Skip to content
Post Views: 2,542
“இத சாப்பிட அப்போதான் தெம்பா இருக்கும்”…
“பாட்டி டெய்லி இந்த கேப்ப கலி மொத்தையும், இந்த கீரை பஸ்சாரும் வச்சு என்ன கொல்லுற” என்று புலம்பிய படியே சாப்பிட..
Advertisement
உள்ளே ரூம்பில் படுத்து இருந்த கிருஷ்ணப்பா,, மனைவியிடம் “ஏன்டி வைஷுவுக்கு புடிச்சத சமைக்க வேண்டியது தானே”.. என்று படுத்துக்கொண்டே குரல் குடுக்க..
“எனக்கு 80 வயசு ஆச்சு, என்னால இது தான் முடியும்” என்று கோபமாக கூற..
Advertisement
Advertisement
“தாத்தையா அஜ்சியை ஒன்னும் சொல்லாத” என்றவள்..
உண்டு விட்டு கைகலுவி வந்தவள்.. பாட்டியை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டவள்,, “கலியும் கீரையும் சூப்பர்,ஸ்விட்டி பாட்டி” என்றவள்.. “நான் ஆத்துக்கு போய் துணி துவைச்சுட்டு, குளிச்சுட்டு வரேன்” என்றவள்.
Advertisement
அவளின் துணி, பாட்டி தாத்தாவின் துணியையும் ஒரு அலுமினிய டப்பில் அள்ளி வைத்தவள்.. தன் ஸ்கூட்டியில் திரிவேணி சங்கமத்துக்கு கிளம்பி விட..
வாசலில் பிரகாஷ் நின்று இருப்பதை இவள் பார்த்தும் பார்க்காதது போல ஆத்துக்கு சென்று விட..
இவள் பேசியதை கேட்டவன்,, வைஷு போன திசை நோக்கி நடக்க ஆரம்பித்தவன்..
“நம்ம பொலப்பு இப்படியாகி போச்சே” என்றவன்..
சிலரிடம் ஆறு எங்கே இருக்கு என்று விசாரிச்சு வந்து சேர்ந்தான்..
நீரின் சல, சலப்பு, குளிர்ரான காற்று,, வந்த திசை நோக்கி சென்றவன்..
இவ்வளவு பெரிய நீண்ட ஆற்றை அவன் இது வரை பார்த்து இல்லை.. பார்த்த படியே நின்றான்.. மூன்று ஆறுகள் சேறும் இடத்தை சங்கமம் என்பார்கள் அதை போலவே, இங்கு அந்த ஆற்றில் மூன்று திசைகளில் இருந்த வந்த ஆறுகள் சங்கமித்தன..
இதற்கு பெயர் திரிவேணி சங்கமம்,, இதை சிவன சமுத்திர என்று அழைப்பார்.. பக்கத்தில் இருந்தவரிடம் இதை கேட்டு தெரிந்துக்கொண்டவன்.. ஏதற்கு இங்கு வந்தோம் என்பதை மறந்து இயற்கையை ரசிக்க ஆரம்பித்து விட்டான் பிரகாஷ்.. அந்த மூன்று ஆறுகள் கூடம் இடத்தில் ஒரு பெரிய சிவ லிங்கம் மட்டும் தனியே ஆற்றின் நடுவில் இருக்க, அதை பார்த்தவனுக்கு, உடல் சிலிர்த்து விட்டது பிரகாஷுக்கு, அவன் தன்னை அரியாமலே இரண்டு கைசேர்த்து கோர்த்து தலைக்கு மேல் கையை வைத்து கும்பிட்டு இருந்தான்…
ஏதோ வித்தியாசமான ஒலி கேட்க நிமிர்ந்து பார்த்தான்.. தூரத்தில் ரெயில் வண்டி வரும் சத்தம் கேட்க.. அந்த ரெயில் ஆற்றில் மேல் உள்ள பாலத்தின் மேலே செல்ல, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாய் இருந்தது.
அவனுக்கு எதற்கு இங்கே வந்தாம் என்பதை மறந்து இயற்கையோடு ஒன்றிவிட்டவன்..
பேசாமல் இங்கே இருந்து விடலாமா என்றே தோன்றி விட்டது பிரகாஷுக்கு..
பின்பு ஞாபகம் வந்தவனாக வைஷுவை தேடினான்.
அவளோ ஆற்றக்கரை ஓரத்தில் உள்ள படிகட்டில் அமர்ந்து துணிதுவைத்து கொண்டு இருந்தாள்.. அவள் மட்டும் இல்லை நிறைய பெண்கள் ஆற்றில் துணி துவைத்து குளித்துக்கொண்டு இருந்தனர்..
எப்படி பட்ட வாழ்க்கை இவர்களுக்கு, அழகான ஊரு எங்கும் பசுமை, பக்கத்தில் ஆறு, எப்போதும் மிதமான சாரல், இயற்கை ஒன்றிய வாழ்வியல் என்றே தோன்றி விட, அந்த மேம் ஏன் இந்த ஊரை விட்டு வரமாட்டேன்னு சொல்லுறது சரி தான் போல, என்று தோன்றி விட்டது..
விஜயேந்திரன் சொன்னது ஞாபகம் வர. ஒரு பெண்ணை அவள் அனுமதி இல்லாமல் போட்டோ எடுப்பது அவனுக்கு தவறாக பட..
விஜயேந்திரனுக்கு வீடியோ கால் பண்ணியவன் போனை பாக்கெட்டில் வீடியோ தெரியும்மாறு வைத்தவன், ஒலியை ப்புளு டூத்தில் கனெகட் பண்ணி விட்டு..
“மேம்” என்று வைஷுவின் அருகில் வர..
அவனை நிமிர்ந்து பார்த்தவள்.. “ஒரு வாட்டி சொன்னா உங்களுக்கு புரியாதா”.. என்றாள்.
அவனுக்கு தமிழில் ஒரு சில வார்த்தைகளே புரியும் இவள் பட, படவென பேசியது புரியாமல்.
“மேம்” என்று அவள் பேசியது புரியாமல் முளித்தவன்..
“மேம் ஒரு வாட்டி அன்டே, ஏன்டி மேம்?”.. என்றான்..
“எனக்கு தெலுங்கு தெரியாது, பேசுனா புரியும்” என்றவள்..
ஆங்கிலத்தில் “எனக்கு டான்ஸ் சொல்லிதர விருப்பம் இல்ல, நீங்க கிளம்பலாம்” என்று கூற..
“மேம்” என்றான்..
அங்கே விஜயேந்திரன் பிரகாஷ் எதற்கு வீடியோ கால் பண்ணுறான் என்று யோசித்தவன்..
வீடியோ காலை ஆன் பண்ண அங்கே பிரகாஷின் குரலும், ஒரு பெண்ணின் குரலும் மட்டும் கேட்க வீடியோ ஒன்றும் சரியாக தெரிய வில்லை..
“டேய் பிரகாஷ் எதுக்கு விடியோ கால் பண்ண” என்றான்..
“சார்” என்றவன்..
“நீங்க போட்டோ எடுத்து அனுப்ப சொன்னீங்க, எனக்கு போட்டோ எடுப்பதில் விருப்பம் இல்ல, அதனால் வீடியோ கால் பண்ணேன்” என்றவன்..
“அந்த மேம் டான்ஸ் சொல்லி தர, வரமாட்டேன்னு சொல்லுறாங்க”..
“டேய் பூல் நம்ம டான்ஸ் அகடாமியை பத்தி எடுத்து சொல்லு”…
“நீங்க வேற சார் அவங்க என்னை பேசவே விடல”..
“டேய் முதல்ல நம்ம காலேஜ் விசிட்டிங் கார்டை குடு, அப்பறமா எல்லாத்தையும் சொல்லு”,,…
“சரி, சார்” என்றவள் வைஷுவை தேட..
அவளோ துணி துவைத்து விட்டு துணியை ஆற்றில் அலசிக்கொண்டிருக்க.,
பிரகாஷ் ஒரு நிமிடம் அமைதியாக இருக்க..
“ஏய் என்ன பண்ணுற, அந்த பொண்ணு கிட்ட பேசு”..
“சார் மேம் ஆத்துல துணி துவைச்சிட்டு இருக்காங்க”..
“என்ன?. துணி துவைக்குறாங்களா,, நீ சரியான டான்ஸ் மாஸ்டர் கிட்ட தானே பேசுற”..
“ஆமாம் சார்,, இந்த ஊருல ஒரே, ஒரு டான்ஸ் மாஸ்டர் தான் அவங்க பேரு வைஷ்ணவி தேவி”..
“என்ன பேர் சொன்னா”?..
“வைஷ்ணவி தேவியா”..
“ஆமாம் சார்”,, என்றவன்.. வைஷுவை தேட, அவளோ அலசிய துணியை பிளிந்து பேஜனில் வைத்து விட்டு..
ஆத்தின் உள்ளே சென்று முங்கி எழ..
“டேய் அந்த பொண்ண நான் பார்க்கனும்,, வீடியோவை சரியா வை” என்று விஜயேந்திரன் கூற..
“சார் தெரியுதா” என்றான்.. ஆற்றின் படிகட்டில் நின்று கொண்டு..
“டேய் வந்தேன்னு வையு,, உன்ன கொன்னுடுவேன்,, வெறும் ஆறு தான் தெரியுது, அந்த பொண்ணு எங்கேடா”?.
“சார் மேம் ஆத்துகுள்ள முங்கிட்டாங்க, வைட்டு பண்ணுங்க வெளியில் வருவாங்க” என்று பிரகாஷ் கூற..
விஜயேந்திரன் அந்த ஆற்றையே விடியோ காலின் மூலம் பார்த்துக்கொண்டிருக்க..
வைஷு நன்றாக ஆற்றில் முங்கி எழுந்தவள் மேலே ஏறி வர…
விஜயேந்திரனுக்கு “இவ, இவ” என்று புலம்பிய படியே வீடியோவை சூம் பண்ணி அந்த வீடியோவில் உள்ள பெண்ணை , இமை மூடாமல் அவளை பார்த்திருந்தவன்.. “பொம்மா, நா பொம்மா” என்று அழைக்க..
“சார் அவங்க வைஷு”..
“டேய், டேய், பிரகாஷ்! என் செல்லம்” என்று அவனை கொஞ்ச..
“சார் நான் பிரகாஷ்”..
“டேய் நீ பிரகாஷ் இல்லடா,, என் வாழ்க்கையில் வந்த பிரகாஷம் நீ”.. என்று கூறியவன்
“அவங்க கிட்ட பேசு, எங்க வீ. பி சார் உங்க கிட்ட பேசனுமுன்னு சொல்லு”… என்று கூற.
பிரகாஷ் வைஷுவிடம் சென்று “மேம்” என்று அழைக்க..
அவளோ ஆற்றின் படிகரையில் உள்ள சிவனை வணங்கி விட்டு நெற்றில் ஒரு விரல் கொண்டு விபூதியை வைத்து பட்டை போட..
மேம் என்று பிரகாஷின் குரலில் நிமிந்து பார்த்தவள்..
அவன் பேசும் முன்.. “சார் பிலிஸ் புரிஞ்சுக்கோங்க நீ தேடுற ஆளு நான் இல்ல.. இந்த உலகத்துல நிறைய டான்சர் திறமைகளோடு இருக்காங்க அவங்கள தேடி போங்க, என்னால இந்த ஸ்ரீ ரங்கபட்டிணத்த விட்டு வர முடியாது.. வாழ்க்கையில் ரொம்ப கஷ்டபட்டுட்டேன் சார்,, இந்த ஊருக்கு வந்து தான் நிம்மதியா இருக்கேன், என்ன கம்பல் பண்ணாதீங்க, ஒரு ப்பிரதரா உங்க கிட்ட கேட்டுக்கிறேன். இனி என் பின்னாடி வராதீங்க” என்று கூற..
பிரகாஷ் அமைதியாக நின்று விட்டான்.
வைஷு தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள்..
விஜயேந்திரன் வீடியோ கால் மூலம் வைஷு சொன்னதை கேட்டவன், என்னா தான் ஆனாது இவளுக்கு என்றே தோன்ற..
“சார் இப்போ நான் என்ன பண்ண”?..
“நீ கிளம்பி பெங்களுர் போ, அங்கே மாகடி ரோடுல, நேதாஜி நகர் இருக்கு அங்கே போயி இவளை பத்தி விசாரி, இவளுக்கு என்ன நடந்தது, ஏன் தாத்தா, பாட்டிக்கூட இங்கே இருக்கான்னு கண்டு பிடி” என்றவனிடம்..
“சார் வைஷு மேமை உங்களுக்கு தெரியுமா?”…
“தெரியும் டா”.
“யார் சார் அவங்க?”..
“ஊம்” என்று ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன்..
“நீ ஏன் சார் சிங்குல சுத்துறீங்கன்னு நிறைய தடவை என் கிட்ட கேட்டு வருத்தப்பட்டல,!. அவளால தான் உங்க வீ. பி சாரு குடும்பம்மா ஆக போறாரு போதுமா”.. என்று விஜயேந்திரன் கூற.
“சார் அப்போ கண்டிப்பா மேம் இல்லாமா நான் ஐதராபாத் வரமாட்டேன் சார், நீங்க சொன்னா மாதிரி நான் பெங்களுர் போய் மேம்மை பத்தி விசாரிக்கிறேன், விசாரிச்சிட்டு போன் பண்ணுறேன் சார்” என்று பிரகாஷ் பெங்களூரு கிளம்ப..
இங்கே ஐதராபாத்தில் உள்ள தன் ஆபிஸ் அறையில் சேரில் அமர்ந்து கண்களை மூடி “பொம்மா, நா பொம்மா சீக்கிரம் என்கிட்ட வந்துரு” என்று முனு, முனுத்த படியே இருந்தான் விஜயேந்திரன்….. மூடிய கண்களின் அவள் பத்து வருடம் முன் டெல்லியில் வெல்கம் டான்ஸ் நடனமாடியது ஞாபகம் வர. நா பொம்மா…. நா தல்லி,… நா பங்காரம் என்று அவளை கொஞ்சிய படியே இருந்தான் விஜயேந்திரன்…
error: Content is protected !!