Skip to content
Post Views: 7,014
அத்தியாயம் 13
ரூபலஷ்மி இதை எதிர்பார்க்கவேயில்லை. அவளைப் போய் எப்படி திருமணம் செய்தான்? தன் மீதுள்ள கோபத்தில் இப்படி முட்டாள்தனம் செய்துவிட்டானே என்று மனதோடு குமைந்தார்.
திருனேஷ்வரன்தான் குற்றவாளி என நினைத்து ஊரார் அனைவரும் சேர்ந்து பொன்மணியை மணக்க வற்புறுத்தியிருப்பார்களோ? அவனின் ஊர் சிறு கிராமம்தானே? தற்போதும் பஞ்சாயத்திற்கு கட்டுப்படும் நிலை அங்கிருக்குமோ? என நினைத்தவாறு திருனேஷ்வரன் அனுப்பி வைத்த படத்தை மீண்டும் பார்த்தார்.
Advertisement
அதில் திருனேஷ்வரன் முகத்திலிருந்த மகிழ்வு… வற்புறுத்திய திருமணம் போல் இல்லையே… பொன்மணியின் முகம்தான் வேதனையோடிருக்கிறது.
என்னதான் நடந்திருக்கும்? எதற்காக இந்த அவசர திருமணம்? இரு குடும்பத்தாரும் எப்படி இதற்கு சம்மதித்தார்கள்? என்று பலவாறு சிந்தித்தார்.
தற்போது திருனேஷ்வரனை சென்று பார்க்க முடியாத சூழ்நிலையை வெறுத்தவராய், வெகுவாக சிரமப்பட்டு தனது பணியில் கவனம் செலுத்தினார்.
Advertisement
இன்று பார்த்து பணி முடியவே இரவு பதினொரு மணியாகியிருந்த்து. ஆனாலும் இன்று திருனேஷ்வரனை பார்த்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு அவனின் வீட்டிற்கு செல்ல டிரைவருக்கு பணித்து வாகனத்தில் அமர்ந்தார்.
Advertisement
அரைமணி நேர பயணத்திற்கு பிறகு ராஜதுரையிடமிருந்து அழைப்பு வர, ஏற்கவில்லை ரூபலஷ்மி. விடாமல் அழைத்துக்கொண்டேயிருக்க, அந்த எரிச்சலில் பத்து நிமிடமாக வேன் எங்கே செல்கிறது என்பதை கவனிக்க தவறியிருந்தார்.
பிறகுதான் சாலையை பார்த்தவர், “உங்களை எங்க போக சொன்னேன்? எந்த பக்கம் போய்ட்டிருக்கிங்க?” என்று டிரைவரை கடுகடுக்க, “சாரி மேடம், சார் நேரா வீட்டுக்கு வர சொல்றார்” என்றார் டிரைவர்.
இவரை… என ராஜதுரையை மனதில் கடுகடுத்து, “நீங்க எனக்கு டிரைவரா? இல்ல சாருக்கா? ஒழுங்கா திருனேஷ் வீட்டுக்கு போ” என்றார் கட்டளையாக.
Advertisement
“என்னை மன்னிச்சிடுங்க மேடம்” என்ற டிரைவர் ரூபலஷ்மியின் வீட்டை நோக்கித்தான் பயணித்தார்.
“ஓ… அந்தளவுக்கு ஆச்சா?” என மிரட்ட,
“வேலை போனா பரவால்ல மேடம், உயிர் போய்டுச்சினா?” என்றார் பயத்தோடு.
“ஷிட்” என்று கடுப்போடு சொல்லி, “வண்டியை நிறுத்து, நீ கூட்டிட்டு போனாதானே உன்னை திட்டுவார், நானே போய்க்கிறேன், சார் கூப்பிட்டா எனக்கு இன்னும் வேலை முடியலனு சொல்லிடு” என்றார்.
“அது முடியாதுங்க மேடம், இன்ஸ்பெக்ட்டர் கால் பண்ணி இன்ஃபர்மேஷன் கொடுத்துட்டார், வேன் வீட்டுக்கு போன பின்னாடிதான் நிற்கும்” என்றவர் அதன்பின்னே ரூபலஷ்மியின் கோபத்திற்கு பதிலளிக்காமல் வீடு வந்து சேர்ந்தார்.
அத்தனை கோபத்தோடு ரூபலஷ்மி வீட்டிற்கு வர, யுகன் யுகதி இருவருமே விழித்திருந்தனர். “பட்டூஸ்… ஏன்டா இன்னும் தூங்கல?” என பதறியவர், “சந்திரா” என கத்தினார் கோபத்தோடு.
“சமையல் முடிஞ்சதும் சந்திராவை வீட்டுக்கு அனுப்பிட்டேன்”
“எதுக்கு இப்படி சீன் பண்ணிட்டிருக்கிங்க? அத்தனை முறை போன் செய்யிறிங்க, டியூட்டி டைம்ல இப்படித்தான் பண்ணுவிங்களா?” என காய்ந்தார் கணவனிடம்.
“முதல்ல போய் ரெஃப்ரஸ் ஆகு, அப்புறம் பேசலாம்” என்றார் கோபமில்லாமல்.
குழந்தைகள் விழித்திருப்பதால் வேறு வழியில்லாமல், “ஹும்” என்ற கோபத்தோடு காலனிகளை திசைக்கு ஒன்றாக கழற்றி வீசிவிட்டு குளிக்கப்போனார்.
“அம்மா பார்த்துட்டிங்கள்ல? ரொம்ப டையர்டா வந்துருக்காங்க, வாங்க தூங்கலாம், நாளைக்கு ஸ்கூல் போகனும்ல?” என்று குழந்தைகளை அழைத்துச் சென்றவர், அவர்கள் தூங்கும்வரை அங்கேயே இருந்து, பின்னே வெளியே வர, அப்பொழுதும் ரூபலஷ்மி குளியலறையிலிருந்து வெளியே வரவில்லை.
அலுவலக வேலை முடிந்ததும் எட்டு மணிபோல் திருனேஷ்வரன் ராஜதுரைக்கு அழைத்திருந்தான்.
“ஆபீஸ்ல நியுகம்ர்க்கு கைட் பண்ணிட்டிருந்தேன் சார், அதான் மதியம் பேச முடியல” என்றவன், “மேடம் பக்கத்துல இருக்காங்களா?” என்றான்.
“இல்ல, அவ வர லேட் ஆகும், நீ வீட்டுக்கு வா, சில விசயங்களை போன்ல பேச எனக்கு பிடிக்கல” என்றார்.
எட்டரை மணிபோல் வீட்டிற்கு வந்திருந்தான் திருனேஷ்வரன். யுகன் யுகதிக்கு பரிமாறி, “சாப்பிட்டிருங்க, அப்பா பேசிட்டு வரேன்” என்று மாடிக்கு அழைத்துச் சென்றார் ராஜதுரை.
“ரூபா உன்னைத்தான் விரும்பறா. உனக்கும் அது தெரியும்னு எனக்கு புரிஞ்சிடுச்சு, இத்தனை இளம் வயசுல ஒரு பொண்ணு இறங்கி வந்தும் அவாய்ட் பண்ணியிருக்க. ரியலி யு ஆர் எ ஜென்ட்டில்மேன்”
“இறங்கிலாம் வரல சார்… நீங்க மேடமை தப்பா நினைக்காதிங்க”
“அவ கால்ஸ், மெஸேஜ், பசங்ககிட்ட உன்னைப் பத்தி சொல்லி வச்சிருக்க விதம் எல்லாம் செக் பண்ணித்தான் அவளை கண்டுபிடிச்சேன், நீ பூசி மொழுக தேவையில்லை” என்றவர், “எனக்கொரு ஹெல்ப் பண்றியா? பண்றியா இல்ல… பண்ணு” என்றார் உரிமையாக.
“மேடம்கிட்ட பேசக் கூடாது, அவங்க கண்ல படக்கூடாது. இதான நீங்க கேக்குற ஹெல்ப்?”
ராஜதுரை ஆமாம் என்பதாய் தலையசைக்க, “என்னால அது முடியாதுங்க சார். இதை செய்யனும்னா எப்போவே செய்திருப்பேனே” என மறுத்தான்.
ராஜதுரை முகம் இறுகவே, “உங்ககிட்ட கிடைக்காததைதான் என்கிட்ட தேடுறாங்க. நீங்க சரியாகிட்டா மேடம் சரியாகிடுவாங்க.
இதைவிட்டுட்டு நீங்க சொன்னமாதிரி மேடம் பார்வையிலயிருந்து நான் தலைமறைவானா என்னை தேடி பிடிக்கிற ஆர்வத்துல என் நினைப்பு இன்னும்தான் அதிகமாகும், அதோட நான் எங்க போனாலும் என்னை கண்டுபிடிக்கிறது மேடம்க்கு பெரிய விசயமுமில்ல” என்றான்.
திருனேஷ்வரன் சொல்வது உண்மையென்ற போதும் தன்னை விடுத்து மனைவி இன்னொருவனை நேசிப்பதையே தாங்கிக்கொள்ள முடியாத போது, நேசிக்கப்படுபவன் மனைவியின் கண் பார்வையிலேயே இருந்தால் அது கணவனுக்கு எத்தனை கொடுமையாக இருக்கும்? தன்னிலை உணராமல் பேசுகிறானே என்று ராஜதுரைக்கு கோபம்தான் வந்தது.
சிறையில் ரூபலஷ்மி தனக்கு செய்த உதவிகளை சொல்லி, “அவங்க நல்லா இருக்கனும், சந்தோசமா வாழனும்னு நினைக்கிறேன் சார்.
உடல் தேவை… எல்லா ஜீவன்களுக்கும் இயற்கையா வர உணர்வு அது. கட்டின புருசன்தான அதை பூர்த்தி பண்ணனும்? நீங்க தவறிட்டிங்க, அவங்க என்னை தேட ஆரம்பிச்சிட்டாங்க”
“அப்போ இது சரின்றியா?”
“கண்டிப்பா தப்புதான் சார். ஆனா அதை நீங்க ஹேண்டில் பண்ற விதம் அதைவிட தப்புனு சொல்றேன். ஆம்பிளைக்கு தேவைப்பட்டா எப்போன்னாலும் தயங்காம பொண்டாட்டிகிட்ட போறிங்க. இதே பொண்டாட்டி தேடி வந்தா கேவலமா பார்க்குறது.
என்னை இவ்வளோ தேடுறவங்க… நிச்சயம் உங்களை ரொம்ப தேடியிருப்பாங்க, அவங்களை உங்களுக்கு உணர்த்தியிருப்பாங்க. எல்லாம் தெரிஞ்சும் நீங்க அவாய்ட் பண்ணியிருக்கிங்க.
ஒருநாள் இரண்டுநாள் இல்ல… வருசக் கணக்கா அவாய்ட் பண்ணியிருக்கிங்க. அவங்க தேவைக்கு என்ன பண்ணுவாங்க? மேடம் என்னை தேடி வர முழுக் காரணம் நீங்கதான்”
“ஆர்மில வேலை செய்யிறவன் பொண்டாட்டிலாம் இப்படித்தான் இருக்காங்களா? செக்ஸ் மட்டும்தான் வாழ்க்கையா?”
“ஆர்மி மேன் வொஃய்ப் எல்லாரும் போற்றப்பட வேண்டியவங்க. அதை நீங்க மேடமோட கம்ப்பேர் பண்ணவே கூடாது. ஆர்மிமேன் கல்யாணம் ஆன புதுசுலயே பொண்டாட்டியை பிரிஞ்சு மாசம், இல்ல வருசக்கணக்குல கூட இருப்பாங்க. இப்படித்தான் வாழ்க்கைனு தெரிஞ்சேதான் கல்யாணம் செய்துக்குறாங்க.
கல்யாணம் ஆன புதுசுல நீங்க அப்படி இருந்திங்களா?”
ராஜதுரை முறைக்கவே, “இல்லதான? நம்ம புருசன் இப்படினு ஒரு மைண்ட் செட் அவங்களுக்கு இருக்கும்தான? அதை மொத்தமா உடைச்செறிஞ்சா எப்படி தாங்குவாங்க?
அப்புறம் என்ன சொன்னிங்க? செக்ஸ் மட்டும்தான் வாழ்க்கையானு… செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லதான். ஆனா அது தேவைப்படும்போது கிடைக்காதது கொடுமையில்லையா?
மாசக் கணக்குல வெளில இருந்தாலும் உங்களுக்கு தேவைப்படும்போது வீட்டுக்கு வரிங்கதான? அதே போல பொண்டாட்டிக்காகவும் வரனும்னு நினைக்கனும் இல்லையா?”
“மேடத்தோட அம்மாகிட்ட அவங்க சைல்ட்ஹூட், உங்க கல்யாணம் நடந்தவிதம் எல்லாமும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். கண்ணிறைஞ்ச புருசன், குழந்தைகள் மட்டுமே உலகம்னு வாழ நினைச்சவங்களை உசுப்பேத்தி விட்டு குரூப் எக்ஸாம் எழுத வச்சு வேலைக்கு போக வச்சிருக்கிங்க. பாராட்ட வேண்டிய விசயம்தான்.
ஆனா சம்பந்தப்பட்டவங்களுக்கு அதுல நிம்மதியும் சந்தோசமும் கிடைச்சதான்றதுதான கேள்வி. வெறும் உடல் தேவைக்காக மட்டும்னா எத்தனையோ ஆம்பிளைங்க இருக்காங்க. என்னைத் தேடி வர வேண்டிய அவசிமில்ல.
எனக்கு தெரிஞ்சே டிபார்ட்மண்ட்ல எத்தனை பேர் மேடமை பார்க்குறாங்க”
“எவன்டா?” என ராஜதுரை எகிற, “அதெல்லாம் மேடம்க்கும் தெரியும். உங்ககிட்ட சொல்ற அளவுக்கு அவங்களுக்கு நீங்க டைமும் கொடுக்கல, வாய்ப்பும் கொடுக்கல.
அவங்க ஒர்க் டென்ஷன் எப்படினு நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்ல. எத்தனையோ பிரச்சனைகளை சந்திச்சிட்டு வீட்டுக்கு வரும்போது அதை ஷேர் பண்ண ஒருத்தர் வேணும்.
எதாவது சாதிச்சிட்டு வந்தா பாராட்ட ஒருத்தர் வேணும். அந்த ஒருத்தர் பிடிச்சவங்களா இருக்கனும். இப்படி எதாவது செய்திருக்கிங்களா?” என்றான்.
உண்மையில் ரூபலஷ்மி இப்படி எதிர்பார்ப்பவர்தான். அது ராஜதுரைக்கும் தெரியும். மனதிற்குள் பெருமையாக நினைத்தபோதும் ‘இதென்ன சிறுபிள்ளைத்தனமாக பாராட்டுக்கு ஆசைப்படுற?’ என்று அதட்டுவாரே அன்றி ஒரு நாளும் வெளிப்படையாக பாராட்டியதில்லை.
ராஜதுரை யோசிப்பது புரிய நிம்மதியானது திருனேஷ்வரனுக்கு.
“மேடம் ரொம்ப ரொம்ப நல்லவங்க. மரியாதைக்கு உரியவங்க. திறமையான அதிகாரி. யாருக்கும் பயப்படாதவங்க. என்மேல ஆசைப்பட்டாங்கன்ற ஒரே காரணத்துக்காக அவங்களை இழிவா பார்க்காதிங்க.
கொஞ்சம் வருசம் கழிச்சு உங்க பையனோ, பொண்ணோ தவறான வழியில போனா புத்தி சொல்லி சரி பண்ணுவிங்கதான? அதை பொண்டாட்டிக்கு பண்ணினா என்ன?
நாட்டுல எத்தனையோ பொண்ணுங்க வப்பாட்டி வச்சிருக்க ஆம்பிளையை சகிச்சிட்டு குழந்தைகளுக்காக குடும்பம் நடத்துறாங்க.
அதையே ஒரு பொண்ணு செய்தா நடத்தை கெட்டவனு முத்திரை குத்தி அசிங்கப்படுத்துறது. மேடமை இந்த சூழலுக்கு தள்ளினதே நீங்கதான். அதை சரி பண்ணப்பாருங்க” என்றான் கட்டளைபோல.
தன் வீட்டிற்கு வந்து தனக்கே கட்டளையிடும் திருனேஷ்வரனை பார்த்தவர் “நீ எப்படிடா இப்படி இருக்க?” என்றார் பெரும் வியப்பாக.
“எப்படி சார்?”
“பொண்ணுங்க விசயத்துல எத்தனையோ கேஸ் பார்த்திருக்கேன். ஒன்னு வெட்டிக்கிட்டு சாகுவானுங்க, இல்ல சூசைட் பண்ணிப்பானுங்க.
சித்தியோட உறவு, அண்ணியோட உறவுனு ஒரு சில விசயங்கள்லாம் கேட்கவே சகிக்காது. கள்ளகாதல் விசயத்துல எவனாவது சிக்கினான்னா பொளந்து எடுத்துடுவேன். ஆனா நீ… ரூபாவை சரி பண்ணப் பார்க்குற” என்றார் அதிசயமாக.
“எனக்கு மேடமை ரொம்ப பிடிக்கும் சார். என் அம்மா உள்பட ஊரே என்னை தப்பா பார்த்தப்போ மேடம் மட்டும்தான் நான் அப்படி செய்திருக்கமாட்டேன்னு நம்பினாங்க.
என் லைஃப்ல முக்கியமானவங்க சில பேர்தான். அதுல மேடம் இருக்காங்க. அவங்களோட லைஃப்லாங் ஹெல்தியான ரிலேசன்ஸிப் வச்சிக்க நினைக்கிறேன். அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழனும்னு மனசு தவிக்குது, பார்த்துக்கோங்க சார்.
இது ரொம்ப சென்ஸிட்டிவான விசயம். சாஃப்டா ஹேண்டில் பண்ணுங்க, வரம்பை மீறுன வார்த்தையை விட்டு அவங்களை அசிங்கமா நினைக்க வச்சிடாதிங்க” என்று நிறைந்த அக்கறையோடு அறிவுருத்தி கிளம்பியிருந்தான்.
திருனேஷ்வரன் பேசிய பின்னே ராஜதுரையிடம் தெளிவு வந்திருந்தது. அதனாலேயே ரூபலஷ்மியின் கோபத்தை பெரிது படுத்தாமல் அவளின் வருகையை எதிர்பார்த்து குளியலறை பக்கம் பார்த்திருந்தார்.
error: Content is protected !!