Skip to content
Post Views: 541
மங்கையின் நிழலாய் வந்தவன்🥰💕
அத்தியாயம் – 3
மலையென்ற நெஞ்சினுள் மங்கும் மேகங்கள், அதனை சுற்றி அனிவகுத்து மௌனமாய் நின்றிருக்கும் மரங்கள் என அந்த இரவுப்பொழுதை இன்னும் அழகாக்க மெல்லிய தென்றல் போல படர்ந்து அங்குள்ள புல்நுனியின் பனித்துளிகளில் மின்னும் முத்தாக ஜொலித்தாள் நிலவுமகள்.
அந்தநேரத்தில் சொக்கனின் தோளில் கைவைத்து, வாங்க உள்ளே போகலாம் எவ்ளோ நேரம் இங்கயே உட்காந்திருக்க போறீங்க. என்றாள் அன்னம்
Advertisement
அவளின் முகம் பார்க்காமலே, நீ போ அன்னம் கொஞ்சநேரம் கழிச்சி வரேன் என்றவனின் குரல் கரகரத்தது.
உடனே அவனின் முகத்தை நிலவு வெளிச்சத்தில் பார்த்தவள் அதிர்ந்தந்துவிட்டாள். காரணம் அழுதழுது அவனது கண்கள் இரண்டும் பன்னு போல வீங்கியிருந்தது.
பொருக்கமுடியாமல், என்னங்க ஆச்சு? என்றாள்
Advertisement
ஒன்னுமில்ல அன்னம் என்றான் சாதாரணமாக,
Advertisement
இப்ப சொல்ல போரீங்களா, இல்லையா? சற்று அதட்டாளாகவே வந்தது குரல்,
என்ன நீ இப்படிலாம் மெரட்டற?
பின்னனென்னங்க எப்ப பாத்தாலும் எதோ சிந்தனையிலே இருக்கீங்க பேக்ரௌண்ட் இல்லாமலே சோககீதம் வாசிக்கிறீங்க என்றாள் நக்கலாக,
Advertisement
போ…. அன்னம் நீயும் என்னய கேலிபண்ற என்றான் விரக்தியான குரலோடு,
இங்க பாருங்க நான் சுத்திவளைச்சி பேச விரும்பல, நடந்தது நடந்துபோச்சி அதுக்காக அந்த நெனப்புலயே இருந்தா நம்ப வாழ்க்கையை நிம்மதியா வாழ முடியாதுங்க. அடுத்தடுத்து என்னனு தொழில பத்தி யோசிச்சா கூட பரவால்ல. நான் பெருமைப்பட்டிருப்பேன்.
அதவிட்டுட்டு பாசமலர் சிவாஜிகணேசன், சாவித்திரியை பிரிஞ்சமாதிரி கவலைப்படறது எனக்கு சுத்தமா பிடிக்கலைங்க.
ஐயோ அன்னம் அதுக்காக ஒன்னும் நான் கவலைப்படலை. உங்க குடும்பம் என்கிட்ட இருக்கற குறைய பெருசாவே நினைக்கல, என்னை மனிசனா பாக்கறாங்க, என்ன புடிக்கும்னு கேக்கறாங்க, இப்படிப்பட்ட நல்லவங்களை போய்ட்டு நான் தப்பா நினைசிட்டேனே,
தப்பா நெனசிங்களா?
ஆமாம்.
என்ன தப்பா நெனச்சிங்க?
இப்படி இருக்கற என்னை இவங்க கேவலமான பார்வை பார்ப்பாங்க, அசிங்கமா நடத்துவங்க இங்கையும் பிச்சை பொழப்புதான் எனக்குன்னு என்று தயங்கி தயங்கி மனைவியிடம் சொல்லிவிட்டான்.
போதும் நிருந்துங்க எங்க குடும்பத்துல இருக்கறவங்க எல்லாரும் மனிதபிறவி, ஆனால் உங்க வீட்ல அப்படி இல்லை என்றவள், எல்லாரும் மிருகம் ரெண்டு கால் உள்ள மிருகம் அவங்கள எங்க குடும்ப ஆட்களோடு ஒப்பிடாதீங்க,என்றவள்
அங்க பாத்தீங்களா? என்று வீட்டினை காண்பித்தாள்.
வந்தபோது இருந்ததைவிட இப்பொழுது தங்கம் போல ஜொலித்தது விளக்கு வெளிச்சத்தில், பழங்கால களிமண்ணினால் கட்டப்பட்ட திண்ணைவீடு, அதற்கு மேலே மரத்தலான கூரை, மேலும் தனியறைகள் இல்லாத வீடு இவர்களை தனிமையில் அழைப்பதை புரிந்துகொண்டான் ஆணவன்.
மெல்ல 💋இதழ் ஓரம் புன்னகை வந்தது. அவனுக்கு
இவளுக்கோ அது எரிச்சலாய் இருந்தது. உங்கள வச்சிகிட்டு என்னபண்ணப்போறேன்னு தெரியலங்க, வாங்க உள்ள போகலாம் என்றாள் தலையில் அடித்துக்கொண்டு,
“பேசிக்கொண்டே வீட்டின் அறையை அடைந்தவர்கள் கோச்சிக்காத அன்னம் உன்ன விட்டா எனக்கு யாருமில்லைம்மா.என்றான் “
“சரிசரி அசடு வழியுது தொடசிக்கோங்க. “
ஏய்…. வரவர உனக்கு வாய் கூடிப்போச்சு, இருவரேன் என்றவன் அவளை எட்டிப்பிடிக்க முயல, அவளின் முந்தி இவனிடம் எட்டிவிட்டது. அதை பிடித்து இழுத்து தன்மீது அவளை போர்வையாக போர்த்திகொண்டான்.
“விடுங்க, விடுங்க என்றவள் சிணுங்க”
நீ தான் என்னய புடிசிருக்க நான் எப்பவோ விட்டுட்டேன் என்றான், அதை கேட்டு அவள் விலக முயல, எங்க ஓடபாக்கற இன்னைக்கு உன்ன விடப்போறதா இல்லை என்றவள் தரையில் விரித்திருந்த மெத்தையின் மீது இரவு முழுவதும் வாழ்கை பாடங்களை கற்பிக்க துவங்கினான்.
ஆண் அவனின் வலி, ஏக்கம், ஏமாற்றம், அனைத்தையும் அறிந்தவள் அவனின் பாடங்களை விரும்பியே ஏற்றுக்கொண்டாள்.
அன்று இரவு ஒன்று மட்டும் புரிந்தது அன்னத்திற்கு இனி இவரின் சந்தோசம் நம் சந்தோசம் இவரின் துக்கம் நம் துக்கமென்று நினைத்தவள் அவனின் ஒவ்வொரு பிடிக்கும் தன்னை ஒப்படைத்தாள்.
இனிமையான இல்லறம் அங்கே ஆரம்பமானது.
மறுநாள் அதிகாலையே எழுந்து தலைக்கு குளித்துமுடித்து கணவனுக்கு வெண்ணீர் வைத்துவிட்டு வாசலை சாணாம்போட்டு மொழுவியவள் அடுத்தடுத்த வேலைகளை முடித்து கணவனுக்கு பிடித்த சன்ரைஸ் காபியை அவருக்கு நீட்டினாள்.
மெல்ல கண்ணை திறந்தவனுக்கு மனைவியின் முகத்தில் உள்ள மாற்றத்தை கண்டு மகிழ்ச்சியாயிற்று.
என்ன அப்படி பாக்கறீங்க நம்ப வீடு மாதிரி தனியறைலாம் இங்க இல்லை. காஃபியை குடிசிட்டு வாங்க வெண்ணீர் போட்டிருக்கேன் குளிசிட்டு தொழிலை ஆரம்பிக்கலாம் என்றாள்.
தொழிலா?
எல்லாம் இப்பவே சொல்லிட்டா எப்படி குளிசிட்டு வாங்க இன்ப அதிர்ச்சி காத்துட்டிருக்கு என்றவள் மற்ற வேலையை கவனிக்க சென்றாள்.
சொக்கணும் எழுந்து இயற்கை அழைப்பை முதலில் முடித்துவிட்டு, பின்பு வீட்டிற்கு அருகில் உள்ள ஓடையில் நீராடிவிட்டு வெள்ளை வேட்டி சட்டையுடன் மினிமினுப்பாக வந்து நின்றான்.
முத்து மாமாவை அழைச்சிட்டு வாப்பா சாப்பிடலாம் என்றார் சரோஜாதேவி.
இதோ வந்துட்டோம்மா என்றவன் மாமனையும் அழைத்து வர பார்த்தவருக்கு கண்கள் மின்னியது. அவனிடன் குறையை மற்றும் பார்த்தவர்கள் அவனின் குடும்பத்தார் அனைவரும். ஆனால் இங்கு அப்படி இல்லை அவனையும் சராசரி மனிதனாக பாவித்து அவனுக்கான மரியாதை அனைத்தையும் செய்தவர்கள்.
இவ்ளோ காலையில எனக்கு சாப்பாடு வேண்டாம் அத்தை. நேரம் போகட்டும் அன்னம் கூட சாப்பிடுறேன்.
அதெல்லாம் கூடாதுங்க இப்பவே சாப்பிடுங்க. நானும் வந்துடறேன் என்றவள் கனவுக்கு தரைவிரிப்பை விரித்து அமர வைத்துவிட்டு தானும் அருகில் வந்தமர்ந்தாள் உணவு பரிமாற,
அன்னம் என்னைபத்தி தெரிஞ்சிட்டே இப்படி செய்யாதம்மா என கொஞ்சினான்.
இதெல்லாம் ராத்திரி கொஞ்சிக்கலாம் சொன்னதை செய்யுங்க அம்மா பாக்கறாங்க என்று அதட்டினாள்.
அதன்பிறகு ஒன்றும் பேசாமல் காலை உணவை உண்டு முடித்தனர் இருவரும்.
பின்புறத்தில் கை கழுவிவிட்டு உள்ளேவந்த அன்னம் வாங்க போகலாம். என்றாள்
எங்க அன்னம்?
வாங்க சொல்றேன், என அவனின் கைகளை பிடித்து அழைத்து சென்றவள் வெளியில் அவனுக்காக காத்திருந்த பொருளை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டான்.
ஒருமுறை வீட்டில் தான் தொழில் துவங்க போவதாகவும் அதற்காக நான்கு சக்கர தள்ளுவண்டி வேண்டுமென்று தந்தையிடம் கேட்டான்.
மூக்குவேர்த்த முட்டாள் மூதேவிங்க ரெண்டும் பேரும், பொறுக்கமாட்டாமல் நீ நடக்கறதே பெரிய விஷயம் இதல அந்த வண்டியை வேறு நகத்தபோறயா? அது உன்னால முடியுமா? அதெல்லாம் வேண்டாம்ப்பா இவனுக்கு வாங்கி கொடுத்து காசு வீணாக்காதீங்க என்றான் கட்டலையிடுவது போல,
அத சொல்ல நீங்க யாருடா? இதெல்லாம் என்னோட சம்பாத்தியம் என் புள்ளைக்கு என்ன விருப்பமோ அது செய்யதாண்டா நான் இருக்கேன். உங்களை மாதிரி முட்டாளை பெத்தத விட அவனை பெத்ததுதான் எனக்கு பெருமையாக இருக்கு.
இப்படியெல்லாம் பேசாதீங்க பின்விளைவுகள் ரொம்ப பயங்கரமாக இருக்கும் தகப்பனரே,
உங்களால் என்னை ஒன்னும் செய்ய முடியாதுடா? உதவாக்கறைகலா
இந்த அருந்ததி பட டைலாக் எல்லாம் அப்பறம் பேசலாம் அவனுக்கு வண்டி வாங்கக்கூடாது மீறி செஞ்சீங்கன்னு தெரிஞ்சது சொன்னதை செஞ்சிடுவேன் என்றான் மிரட்டலாக,
அன்றே தீர்மானித்தான் இனி வீட்டில் தன்னால் பிரச்னை வர கூடாதென்று, மனதில் உறுதி கொண்டவன் வேண்டாம்ப்பா அண்ணன்கள் சொல்வது உண்மைதான் நெஞ்சில் இருக்கும் தைரியம் நிஜத்தில் இல்லை. அதனை முயற்சியெடுத்து தள்ளுவதற்க்கான பலம் என்னிடம் இல்லை என்றவன் தள்ளுவண்டி வேண்டாம் என்ற ஒற்றை சொல்லோடு கிளம்பிவிட்டான்.
பெற்றவர்கள் வயிறு காட்டு தீயாக பற்றி எறிந்தது. அன்று அவர்களுக்கு தெரியாதே இந்த தீயை அணைத்து இவனை பெருமைப்படுத்த ஒருத்தி இருக்கிறாலென்று,
பழைய நினைவில் கண்கலங்கியவன் அன்னத்தின் கையினை இருக்கமாக பற்றி கொண்டான். தன்னுடைய கனவை நிறைவேற்றியவளை அள்ளி அனைத்துக்கொள்ள துடித்தான்.
விடுங்க, இனிமேல் எல்லாம் இப்படிதான் என்றவள் அவனின் பெயர் பதித்த அட்டையை அவனுக்கு காண்பித்தாள்.
அதில் “சொக்கன் இயற்கை உணவகம்” என்றிருந்தது.
“ஆனந்த மழையில் நனைந்தவன் இதை பார்ப்பதற்க்கு என்னோட அம்மா, அப்பா இல்லையே அன்னம் என்றான் காரகரத்த குரலில் “
ஏன் இல்லை சொக்கா, இதோ வந்துட்டோம் என்று வந்தது சுப்பிரமணியம், சாந்தம்மாள் குரல்.
அத்தை, மாமாவை பார்த்தவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. எப்படி வந்தீங்க ஒரு வார்த்தை சொல்லிருந்தா தம்பியோட வண்டியை கொண்டுவர சொல்லிருப்பேனே,
ம்ம்ம்……. என்று அவளை உற்று பார்த்து முறைத்தவர், அங்க மட்டும் என்ன சொல்லிட்டா வந்தீங்க,
அதுவந்து அத்தை மனசு சரியில்லாம இல்லல்ல எதோ ஒரு கவனத்துல ம்ம்ம்….. குழப்பதுல என்று பிணத்தினாள், அன்னம்
போதும் நிருந்து அன்னம் உன்மேல நான் ரொம்ப கோவமா இருக்கேன். எனக்கு தெரியாம என் மகனை கடத்திட்டு வந்துட்ட உன்னை சும்மா விடப்போறதாவே இல்லை என்றவர் அவளிடம் நெருங்கி ஓங்கி அறைவது போல கையினை உயர்தினார்.
அம்மா அவளை ஒன்னும் சொல்லாதீங்க நான் தான் எல்லாத்துக்கும் காரணம் போகறதுக்கு போக்கிடம் இல்லாம இருந்த என்னை கூட்டிட்டு வந்து அடைக்கலம் கொடுத்தவளை தப்பா பேசாதீங்கம்மா, அந்த கடவுளுக்கும் பொருக்காது எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினேனோ இப்படி அனுபவிக்கிறேன் இனிமேலும் இது வேண்டாமே எங்களை நிம்மதியா வாழவிடுங்கம்மா ப்ளீஸ்.
அத்தையை கோவமா பேசாதீங்க. அவங்க கோவமெல்லாம் நம்ப மட்டும் தனியா வந்துட்டோமே அவங்களை அங்கேயே விட்டுட்டுன்னு மட்டும் தான். மத்தபடி என்னை அவங்க தப்பா நெனைக்கமாட்டாங்கங்க, உங்க வாழ்கை இப்படியோ போய்டக்கூடாது இனிமேலும் அவனை சோதிக்காதன்னு தினம் தினம் நெய்தீபம் ஏற்றி வணங்கறவங்க அவங்களால என்னைக்குமே நமக்கு கஷ்டம் வராதுங்க.
அப்படியா? என்றான் ஒன்றும் அறியாதவனைப்போல,
பாருடா வீட்டுக்கு வாழவந்து முழுசா ஒரு மாசம் முடியலை. என்னையும் நம்பகுடும்பத்தையும் புரிஞ்சிவசிருக்கா அன்னம். ஆனா என் வையித்துல பொறந்த எவனுமே என்னையும் உங்க அப்பாரையும் புரிந்துகொள்ளவில்லயே என்று கலங்கினார்.
தாயின் தோளில் கைவைத்து உளுக்கியவன், நானும் என் மனைவியும் கஷ்டப்படலாம் உங்களுக்கு அந்த தலையெலுத்து வேண்டாம்னு தான் கொஞ்சம் கடுமையாக பேசிட்டேன்ம்மா.
“காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சினு நானும்” படிச்சிருக்கேன்ம்மா, உன்ன பாற்கிற போதெல்லாம் எனக்கு அந்த பழமொழி மட்டுமே ஞாபகம் வரும்மா என்றவன் எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா என்றான்.
ஏங்க வாங்க குழந்தைகளை ஆசிர்வாதம் பண்ணலாம் என்றவர் அங்குள்ள சாமந்தி பூவினை பறித்து இருவரின் மேலும் தூவி நல்லாருங்க, என்று வாழ்த்தியனுப்பினர்.
பிறகு அன்னம் அப்பா, அம்மாவில் தொடங்கி சொந்தங்கள் அனைவறிடமும் ஆசீர்வாதம் பெற்று புதுவாழ்வில் பயணம் செய்ய புதுப்பாதையில் பயணித்தனர்.
தங்களுக்கென்று மக்கள் நடமாட்டம் அதிகமாகவும், ஒன்றுகூடும் இடமாகவும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தனர்.
கடையினை ஆரம்பித்த முதல் நாள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வியாபாரம் இல்லை. ஆனால் விவசாயிகளின் இயற்கை உணவான கலியும், கருவாட்டு குழம்பும், நாட்டுகோழி குழம்பும் தீர்ந்துவிட்டது.
இட்லி, பாதிக்குமேல் விற்கவே இல்லை. முதல் நாளே அனைத்தும் காலியாகிவிட இதுயென்ன சினிமாவா என்ன? நடைமுறையில் அனைத்தும் பொறுமையாக தானே நடக்கும் இதனை உணராத சொக்கலிங்கம் புலம்பிக்கொண்டு வந்தான்.
அன்னம் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள்.
என்ன நீ, நான் எது சொன்னாலும் ஒன்னும் பேசாம அமைதியா வர அன்னம். ஏன் இந்த வாழ்க்கைனு யோசனையா?
அவனை தீ பார்வை பார்த்தவள், அந்த நேரம் யோசிக்கவில்லை ஆனால் இப்ப ஏன் அப்படி யோசிக்க கூடாதுன்னு தோணுது.
அன்னம்……?
பிறகென்னங்க எந்த நேரமும் சோக கீதம் வாசிக்கிறீங்க. போதாதுக்கு ஒரே முயற்சியில முன்னேறணும்னு ஆசை படறீங்க. இதெல்லாம் கதைக்கும், நாடகத்துக்கும் ஒத்துவரும்ங்க. நிஜத்தில் கஷ்டப்படணும் அது தான் நமக்கு காலத்துக்கும் நிலைக்கும். இப்ப கூட ஒன்னும் கெட்டுப்போகவில்லை. இன்றய செலவு போக இருனூறு ரூபாய் கையில நின்னுருக்குனு சந்தோஷப்படுங்க.
இதுமாதிரி மாசம் முழுக்க சேர்ந்தா மாசம் ஆராயிரம் ரூபாய் கையில தங்கும். அதுபோதுங்க நம்ப குடும்பம் பண்றதுக்கு, என்று அடுக்கடுக்காக தன்னுடைய மனவிருப்பதையும் முயற்சியையும் சொன்னவளை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே வீட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தவன்.
மனதில் ஒரு தீர்மானத்தை வளர்த்து கொண்டான். தெரியாத தொழிலை செய்வதைவிட அனைத்தும் கற்று பட்டம் பெற்ற இந்த தொழிலே நமக்கு தெய்வம். இந்த முயற்சியை இனி கைவிடுவதாக இல்லை என்றுணர்ந்தவன் மனைவியின் கையினை இறுகபற்றிக்கொண்டு நீ சொல்றமாதிரியே செய்யலாம் செல்லம் என்றான்.
என்னது செல்லமா?
ஆமாண்டி செல்லம் என்றவன் சில்மிஷமா பார்த்து வைத்தான்.
என்ன…… என்ன…….பார்வை இது?
அதுவா…….என்றவன்
தென்னை இளநீரு புது திராட்சை பழச்சாறு…
நீ குடிச்சு பாரு நம்மை கேக்குறது யாரு…மிச்சமின்றி நீ வழங்கு மெல்ல இன்னும் நீ நெருங்கு…
உன்னை வரைக்கும் இந்த நெருக்கம் என்றும் இருக்கும்…
error: Content is protected !!