Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே ஏனடி நுழைந்தாய்?

என்னுள்ளே💞16

அத்தியாயம் _16

எந்த உணர்வும் தோன்றாது வளிமண்டலத்தின் வெற்றிடம் போல் அவன் மனத்தில் வெறுமை மட்டுமே விரவி கிடந்தது.

ஜன்னல் வழியே வெளி உலகை பார்த்து கொண்டிருந்தவன் இலக்கில்லா பார்வையோடு நெடு நேரம் நின்றான்.



Advertisement

கால்கள் வலிக்க மெல்ல வந்து சோஃபாவில் சாய்ந்தான்.

இந்த சிறு  வயதில் எவ்வளவு வலியை  சுமந்திருக்கிறாள்….?

அவன் மனம் ரத்த கண்ணீர் வடித்தது.

Advertisement

இனி தான் என்ன செய்ய வேண்டும் என்று தனிமையின் தயவில் தீர்க்கமாய் யோசித்தான்.

Advertisement

மொபைல் என்னை கவனி என்று சிணுங்கியது.

எடுத்து பார்த்தான் அவன் தங்கை ஸ்ரீமதி தான் அழைப்பில்….

சொல்லு ஸ்ரீ…. உன் ஹஸ்பெண்ட் நல்லா இருக்காறா….? குட்டி பாப்பு நல்லா இருக்காளா?

Advertisement

எல்லாம் சௌக்கியம் அண்ணா….

நீங்க, அம்மா, பாலா அண்ணா எல்லாரும் சௌக்கியமா?

எல்லோரும் சூப்பரா இருக்கோம். ஏதோ பேச வந்து கால் பண்ணிட்டு இப்போ தயங்கற மாதிரி தெரியுது.

என்ன ஸ்ரீ ஏதும் பிரச்சனையா?

அய்யோ அண்ணா அதெல்லாம் இல்லை….

என் வீட்டுக்காரர் உங்களுக்கு ஒரு பொண்ணு பார்த்து வைத்திருந்தார் இல்லையா…? அந்த பொண்ணு வீட்ல கேட்கிறாங்க…! என்ன பதில் சொல்ல….

வேண்டாம்னு சொல்லிடுங்க…!

அண்ணா…. இப்படியே பண்ணினீங்கன்னா உங்க எதிர்காலம் தான் என்ன…? உடன் பிறந்தவள் துடித்தாள்.

ஸ்ரீம்மா நீ கவலையே படாதே… கூடிய சீக்கிரம் உனக்கு அண்ணி கொண்டு வரேன்… அவன் உறுதிபடக் கூறினான்.

புரியலண்ணா…. அவள் குழம்பினாள்.

இன்னும் கொஞ்ச நாளில் புரியும்.லேசாய் சிரித்தான்.

சரிம்மா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் கூப்பிடவா…?

சற்று நேரத்தில் பாலாஜி அழைத்தான்.

பித்தா எங்கேடா இருக்க?

ஹோட்டலில் தான்…!

டேய் நான் உன்னோட ரூமில் தான் இருக்கேன்.

நான் தேர்டு ஃப்ளோரில் இருக்கேன். ரூம் நம்பர் 306 க்கு வா..!

சற்று நேரத்தில் பாலாஜி வந்தான்.

என்னடா இங்கே உட்கார்ந்திருக்க…?

வீட்டிற்கு போக பிடிக்காம ஹோட்டலில் ரூம் போட்டு தனிமையில் இனிமை கண்டு கொண்டிருக்கிறாயோ ..? குறும்பு கூத்தாடியது அவன் கண்களில்.

கொழுப்பு கூடி தான் இருக்கு. நிஷாட்ட சொல்லி கவனிக்கணும். நண்பனை சிறு முகச்சுழிப்புடன் ஏறிட்டான்.

டேய்….உனக்கும் எனக்கும் தான் பேச்சு…. நீ ஏன் என்னை அடிக்க அடியாள் செட் பண்ற..? அவன் பாவம் போல் கேட்டான்.

அப்போ என் தங்கச்சி நிஷா ரௌடிங்கிற…. அவன் சிரிக்காமல் பார்த்தான்.

நான் எப்போடா அப்படி சொன்னேன்?

இப்போ நீ சொன்னதற்கு அது தான் தம்பி அர்த்தம்…. அவன் முதுகில் ஒன்று போட்டான்.

டேய் ராசா….குடும்ப நல நீதிமன்றத்துக்கு எங்களை குடும்பத்தோட அலைய விட்ருவ போல….?

ச்சீய்…. அப்படி சொல்லாதேடா… உனக்கு ஏன் அந்த மரண வேதனை…? முகம் சுருங்கி போனான் பிரபா.

சரி அதை விடு ஸ்வாதிட்ட பேசினியா?

ம்ம்ம்… என்றான் ஒற்றை வார்த்தையில்.

என்ன சொல்றா? என் சிஸ்டர்.ஆர்வமாய் கேட்டான்.

ஸ்கூல் டேய்ஸ்ல யாரையோ ஒன்சைடா லவ் பண்ணி இருக்கா…. “அதில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறா….!”

ப்ப்ப்பப்பு… இவ்வளவு தானா? பப்பி லவ்வுக்கா இவ்வளவு ஃபீல் பண்றா…?

ம்ம்ம்… சின்ன பொண்ணு இல்லையா… அது தான் ஏமாற்றத்தை தாங்கிக்க முடியாமல் உடைந்து போயிருக்கா…. சீக்கிரம் சரி பண்ணிடலாம். தெம்பாய் கூறினான் பிரபா.

ஸ்வாதியின் கடந்த காலத்தை யாரிடமும் பகிர அவன் விரும்பவில்லை.

எப்படியோ பிரபா… சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கோங்க…. நண்பனின் தோள் தட்டினான்.

“———-“

ஸ்வாதிக்கு  உயிர் துடித்தது.பிரபா என்னை அற்ப புழுவை போல் எண்ணி இருப்பார்…

படிக்கிற வயசிலேயே ஏமார்ந்து நின்ற என்னை எண்ணி ஏளனமாய் சிரித்திருப்பார்.

எது எப்படியோ…. இனி என் வாழ்வில் தலையிட மாட்டார்.

அவர் பட்டதே போதும்…! இனியாவது நல்ல பெண்ணாய் பார்த்து திருமணம் செய்து கொண்டு நிம்மதியாய் வாழட்டும்.

என் பிரபா… வேறொரு பெண்ணை….? நினைக்கும் போதே கண்ணீர் அருவியாய் கொட்டியது.

உறக்கத்துடன்  போராடி…. மெல்ல கண்ணயர்ந்தாள்.

அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவளின் மொபைல் தொடர்ந்து ஒலி எழுப்பி… அவளை எழுந்து உட்கார வைத்தது.

மணி ஏழு ஆச்சா…? மொபைலை பார்த்தாள்.

பிரபா தான் லைனில்…. கட் பண்ண மனம் துணியவில்லை.

சொல்லுங்க ஸார்…. உதட்டளவில் வார்த்தை வரவே போராடினாள்.

ஹோட்டலுக்கு வேலைக்கு வா!

எனக்கு வேலை இல்லைனு சொன்னீங்களே…?

ஆமா… ஓனரம்மாக்கு  யார் வேலை கொடுக்கிறது….? அவன்  அழகாய் சிரித்தான்.

ஸார்… ப்ளீஸ்… இப்படியெல்லாம் பேச வேண்டாம். அவள் கசந்தாள்.

ஓகே ச்சில்… நீ மெயில் பண்ணியிருந்த  பிளான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அது பத்தி பேசணும்!

நான் தான் தெளிவா மெயிலில் எல்லாம் சொல்லி இருந்தேனே….?

நான் உன் அளவிற்கு அறிவாளி இல்லைம்மா…. மக்கு பையனுக்கு ஒன்னும் புரியல…. நீ கொஞ்சம் எக்ஸ்பிளெயின் பண்ணனும்.

நான் போனிலே அப்பப்போ பேசறேன் ஸார்..!

நோ…. நீ நேரில் வர்ற…! என் நலனில் அக்கறை இருந்தால் வருவ…! அவன் வைத்து விட்டான்.

அய்யோ…. எப்படி அவனை நேர் கொண்டு பார்க்க…? அவள் மேனி நடுங்கியது.

வேறு வழி இல்லாமல்…. கிளம்பி வந்தாள்.

அக்கவுண்ட் செக்ஷனில் அமர போனவளை தன்னறைக்கு வரும்படி அழைத்தான்.

தட்டு தடுமாறி… கதவை ஒற்றை விரலால் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.

ஹாய்…. என்று கை அசைத்து அழகாய் சிரித்தான்.

அவன் இதுவரை இப்படி சிரித்து அவள் பார்த்ததில்லை.

அவனை ரசிக்க சொன்ன மனதை தட்டி..குட்டி அடக்கி  வைத்தாள்.

உட்காரலாமே… இருக்கையை காட்டினான்.

நான் வெளியில்… அவள் பேச்சு வராமல் உளறினாள்.

ம்க்கூம்…. இனி என் ரூமில் தான் உனக்கு வேலை. ஐமீன் என்னோட டிஸ்கஸ் பண்றது…. மெல்ல கண் சிமிட்டினான்.

அவள் அதிர்ந்து தலை கவிழ்ந்தாள்.

பேசணும்னு சொன்னீங்க…? குனிந்தவளின் வாயில் வார்த்தை குறைந்த ஒலியில் வந்து விழுந்தது.

ம்ம்ம்ம்…. நேற்று உன்கிட்ட என் முடிவை சொல்ல முடியலை. கொஞ்சம் இமோஷனலா இருந்துட்டேன்.

அவள் திக் திக் இதயத்தோடு பார்த்தாள்.

மிஸ் ஸ்வாதியை மிஸஸ் ஸ்வாதி பிரபானந்தனா ஏத்துக்கிறதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை… பிள்ளையார் கோயிலில் சூரத் தேங்காய் உடைப்பதை போல் பளிச்சென்று போட்டு உடைத்தான்.

நான் கிளம்புறேன்…. அவள் விழி நீருடன் எழுந்திருக்க… கதவை தட்டி விட்டு பாலாஜி உள்ளே வந்தான்.

வாடா பாஜி…. ஸ்வாதி வந்திருக்கா…. நாம நேரில் டிஸ்கஸ் பண்ணலாம் என்றான் எதுவும் நடவாவது போல்…

வேறு வழி இல்லாமல் இருக்கையில் அமர்ந்தாள்.

சொல்லு ஸ்வாதி… உன்னோட ஐடியாவை….! அவளை ஊக்கினான்.

அது தான் மெயிலில் சொல்லி இருந்தேனே…?

என்ன இருந்தாலும் நேரில் உன் முகம் பார்த்து  உன்குரலில் கேட்பது போல் வருமா? அவளை பார்த்து கண்ணடித்து சிரித்தான்.

பாருடா…. இந்த பித்தா பயலுக்கு இப்படி கூட ரொமான்ஸ் பண்ண வருது…? திகைத்து ரசித்தான்  பாலாஜி.

சட்டென வியர்த்தவள் முன்… தண்ணீர் பாட்டிலை நீட்டினான் பிரபா.

தண்ணீர் குடித்து கொஞ்சம் ஆசுவாசம் ஆனவள்…. அவன் முகம் பார்க்க தவிர்த்து… பாலா முகம் பார்த்து பேச்சை ஆரம்பித்தாள்.

நாம கூடுவாஞ்சேரி ஹோட்டலுக்கு மன்த்லி எய்ட் லேக்ஸ் ரெண்ட்டல் அமவுண்ட் கொடுக்கிறோம். அப்கோர்ஸ் ஹோட்டல் நல்லா தான் போகுது… இருந்தாலும் வருஷத்துக்கு 96 லட்சம் ரெண்ட் கொடுக்க வேண்டி வருது.

எல்லா செலவும் போக கணக்கு பார்த்தால் பெருசா லாபம் இல்லை.

ஸோ… என்னோட யோசனை என்னன்னா…. நாம கூடுவாஞ்சேரியில் ஹோட்டல் நடத்தறதை விட… அவுட்டரில் ஐ மீன் செங்கல்பட்டு தான்டி ஹோட்டல் நடத்தலாம்.

பிகாஸ் அங்க ஒரு ஏக்கர் நிலமே முப்பதில் இருந்து முப்பத்தைந்து லட்சம் தான்.

இங்கே ஆறு மாதம் கொடுக்கும் வாடகைக்கு அங்கே ஒரு ஏக்கர் நிலமே வாங்கிடலாம்.

இங்கே கொடுத்திருக்க அட்வான்ஸ் ரிட்டர்ன் வாங்கினாலே அங்கே ஒரு ஹோட்டல் கட்டிடலாம்.

இருந்தாலும் GST சாலையில்  நிறைய காபி ஷாப் இருக்கே…? பாலா சந்தேகம் கேட்டான்.

இருக்கட்டும்…. நாம சின்னதா காஃபி ஷாப் மட்டும் நடத்த போறதில்லை. பெரிய அளவில் ஹோட்டல் தான் நடத்த போறோம்.

பெரிய அளவில்னா… பில்டிங் பெரிய அளவில் என்று  அர்த்தம் இல்லை.

வித்தியாசமா… புதுமையோட நடத்த போறோம்.

பார்க்க சில்லறை வியாபாரம் போல் இருக்கும். அசால்ட்டா ஒரு நாளைக்கு நாலு லட்சத்துக்கு மேல  சேல்ஸ் நடக்கும்.

நான் “99 காஃபி ஷாப் ” என்று ஒரு கடைக்கு போயிருக்கேன். செம்மையா பண்றாங்க.

கண்டிப்பா நாம பெஸ்ட்டா பண்ணலாம்…. போட்ட பணத்தை இரண்டு வருஷத்தில் எடுத்துடலாம்.

இமைக்க மறந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான் பிரபா.

ஸ்வாதி யோசனை நல்லா இருக்கு ! நீ என்னடா சொல்ற?பிரபாவிடம் கேட்டான்.

செம்ம்ம சூப்பர்… பிரபா ரசித்து சிரித்தான்.

டேய் பித்தா… நான் ஸ்வாதியை கேட்கலை அவளோட பிளானை கேட்டேன்… அடிக் குரலில் கிசுகிசுத்தான் பாலா.

நான் ரெண்டையும் தான் சொன்னேன்…. ஹி… ஹி…. அவன் வழக்கத்திற்கு மாறாக குழைந்து சிரித்தான்.

பாலாவின் மொபைல் ரிங்காக… நீங்க பேசிட்டு இருங்க இதோ வந்துடறேன் என்று வெளியே போனான்.

ஸ்வாதி தலை நிமிரவே இல்லை.

ஸ்வாதி என்னை பார்க்க மாட்டியா,…? கொஞ்சியது அவன் குரல்.

அவள் கடுப்புடன் முறைத்தாள்.

நீ சிரித்தாலும் முறைத்தாலும் ஐ லவ் யூ தான் என்றான் உதட்டை சுழித்து.

ஓகே நான் கிளம்புறேன்…! அவள் எழுந்து கொண்டாள்.

என்ன நீ எஸ்கேப் ஆகறதிலே இருக்க…. ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி. அவன் புருவத்தை மேலே தூக்கி உதடு பிரியாமல் புன்னகை சிந்தினான்.

தயவு செய்து இனிமேல் இப்படி எல்லாம் பேசாதிகீங்க..!

இனிமேல் இப்படி தான் நான் பேசி ஆகணும்.  என்  வைஃப்கிட்ட நான் எப்படி யாரோ மாதிரி பேச முடியும்…? அவன் ஓசையின்றி சிரித்தான்.

எனக்கு இங்கே வேலை பார்க்க பிடிக்கலை…. அவள் பல்லை கடித்தாள்.

ஸ்வாதி முதல் முறை என் திருமண  வாழ்க்கையில் நான் தோற்று போயிட்டேன்.

அது நானா தேடின வாழ்க்கை இல்லை… பெரியவங்க செய்த தவறு.

இப்போ உன் விஷயத்தில் நான் தெளிவா முடிவு எடுத்துட்டேன். நீ தான் என் மனைவி.

நீ என்னை விட்டு இனி எங்கேயும் போக முடியாது…. உன்னை நிழலா தொடர்வேன்.

ஸார்… இதெல்லாம் சரியா வராது…. அவன் ஆசையில் தீ வைக்க முயன்றாள்.

ஏன்டி சரி வராது…? சொல்லு… அவள் தோள்கள் இரண்டையும் பற்றி குலுக்கினான்.

ஏன்னா எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. அவள் ஆணித்தரமாக கூறினாள்.

எனக்கும் தான் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. ரெண்டு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துட்டே இந்த ஜென்மம் முழுக்க வாழ நான் ரெடி… உன் அருகாமையும், அன்பும் எனக்கு போதும்.

ஸார்… கொஞ்சம் மெச்சூர்டா திங்க் பண்ணுங்க…! உங்களுக்கு என்ன தலை எழுத்து…?

உனக்கு மட்டும் என்னடி தலை எழுத்து…? காலம் முழுக்க கண்ணீரில் கரைய…

நீயும் சரி நானும் சரி தெரிந்து எந்த தவறும் செய்யலை.

சொன்னா புரிஞ்சிக்கோ ஸ்வாதி. கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.

ஸார் உங்களுக்கு நான் பொருத்தம் இல்லை. ப்ளீஸ் இந்த பேச்சை இதோட விட்டுடலாமே…? அவள் கெஞ்சினாள்.

நோ ஸ்வாதி…. எல்லா ஆரம்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு…. அவன் உறுதிபட கூறினான்.

——-தொடரும் ——

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!