Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பிரியமே பிரிவேது

பிரியமே பிரிவேது! 6

அத்தியாயம் 6

மித வேகம் தான் என்றாலும் காரை வீட்டின் முன் திருப்பிய ரகுவின் கண்கள்  எப்பொழுதும் போல ஆராத்யாவை தேடி அவள் வீட்டு மாடிக்கு செல்ல, ஆராத்யாவும் காரை கவனிக்காமல் ஸ்ருதியுடன் அலைபேசியில் பேசியபடி முன்னே பார்க்காமல் நகர்ந்திருக்க, வெகு சிறு இடைவெளி தான் காருக்கும் ஆராத்யாவிற்கும்.



Advertisement

“ஸ்ஸ்ஸ்! சாரி சாரி!” என்றபடி தனக்கு முன் வந்து நின்ற காரை விட்டு சில அடிகள் நகர்ந்து வந்தாள் ஆராத்யா.

“அய்யோ போச்சு! சும்மாவே கத்துவான்!” என்று வாய் திறந்து கூறியபடியே அகிலன் முன் இருந்து கதவை திறக்க முயல, ரகுவின் இன்பமாய் அதிர்ந்த முகத்தை அவன் கவனிக்கவே இல்லை.

Advertisement

Advertisement

“பரவால்ல விடு!” என்ற ரகுவின் வார்த்தையோடு,

“எதுவும் சொல்லாத டா.. நிறைஞ்ச நல்ல சகுனம்.. தர்ஷிய கூட்டிட்டு வர்றோம்.. எதிர்ல குழந்தையோட அந்த பொண்ணு வந்திருக்கு.. இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு!” என்றார் மகேஸ்வரி.

Advertisement

“ம்மா இறங்குங்க! இறங்குங்க!” தர்ஷி அவசரப்படுத்த,

“ஹே! உள்ள போய் இறங்கிக்கலாம்.. வெயிட் பண்ணு!” என்றான் அகிலன்.

“அய்யோ! இங்கேயே இறங்கலாம்.. ஆரத்தி சுத்தணும்ல எப்படினாலும்!” என்று அவசரம் காண்பித்த தர்ஷி இப்பொழுதே ஆராத்யாவிடம் பேசும் அவசரத்தில் இருக்க,

“தர்ஷி!” என்று அதட்டலுடன் அழைத்தான் ரகு.

“ஹான்! அப்படி கூப்பிட்டா! பயந்துடுவோமா? நான் இறங்கணும்.. ம்மா சொல்லுங்க!” என்று அடம் செய்ய,

“சரி இறங்குங்க!” என்ற மகேஸ்வரி,

“அதுவும் சரி தான்.. கல்பனா! நீ போய் ஆரத்தி கரைச்சு கொண்டு வா டா!” என்று சொல்லவும்,

“சரிங்க த்த!” என்று சொல்லி அவள் இறங்கி நடந்து செல்ல, அனைவரும் இறங்கவும் அங்கேயே காரை நிறுத்தவிட்டு தானுமாய் இறங்கி வந்தான் ரகு.

‘இப்பொழுது வேண்டாம் பேசாதே!’ என்று எச்சரிப்பதை போல தர்ஷினியை அவன் பார்க்க தர்ஷினி கண்டு கொண்டாள் இல்லை.

ஆராத்யா காரை விட்டு விலகி நின்று சில நிமிடங்கள் பிறகு தான் கதவை திறந்து அனைவருமாய் இறங்கி இருக்க, மற்றவர்களை விட்டு தெரிந்தவன் என்ற முறையில் ரகுவைப் பார்த்து, “சாரி!” என்று வாயசைத்தாள் ஆராத்யா.

எதிர்பார்க்காதவன் சிறு திடுக்கிடலுடன் தலையை ஒரு ஒருமுறை ஆட்டி வைக்க, தர்ஷினி அருகே அவன் செல்லும் முன் தர்ஷினி ஆராத்யா அருகே சென்றுவிட்டாள் “ஹாய்!” என்ற சொல்லோடு.

“ஹாய்!” என்று ஆராத்யாவும் சிரிக்க, மகேஸ்வரியும் மகள் அருகே வந்து நின்று புன்னகைத்தார் ஆராவைப் பார்த்து.

“சாரி! நான் கவனிக்கல.. பிரண்ட்கிட்ட பேசிட்டே வந்தேன்!” ஆராத்யா தர்ஷினியிடம் கூற,

“அதெல்லாம் ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல.. இங்க வண்டி ஓட்டினவன் கண்ணும் சரி இல்ல..” என்றாள் தம்பியைப் பார்த்து.

“எத்தனையாவது மாசம்?” ஆராத்யா வயிற்றைப் பார்த்து கேட்க,

“ஏழு முடிய போகுது..” என்று பேச்சு தொடர,

“ஓஹ்!” என்றாள் ஆராத்யா.

“என்னை தெரியுமா உங்களுக்கு?” தர்ஷினி கேட்கவும்

“ம்ம் பார்த்திருக்கேன்.. தீபாவளிக்கு நீங்க எல்லாரும் ஒன்னா வெளில நின்னு பட்டாசு வெடிச்சுட்டு இருந்திங்களே! அப்ப பார்த்தேன்!” என்றாள் ஆராத்யா.

மொத்த குடும்பமும் சந்தோசமாய் நின்று பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த நேரம் தற்சயலாய் மேலிருந்து ஆராத்யா அதைப் பார்த்திருந்தாள்.

ஸ்ருதி கணவன் வந்திருந்ததால் குடும்பமாய் அவர்கள் வெளியே சென்றிருக்க, ஆராத்யாவிற்கு அன்றைய தீபாவளி இவர்களைப் பார்த்து புன்னகையுடன் நின்றபடி தான் கழிந்தது.

“பக்கத்து வீடுன்னு பேர் தான்.. இப்பலாம் யாரும் யாரோடவும் பேசிக்க கூட இல்லை!” மகேஸ்வரி கூற,

“நான் இங்க வந்து ரெண்டு வருஷம் தான் ஆச்சு ம்மா.. உங்களை எல்லாம் வெளில அவ்வளவா பார்க்க முடியாதே! நானும் ஆபீஸ் வீடுன்னு போய்டும்.  என்னோட பிரண்ட்டும் ஜாப் போய்டுவா.. இவன் வீட்டுல இருந்தா இவனோடவே எங்களுக்கு நேரம் போய்டும்!”

குடும்பமாய் அவர்கள் வெளியே நிற்க, அதுவும் வளைகாப்பு முடிந்து அதே புடவையோடு தர்ஷினி வந்திருக்க, என்னவோ அவர்களிடம் பேச சொல்லியது மனது ஆராத்யாவிற்கு.

குடும்பமாய் இருப்பதெல்லாம் தனக்கு கனவு தான்.. அப்படி இருப்பவர்களிடமாவது பேசிக் கொள் என்று நினைத்து விட்டதோ மனம்.

“நீங்க ரொம்ப க்யூட்டா பேசுறீங்க.. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு!” தர்ஷினி ஆராத்யாவிடம் இப்படி சொல்லிக் கொண்டு இருக்க, சற்று தள்ளி நின்ற ரகுவிற்கு பல்ஸ் எகிறிக் கொண்டு இருந்தது.

“நீங்களும் ஜப்பியா அழகா இருக்கீங்க!” என ஆராத்யாவும் சொல்ல,

“குண்டா இருக்கேன்னு சொல்றிங்க.. சரி பரவால்ல.. எனக்கு இங்க போர் அடிக்கும் போது கம்பெனி குடுக்க முடியுமா?” தர்ஷினி கேட்க,

“ம்ம் குடுக்கலாமே! எங்க பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட் அவரு ஓகே சொன்னா குடுக்கலாம்!” என்ற ஆராத்யா ரகு பக்கம் புன்னகைத்து திரும்பி இருக்க, அவர்கள் பேச்சை கேட்டு சற்று தள்ளி நின்ற ரகுவிற்கும் இதயம் பலமாய் தான் துடித்தது.

ஆராத்யா அவ்வளவு சகஜமாய் சொல்லி இருக்க நிச்சயம் இது அவளே எதிர்பார்க்காதது..

தர்ஷினியின் துள்ளல் பேச்சில் கட்டுண்டு அவளுடன் பேசிக் கொண்டிருந்தவள் அதே துள்ளளோடு ரகு பக்கமும் திரும்பி இருக்க, ரகு ஒரு நொடி ஸ்தம்பித்து தான் நின்றான் ஆராத்யாவின் இந்த பார்வையில்.

“என்ன அங்க பாக்குற?” என்ற தர்ஷினி அப்போது தான் புரிந்தவள் போல வேண்டும் என்றே,

“ஓஹ்! நீ ரகு ஆஃபீஸ்ல ஒர்க் பண்றியா?” என ஆச்சர்யம் காட்டி கேட்க,

“ஆமா மேம்!” என்றாள் ஆராத்யாவும்.

“ரகு ஆபீஸா?” என மகேஸ்வரி, அகிலனுமே ஆச்சர்யமாய் அவனைப் பார்க்க,

“என்ன?” என்றான் ரகு அகிலனின் பார்வையில் கண்ணாடியை அணிந்து கொண்டு. கண்கள் என்னவோ அனைத்தையும் கொட்டி விடும் போல அத்தனை உணர்ச்சிகரமாய் நின்றிருக்க அதை மறைக்கவே கண்ணாடி அணிந்தான்.. அணிய வைத்திருந்தாள் ஆராத்யா.

“உன் ஆபீஸா? சொல்லவே இல்ல?” அகிலன் கேட்க,

“ஆபீஸ்ல ஒர்க் பண்றவங்க எல்லாரையும் தெரியணும்னா நீ ஆபீஸ் வரனும்!” என்றவன் சத்தம் அருகில் மட்டும் கேட்கும்படி ஆராத்யாவிற்கு கேட்டுவிடாதபடி அத்தனை மெல்லமாய் வந்தது.

“அது சரி!” என்ற அகிலன்,

“ஆரத்தி கரைக்க இவளுக்கு இவ்வளவு நேரமா?” என்று மனைவி வருகிறாளா என வீட்டினுள் பார்க்க,

“மேம் எல்லாம் வேண்டாம்! நான் தர்ஷினி!” என்று கை கொடுத்தாள்.

“நான் ஆராத்யா!” என்ற அவளும் கைக்கொடுக்க,

“இனி நாம அடிக்கடி மீட் பண்ணலாம் ஓகே!” என்ற தர்ஷினி,

“சாரி! வெளில கிளம்பின உன்னை வெயிட் பண்ண வச்சுட்டேன்!” என்று கூற,

“ஜஸ்ட் பக்கத்துல தான்.. இட்ஸ் ஓகே க்கா!” என்று ஆராத்யா கூற, சட்டென முறைத்து தர்ஷினி பக்கம் திரும்பி இருந்தான் ரகு.

“நான் குண்டா இருக்கேன்னு தானே என்னை அக்கானு கூப்பிடுற?” சமாளிக்க வேண்டிய கட்டாயம் தர்ஷினிக்கு. நிச்சயம் அவளும் எதிர்பார்க்கவில்லை அக்கா என்ற அழைப்பை.

“அச்ச்சோ! அப்படி எல்லாம் இல்ல.. நான் தான் சொன்னேனே! நீங்க குண்டு இல்ல.. ஜப்பி!” என்று கூற,

“அப்ப என்னை தர்ஷினு தான் கூப்பிடனும்.. டீல்?” என்று கேட்க,

“ஓகே தர்ஷ்! பிரண்ட்ஸ்!” என மீண்டுமாய் ஒருமுறை தர்ஷினியுடன் நட்பை வலுவாக்கிக் கொள்ள, ஆராத்யாவின் தர்ஷ் என்ற அழைப்பிற்கு பின் தான் மூச்சே வந்தது ரகுவிற்கு.

“இவ்வளவு நேரமா டி ஆரத்தி எடுத்துட்டு வர?” மகேஸ்வரி கல்பனாவிடம் கேட்க,

“நைட்டு கிளம்புற அவசரத்துல குங்குமத்தை எங்கேயோ வச்சுட்டேன் த்த! தேடி எடுத்துட்டு வர லேட் ஆகிட்டு!” என்றாள் கல்பனா.

“நானும் வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கனும்.. சாரி! வாங்களேன்!” என்று ஆராத்யா அழைக்க,

“பரவால்ல ஆரா!” என்ற தர்ஷினி, கேள்வியாய் பார்த்த கல்பனாவிற்கும் அவளை அறிமுகம் செய்துவைத்தாள்.

“ம்ம் வந்ததும் பிரண்ட் ஆயாச்சா?” என்றபடி கல்பனா ஆரத்தி சுற்றி உள்ளே அழைக்க,

“ஓகே ஆரா அப்புறமா மீட் பண்ணலாம்!” என்று கூறி விடைபெற்று வீட்டினுள் வர, குடும்பமாய் உள்ளே செல்லும் அவர்களை சில நொடி ரசித்து பார்த்து நின்றுவிட்டு அஜயுடன் தனது வண்டியை ஸ்டார்ட் செய்தாள் ஆராத்யா.

“நிறைய சொந்தம்.. இல்ல கொஞ்சமே கொஞ்சம்.. எதுவானாலும் ஓகே.. ஆனா அங்க சந்தோசத்துக்கு மட்டும் பஞ்சமே இருக்க கூடாது.. பணம்ன்ற ஒன்னு தேவைக்கு தான்.. அதை புரிஞ்சி நடந்துக்கணும்.. வாய்விட்டு சிரிக்கணும்.. மனசுவிட்டு பேசணும்.. பணத்தால இல்லாம மனசால பணக்காரனா இருக்கனும்… நான் ராணியா அங்க இருக்க வேண்டாம்.. கோழி தனக்குள்ள அடைகாத்துக்குற கோழிகுஞ்சு மாதிரி என்னை பார்த்துக்கணும்.. இதை சிம்பிளா எல்லாம் எனக்கு சொல்ல தெரியாது.. தினம்தினமும் என் வாழ்க்கைக்கு அர்த்தம் அவன் மட்டும் தான்னு தோணனும்.. அவன் கைக்குள்ள கடைசி வரை வாழ்ந்துட்டு போயிடனும்.. அவ்வளவு தான்.. நிச்சயமா அதிகமா பேசி ரசனையோடு பாக்குற ஒரு பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேனே தவிர அழகாவோ செல்வமோ இருக்குற பையனை இல்ல!”

ஒரு வார்த்தை மாறாமல் இன்றும் ஆராத்யாவின் வார்த்தைகள் காதுக்குள் ஒலிக்க, அவளை நெருங்குவது மலையளவு உள்ள கணமா என்று மனம் கணத்து போனது ரகுவிற்கு.

“என்ன ரகு பயந்துட்ட போல?” வீட்டின் உள்ளே வந்ததும் தனியாய் தர்ஷினி ரகுவிடம் கேட்க,

“நீ வேற! டென்ஷன் பண்ற தர்ஷி! வந்ததுமா?” என்றான்.

“இதுக்கெல்லாம் நல்ல நேரம் பாரு! சொல்ல வேண்டியதை மட்டும் சொலிடாத!” என்ற தர்ஷி,

“ஆனா செம்ம க்யூட் டா ஆரா.. எப்படி சொல்ல? சின்ன குழந்தையை தூக்கி வச்சு கொஞ்சனும் தோணுமே! அது மாதிரி ஆராகிட்ட பேசிட்டே இருக்கனும் தோணுது எனக்கே! நீ பாவம் தான்” என்று கூற, சிறிதாய் முளைத்த மென்னகை கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்தது ரகுவிற்கு.

“எல்லாம் ஓகே தர்ஷி! ஆனா ப்ளீஸ் இந்த மாதிரி எல்லாம் பண்ணாத! நான் தான் மாமாகிட்ட சொன்னேனே! அவ என்னை புரிஞ்சிக்கணும்.. நான் தான் அப்ரோச் பண்ணனும்!.. ப்ளீஸ் நீ கொஞ்சம் அமைதியா இரு..” என்று ரகு கூற,

“நீ உன் மாமாகிட்ட சொன்னது எனக்கு எப்படி தெரியும்?” தர்ஷினி.

“மாமா சொல்லாம தான் ஆராவை உனக்கு தெரிஞ்சுதா? செகண்ட்ஸ் டு செகண்ட்ஸ் உனக்கு தான் எல்லாம் அப்டேட் பண்ணி இருப்பாரே!” என்று ரகு  சொல்லிக் கொண்டு இருக்க, பழச்சாருடன் தர்ஷி அறைக்கு வந்தாள் கல்பனா.

“சாரி! டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” கல்பனா கேட்க,

“வாங்க அண்ணி! சும்மா தான் பேசிட்டு இருந்தோம்!” என்றாள் தர்ஷினி.

“உங்களுக்கும் ஜூஸ் எடுத்துட்டு வரவா நார்?” என்று ரகுவிடம் கல்பனா கேட்க,

“இப்ப எதுவும் வேண்டாம் அண்ணி!” என்றவன்,

“சரி ரெஸ்ட் எடு தர்ஷி! மாமாக்கு கால் பண்ணி ரீச் ஆனதை சொல்லிடு!” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!