தட்டு தடுமாறி… கதவை ஒற்றை விரலால் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.
ஹாய்…. என்று கை அசைத்து அழகாய் சிரித்தான்.
அவன் இதுவரை இப்படி சிரித்து அவள் பார்த்ததில்லை.
அவனை ரசிக்க சொன்ன மனதை தட்டி..குட்டி அடக்கி வைத்தாள்.
உட்காரலாமே… இருக்கையை காட்டினான்.
நான் வெளியில்… அவள் பேச்சு வராமல் உளறினாள்.
ம்க்கூம்…. இனி என் ரூமில் தான் உனக்கு வேலை. ஐமீன் என்னோட டிஸ்கஸ் பண்றது…. மெல்ல கண் சிமிட்டினான்.
அவள் அதிர்ந்து தலை கவிழ்ந்தாள்.
பேசணும்னு சொன்னீங்க…? குனிந்தவளின் வாயில் வார்த்தை குறைந்த ஒலியில் வந்து விழுந்தது.
ம்ம்ம்ம்…. நேற்று உன்கிட்ட என் முடிவை சொல்ல முடியலை. கொஞ்சம் இமோஷனலா இருந்துட்டேன்.
அவள் திக் திக் இதயத்தோடு பார்த்தாள்.
மிஸ் ஸ்வாதியை மிஸஸ் ஸ்வாதி பிரபானந்தனா ஏத்துக்கிறதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை… பிள்ளையார் கோயிலில் சூரத் தேங்காய் உடைப்பதை போல் பளிச்சென்று போட்டு உடைத்தான்.
நான் கிளம்புறேன்…. அவள் விழி நீருடன் எழுந்திருக்க… கதவை தட்டி விட்டு பாலாஜி உள்ளே வந்தான்.
என்ன இருந்தாலும் நேரில் உன் முகம் பார்த்து உன்குரலில் கேட்பது போல் வருமா? அவளை பார்த்து கண்ணடித்து சிரித்தான்.
பாருடா…. இந்த பித்தா பயலுக்கு இப்படி கூட ரொமான்ஸ் பண்ண வருது…? திகைத்து ரசித்தான் பாலாஜி.
சட்டென வியர்த்தவள் முன்… தண்ணீர் பாட்டிலை நீட்டினான் பிரபா.
தண்ணீர் குடித்து கொஞ்சம் ஆசுவாசம் ஆனவள்…. அவன் முகம் பார்க்க தவிர்த்து… பாலா முகம் பார்த்து பேச்சை ஆரம்பித்தாள்.
நாம கூடுவாஞ்சேரி ஹோட்டலுக்கு மன்த்லி எய்ட் லேக்ஸ் ரெண்ட்டல் அமவுண்ட் கொடுக்கிறோம். அப்கோர்ஸ் ஹோட்டல் நல்லா தான் போகுது… இருந்தாலும் வருஷத்துக்கு 96 லட்சம் ரெண்ட் கொடுக்க வேண்டி வருது.
எல்லா செலவும் போக கணக்கு பார்த்தால் பெருசா லாபம் இல்லை.
ஸோ… என்னோட யோசனை என்னன்னா…. நாம கூடுவாஞ்சேரியில் ஹோட்டல் நடத்தறதை விட… அவுட்டரில் ஐ மீன் செங்கல்பட்டு தான்டி ஹோட்டல் நடத்தலாம்.
பிகாஸ் அங்க ஒரு ஏக்கர் நிலமே முப்பதில் இருந்து முப்பத்தைந்து லட்சம் தான்.
இங்கே ஆறு மாதம் கொடுக்கும் வாடகைக்கு அங்கே ஒரு ஏக்கர் நிலமே வாங்கிடலாம்.
இங்கே கொடுத்திருக்க அட்வான்ஸ் ரிட்டர்ன் வாங்கினாலே அங்கே ஒரு ஹோட்டல் கட்டிடலாம்.
இருந்தாலும் GST சாலையில் நிறைய காபி ஷாப் இருக்கே…? பாலா சந்தேகம் கேட்டான்.
இருக்கட்டும்…. நாம சின்னதா காஃபி ஷாப் மட்டும் நடத்த போறதில்லை. பெரிய அளவில் ஹோட்டல் தான் நடத்த போறோம்.
பெரிய அளவில்னா… பில்டிங் பெரிய அளவில் என்று அர்த்தம் இல்லை.
வித்தியாசமா… புதுமையோட நடத்த போறோம்.
பார்க்க சில்லறை வியாபாரம் போல் இருக்கும். அசால்ட்டா ஒரு நாளைக்கு நாலு லட்சத்துக்கு மேல சேல்ஸ் நடக்கும்.
நான் “99 காஃபி ஷாப் ” என்று ஒரு கடைக்கு போயிருக்கேன். செம்மையா பண்றாங்க.
கண்டிப்பா நாம பெஸ்ட்டா பண்ணலாம்…. போட்ட பணத்தை இரண்டு வருஷத்தில் எடுத்துடலாம்.
இமைக்க மறந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான் பிரபா.
ஸ்வாதி யோசனை நல்லா இருக்கு ! நீ என்னடா சொல்ற?பிரபாவிடம் கேட்டான்.
நான் ரெண்டையும் தான் சொன்னேன்…. ஹி… ஹி…. அவன் வழக்கத்திற்கு மாறாக குழைந்து சிரித்தான்.
பாலாவின் மொபைல் ரிங்காக… நீங்க பேசிட்டு இருங்க இதோ வந்துடறேன் என்று வெளியே போனான்.
ஸ்வாதி தலை நிமிரவே இல்லை.
ஸ்வாதி என்னை பார்க்க மாட்டியா,…? கொஞ்சியது அவன் குரல்.
அவள் கடுப்புடன் முறைத்தாள்.
நீ சிரித்தாலும் முறைத்தாலும் ஐ லவ் யூ தான் என்றான் உதட்டை சுழித்து.
ஓகே நான் கிளம்புறேன்…! அவள் எழுந்து கொண்டாள்.
என்ன நீ எஸ்கேப் ஆகறதிலே இருக்க…. ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி. அவன் புருவத்தை மேலே தூக்கி உதடு பிரியாமல் புன்னகை சிந்தினான்.
தயவு செய்து இனிமேல் இப்படி எல்லாம் பேசாதிகீங்க..!
இனிமேல் இப்படி தான் நான் பேசி ஆகணும். என் வைஃப்கிட்ட நான் எப்படி யாரோ மாதிரி பேச முடியும்…? அவன் ஓசையின்றி சிரித்தான்.
எனக்கு இங்கே வேலை பார்க்க பிடிக்கலை…. அவள் பல்லை கடித்தாள்.
ஸ்வாதி முதல் முறை என் திருமண வாழ்க்கையில் நான் தோற்று போயிட்டேன்.
அது நானா தேடின வாழ்க்கை இல்லை… பெரியவங்க செய்த தவறு.
இப்போ உன் விஷயத்தில் நான் தெளிவா முடிவு எடுத்துட்டேன். நீ தான் என் மனைவி.
நீ என்னை விட்டு இனி எங்கேயும் போக முடியாது…. உன்னை நிழலா தொடர்வேன்.
ஸார்… இதெல்லாம் சரியா வராது…. அவன் ஆசையில் தீ வைக்க முயன்றாள்.
ஏன்டி சரி வராது…? சொல்லு… அவள் தோள்கள் இரண்டையும் பற்றி குலுக்கினான்.
ஏன்னா எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. அவள் ஆணித்தரமாக கூறினாள்.
எனக்கும் தான் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. ரெண்டு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துட்டே இந்த ஜென்மம் முழுக்க வாழ நான் ரெடி… உன் அருகாமையும், அன்பும் எனக்கு போதும்.
ஸார்… கொஞ்சம் மெச்சூர்டா திங்க் பண்ணுங்க…! உங்களுக்கு என்ன தலை எழுத்து…?
உனக்கு மட்டும் என்னடி தலை எழுத்து…? காலம் முழுக்க கண்ணீரில் கரைய…
நீயும் சரி நானும் சரி தெரிந்து எந்த தவறும் செய்யலை.