Skip to content
Post Views: 2,285
அவள் பின்பக்க கார் கதவை திறக்க முடியாமல் நிற்க, முன் பக்க கதவை வீ. பி திறந்து,”முன்னாடி வா வைஷு”.. என்றான்..
அவளோ திறக்க வரலை என்று முன் பக்கம் வந்து அமர.. விஜயேந்திரனுக்கு அவள் தன் தாய், தந்தையை பார்க்காமல் கிளம்பிய கோபம் வர..
Advertisement
அமைதியாக கார் ஓட்டினான்.. அவன் அமைதியாக கார் ஓட்டுவதை பார்த்தவள்.. என் மீது கோபமா என்று யோசித்தவள், “சார் சாரி”.. என்றவளை..
Advertisement
எதற்கு என்பது போல் பார்த்தான்..
Advertisement
“நான் யாழினி விசயத்தில் அதிக உரிமையோடு நடந்துகிட்டேனா, அது உங்களுக்கு பிடிக்கலையா” என்று கேட்டு அமைதியாகி விட.. வீ. பி ஒன்றும் பேசாமல் காரை ஒரு உணவகத்தில் உள் நுழைய,,
Advertisement
“சார் நான் கிளாஸுக்கு போகணும் டைம் ஆச்சு”..
அவள் சொல்லியதை காதில் வாங்காதவன்,, “இன்னைக்கு உனக்கு யாழினி கிளாஸ் மட்டும் தானே?””..
“இறங்கு சாப்பிட்டு போகலாம் வா”… என்று அழைக்க..
“நான் கேட்டீனில் போயி சாப்பிட்டுகிறேன்” என்று சொன்னவளை பார்த்தவன்..
“வைஷு வா எனக்கு பசிக்குது,, இப்போ வரலண்ணா,, நீ குடுத்த கலி மட்டும் தான்,, எனக்கு லஞ்ச்” என்றான்..
அவள் காரை விட்டு கீழே இறங்கியதும்,, “வா” என்று கண்ணாலே அழைத்து அவன் முன் செல்ல,, வைஷு பின்னாடி சென்றாள்..
அவன் பேமலி அறைக்கு அழைத்து செல்ல.. அவன் பின்னோடோ வந்தவள்,, “வெளியவே உட்காந்துக்கலாமே?””.. என்று கூற..
அவளை வா என்று கண்சாடை காட்டி செல்ல..
கருப்பாசாமி ரொம்பதான் துள்ளுது,, மூஞ்ச பாரு உர்ருண்ணு,, கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்..
பின்னாடி நடந்துக்கொண்டே தமிழில் பேசிவிட..
அவனுக்கு அவள் பேசியது கேட்டு விட..
தனி அறைக்கு அவளை அழைத்து வந்தவன்..
உணவு ஆர்டர் கொடுக்க.. அவர் பத்து நிமிடத்தில் உணவு வந்து விடுவதாக.. சொல்லி செல்ல..
வைஷுவின் எதிரே அமர்ந்து கொண்டவன்,, “டான்ஸ் கிளாஸ் எப்படி போகுது”…
“நல்லா போகுது சார்”.. என்றாள்..
உணவு வந்து விட.. அவளுக்கு தமிழ் நாடு மீல்ஸ்,, இவனுக்கு ஆந்திரா பெஷல் கார குழம்பு மீல்ஸ் வர..
உணவை பார்த்து சந்தோஷ பட்டவள்.. அவனை பார்த்து சிரிக்க.. சாப்பிடு என்பது போல் தலையாட்டினான்..
நீண்டநாள் கழித்து மீல்ஸை பார்த்தவள். வேகமாக உண்டு கொண்டே இருந்தவளிடம்..”உனக்கு கருப்பா இருந்தா பிடிக்காத வைஷு”.. என்றான் வீ. பி..
“ஆன்,, புரியல?”.. என்றவளிடம்.
“என்னை பார்த்து கருப்புன்னு சொன்னா, அதான் கேட்டேன்”..
அவளோ மௌனமாக இருக்க..
“சொல்லு வைஷு”..
“அது சும்மா கருப்புன்னு சொன்னேன் சார்,, நான் யாழினி கலரை பார்த்து , நீங்க கலரா இருப்பீங்கன்னு நினச்சேன்,, சாரி”..என்றவளை..
“உன் சாரி எல்லாம் வேண்டாம்,, நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”..
“எனக்கு, எனக்கு புடிக்கும் சார்”,..
“என்ன? புடிக்கும்..”
அவனை நிமிர்ந்து பார்த்தவள் “எனக்கு வெள்ளையா இருக்குறவங்கள விட கருப்பா இருக்குற பாய்ஸ் தான் ரொம்ப பிடிக்கும்,, போதுமா”.. என்றவளை..
பார்த்து சிரித்தவன்..
“நான் பொம்மா” என்றான் ஆசையாக..
அவளோ அவனை பார்த்து சிரித்து.. “நீங்க யாழினி கூப்பிடற மாதிரியே என்னை கூப்பிடுறீங்க,, நான் யாழினி இல்ல”..
“சாரி வைஷு யாழினியை கூப்பிட்டு, கூப்பிட்டு அப்படியே பழகிடுச்சு,, உன்னை பொம்மா அப்படியின்னு கூப்பிடட்டுமா?.”… என்று கேட்க
ஒரு நிமிடம் யோசித்தவள்,, “உம் கூப்பிடுங்க சார்” என்றாள்..
அவனோ மகிழ்ச்சியில் சாப்பிடு “பொம்மா” என்றான்..
இருவரும் சாப்பிட்டு முடிக்கும் முன் வைஷு வீ. பி நிமிர்ந்து பார்த்து, “உங்க கிட்ட, ஒன்னு கேட்கலாமா?”..
“கேளு பொம்மளு”.. என்றான்..
“அது யாழினி அம்மாவுக்கு என்னாச்சு, இறந்துட்டாங்களா,, இல்லை பிரிஞ்சு போயிட்டாங்களா?”..
அவன் பதில் சொல்லாமல், “சாப்டீயா? வா போலாம்”.. என்று அவளை நடன பள்ளிக்கு அழைத்து வந்தவன்.. அவள் இறங்காமல் இருக்க..
“இறங்கு”.. என்றான்..
அவன் முகத்தை பார்த்திருந்தவள்..”சாரி இனிமே, யாழினி அம்மாவை பத்தி பேசமாட்டேன்”.. என்றவள்.. இன்னும் போகாமல் அமர்ந்திருக்க..
அவளை பார்த்தவாரு திரும்பியவன்..”நான் உனக்கு நன்றி சொல்லனும்,, நீ இல்லண்ணா யாழினி ரொம்ப கஷ்ட பட்டு இருப்பா”..
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார்,, நான் இல்லண்ணா வேற யாரவது உதவி பண்ணி இருப்பாங்க”..
“இருந்தாலும் உன்ன மாதிரி கேர் எடுத்து பாத்துக்கா மாட்டாங்க”..
“தாங்யூ, வைஷு”. என்றான்..
அவனை பார்த்து சிரித்தவள் “நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும், நல்ல புட் வாங்கி தந்ததுக்கு”… என்றவள்.. கார் கதவை திறந்து வெளியே போக…
என்கூடவே இருந்துரு பொம்மா, என்னால இனிமே முடியாது டா, என்று மனதில் பேசியவன்,, அவளை ஏக்கமாக பார்க்க..
அவன் பார்வையில் ஏதோ உணர்ந்தவள்..
“என்ன சார் வேணும்?.
“நூவு” என்றான்.. (நீ தான்)..
“எனக்கு புரியல”.. என்று முழித்தவளை பார்த்து சிரித்தவள்..
“நா பொம்மளு, நூவு அண்டே, நூவேரா, நாதோ ரா, பொம்மளு”(என் பொம்மா நீ அப்படியின்னா, நீ தாண்டி எனக்கு வேணும், சீக்கிரம் வா என்கிட்ட என் பொம்மா).. என்றான்..
“ஏதோ பாஸ்ட் பேசுறீங்க, மெதுவாக பேசுனா தான்எனக்கு புரியும்” என்றவன்,, “பாய் சார்”.. என்று கிளம்பி விட்டாள்…
அவள் தன் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துவிட்டு வீடு வந்தான்..
அவன் வந்து சிறிது நேரத்திலே இந்திரா தேவியும், சௌசன்யாவும் வந்து சேர..வேகமாக பேத்தி அறைக்கு வந்து பார்த்தார்..
யாழினி கீழே பெட்ஷீட் விரித்து தூங்குவதை பார்த்தவர்.. மகனிடம் “இதெல்லாம் யார் பண்ணியது?”..
என்றார்.
“யாழினி யோட டான்ஸ் டீச்சர் வைஷு” என்றான்..
“யாழினி சாப்பிட்டாளா? இப்படி தூங்குறா”…
“வைஷு தான் முதல்ல, பால் குடுத்த, இங்கே வந்து ஏதோ கருப்பா கழி சாப்பிட வச்சு, யாழினி தூங்கவும் போயிட்டா”.. என்ற கூறிய மகனை..
வித்தியாசமாக பார்த்தார் இந்திரா தேவி,, மகன் இவ்வளவு உரிமையோடு யாரையும் பற்றி பேசியது இல்லையே.. சொர்ணமுகி சொன்ன புது டான்ஸ் டீச்சரா இருக்குமோ,, என் பையன் கிட்ட என்ன சொல்லி ஒட்டிகிட்டலோ தெரியலயே,, என்று மனதிற்க்குள் புலம்பியவர்..
பேத்தி அசையவும் அவளின் அருகில் சென்று தலை கோத..”அம்மம்மா” என்று பேத்தியை அணைத்தவர் அழுது விட்டார்.. அவர் இன்னும் இரண்டு வருடம் கழித்து இதை பற்றி பேத்தியிடம் சொல்லலாம் என்றிருக்க.. 10 வயதிலே வயதுக்கு வந்து விட்டவளின் முன் கண்கலங்கி அணைத்திருக்க..
“அம்மா” என்றான் விஜயேந்திரன்..
“ஒன்னும் இல்ல,” என்றவர் பேத்தியோட தேவைகளை கவனிக்க..
தன் அக்காவை பார்த்தான் அவளோ யாழினியை பார்த்தபடியே கண்ணீரோடு நிற்க..
தன் அக்காவின் கைபிடித்து அவன் அறைக்கு அழைத்து வந்தவன்…
“நீயே அழுது யாழினிக்கு காட்டி குடுத்துருவ போல” என்று சௌசன்யாவை மிரட்ட..
“போடா நான் பத்து மாசம் சுமந்த பெத்த பொண்ணா தல்லி வச்சு பார்க்கவச்சிருக்கே இந்த விதி,,” என்று தன்னை தானே திட்டிக்கொண்டு அழ..
“அக்கா வையித்துல பிள்ளையை வச்சுகிட்டு, அழ கூடாது”. என்ற தம்பியை பார்த்தவள்..
“நான் என் ராம் செத்தன்னைக்கே நானும் செத்து இருக்கனும்.. உன் பேச்சை கேட்டு இரண்டாவது கல்யாணம் பண்ணி,, இப்போ இரண்டு மாசமா இருக்கேன்.. என் மூத்த பொண்ணா பார்க்க கூட முடியல” என்று கண்கலங்க..
“ஆதி பார்த்தா வருத்தபடுவான் அமைதியா இரு”.. என்றவன்.. அக்காவை சோபாவில் அமரவைத்து தண்ணீர் கொடுத்தவன்..
“யாழினி என் பொண்ணு, நீ உன் வாழ்க்கையை பாரு,, கிரிஷ் எப்படி இருக்கான்”.,,
“ஸ்கூல் போயிறுக்கான்,, உன் பிரண்ட் கூட்டிட்டு வருவாரு”..
“என் பிரண்ட் உனக்கு யாரு”..
” என் ஹஸ்பண்ட் போதுமா”.. என்றவள் கண்மூடி இருக்க.. அக்காவை தோள் அணைத்தவன்,,..
“நீ நல்லா இருக்கணும் தானே உனக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சேன்..
“நீ பண்ணது எல்லாம் சரிதான், என் பொண்ணா என்கிட்ட இருந்து பிரிச்சுட்டீயே”..
“ஆதி வீட்டுல யாழினியை ஏத்துப்பாங்களா,, உன் மாமியார் யாழினிகிட்ட நல்லா பேசுவாங்கலா, பாத்துப்பாங்களா?”..
அவள் அமைதியாக இருக்க..
“உன் வாழ்க்கையை நீ பாரு, யாழினியை நான் பாத்துக்கிறேன்”..
“எனக்கு யாழினியை பார்க்குறப்போ குற்ற உணர்வா இருக்குடா?”.. என்ற தமக்கையின் கையை பிடித்துக்கொண்டவன்..
“எப்போ தேட் குடுத்து இருக்காங்க”?.. “பேச்சா மாத்தாத வீ. பி””..
“உன் வாழ்க்கை குழப்பம் இல்லமா நல்ல போயிட்டு இருக்கு அத பாரு, யாழி என் பொண்ணு இதுக்கு மேல பேசாத”…
இருவரையும் இந்திராதேவி அழைக்கும் சத்தம் கேட்டு, யாழினி அறைக்கு செல்ல..
இந்திரா தேவி முதல் தண்ணி இன்றைக்கே யாழினிக்கு ஊற்றி விடலாம், என்று முடிவு எடுத்தவர்..
மூன்றாம் நாள் எல்லோரிடமும் சொல்லி தண்ணீர் ஊற்றலாம் என்று நினைத்து..
சௌசன்யாவை அழைத்து யாழினிக்கு முதல் தண்ணீர் ஊற்ற சொல்ல..
மகளை பார்த்து சிரித்தவளை,, கண்ட யாழினி “அத்தையா” என்று அழைக்க,, வந்த கண்ணீரை கண்ணுக்குள்ளே மறைத்து வைத்து, யாழினிக்கு முதல் தண்ணீர் ஊற்றி புத்தாடை அணிவித்து நகைகள் போட்டு அழகு படுத்தினாள் சௌசன்யா..
இந்திரா தேவி பேத்திக்கு உணவு ஊட்ட.. இன்று நடந்ததை அனைத்தையும் தன் அம்மம்மாவிடம் சொல்ல.
அனைத்தையும் கேட்டுக்கொண்டவர்,, வீ. பியை அழைத்து அந்த டான்ஸ் டீச்சருக்கு நன்றி சொல்ல சொல்ல…
“நான் ஏற்கனவே சொல்லிட்டேன் மா”.. என்றான்..
ஆதித்யா தன் 6 வயது மகனை அழைத்து கொண்டு வீ. பி இல்லம் வந்திருந்தான்.. கிரிஷ் யாழினியை பார்த்ததும் “அக்கா” என்று ஓடி வந்தவன் அவள் அருகில் அமர்ந்து கொண்டு விளையாட,, சௌசன்யாவுக்கு கண்கலங்கியது.. ஆதி நண்பனிடம் பேசிவிட்டு மனைவியின் அருகில் வர..
கண்களை துடைத்தவள் ஒன்றுமில்லை என்பது போல் கணவனை பார்க்க..
அவளை மெல்ல அணைத்தவன்.. “கொஞ்ச நாள் இங்கேயே இரு, கிரிஷும் உன் கூடவே இருக்கட்டும்,, அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன்””. என்ற கணவனை நன்றியோட பார்க்க..
“அப்படி பாக்காத நீ தான் எனக்கு வாழ்க்கை குடுத்து இருக்க, நான் இல்லை” என்றான்..
இரவு அனைவரும் உண்டு விட்டு அவர் அவர் அறைக்கு சென்று விட.. இந்திரா தேவி பேத்தியின் அருகில் சிறிய பெட் போட்டு படுக்க போக..
“அம்மா நான் பாத்துக்கிறேன்,, நீங்க போய் உங்க ரூம்புல படுங்க,, உங்களுக்கு கீழே படுத்து எழுந்துக்க முடியாது போங்க” என்று அனுப்பி வைத்தவன், மகளின் அருகே அந்த சிறிய பெட்டில் படுத்திருக்க…
காலையில் எழுந்த யாழினிக்கு தனக்கு கீழ் ஈரமாக இருப்பது போல் உணர்ந்தவன்,, தன் கையால் அதை தொட்டு பார்த்தவள்.. கதறி அழ..
மகளின் அழுகை சத்தம் கேட்டு எழுந்தவன்,, மகள் பெட்சீட்டை மூடிக்கொண்டு அழுவதை பார்த்தவன்..
“ஏண்டி பங்காரம், எதுக்கு அழற.. ரெஸ்ட் ரூம்போகனுமா வா, நானா தூங்கிட்டு போறேன்” என்க..
“நோ நானா,, வைஷு ஆண்ட்டியை வர சொல்லுங்க” என்று அழ..
வீ. பி க்கு என்ன செய்வது என்று தெரியாமல் முளித்து அமர்ந்திருக்க..
“நானா ஆண்ட்டியை வர சொல்லுங்க” என்றாள் மீண்டும்..
பேத்தி அழும் சத்தம் கேட்டு இந்திரா தேவி யாழினி அறைக்கு வந்தவர்..
யாழினியிடம் “என்னாச்சு யாழினி அம்மம்மா கிட்ட வா பெட்சீட்டை திற” என்று சொல்ல..
“அம்மம்மா வைஷு ஆண்ட்டியை வர சொல்லுங்க” என்று அழுதவளை..
“என்கிட்ட வா,, அம்மம்மா உன்கிட்ட,, சொல்லுறேன், பாட்டிகிட்ட சொல்லுடா” என்க..
அவள் மீண்டும் “நானா” என்று சத்தம் போட..
“ஒரு நிமிசம் யாழினி, ஆண்ட்டி வந்திருவாங்க” என்றவன்.. வைஷுவுக்கு போனில் அழைத்து விசயத்தை சொல்ல.. அடுத்த பத்து நிமிசத்தில் இரவு உடையோடு ஓடி வந்திருந்தாள் வைஷு..
அவள் யார் இருக்கிறார்கள் என்று எல்லாம் பார்க்க வில்லை.. வேகமாக வீ. பி வீட்டினுள் நுழைந்தவள் யாழினி அறைக்கு வந்து அவள் பக்கத்தில் வந்து கொண்டே “யாழினி, குட்டிமா”..
என்று அழைத்துக்கொண்டே அவள் அருகில் வர..
“ஆண்ட்டி” என்றவள்,,பெட்சீட்டில் இருந்து திறந்து வைஷுவை பார்க்க..
வேகமாக வந்த வைஷு அவள் அழுவதை பார்த்து அப்படி அமர்ந்து பெட்சீட்டோடு அவளை அணைத்து கொள்ள..
வைஷுவை அணைத்துக்கொண்டு அழுத பேத்தியை கண்ணீரோடு இந்திரா தேவி பார்க்க…
யாழினி அணைத்துக்கொண்டவள் அவள் சூழ்நிலை அறிந்து “ஒன்னும் இல்லடா,, ஒன்னும் இல்ல உனக்கு ஒன்னும் ஆகாது ஆண்ட்டி இருக்கேன்ல பயப்படகூடாது.. நீ எவ்வளவு தைரியசாலி என் யாழ் குட்டி அழலாமா செல்லம்,, எதுவுண்ணாலும் பாத்துக்கலாம்,, அழாத” என்றவளின் கண்ணீலும் கண்ணீர் வர..
அனைவரையும் பார்த்தவள் “எல்லாரும் கொஞ்சம் வெளியே போறீங்களா” என்றவுடன் அனைவரும் வெளியே போக..
என் வீட்டுக்கு வந்து எங்களயே வெளிய போக சொல்வீயா,, நான் மாட்டேன் இது என் பேத்தி நான் போக மாட்டேன் என்பது போல் இந்திரா தேவி அமர்ந்திருக்க..
ஒரு நிமிடம் அவரை பார்த்த வைஷு.. யாழினியை தூக்கிகொண்டு ஓய்வு அறைக்கு சென்றாள்…
error: Content is protected !!