Skip to content
Post Views: 2,215
“நானா இப்புடே கிளாஸ் முடிஞ்சது,, மேம் உங்களுக்கு தாங்யூ சொல்ல சொன்னாங்க, அதான் நானே போன் பண்ணேன் நானா, மேம் கிட்ட பேசுங்க” என்று போனை வைஷுவிடம் தர..
இருவருக்கும் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. என்ன பேச என்று நினைத்தவள் “வீ. பி சார்” என்றாள் வைஷு..
Advertisement
“பொம்மளு, நா, பொம்மா” என்றான் விஜயேந்திரன்..
“சார் நான் வைஷு” என்றாள்.
Advertisement
Advertisement
“ஓ… சாரி வைஷு நான்” என்று ஏதோ சொல்ல வர..
“ஓ யாழினியின்னு நெனச்சீங்களா?”..
Advertisement
இல்லைடி உன்னை தாண்டி கூப்பிட்டேன் என் பொம்மா, என் பொம்மளு என்று மனதில் பேசியவன்..
அவளிடம் “ஆமாம் வைஷு” என்றான் வீ. பி..
“தாங்யூ சார்” என்றவளை..
“எதற்கு” என்றான்..
“எல்லாத்துக்கும் தான் சார், நீங்க பண உதவி பண்ணதுக்கு மட்டும் சொல்லல்ல,, ஏதோ என் மனசு அழஞ்சுகிட்டே இருந்தது, இங்கேவந்தவுடன் நிறைவா இருக்கு, மன நிம்மதி” என்று கூற.
எனக்கும் தான் பொம்மா நீ இங்கே இருக்குறது என்று மனதில் நினைத்தவன்.
“உனக்கு அங்கே எல்லாம் ஓகே தானே, வைஷு?”..
“ரொம்ப புடிச்சுருக்கு சார், எல்லாம் ஓகே தான்”.
“சரி உனக்கு ஏதாவது தேவை, அவசியமின்னா என்னை கூப்பிடு”.. என்றான்..
“சரிங்க சார், நான் யாழினியிடம் போனை குடுக்கட்டுமா” என்றாள்.
“அது வைஷு,,, உன்கிட்ட” என்று ஏதோ சொல்ல வர..
இவளுக்கு ஒன்றும் புரியாமல் “என்ன சார்?” என்றவளிடம்..
“யாழினியை கொஞ்சம் பாத்துக்கோ”..”ஓகே சார் நான்பாத்துக்கிறேன், நீங்க சீக்கிரம் வாங்க” என்றவள்.
“சாப்டீங்களா சார்?”..
“இல்லை வைஷு இங்க நைட், இப்போ தான் ஒரு மீட்டிங் முடிஞ்சது, இனிமே தான்,, நீ சாப்டீயா?”..
“இப்பா தான் சார், டான்ஸ் கிளாஸ் முடிஞ்சது, இனிமேல் தான் கேன்டின் போகனும்”.. என்றவள்.. யாழியிடம் போனை தர..
“நானா, டின்னர் ஆயிந்தா?”…என்றாள் யாழினி..
“இப்புடு வெல்தானுறா பங்காரம், நீ டான்ஸ் டீச்சர பாஹா சூஸ்கோ”..
“ஓகே நானா, நான் பாத்துக்கிறேன்” என்றவள் போனை வைக்க..
வைஷு யாழினியின் இரண்டு கன்னங்களிலும் முத்தம் வைத்து. “தாங்யூ டா பேபி” என்றாள்..
“ஆண்ட்டி நான் பேபி இல்ல, பெரிய பொண்ணு என்னை யாழினியின்னு கூப்பிடுங்க”.. என்று கூற..
“ஓகேடா ஆண்ட்டி அப்படியே உன்னை கூப்பிடுறேன்”. என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே..
சஞ்சனா அறையினுள் வந்தவள்..”யாழினி போலாமா” என்று கேட்க..
“போலாம் ஆண்ட்டி”என்றவள்..
வைஷுவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு ‘பாய் ஆண்ட்டி” என்று சஞ்சனாவுடன் கிளம்ப..
“யாழ் யாரு கிட்டையும், இவ்வளவு நெருக்கமா பழகாத?, அவங்க ஒரு டான்ஸ் டிச்சர் அவ்வளவு தான்” என்று கூற..
“எனக்கு தெரியும் ஆண்ட்டி,, நான் எந்த டீச்சருக்காவது, ஹக் பண்ணி கிஸ் பண்ணத, பார்த்திருக்கிறீங்களா?”.
சஞ்சனா “இல்லை” என்று கூற..
“எனக்கு எந்த டான்ஸ் டீச்சரவது கிஸ் பண்ணி, ஹக் பண்ணி இருக்காங்களா”..
அதற்கும் ” இல்லை” என்று தலையாட்ட..
“என் நானா, என் தாத்தையா, அம்மம்மா, தவிற என்னை யாரும் பாசமா பார்த்தது இல்ல, நீ நல்லா டான்ஸ் ஆடுற, பெரிய ஆளாவருவன்னு சொன்னது இல்ல,, ஏன் நீங்க கூட தான் எத்தனை போட்டிக்கு என் கூட வந்து இருக்கீங்க, நான் எத்தன வாட்டி டான்ஸ் காம்பிடேஜனுல வின் பண்ணி இருப்பேன்.. நீங்க என்ன பண்ணுவீங்க, குட் ஓகே, அப்படியின்னு மட்டும் தானே சொல்லுவீங்க,, இந்த ஆண்ட்டி மாதிரி தலை கோதி பாசமா, கன்னம் தடவி நீ நல்லா வருவடான்னு, நெத்தில் முத்தம் குடுத்தாங்க,, இந்த மாதிரி யாரும் எனக்கு பண்ணது இல்ல ஆண்ட்டி,, இவங்க சம்திங் பெஷல் மீ”… என்றாள்..
சஞ்சனாவுக்கு நான் எங்கே தவறினோம் என்று புரிய, இனி பார்த்துக்கொள்ளலாம், என்று அமைதி காத்தாள்..
நாட்கள் மாதங்களாக.. ஆனாது…
யாழினிக்கு சனி, ஞாயிறு மட்டும் கதக் நடனத்தைகற்று சென்றாள்..
வைஷு அவளுக்கு தனக்கு தெரிந்த அளவுக்கு அவளுக்கு கற்று கொடுத்துக்கொண்டிருந்தாள்..
வீ. பி வெளிநாட்டில் இருந்தது வந்து விட்டான்..
ஒரு முறை தூரத்தில் இருந்து வைஷுவை பார்த்துவிட்டு சென்றிருந்தான்..
சொர்ணமுகி திடிர், திடிர் என்று காம்பிடேஷனுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்க, இவளிடம் அனுப்ப..
நீ எத்தனை பேரையாவது அனுப்பு நான் பாத்துக்கிறேன் என்பாள் வைஷு..
வைஷுவுக்கு மிகவும் பிடித்தது டான்ஸ். அவளை விட்டாள் 24 ன்கு மணிநேரமும் ஆடுவாள்..
உடலுக்கு ஓய்வு நேரம் வேண்டுமே அதை, எண்ணி உடம்பை பார்த்துக்கொண்டாள்.
அன்று ஞாயிற்று கிழமை யாழினிக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்க வைஷு கிளாஸ் வர யாழினி இல்லை..
எங்கே என்று அந்த அறையில் சுத்தம் பண்ணி கொண்டு இருந்தவரிடம் கேட்க..
யாழினி ரெஸ்ட் ரூம் நோக்கி போனதை சொல்ல..
“சரி” என்றவள். 10 நிமிடம் காத்திருக்க யாழினி இன்னும் வராமல் இருக்க..
என்ன பண்ணுற இந்த பொண்ணு என்று புலம்பியபடியே ரெஸ்ட் ரூம் நோக்கி போக… அங்கே யாரும் இருப்பதாக தெரிய வில்லை..
அமைதியாக இருக்க.. “யாழினி” என்று வைஷு குரல் கொடுக்க..
“ஆண்ட்டி” என்று அழுகுரல் கேட்டதும்..
பயந்துபோன வைஷு, ஓடி வந்தவள், “எந்த ரூம்புல இருக்கேடா” என்று கேட்க..
“ஆண்ட்டி” என்று சத்தம் கேட்ட டாய்லெட் ரூம் கதவின் அருகில் வந்த வைஷு..
“கதவை திறடா பாப்பு, என்னாச்சுடா” என்று கேட்க..
“ஆண்ட்டி” என்று அழுது கொண்டே மெல்ல கதவை யாழினி திறக்க..
அவளை முழு உடையோடு பார்த்ததும் தான் உயிரே வந்தது வைஷுவுக்கு..
இந்த காலத்தில் என்னவெல்லாம் நடக்கிறது.. 10 நிமிடம் போது, தப்பு செய்ய, என்ற யோசனையில் இருந்து மீண்டவள்..
யாழினியை அந்த ரூம்பில் இருந்து வெளியில் இழுத்து வந்தவள்.. யாழினியை தொட்டு தடவி “என்னாச்சுடா யாழினி குட்டி?”..
“ஆண்ட்டி” என்றவள் அழுது கொண்டே திரும்பி தன் உடையை காண்பித்து அழ..
அந்த உடையில் பின் இருந்த ரத்த கறையை பார்த்த வைஷூ, பின்பு அவளிடம் சிலவற்றை கேட்டு தெளிவு படுத்திக்கொண்டவள்..
“ஒன்னும் இல்லடா, இது எல்லாருக்கும் நடக்குறது தான் வா” என்று அவளின் அறைக்கு அழைத்து வந்தவள்..
“பயப்படாத நீ பெரிய பொண்ணாகிட்ட, அவ்வளவு தான், ஆங்கிலத்தில் மெச்சுடுன்னு சொல்லுவாங்க, உடம்பில் உள்ள ஒரு ஊறுப்பு வளந்துருக்குன்னு அர்த்தம்” என்றவள்..
அவளுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும். எப்படி இதை எதிர் கொள்ள வேண்டும், இது அனைத்து பெண்களுக்குமே நடக்கும் என்று சொல்லி புரியவைத்தவள்..
வைஷுவின் பேக்கில் கம்யாவுடைய ஒரு உடை இருக்க அதை எடுத்து யாழினி இடம் கொடுத்தாள், உடல் கழுவி உடுத்த சொன்னவள், பின்பு பெண்களுக்கு நடக்கும் அந்த மூன்று நாட்களை பற்றி சொல்லி அவளுக்கு புரியவைத்து, அவளுக்கு அந்த மாதிரி நேரத்தில் பாதுகாப்பாக உடை அணிய உதவி செய்தவள்,, பாத்ரூம்பில் இருந்து அழைத்து வந்தாள்..
“உன் போன் எங்கேடா யாழினி”.. என்று வைஷு கேட்க..
“போன் டான்ஸ் ரூம்புல இருக்கு ஆண்ட்டி” என்று சொல்ல. அதை கீழே உள்ள பணி செய்பவரிடம் சொல்லி எடுத்து வர சொன்னவள்..
“உன் அம்மாவுக்கு போன் போட்டு வர சொல்லு”.. என்றாள்
“அம்மாவா! எனக்கு அம்மா இல்லையே ஆண்ட்டி”..என்றாள் யாழினி..
“அம்மாடா அம்மான்னா மம்மி உங்க மம்மா இருக்காங்களா அவங்களை, வர சொல்லு” என்று கூற..
“எனக்கு அப்படி யாரும் இல்லையே ஆண்ட்டி”.. என்று உதடு பிதிக்கியவளை..
அணைத்து க்கொண்டவள்.. “சாரிடா, சாரி டா குட்டிமா நான் தெரியாம உன் கிட்ட கேட்டுட்டேன், இந்த ஆண்ட்டியை மன்னிச்சுடு”.. என்றாள்..
“பரவாயில்லை ஆண்ட்டி, எனக்கு எல்லாமே என் நானா தான்,, என் நானாவுக்கு போன் பண்ணவா”…
அவரிடம் எப்படி சொல்வது என்று யோசித்தவள்,”உங்க வீட்டில் லேடிஸ் யாரும் இல்லையா”..
“பாட்டி இருக்காங்க, அவங்க ஊருக்கு போயி இருக்காங்க, டாடிகிட்ட சொல்லுங்க ஆண்ட்டி நான் வீட்டுக்கு போறேன்” என்று கூற..
“சரி உன் டாடிக்கு போன் பண்ணி குடு ஆண்ட்டி பேசுறேன்”…
யாழினி விஜயேந்திரனுக்கு போன் பண்ணி வைஷுவிடம் போனை தர..
போன் ரிங் போயிக்கொண்டே இருந்தது கடைசி ரிங்கில் எடுத்தவன்.
“செப்புற பங்காரம்”… என்றான்..
“சார் நான் வைஷு”..
“செப்பு வைஷு” என்றவன் பிறகு”சொல்லு வைஷு” என்றான்.
எதற்கு யாழினி போனில் இருந்து அழைத்து இருக்கிறாள் என்றவன்..
“சார் உங்க வீட்டுல யாராவது லேடீஸ் இருகாங்களா, அவங்களை இங்க வர சொல்ல முடியுமா?”..
“என்ன! எதற்கு வைஷு?..
“அது சார் அது வந்து யாழினியை அவங்ககிட்ட சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைக்க”..
“என்னாச்சு? யாழினிக்கு, யாழினி என்ன பண்ணுற, அவ நல்லா தானே இருக்க?..
“ஊம் நல்லா தான் இருக்க சார், உங்க கிட்ட எப்படி சொல்ல,” என்று புலம்பியவளை.
“ஏய்… நான் யாழினி அப்பா என்கிட்ட யாழினியை பத்தி சொல்லுறதுக்கு என்ன? சொல்லு யாழினி இப்போ எங்கே இருக்க அவ கிட்ட போன் குடு” என்றான் கோபமாக..
“அவ என் கூட, என் ரூம்புல இருக்க சார், அவ என்றவள் ஏஜ் அட்டன் பண்ணிட்டா”.. என்றாள்..
“என்ன? நீ சொன்னது எனக்கு புரியல”..
“உங்க பொண்ணு யாழினி பெரிய பொண்ணாகிட்ட, மெச்சூட் ஆகிட்டான்னு சொல்லுவாங்களே உங்களுக்கு தெரியுமா?”.. என்று கேட்க..
“ஊம்..” என்ற குரல் மட்டுமே கேட்க.. அங்கே பெறுத்த மௌனம்.. “சார் லைன்னில் இருக்கீங்களா” என்றாள் வைஷு..
“உம்”.. என்றவன்..
“10 வயசு தானே ஆகுது அது குள்ள” என்றான் வருத்தமான குரலில்..
“இப்போ அப்படி தானே சார் எல்லாருக்கும் நடக்குது” என்றாள்..
“யாழினி கிட்ட போனை குடு வைஷு” என்றான்..
வைஷு யாழினியிடம் போனை தர..
“நானா, நானா” என்று அழுத மகளை,,
“ஏண்டி லேதுறா பங்காரம், அப்பா இப்போ வரேன், நீ ஆண்ட்டி கூட இரு” என்றான்..
யாழினி வைஷுவிடம் போனை தர..
“சார்” என்று வைஷு அழைக்க..
“நான் இப்போ வர்றேன்,, வைஷு யாழினியை பார்த்துக்கோ” என்றவனின் குரல் கமர..
“சார் இது சந்தோச படுற நேரம் வருத்தபட கூடாது”.. என்றவளிடம்..
“என் பொண்ணுக்கு கஷ்டமா இருக்கும்ல” என்றான் வருத்தமான குரலில்..
அவன் வருத்தபடுவதை உணர்ந்தவள்..
“பொண்ணா பிறந்தா இதை கடந்துதானே வரணும், வருத்தபடாம வாங்க சார்,, உங்க பங்காரத்தை நான் பாத்துக்கிறேன்” என்று போனை வைத்தாள் வைஷு…
error: Content is protected !!