Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 7 1

ஜதி தரும் அமுதம்

அத்தியாயம் -7



Advertisement

எவ்வளவு வேகமாக வர முடியுமோ  அவ்வளவு வேகமாக வந்து சேர்ந்தான் விஜயேந்திரன்…

Advertisement

அவனுக்கு ஏற்கனவே வைஷுவின் வீட்டு  எண்  தெரிந்து இருக்க. வேகமாக   ஏறி வைஷுவின் வீட்டிற்கு  வந்தான். வாசல் கதவு திறந்தே இருக்க..

Advertisement

வெளியில் இருந்தேன் உள்ளே பார்த்தான் வீ. பி.. சாய்வு நாற்காலியில்   வைஷு யாழினியை  தன் மேல்  போட்டு கொண்டு  காலால் நாற்காலியை  ஆட்டிய வண்ணம் கண் மூடி இருவரும் படுத்திருக்க..

Advertisement

விஜயேந்திரன்  தன் இரண்டு  ஜீவனை பார்த்த வாறு நின்றான்..

வைஷுவுக்கு  ஏதோ யாரோ பார்ப்பது போல் தோன்ற கண்விழித்து பார்த்தாள்.. யாரோ ஒருவன் தன் வீட்டின் முன் கோர்ட்  சூட் அணிந்து  நிற்பதை  பார்த்தவள்..

இவர் வீ. பி சாரா  இருக்குமோ என்று நினைத்தவள்..

“வாங்க சார்”   என்றாள்.

விஜயேந்திரனை பார்த்து..

இரண்டு பேரையும் பார்த்தவாறே விஜயேந்திரன் உள்ளே வர..

யாழினி வீ. பியின்  வரவை  தெரிந்து தந்தையை திரும்பி பார்த்தவள்..  “நானா”… என்று வேகமாக வந்து,    அவனின் மேல் தாவி கொள்ள.. தன்  மகளை வாரி  அணைத்து தோளில்  போட்டுக்கொண்டான்..

மகள் அழும் சத்தம் கேட்டு  “ஏண்டி லேதுறா பங்காரம், பயப்பட லேது”  என்று மகளின் முதுகை வருடிக்கொடுத்தான்..

யாழினி வீ. பி யின் கழுத்தை கட்டிஅணைத்துக்கொண்டு அழ…

“என்னாச்சு  டா, நானா பாத்துக்கிறேன், நானா கிட்ட சொல்லு”  என்று பேசிக்கொண்டே  இருந்தவனை பார்த்திருந்தாள் வைஷு..

யாழினியின்  முக வடிவில், கலராக ஒருவன் வருவான் என்று வைஷு எதிர் பார்த்திருக்க.. இவனோ 7 அடி உயரத்தில் கருப்பாக, கருப்பாசாமி போல ஜிம் பாடியுடன் வந்து நின்றவனின்  தோன்றம்.. அவளால் நம்ம முடியவில்லை.. அவள் மனதில் வீ. பி என்றவனை நினைத்து உருவாக்கி வைத்த உருவம் நல்ல சிவப்பாக, இந்திகாரன் மாதிரி இருப்பார் என்று இவள் மனதில் கற்பனை பண்ணி வைத்திருந்தான்.. அனைத்தும் வேறாக இருக்க.. ஒரு வேலை யாழினி அம்மா கலராக இருப்பாறோ? ….   என்று யோசித்தவள், அவனை முதல் முதலில் இப்போ தான் பார்க்கிறாள்  வைஷு,, கருப்பாக இருந்தாலும் அழகாய் தான் இருக்கிறான்,, என்று நினைத்தவள், அவனையே சிறிது நேரம் பார்த்திருந்தாள்..

வீ. பிக்கு எல்லாம் மறந்து போனது, மகள் மட்டும் தான் இப்போது அவன்  கண்ணுக்கு தெரிந்தது.. வைஷீவை அவன் கவனிக்க வில்லை..

விஜயேந்திரன் நீண்ட நேரம்  நிற்பதை பார்த்தவள் “உட்காருங்க சார்” என்றாள்..

அப்போது தான் அவளை திமிர்ந்து பார்த்தான்.. பரத நாட்டிய ஆசிரியர் உடையில் இருந்தாள்,, அவளுக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது அந்த உடை அவளுக்கு.

அவளின் மையிட்ட விழிகளை பார்த்துக்கொண்டே அமர்ந்தான்.. இவ்வளவு பக்கத்தில் அவளை நீண்ட வருசம் கழித்து  பார்த்ததும் அவனுக்கு  மனதில் லலலல…. என்று மனது பாட்டு பாட….

அவளை  பக்கத்தில் பார்த்தும் ரசிக்கமுடியாத சூழ்நிலை எண்ணி வருந்தியவன்..

 அவள் மீண்டும் “உக்காருங்க சார்”  என்றவுடன் மகளை அணைத்தவாறே  சேரில் அமர்ந்தான்..

சோர்ந்து போய் இருந்தவனை பார்த்தவள்,, கிச்சன் நோக்கி சென்றவள், ஐந்து நிமிடம் கழித்து இரண்டு டம்புளில்  ஏதோ எடுத்து வருவதை பார்த்தவன்,, அவளிடம் கண்களால் என்னவென்று? கேட்க..

“சூஸ் சார் குடிக்க, ரொம்பா களைப்பா  தெரியுறீங்க” என்றாள்…

மகளை தன் மடியில் அமர வைத்தான் வீ. பி.

“நீ பால் குடிடா யாழ்குட்டி”  என்றாள்..

“வேண்டாம் ஆண்ட்டி, எனக்கு எதுவும் சாப்பிட பிடிக்கல”…

“குட்டிமா அப்படிதான் இருக்கும், இன்னும் கொஞ்ச  நாளைக்கு எது கொடுத்தாலும் சாப்பிடனும், வேண்டாம் சொல்ல கூடாது”  என்றாள்..

பாலை யாழினியை குடிக்க வைத்தாள்..

மகளின் ஆண்ட்டி என்று அழைப்பை கேட்க வருத்தப்பட்டவன்.. உயிர் கொடுத்தவளுக்கே ஒன்னும் தெரியல, பிள்ளையை என்ன சொல்ல, எல்லாம் ஒரு நாள் மாறும் என்று மனதில் நினைக்க..

“நானா, இண்டிக்கு (வீட்டுக்கு) போலாம்”  என்றாள் யாழினி..

“சரிடா”  என்றவன்.. எழுந்து கொள்ள..

“தாங்யூ வைஷு”  என்றான்..

அவனிடம் யாழினியின் பேக்கையும், போனையும் தர..

அதை வாங்கி கொண்டவன்.. “வர்ரேன்”  என்று மகளை தூக்கிக்கொண்டே  கீழே கார் பார்க்கிங் வர..

வைஷு அவன் பின்னாடியே வந்தவள்.. யாழினியை உட்கார வைக்க கார் கதவை திறந்து வீ. பிக்கு உதவி செய்தாள்..

யாழினியை முன் சீட்டில் உட்கார வைத்தவன்.. திரும்பி வைஷுவை பார்த்து “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறீயா”..

“சொல்லுங்க  சார்”…

“என் அம்மா, அக்கா வர லேட்டாகும்,  அவங்க வர்ற வரைக்கும் , யாழினி  கூட இருக்கீயா?”,,.

வைஷு  ஒரு நிமிடம் யோசித்து “சரி சார் வர்றேன்”  என்றவள். காரின் பின் சீட்டில் ஏற..

யாழினி வைஷு பின் சீட்டில் ஏறுவதை பார்த்தவள்.. “நானா ஆண்ட்டி நம்ம கூட வர்ராங்களா?” என்று கேட்க..

“ஆமாம்”  என்று வீ. பி தலையாட்ட..

“ஐ”  என்றவள்,, கார் கதவை திறந்து வைஷுவுடன் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள்..

விஜயேந்திரனுக்கு  மனம் நிறைந்திருந்தது.. அவள் வருவாளோ வரமாட்டாளோ, எப்படி இவளை  கூப்பிடுவது என்று யோசித்தே கேட்டான்.. அவள் சரி   என்றதும் தான் அப்பாடா என்றது அவன் மனம்..

10 நிமிடத்தில் அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்..

வைஷு யாழினியை  தன் கையணைப்பிலே  வைத்திருந்ததை பார்த்தவன்.. தான் ஆடவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள், அதை போல என்றவன்.. இருவரையும்  பார்த்து மனதில் ஒரு கன்று தாய்யிடம் சேர்வது போல் இருவரும் ஒன்றி இருப்பதை பார்த்தவனுக்கு, இதை எப்படி சொல்லி இருவருக்கு புரிய வைப்பேன்?, ..  என்று நினைத்தவாறே வீடு வந்து சேர்ந்தான்…

காரை வீட்டு வாசல் முன் நிறுத்தியவன்.. கார் கதவை திறந்து விட, வைஷுவும் யாழினியும் கீழே இறங்க,  மகளை தூக்கி கொண்டவன், “வா வைஷு”  என்றவன் முன்னே செல்ல..

“ஊம்”   என்று தலையாட்டியவள்.. நிமிர்ந்து வீட்டை பார்த்து , அசந்து போனாள், இது வீடா?  இல்லை அரண்மனையா? என்றே தோன்ற திரும்பி பார்த்தாள். அவளுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்க் போலவே  மரம்  செடிகளே இருக்க..

“உள்ளே வா வைஷு”  என்று  மீண்டும் வீ. பி  அழைக்க..

வருவதாக தலையாட்டியவள்.. அவன் பின்னோடு வர..

வாசற்கதவு வரும் போது ‘பார்த்துவா” என்றவன் அவள் “ம்ம்ம்ம்”  என்று ஏதோ சொல்ல வர.. அவளின் கைபிடித்து “பாத்து” என்று  அவளோடு வலது காலை உள்ளே வைத்து வருமாரு அவளின் கைபிடித்து அழைத்து சென்றவன், உள்ளே வந்ததும் பிடித்த கையை விட்டான்.. ஒரு கையில் யாழினியும், இன்னொரு கையில் வைஷுவையும் பிடித்துக்கொண்டே  உள்ளே வந்தான்..

ஒரு நிமிடத்தில் கைபிடித்து விட்டது வைஷுவுக்கு  தெரியவில்லை..

ஏதோ அக்கரையில் தன்னை உள்ளே அழைத்து வந்த வீ. பியின் தொடுகை அவளுக்கு  வித்தியாசமாக தெரியவில்லை.. அவன் பின்னோடு வைஷு செல்ல..

மாடியில் உள்ள யாழினி அறைக்கு அழைத்து வந்தான்.

யாழினி அறையை பார்த்து அசந்து போனாள், மிக பெரிய அறை அவளின் விளையாட்டு பொருள்கள், அவளின் நடன போட்டோக்கள் என்று அந்த அறை நிறைந்து இருந்தது..

யாழினி உள்ளே வந்ததும் அவளின் பெட்டில் படுக்க செல்ல..

“யாழ்” என்று  அழைத்த வைஷு..

“ஒரு 5 டேசுக்கு  பெட்டில் படுக்க கூடாது டா,, உனக்கு தண்ணி ஊத்துவாங்க,, அது கப்பறம்,, உங்க பாட்டிக்கிட்ட கேட்டு படுத்துக்கோ”  என்றவள்.

ஒரு பெட்சீட்டை கிழக்கு  பார்த்து சுவர் ஓரமாக  மடித்து  போட்டவள்,,

அதில் யாழினியை அமர சொல்லி விட்டு..

விஜயேந்திரனிடம்  “உங்க வீட்டுல உலக்கை இருக்கா”?… என்றாள்,,

அவனுக்கு அவள் சொல்வது புரியாமல் முளிக்க..

வேலைகார பெண்ணை அழைத்து கேட்டாள்.. இவள் செய்கை செய்து காட்டவும் புரிந்து போன வேலைகாரபெண் எடுத்து வந்து தர.. உலக்கை யாழினியின் முன் படுக்க வைத்தவள்..

“உங்க அம்மா, சிஸ்டர் வர எவ்வளவு நேரம் ஆகும்?”..

“3 மணி நேரம் ஆகும்”  என்றான்  வீ. பி..

வைஷு யாழினியை பார்க்க.. அவள் மிகவும் சோர்ந்து தெரிய,,

“நான் யாழினிக்கு குக் பண்ணி குடுக்கட்டுமா?”..

“ஏன் வைஷு லஞ்ச் ரெடியா இருக்கு,, யாழினிக்கு சாப்பிட குடு, நீயும் சாப்பிடு, எடுத்துட்டு வர, சொல்லவா?”..

“இல்லை  அவளுக்கு முதல்ல ஸ்வீட் தான் குடுக்கனும், அதுக்கு தான், நான் பண்ணி தரட்டுமா” என்றவளை.

“வா” என்றவன்  கிச்சன் நோக்கி அழைத்து வந்தவன், கிச்சனில் வேலை பார்க்கும் பெண்ணிடம், இவளை காண்பித்து ” மேடம் நாவாழு, ஹெல்ப் செய்”.. என்று விட்டு,  சென்றான்..

வைஷுவுக்கு  அவள் பாட்டி சொன்னது ஞாபகம் வர.. கருப்பு உலுந்தை வருத்து, பொடி பண்ணி  வெல்லம்  சேர்த்து உலுந்தன் கலி   பண்ணியவள்,, யாழினிக்கு எடுத்துவந்தவள்,, ஒரு சின்ன பௌலில் வீ. பிக்கும் எடுத்து வந்தவள், அதை அவனிடம் தர, “எனக்கா?”  என்றான்..

அவள் “ம்ம்”  என்று தலையாட்டி விட்டு..

யாழினிக்கு கருப்பு உலுந்தன் கலியை கொடுக்க,, அவள் அதை பார்த்ததும்,, “எனக்கு வேண்டாம்  ஆண்ட்டி, பார்க்கவே கருப்பா இருக்கு”…என்று கூற..

” கருப்பா இருந்தா என்ன டா,, அது நமக்கு எவ்வளவு எனர்ஜி தருமுன்னு தான் பார்க்கனும்”  என்றாள்..”ஆண்ட்டி  நோ  அது பிளாக்கா இருக்கு”  என்றவளை எப்படி சாப்பிட வைக்க என்று யோசித்த வைஷு.

“உங்க நானா கூட தான் , கருப்பா தானா, இருக்காரு, எவ்வளவு அறிவா இருக்காரு, பாரின் எல்லாம் போராரு”  என்று கூறியவளை நிமிர்ந்து பார்த்த வீ. பியை பார்த்து கண்ணடித்த  “சும்மா”என்றாள்..

அவள் கண்ணடித்ததும் அவன் உதடு விரிந்து பின்,  என் கிட்ட வாடி கருப்பாவா இருக்கேன், சைடு கேப்புல, என்னை கருப்புன்னு சொல்லிட்டாலே..என்றவன்.. இருவரையும் பார்க்க..

யாழினியிடம் கொஞ்சி  பேசி ஊட்டிக்கொண்டு இருந்தாள்.. “இத சாப்பிட்டேன்னு வையு, இடுப்பு, வலி, வயிறு வலி, எல்லாம் காணாமல் போயிறும்,   எங்க பாட்டி சொல்லி இருக்காங்க”.. என்று பேசிக்கொண்டே ஊட்டிமுடித்தாள்..

“ஆண்ட்டி எனக்கு தூக்கம் வருது”..என்றவள் சிறிது நேரத்தில் தூங்கிவிட..

யாழினி தூங்கியதும்.”நான் கிளம்புறேன் சார்” என்றவளை.. இன்னும் கொஞ்சம் நேரம் இரு வைஷு அம்மா வந்திருவாங்க,, வந்ததும் கிளம்பு”.

“இல்ல பரவாயில்லை சார், நான் கிளம்புறேன்”  என்று எழுந்து கொள்ள..

“வா” என்று எழுந்தவனை.. “நீங்க எங்க வர்றீங்க? நான் ஆட்டோ புக் பண்ணி போயிக்கிறேன்” …

“வா வைஷு”.. என்று அவன் முன்னே செல்ல..

“சார் யாழினி உங்களை தேடுவா?.. நான் போயிக்கிறேன்”.. என்று சொன்னதை  காதில் வாங்காதவன்..

அவர்கள் வீட்டில் பணிபுரியும் மூத்த பெண்மணியை அழைத்து யாழினியை பார்த்துக்க சொல்லி விட்டு..

காரை நோக்கி செல்ல, அவன் பின்னாலே போனாள் வைஷு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!