாக்கணும்” என்று கூற..
“ஓகே சார்” என்றவன்..
வைஷு வீட்டை நோக்கி செல்ல…
அவளோ காய்கறி சந்தைக்கு வந்தவள், அவள் தோட்டத்தில் பறித்த காய்களை மொத்த கடையில் எடை போட்டு வித்து காசை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவள், பாட்டியிடம் காசை குடுத்து விட்டு. கைகால் முகம் கலுவி உண்ண அமர..
தன் முன்னே தட்டில் கலியும் பஸ்சாரும் வைத்த பாட்டியை பார்த்தவள்..
“பாட்டி… அன்னமில்லையா”?..
error: Content is protected !!