Skip to content
Post Views: 2,527
“மேம் நீங்க ஐதராபாத் வந்தாலும் சரி, இல்லனாலும் சரி, உங்களுக்கு கண்டிப்பா பண்ணியாகனுமுன்னு சொல்லிட்டாரு”..
“ஏன் அப்படி?”..
Advertisement
“மேம் எங்க சாரு உங்கள.ஒரு பொண்ணு இலவசமா டான்ஸ் சொல்லி தர்றது, இந்த காலத்துல அது ரொம்ப பெரிய விசயம், இந்த ஒரு காரணம் போது, எத்தனை கோடி வேணாலும் அந்த பொண்ணுக்கு பணம் குடுக்கலாமுன்னு, அப்புறம்,,, நீங்க அவங்க பொண்ணுக்கு பிடிச்ச டான்ஸ் மாஸ்ட்டராம், அதனால உதவி பண்ண சொன்னாரு மேம்”…
“டேய் இது நம்புற மாதிரியில்ல” என்றவளுக்கு பேச முடியாமல்..
Advertisement
Advertisement
“சாரி பிரதர் உங்களை டேய்யின்னு மரியாதை இல்லாம சொல்லிட்டேன்” என்றவள்.. “நான் ஐதராபாத் வர்ரேன்”..
“உங்க வீ. பி சாருக்காக,,!
Advertisement
என்னை நீங்க மெரட்டி கூட, ஐதராபாத் கூப்பிட்டு இருந்திருக்கலாம்,, பணம் கட்டியும், ஒரு வார்த்தை பணத்த பத்தி பேசல.. வெறி கிரேட் வீ. பி சார்,, உங்க வீ. பி சாருக்காக நான் டீச்சரா அங்க வர்ரேன்”,,.
“மேம் உண்மையாவா?”.
“உங்க வீ. பி சாரை….பார்க்கலாமா?” …
“இல்ல மேம் பார்க்க முடியாது, சார் வெளிநாட்டுல இருக்காரு”..
“அப்போ ஓகே, ஐதராபாத் வந்த சொல்லுங்க, சார்கிட்ட நன்றி சொல்லன்னும்”..
“ஓகே மேம் சார் வந்தா சொல்லுறேன்,, நீங்க எப்போ ஐதராபாத் வர்றீங்க”..
“ஒரு டூடெசுல வர்றேன் பிரதர்” என்று அழைப்பை துண்டித்தவள்..அப்படியே கண்மூடி சிறிது நேரம் யோசித்தவள். இங்கேயே காலம் பூரா இருந்துவிடலாம் என்று இவள் நினைத்திருக்க, இவள் நினைத்தது எல்லாம் வேற மாதிரி இப்போது நடந்து கொண்டு இருக்க, நம் கையில் எதுவும் இல்லை என்றவள்..
தாத்தா பாட்டியிடம் இவள் ஐதராபாத் செல்வதை சொன்னவுடன் சந்தோஷப்பட்டவர்கள்..
“உன் திறமைக்கு இது இடமில்லண்ணு, நாங்க ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கோம்,, நீ தான் கேட்கல பாத்தீயா, கடவுள் உனக்கு நல்ல வழி காட்டிட்டாரு, நல்ல படியா போய்ட்டு வா” என்று இரு பெரியவர்களும் அவளுக்கு வாழ்த்து சொல்ல”..
“எப்படா என்னை தொரத்தி விடாலமுன்னு காத்து இருந்தீங்களா, இரண்டு பேரும்” என்று கண்கலங்கியவளை…
“அப்படியில்லடா” என்று சமாதானம் பண்ண…
“நா … ரெண்டு வருசம் கழிச்சு மறுபடியும் இங்கே தானே வருவேன்” என்று சொன்னவள் கிளம்ப தயாராக..
“ஏன்டி இரண்டு நாள் கழிச்சு தானா ஐதராபாத் போற, இப்பவே கிளம்புற”.. என்று பாட்டி கேட்க..
“ஊம்… இப்படியே ஐதராபாத் போனேன்னு வையு, ஏதோ கிராமத்துல இருந்து ஒரு பொண்ணு வந்திருக்குன்னு, எவனும் என்னை மதிக்க மாட்டானுங்க, நான் சென்னையில் உள்ள சௌமி வீட்டுக்கு போறேன், கொஞ்சம் பாக்குற மாதிரி ஆகிட்டு போறேன்…. என்றவள்..
தாத்தா, பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு சென்னை கிளம்பினாள்..
சௌமிக்கு தன் வீட்டுக்கு தங்கை வருவதை தாங்கமுடியவில்லை அத்தனை சந்தோஷம்,, அவளுக்கு…
கம்யா அன்று பள்ளி கூடம் செல்லவில்லை, அவளின் சித்தி வருவதால் ஸ்கூலுக்கு லீவ் சொல்லியிருந்தாள்..
தங்கை வந்தவுடன் சௌமியும், கம்யாவும் வைஷுவை அணைத்துக்கொண்டு குதித்தார்கள், அவ்வளவு சந்தோசம்..
இருவரின் நலம் விசாரிப்பு முடிந்தவுடன்,, உண்டு விட்டு அவளை ஓய்வு எடுக்க சொல்ல..
வைஷு நாளை காலை ஐதராபாத் பிளைட் டிக்கேட் போட்டுட்டேன், என்று சொல்ல..
சௌமிக்கு கோபம் “ஏன்டி வந்து ஒரு இரண்டு நாள் கூட இருக்க மாட்டீயா” என்று கோபித்து கொள்ள.. “அதுக்கெல்லாம் நேரமில்லை வா”என்றவள்..
“எனக்கு நிறைய ட்ரெஸ் வாங்கனும்,, புயூட்டி பார்லர் போகனும்” என்று சொல்லிய தங்கையை அழைத்துக்கொண்டு. பார்லர் வந்திருந்தாள் சௌமி..
தங்கையை பார்லரில் விட்டவள்,, அவளுக்கு தேவையான பொருள்களையும், உடைகளையும் எடுக்க,,
ஐந்து வருடமாக எந்த ஒரு ஒப்பனையும் செய்யாமல் இருந்தவளுக்கு, அனைத்து விதமான அழகு படுத்தும் வேலை நடந்துக்கொண்டிருந்தது,, .
தங்கையை மாலுக்கு அழைத்து வந்திருந்தாள் சௌமி.. வைஷு அவளுக்கு தேவையானதை மட்டும் வாங்க.. தங்கைக்கு இவள் சார்பில் நிறைய வாங்கி தர,,
“போதும்மடி” என்றாள் சௌமியாவை பார்த்து…
“நீ மட்டும் எங்களுக்கு செய்வ, நாங்க செய்ய கூடாதா”.. என்றவளை “போய் தொல”… என்றிருந்தாள் வைஷு…
தங்கைக்கு நிறைய விலையுயர்ந்த உடைகளை எடுக்க..
“ஏன்டி இவ்வளவு காஸ்லீயா எடுங்குற”..
“ஏய் நீ போற, டான்ஸ் அகடாமி பத்தி தெரியுமா, அது எவ்வளவு பெரிய அகடாமி தெரியுமா, அங்க போறப்போ, நல்லா போக வேண்டாம்” என்றவள்… உடை அணிந்து பார்க்க சொல்லி தேர்வு செய்தனர்..
அனைத்தை வாங்கி கொண்டு வந்து சேர, இரவானது.. காலை பிளைட் என்பதால் இரவே அனைத்தையும், பேக் செய்து விட்டு தூங்கினர்..
காலை சௌமி தன் குடும்பத்தோடு, தங்கையை வழி அனுப்ப ஏர்போர்ட் வந்திருந்தாள்..
தங்கை இடம் “கொஞ்சம் கோபத்த குறச்சுக்கோ சத்தமா பேசாத”.. என்று அறிவுறை சொல்லி அனுப்பி வைத்தாள்.
வைஷுவுக்கு நான் சத்தமாக பேசுறேனா, கோபப்படுறேனா, தன் அக்கா சொல்லியதும் தான் அவளுக்கு புரிந்தது,, தாத்தாவிற்கு சரியாக காது கேட்காது, அதனால் இவள் சத்தமாக பேசி, பேசி பழகி விட்டாள்,, கோபம் அனைத்தின் மீதும் கோபம் தனக்கு மட்டும் ஏன் இப்படி என்று அவளுக்கு அவளே கேள்விகள் கேட்க,, அதுவே கோபமான முகதோற்றத்தை கொடுத்து விட்டது..
எப்பொழுதும் சிரித்த முகமாக இருந்த வைஷு விடம் எத்தனை பேர், “அது எப்படி டீ, உன் முகம் மட்டும் சிரிச்ச மாதிரியே இருக்கு” என்று கேட்டவர் இன்று காணாமல் போயிவிட்டனர்…
இனி வரும் இரண்டு வருடம் கோபத்த குறைக்க முயற்சி பண்ணனும். நல்லா டான்ஸ் மாஸ்டர் என்ற பெயரை காப்பாத்தனும் இறைவா என்று அவளின் இஸ்ட தெய்வம் சிவனை மனதார வணங்கி கொண்டு. ஐதராபாத்தில் வந்து இறங்கினாள்…
பிரகாஷ் அனுப்பிய அட்ரஸ்சை கூகுல் மேப்பில் போட்டு பார்க்க.. அது ஏர்போர்ட் பக்கத்தில் தான் என்று தெரிந்து கொண்டவள்.. ஒரு ஆட்டோ இல்லை கார் பிடித்து சென்று விடலாம், என்று யோசித்தவள்.. அவள் தங்குவதற்காக பக்கத்தில் லேடிஸ் ஆஸ்ட்டலை பார்க்க, அதுவும் பக்கத்திலே இருக்க,, அப்பாடா எல்லாமே பக்கத்துலே இருக்கு என்று ஏர்போர்ட்டை விட்டு வெளியே வர,,.
“மேம்” என்று பிரகாஷின் குரல் கேட்டு திரும்பி பார்க்க..
வாய் நிறைய புன்னகையோடு, கையில் ஒரு சிறிய பூங்கொத்தோடு நின்றவனை பார்த்ததும் சிரித்தவளை..
“வெல்கம் டூ ஐதராபாத் மேம்” என்று அவளிடம் பூங்கொத்தை நீட்ட.
“தாங்யூ பிரதர்” என்று அவன் கொடுத்த பூங்கொத்தை வாங்கி கொண்டாள்..
“தாங்யூ ப்பார் எவ்றிதிங்” என்று மனதார சொல்ல..
“மேம் நானும் உங்கல மாதிரி ஒரு வேல செய்யுறவன் தான், எல்லாமே எங்க வீ. பி சார் தான்”..
“ஆமா ஒன்னு கேட்ட தப்பா நினைக்க மாட்டீங்கலே”..
“சொல்லுங்க மேம்”..
“உங்க வீ. பி சார்,, என்னை எப்படி கண்டு புடிச்சாரு?”..
“உங்கள கண்டு புடிச்சது வீ. பி சாருயில்ல, அவங்க பொண்ணு யாழினி”…
“யாரு யாழினி?”..
“அவங்க வீ. பி சார்ரோட பொண்ணு யாழினி,,, உங்களை சாரி,,, கம்யாவுக்கு நீங்க டான்ஸ் சொல்லிக்கொடுத்து வின் பண்ண வச்சீங்களே, ஜுனியர் சாம்பியன் சோவில்”…
“ஆமாம்”‘..
“அந்த சோவில் யாழினி தான் இரண்டாவது பரிசு வாங்கியது,,. அவ தான் உங்க கிட்ட டான்ஸ் கத்துக்க ஆச படுற… அது நாளா தான் எங்க வீ. பி சார் உங்களை இங்கேயே கூட்டிட்டு வர, ஏற்பாடு பண்ணுனது”… என்னு பிரகாஷ் கூற..
“ஓ… அப்படியா, அந்த யாழினியை நான் பார்க்கலாமா”?..
“எவ்றி சாடர்டே, சன்டே யாழினி டான்ஸ் கிளாஸ் வருவா, நீங்க தான் அவங்களுக்கு டான்ஸ் சொல்லி தரனும்”…
“ஓகே” என்றவளை… அழைத்துக்கொண்டு கார்பார்க்கிங் வந்தவன்,, அவளை காரில் உங்கார சொல்லி விட்டு, “மேம் ஒரு 5 மினிட்ஸ் மேம் ஒரு கால் பண்ணிட்டு வந்துருவேன்”.. என்று அவளிடம் சொல்லி விட்டு ஏர்போர்ட் நோக்கி சென்றான்…
ஏர்போர்டினுள்ளே பயணிகள் காத்திருப்பு இருக்கையில் முகமலர்ச்சியாக அமர்ந்திருந்தான் வீ. பி…
பிரகாஷ் விஜயேந்திரன் அருகில் வந்து “சார் மேமை பார்த்தீங்களா?”..
“ஊம் பார்த்தேன், அவளை பார்த்து பத்து வருசம் ஆச்சு,, நீ என்ன பண்ணுற, அவளை நம்ம அகாடமியில உள்ள டீச்சர் ஹோமுல தங்க வை.. ஒரு வாரம் அவளை டான்ஸ் அகடாமியை கவனிக்க சொல்லு,, அவளை ஒன்லி டான்ஸ் காம்பிடேஷனுக்கும் மட்டும் டான்ஸ் சொல்லிக்கொடுக்க சொல்லு, அப்புறம் யாழினிக்கு மட்டும் அவ சொல்லி கொடுத்த மட்டும் போதும். அகாடமியில உள்ளவங்க கிட்ட நம்மலுக்கு வேண்டியவங்கன்னு மட்டும் சொல்லு,, நான் ஒரு ஒன் வீக் ஆர் டென் டேசுல இங்குலாண்டு போயிட்டு வந்துருவேன்,, வைஷு சாக்கிரதையா பார்த்துக்கோ மேன்”… என்று அவனின் தோளில் தட்டிவிட்டு,, அவனின் விமானம் அழைப்பை கேட்டு பிளைட் ஏற சென்றான் வீ. பி..
மனதில் அவளை முதலில் கண்ட நாள் கண்முன் வர…
இன்று அவளை பார்க்க ஆசையோடு ஏர்போர்ட் வந்திருந்தான்.. வெள்ளை டாப்பும், ப்ளு சீன்சில் வந்தவளை கண்யிமைக்காமல் பார்த்திருந்தான்.. அவளின் சிரித்த முகம் காணாமல் போயிருந்தது,, அந்த துறு, துறு கண்கள்,, இன்று அமைதியாக போனை பார்த்தவாறே வெளியில் வந்தவளை பார்த்திருந்தான் விஜயேந்திரன்.. அவன் வாங்கி வந்த பூங்கொத்தை பிரகாஷிடம் தந்து அவளை வெல்கம் பண்ண சொல்லி விட்டு தூரத்தில் இருந்து அவளை பார்த்தான்…
அளவாக சிரிக்கும் உதடு, உயிரே இல்லாத கண்கள்,, அவனை கவலை படுத்தின..
மீண்டும் அவளின் முகத்தில் பழய சிரிப்பையும், துறு, துறு வென நடனமாடும் அவளின் விழிகளை திரும்ப கொண்டு வர வேண்டும் என்று நினைத்துக்கொண்டே விமானம் ஏறினான்…
பிரகாஷ் வைஷுவை ஐ. டி. டி டான்ஸ் அகாடமிக்கு அழைத்து வந்திருந்தான்.. வைஷு இவ்வளவு பெரிய டான்ஸ் அகாடமியா என்றே பார்த்திருந்தாள்.. அவளுக்கு இந்த அகாடமியை பத்தி ஓர் அளவுக்கு முன்பே தெரியும்,, ஆனால் நேரில் பார்த்து வியந்து இருந்தாள்..
பிரகாஷ் அவள் கூடவே இருந்து வைஷுவை பற்றி சொல்லி, இந்த அகாடமியில் டான்ஸ் டீச்சராக அவளை சேர்த்து விட்டு, அனைவரிடம் அறிமுகம் படுத்தினாள், பின்பு யாழினிக்கு வார இறுதி நாளில் கிளாஸ் எடுப்பார் என்று சொல்லிவிட்டு வெளியில் அழைத்து வர..
“நன்றி பிரகாஷ் ப்ரோ” என்றவளை..
“மேம்” என்றவன் சிரித்துவிட்டு..
“ஆல்தா பெஸ்ட் மேம்”. என்று
கைகுலுக்கியவன்,, அங்கே பணியில் உள்ள ஒருவனை அழைத்து ” மேம் இங்க டான்ஸ் டீச்சரா வேலைக்கு சேர்ந்திருக்காங்க ,மேம்முக்கு டீச்சர் ஹோம் இருக்கல அங்கே தனி ஒரு ரூம்புல தங்க வை, கேன்டின், எல்லாத்தையும் சுத்தி காட்டு, வேற என்ன வேணுமுன்னாலும் பண்ணி கூடு, வீ. பி சாருக்கு தெரிஞ்சவங்க”, என்று கூறியவன்.
வைஷுவை பார்த்து “வர்றேன் மேம், பார்த்துக்கோங்க, எதாவது தேவையின்னா கால் பண்ணுங்க”.. என்று கூறி பிரகாஷ் சென்று விட…
இந்த அகடாமியில் ஆல் இன் ஆல் லாக இருக்கும் குவாடினேட்டர் சொர்ணமுகியை அறிமுகம் படுத்தாமல் சென்று விட்டான் பிரகாஷ்..
சொர்ணமுகியின் எதிர்ப்பை எப்படி எதிர் கொள்ள போறாளோ வைஷு பார்க்கலாம்….
error: Content is protected !!