Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Karuvin Kural

Karuvin Kural 9

கருவின் குரல்
அத்தியாயம் 9

அந்த இரவு நடந்த சம்பவங்களுக்கு பிறகு ஜானகி ஒரு பெரிய முடிவெடுத்தாள்.அனிஷ் வாயில் இருந்து நான் ஆசிரமம் சென்று விடுகிறேன் என்ற வார்த்தையை கேட்ட பின் மகளுக்கு விவரம் புரிய ஆரம்பித்து விட்டது. இனியும் இவர்களின் ஏளனப் பேச்சுகளுக்கு நடுவில் பிள்ளையை வளர்க்க கூடாது என தீர்மானித்தாள். முதலில் பிள்ளையை அவள் வேலை செய்யும் பள்ளியில் சேர்த்து விட்டாள்.ஜானகி அங்கு வேலை செய்வதால் மகளிற்கு கன்ஷெசன் கிடைத்தது. அனிஷ்ஷிற்கு பள்ளி செல்வது ரொம்ப பிடித்து விட்டது. தனக்கென பேக்,வாட்டர் பாட்டில், லஞ்ச் பாக்ஸ் ஸ்கூல் யுனிபார்ம், தன்னை போன்ற சிறு வயது பிள்ளைகளை பார்ப்பது எல்லாம் அவளுக்கு கிளுகிளுப்பை உண்டாக்கியது. வேண்டாவெறுப்பாக வீட்டில் இருப்பவர்கள் அவளிடம் நடந்து கொள்ளும் முறையில் சற்று பயந்துதான் போயிருந்தாள்.துருதுரு வென அவள் செய்யும் அனைத்தும் அங்கிருந்தவர்களுக்கு கடுப்பை தர இவளை பார்வையிலேயே அடக்கி விடுவர்.பாவம் என்ன தெரியும் அம்மா வரும் வரை நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அடங்கி இருப்பாள். பாத்ரூம் போவதற்கு கூட தயங்கி தயங்கியே கேட்பாள் அனிஷ்ற்கு ஏதும் புரியவில்லை ஏனோ அவர்களுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்பது மட்டும் புரியும். எப்படியோ அம்மா இன்று தன்னை அந்த சிறையில் இருந்து மீட்டுவிட்டாள் என அவ்வளவு பூரிப்பு இவை எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் சென்று மாலையில் வீடு திரும்பும் அம்மா இன்று ஒரு நாளுக்கு 3 முறை தன்னை வந்து பார்ப்பது அவளுக்கு உற்சாகத்தை தந்தது.
மாலையில் வீடு திரும்பியது அன்று பள்ளியில் என்னவெல்லாம் நடந்தது என கண்களை உருட்டி உருட்டி மகள் கூறுவதை எல்லாம் ரசித்து கேட்பாள் ஜானகி. மம்மி எனக்கு கலர் பென்சில் வேணு இந்த சிங்ககுட்டிக்கு கலர் பண்ண என ஜானகியிடம் கேட்க ,அவளும் சரி அம்மா வாங்கி தரேன் என சொல்லிக் கொண்டிருக்க, ஈஸ்வரி நங்கென்று அனிஷ் இன் தலையில் ஒரு கொட்டு வைத்தாள். வலியில் பிள்ளை ஒரு கேவலெடுத்து அழுக ஆரம்பித்தது ஜானகி பதறி பிள்ளை எடுத்து தலையில் தேய்த்து விட்டே ஏம்மா என கேட்டாள். இவள வீட்டிலே வச்சு சோறு போடறதே பெரிசு இதுலே இதுக்கு கலர் பென்சில் படிப்பு எல்லா கேக்குதா போய் உங்க அப்ப கிட்ட கேளு என் மககிட்ட ஏதும் கேக்காத என முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டே
அனிஷை பார்த்து கூறினார்.அவள் பயத்தில் ஜானகியை இருக பற்றிக் கொண்டாள்.ஜானகி அம்மா என்புள்ளையை இனிமேல் ஒரு வார்த்தை பேசுனே நானும் எம்புள்ளையும் இந்த வீட்டை விட்டு போய்ருவோம் என கூற, மருதாசலம் முதலே அதை பண்ணுங்க என்று கூறிவிட்டார். ஏதோ ஒரு வேகத்தில் வீட்டை விட்டு செல்வதாக கூறி விட்டாலும் எப்படி தனியே பிள்ளை உடன் செல்வது எங்கே போய் வீடு தேடுவது என அவளுக்கு முடிவு எடுக்க தெரியாமல் திணறினாள்.

தினமும் பள்ளி முடிந்து வரும் போது வீடு தேட ஆரம்பித்தாள். எங்கு தேடினாலும் கிடைக்க வில்லை.தனியே மகளுடன் வீடு தேட வீட்டு உரிமையாளர் வீடு தர யோசித்தனர். இளவயது கணவர் இல்லை, குழந்தையுடன் துணைக்கு யாருமில்லை என்றதுமே காலியாக உள்ள வீட்டை கூட புக் ஆகிவிட்டதாக கூறிவிட்டனர். சோர்ந்து போனாள் கோகுல் வேறு தன் பங்குக்கு எப்போது வீட்டை விட்டு போறே எங்களுக்கு நாங்க இருக்கற ரூம் வேற பத்துல மிதுன் ஓட விளையாட்டு பொருளை இந்த ரூம்லதான் வைக்கனும் என அவள் மனதை நோகடித்தான்.ஜானகி ஏதும் பேசவில்லை இவனிடம் பேசி தன் நிலையை குறைத்து கொள்ள ஜானகி விரும்பவில்லை.வீடு தேடும் படலத்தை மீண்டும் ஆரம்பித்தாள்.

தன்னுடன் வேலை செய்யும் லட்சுமி என்ற பெண் அவள் சொந்த ஊருக்கு செல்வதால் வீட்டை காலி செய்வதாக ஏதேர்ச்சையாக பேச அவரிடம் தனக்கு அந்த வீடு கிடைக்குமா? என்றாள்.லட்சுமியும் வீட்டு ஓணரிடம் பேசி, ஜானகிக்கு அந்த வீட்டை மாதம் 2000 வாடகைக்கு தர சம்மதம் வாங்கி தந்தாள். ஜானகிக்கு சந்தோசமே,
மூன்று ரூம் கொண்ட காம்பவுண்ட் வீடு ஒரு சிறிய ஹால், ஒரு சமையலறை, ஒரு குட்டி கிச்சன்.அந்த வீடு அவளுக்கு சொர்க்கம் போலத் தோன்றியது.



Advertisement

முதலில் வீட்டுக்குள் நுழைந்தபோது, அனிஷ்கா துள்ளி குதித்து, அந்த வெறும் அறையில் சிரித்துக் கொண்டு சுற்றி ஓடினாள்.அவள் சிரிப்பு ஜானகிக்கு ஆறுதல் அளித்தது . “இது நம்ம வீடு” என்று அவள் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

முதலில் அவளிடம் இருந்தது ஒரு பிளாஸ்டிக் நாற்காலி, ஒரு அடுப்பு, சில பாத்திரங்கள் மட்டும்.
ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் சிறிது சிறிதாக பொருள்களை வாங்கி சேர்த்தாள் .
முதல் மாதம் ஒரு சிறிய படுக்கை, அடுத்த மாதம் ஒரு மர அலமாரி, மூன்றாம் மாதம் ஒரு சிறிய டிவி. அந்த வீடு மெதுவாக உயிர் பெற்றது போல இருந்தது. சுதாவும் பாலாவும் அண்டை வீட்டார் என்ற முறையில் இல்லாமல் அவளுடைய ரத்த உறவு போல உதவினர். ஜானகி தனக்கும் தன் கணவருக்கும் மனஸ்தாபம் பிரிந்து உள்ளோம் லவ்மேரேஜ் என்பதால் வீட்டில் ஏற்றுக்கொள்ள வில்லை. அதனால் தனியே வந்து விட்டோம் என்று மட்டும் கூறினாள்.சுதா ஜானகிக்கு ஒரு மிகப்பெரிய பலம் நிறைய தைரியத்தை தந்தாள்.எப்படி சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதையெல்லாம் சொல்லி தந்தாள். ஜானகி வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை அனிஷின் எதிர்காலத்திற்கு சேர்த்து வைக்க உதவினாள்.ஓரளவிற்கு வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பித்தாள்.

அந்த காம்பவுண்ட் வீட்டின் உரிமையாளர் இந்த வீட்டை விற்று புதிய வீடு வாங்குவதாக தகவல் இனி வேறு வீடு எங்கே போய் தேடுவது ,இந்த அளவிற்கு அவளது வருமானத்திற்கு ஏற்ப சவுகரியமாக வீடு அமைவதெல்லாம் இனி நடக்கிற காரியமா? என யோசித்து குழம்பினாள்
அதைவிட அவளுக்கு பெரிய கவலை சுதாவையும்,பாலாவையும் விட்டு பிரிவது. ஏனெனில் ஜானகி அவர்களை அவ்வளவு நம்பினாள்.அவளது வளர்ச்சியில் அக்கறை கொண்ட உறவு, அவளது துக்கத்தில் அவளை விட துக்கப்படும் உறவு என்றால் அது சுதாவும் பாலாவும் தான்
எங்கே வீடு தேடுவது என சுதாவும், ஜானகியும் பேசிக்கொண்டிருக்க
அந்த காம்பவுண்டில் குடி இருக்கும் தீபா வந்து அக்கா கவலை பட வேண்டாம் இந்த வீட்டை தேங்காய் எண்ணை ஆலை வைச்சிருக்காங்க இல்ல சக்கரவர்த்தி அவங்க இரண்டாவது பையன் தேவராஜ் தான் வாங்க போறாராம் வீட்டை காலி எல்லாம் பண்ண வேண்டானு நேத்துதான் வந்து சொல்லிட்டு போனாங்க என அவர்களிடம் கூறி விட்டு தன் மகன் நகுலிற்கு தயிர் வாங்கிச் சென்றாள்
ஜானகிக்கு அடுத்த தலைவலி ஆரம்பமாகியது.

Advertisement

Advertisement

பாலாவிடம் அண்ணா நான் வேறு வீடு பார்க்கிறேன் என கூற ,அதுதான் அவங்க காலி பண்ண வேண்டானு சொல்லிடாங்க இல்ல அப்பறோம் என்ன? வேண்டா நீ இங்கையே இரு அனிஷ் கொஞ்சம் பெரியவளா ஆனதுதான் நாங்க உன்னை தனியா விடுவோம் என பாலா கூறிவிட்டார்.ஜானகிக்கு எப்படி தேவாவை எதிர் கொள்ளப் போகிறோம் தன் இடத்தில் இன்னொருவர் இருப்பதை பார்க்கும் தைரியம் எல்லாம் இல்லை என மெளனமாக கண்ணீர் வடித்தாள். வீடு அல்ட்ரேசனுக்காக தேவா வரும் போதெல்லாம் அவனை பார்ப்பதை தவிர்த்து விட்டாள்.இன்று கிரகப்பிரவேசம் முடிந்த உடன் தினந்தினம் எப்படி அவனை எதிர்கொள்வது என அவளுக்கு கவலை அதிகரித்தது.

கடந்த கால நினைவுகளிலில் தூக்கத்தை தொலைத்திருந்த அவள் மெல்ல மெல்ல தூங்கினாள் எவ்வளவு முயன்றும் இரண்டு மணி நேரம் தூக்கம் மட்டுமே அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள்.
தேவா வீட்டிற்கு சகல வசதிகளும் உள்ளேயே உள்ளது. மீதமுள்ள மூன்று வீடுகளுக்கும் தனித்தனி பாத்ரூம் , துவைக்கும் கல் என அனைத்திற்கும் வெளியே வர வேண்டும். வண்டி நிறுத்தும் இடம் நான்கு வீடுகளுக்கும் பொது, ஜானகிக்கு இப்போது எல்லாம் சிரமமாகி போனது வெளியே போனால் தேவாவை நிச்சயமாக பார்க்க வேண்டி வரும்… எப்படியும் சமாளிக்க வேண்டும் என தீர்மானித்தாள்.வெளி உலகம் சிரமமாக இருந்தாலும், உள்ளம் மட்டும் உறுதியோடு இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் இருளை களைந்து பிரகாசிக்க ஆரம்பித்தான்.ஜானகி காலை உணவாக இட்லியும், தேங்காய் சட்னியும் மதியத்திற்கு சாம்பார் சாதமும் அவித்த முட்டையும் லஞ்சிற்கு பேக் செய்து கொண்டிருந்தாள்.அனிஷ் நேற்று கிரக பிரவேசத்தில் நல்ல ஆட்டம் போட்டதில் ஏற்பட்ட களைப்பில் ஆழ்ந்த தூக்கம் ஜானகி மெல்ல எழுப்ப கண்களை தேய்த்துக் கொண்டே” மம்மி இன்னைக்கு வொர்க்கிங் டேவா? இல்ல ஹாலி டேவா ?என கேட்க மகளை செல்லமாக முறைத்துக்கொண்டே வொர்க்கிங் டே என்றாள் மம்மி அப்போ லீவு விட இன்னும் எவ்ளோ டேஸ் இருக்கு? இன்னும் சிக்ஸ் டேஸ் இருக்கு என கூற அலுப்பாக எழுந்து கிளம்பினாள்”. மணி எட்டு ஜானகி அனிஷின் டைரியில் கையெழுத்து போட்டு நோட்டு, புத்தகங்களை பேக்கில் அடுக்க ஆரம்பித்தாள்.பூஜா தனக்கு போன் வேண்டும் என கேட்க சுதா இப்போ எதுக்கு உனக்கு போன் பைனல் இயர் போகும் போது வாங்கிக்கலாம் என கூற ,பூஜா உடனே அப்பா எனக்கு போன் வேணு ப்ராஜக்ட் அதில்தா செய்ய முடியும் என கூற,மகளுக்கும் பிள்ளைக்கும் நடுவில் மாட்டிக்கொண்டார்.
அனிஷ் அவர்களுக்கு பஞ்சாயத்து செய்ய கிளம்பி விட்டாள். சுதாக்கா பெத்த புள்ளைக்கு ஒரு போன் கூட வாங்கி தர மாட்டிங்களா? பாவம் பூஜாக்கா அழுதழுது எப்படி இருக்காங்க, பூஜாக்கா நீ பீல் பண்ணாதே நா மம்மி கிட்ட சொல்லி உனக்கு புது போன் வாங்கி தரேனு பெரிய மனுஷி போல சொல்லி கொண்டிருக்கும் போதே தேவா வெளியே கிளம்ப வர அனிஷ் இரண்டு கைகளையும் தடுப்பது போல் இருபக்கமும் நீட்டி ஸ்டாப் ஸ்டாப் நீங்கதான் புதுசா வந்திருக்க ஹவுஸ் ஓனரா ? நா அனிஷ்கா தேவி, ஆனா என்னை அனிஷ் பாப்பானு கூப்பிட்டாதா பிடிக்கும். நான் யு.கே.ஜி ஏ கிளாஸ் படிக்கறே… நானும் மம்மியும் இதோ இந்த வீட்டுலேதா இருக்கோம்… நேத்து நான் உங்க வீட்டுக்கு வந்தே…என சொல்ல தேவாவிற்கு ஒரு நிமிடம் தன்னையே சிறு வயதில்பார்ப்பது போன்று இருக்க, குற்ற உணர்வு ஒரு புறம் எதுவும் பேசாமல் சென்று விட்டான். அனிஷ்ஷிற்கு அவன் பேசாமல் சென்றது ஏமாற்றமாக இருந்தது.
ஜானகியிடம் சென்று மம்மி இந்த ஹவுஸ் ஓணர் திமிர் பிடிச்சவர் போல நான் பேசரே பேசாமையே போய்ட்டாரு என்றாள். ஜானகிக்கு இதை எப்படி கையாள்வது எனத் தெரியாமல் ஸ்கூலிற்கு டைம் ஆச்சு போலாம் என கிளப்பி சென்று விட்டாள்.தேவா அவளை விட மனமில்லாமல் இந்த வீட்டை வாங்கி விட்டான்.இனி அவளை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்ற குற்ற உணர்வு உள்ளூர அவனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல ஆரம்பித்து .
— கருவின் குரல் ஒலிக்கும்….

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!