Skip to content
Post Views: 3,796
உண்டு முடித்து பாத்திரங்களை எடுத்துக் கொண்டு கிச்சனுக்கு சென்றவளை பிடித்து நிறுத்தியவர்.
நீ போய் கொஞ்ச நேரம் கண் அசரும்மா சாயந்திரம் பார்த்துக்குவோம் என்று விடாப்பிட்டியாய் அனுப்பி வைத்தார் பாப்பாத்தி.
போட்டது போட்டபடி பாத்திரங்கள் ஹாலில் நிறைந்திருக்க…. மருமகள்கள் அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்.
பாப்பாத்தி தான் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு ஹாலை பெருக்கி துடைத்தார்.
Advertisement
அவருக்கும் அறுபது ஆகப்போகிறது அல்லவா? அவ்வளவு சோர்வு. இடுப்பு வலி பின்னி எடுத்தது சோர்ந்து போனவர் முணங்கியபடி போய் படுத்துவிட்டார்.
கட்டிலில் சரிந்தவள் எப்படி கண் மூடினாள் என்று அவளுக்கே தெரியாது. அவ்வளவு அயற்சி உடல்வலி.
மெல்ல எழுந்த மன்னர் கதவை தாழிட்டு,சன்னல் திரைகளை இழுத்து மூடிவிட்டு ஃபேனை நிறுத்தி ஏசியை மிதமான அளவில் வைத்தான்.
Advertisement
ம்ம்ம்ம் என்று முணங்கிக் கொண்டு புரண்டாள்… அவ்வளவு அசதி போலும். மெல்ல நெருங்கி அவளை அணைத்துக்கொண்டவன் இதமாய் தட்டிக் கொடுக்க….. அழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.
Advertisement
உறங்கி எழுந்தவன் நேரம் பார்க்க நாலே கால் ஆகியிருந்தது.
முகம் கழுவி கிச்சனுக்கு சென்றவன் இஞ்சி ஏலக்காய் போட்டு டீ போடத் தொடங்கினான்.
சரவணன் வந்து ஹாலில் அமர…. அண்ணனுக்கும் டீ கொண்டு வந்து கொடுத்தான்.
Advertisement
உடம்பெல்லாம் அணு அணுவாய் வலித்தது இன்னும் கொஞ்சம் படேன் என்று உடம்பு கெஞ்சியது ஆனாலும் வேலை கிடக்கிறதே…. சோர்வுடன் எழுந்து வந்தார் பாப்பாத்தி.
மகன்கள் இருவரும் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.
அய்யோ என்னப்பா டீ வேணும்னா என்னை எழுப்பி இருக்கலாமே…. சங்கடம் அவருக்கு.
ம்ம்மா இப்படி உட்காருங்க என்ற மன்னர் கிச்சனுக்கு போய் அம்மாவுக்கு டீ கொண்டு வந்து கொடுத்தான்.
அவர் அவசரமாய் டீ குடித்துவிட்டு எழ… ம்மா காத்தான் பொண்டாட்டியை வர சொல்லி இருக்கேன் அவங்க வந்து பாத்திரம் கழுவி தருவாங்க. நீங்க போய் கொஞ்சம் படுங்க என்றான் முறைப்பாய்.
அச்சோ மணி அஞ்சாக போகுதா? இவ்வளவு நேரம் தூக்கிட்டோமா….? வாரி சுருட்டிக் கொண்டு சுபி எழுந்தாள்.
ஏய் இப்போ என்ன? போருக்கு கிளம்புற மாதிரி பரபரன்னு கிளம்பிட்ட? இந்த டீயை குடிச்சுட்டு இன்னும் கொஞ்ச நேரம் படு!
நானும் சரவணன் அண்ணனும் கள்ளக்குறிச்சி வரைக்கும் போய் வரோம். வரும்போது டிபன் வாங்கிட்டு வந்துடறோம் என்றான்.
தாயும் தாரமும் கிச்சனே பழியாய் கிடப்பது கண்டு அவனுக்கு பொறுக்கவில்லை.
“————————–“
சுபி தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருக்க ஓரகத்திகள் இருவரும் காத்தாட வந்து சேர்ந்தனர்.
அவர்களும் சேர்ந்து கொண்டனர் பூப்பறிக்க.
அப்புறம் சுபி வேறென்ன விசேஷம்? அஞ்சலி ஆரம்பித்து வைத்தாள்.
விசேஷம் எல்லாம் ஒண்ணுமில்லக்கா என்று அடக்கமாய் சிரித்தாள்.
அவர்கள் விசேஷம் என்று எதை குறிப்பால் உணர்த்துகிறார்கள் என்று அவளுக்கு புரியத்தான் செய்தது எனவே தான் மழுப்பலாய் சிரித்து வைத்தாள்.
அப்புறம் உங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?
ம்ம்ம்ம் ஊருக்கு போயிட்டு வந்து மூனு வாரம் ஆகுதுக்கா என்றாள்.
மன்னரு எப்படி? சங்கீதா கிசுகிசுப்பாய் கேட்டாள்.
ம்ம்ம் நல்ல டைப் தான் என்றாள்.
நீ வேற?அவரு அம்மா புள்ள அஞ்சலி சிரித்தாள்.
உனக்கு தேவையானதை எல்லாம் வாங்கி கொடுக்கிறாரா? இல்ல அதிலும் கஞ்சத்தனம் பார்க்கிறாரா? சங்கீதா துருவினாள்.
அப்படிலாம் இல்லக்கா எனக்கு எந்த குறையும் இல்லாம பார்த்துக்கிறாரு.
எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை…. வரவு செலவு எல்லாம் நாங்க தான் டீல் பண்றோம்! என் வீட்டுக்காரர் கிரெடிட் கார்ட்,டெபிட் கார்ட் எல்லாம் நான் தான் ஹேண்டில் பண்றேன் அஞ்சலியும் அப்படி தான் அதானால் தான் பாவம் நீ எப்படி இருக்கியோன்னு கேட்டேன் என்றாள் சங்கீதா.
சுபி எந்த பதிலும் சொல்லவில்லை.
அப்புறம் சுபி என் வீட்டுக்காரர் எதுக்கு மன்னரை கூட்டிட்டு கள்ளக்குறிச்சி போயிருக்காரு தெரியுமா? என்றாள் அஞ்சலி.
தெரியாது என்று உதட்டை பிதுக்கினாள்.
அங்கே சேலம் பைபாசில் மனைகள் பிளாட் போட்டிருக்காங்களாம். அதை பார்க்க தான் போயிருக்காங்க.
அப்படியா? என்றாள் அப்பாவியாய்.
என்ன அப்படியான்னு கேட்குற?
சங்கி அக்காவும் நாங்களும் சேர்ந்து வாங்கலாம்னு இருக்கோம்.
தீபாட்ட கூட பேசிட்டோம்…. அவ புருஷனை கலந்து பேசிட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கா.
ம்ம்ம்ம் என்றாள்.
இந்த கிராமத்திலே கடைசி வரை வாழ்ந்துட முடியுமா? நாளைக்கு குழந்தை குட்டின்னு ஆனா பிள்ளைக படிப்புக்கு டவுன் பக்கம் போறது தானே சரியா இருக்கும்.
இப்போவே கஷ்டப்பட்டு கடனை உடனை வாங்கி மனைவாங்கி போட்டா அப்புறம் வீடு கட்டிக்க சுலபமா இருக்கும்.
அட ஏங்கா அவகிட்ட சொல்லி என்ன ஆகப்போகுது? அவ இஷ்டமா அங்கே? அவ புருஷன் என்னைக்கு அவளை மதிக்கிறாரு?
நம்ம நல்லதுக்கு தானே சொல்றோம்… கேட்குறதும் கேட்காததும் அவங்க விருப்பம் என்றாள் சங்கீதா.
அக்கா மன்னரு இந்த ஊரை விட்டு நகர மாட்டாரு..அவருக்கு காடு கரையை பார்க்கணும், ஆடு மாடு வளர்க்கணும் காசு பணம் சம்பாதிக்கணும் அவ்வளவு தான்! பாவம் சுபி மாட்டிக்கிட்டா…. உச் கொட்டினாள் அஞ்சலி.
வாழ வேண்டிய வயசுல வாழ்ந்து பார்க்கணும்! வெறும் காசு பணத்தை வச்சுக்கிட்டு என்ன பண்ண? இன்னும் பட்டிக்காட்டானாவே இருக்க முடியுமா?
ஓரக்கத்திகள் தூண்டி விட்டதில் அவள் சிந்தனை குதிரைகள் எங்கெங்கோ துள்ளி ஓடியது.
“———————–“
இரவு உணவு நேரத்திற்கு சரியாக வந்துவிட்டனர் மன்னரும்,சரவணனும்.
வாங்கி வந்த டிபன் வகைகளை எடுத்து வைத்தான் மன்னர்.
சித்தப்பா சோலா பூரி வாங்கிட்டு வரலையா? எனக்கு நாண், பெப்பர் மஷ்ரூம் கிரேவி வாங்கலையா? ஸ்ருதி முகம் சுருங்கினாள்.
உடம்புக்கு எது நல்லதோ அதை தான் சாப்பிடணும் என்றான்.
ஆப்பம் தேங்காய்பால், அடை அவியல், மினி இட்லி, பொடி தோசை என்று வாங்கி வந்திருந்தான்.
தந்தூரி ஐட்டம் வாங்கினா செலவாகிடும்னு எவ்வளவு சிக்கனமா இட்டலி தோசை வாங்கிட்டு வந்திருக்கான் பாரு! பொருமினாள் அஞ்சலி.
இரவு உணவு முடிந்து குழந்தைகள் விளையாடத் தொடங்கிவிட்டனர். சுபியையும் இழுத்துக் கொண்டனர்.
“————————“
குழந்தைகள் ஆடி அசந்து உறங்கிவிட்டனர்.
சுபியும் போய் படுத்துவிட்டாள்.
பூமாலையோடு மகன்கள் இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
கணவன் வரும் வரை காத்திருந்தாள்.
என்ன சுப்புகுட்டிக்கு அத்தான் இல்லாம தூக்கம் வரலையா? அப்படியான கொஞ்சல்.
ம்ம்ம்ம்ம் நினைப்பு தான்…. அழகாய் நொடித்தாள்.
நினைப்பு தான்… எந்நேரமும் இந்த சுப்பம்மா நினைப்பு தான் ஆசையாய் தழுவிக் கொண்டான்.
நான் உங்க கூட பேசணும்! அவன் மார்பின் ரோமங்களை நிரண்டினாள்.
பேச நல்ல நேரம் பார்த்த போ! பகலில் முகத்தை கூட காட்ட மாட்டேங்கற… நைட்ல கும்பகர்ணியா தூங்குற… கிசுகிசுத்தவன் மெல்ல கரம் கோர்த்து, தலைவருடி, கன்னம் தீண்டி, இதழ் வருடி…. அழகிய காதல் புரிந்தான். அவளும் அவனோடு இணைந்து கரைந்து விட்டாள்.
என்னை பேசவே விடல நீங்க…. போர்வையால் மூடிக் கொண்டு செல்லமாய் அவனை அடித்தாள்.
பேசறத்துக்கா பெட்ரூம்? கண்சிமிட்டி அவள் இதழை பெருவிரல் கொண்டு வருடினான்.
ஐயோ போலீசு போதும் அடுத்த ரவுண்டுக்கு நான் மாட்டேன்…. அவன் மார்பிலே முகம் புதைத்துக் கொண்டாள்.
அவள் வெட்கம் கூட கூட அவனுக்கு விரகம் அதிகம் தான். ஆயினும் பாய்ந்துவிடும் வேங்கை புலி அல்ல அவன்.
சுப்புக்கு சீக்கிரம் ஒரு சர்பிரைஸ் தரப்போறேன் என்றான் அவள் கரம் பற்றி தன் மார்பில் பொத்தியவாரு.
என்ன சர்பிரைஸ்? அடித்து பிடித்து இன்னும் நெருக்கிக் கொண்டாள் அவனோடு.
சொல்லிட்டா அது எப்படி சர்பிரைஸ் ஆகும்?
சொல்லுங்க ப்ளீஸ்! அவன் மோவாயை பிடித்து கொஞ்சினாள்.
இன்னும் ரெண்டு நாளில் தெரிந்துடும் என்றான் அவள் தலையை செல்லமாய் ஆட்டி.
“————————-“
இப்போ எதுக்கு அடித்து பிடித்து எழுந்திருக்க? எரிச்சலுடன் அவள் கரம் பற்றினான்.
அய்யோ…. மணி ஆறாகப் போகுது…. அவள் துள்ளினாள்.
ஆகட்டும்!
கோலம் போடணும்! பளிச்சுனு விடிஞ்ச பிறகு கோலம் போட்டா அக்கம் பக்கத்துல அசிங்கமா சிரிப்பாங்க.
ஏன் இந்த வீட்டு மூத்த மருமகளுங்க எழுந்து இன்னைக்கு ஒருநாளாவது போடட்டும்.
அய்ய…. இதெல்லாம் ஒரு பேச்சா?
இல்லையா பின்ன? இது அவங்களுக்கு வீடு இல்லையா? பிழைப்பை தேடி தான் வெளியூருக்கு போயிருக்காங்க. வீடு வேணாம்னு போகல…. சிடுசிடுத்தான்.
உங்களோட என்னால முடியல… அவனை தள்ளிவிட்டு எழுந்து ஓடினாள்.
அத்தை முடக்கத்தான் தோசையா?
ஆமா சுபி,சங்கீதா கேட்டா.
குழந்தைங்க சாப்பிடுவாங்களா?
அவங்களுக்கு கொஞ்சம் பூரி போடலாம்னு பார்க்கிறேன்.
கணவன் பணிக்கு செல்ல வேண்டுமே என்று சுபி மாமியாரோடு இணைந்து சுறுசுறுப்பாய் வேலையை தொடங்கிவிட்டாள்.
சுப்பு டீ என்றான் அறைக்குள்ளிருந்து.
டீ எடுத்து போனவளின் கரம் பற்றி அமர்த்தினான்.
விடுங்க! பூரி திரட்டணும். முடக்கத்தான் தோசைக்கு கார சட்னி ரெடி பண்ணனும்.
மணி ஏழரை ஆகப்போகுது அவங்க இன்னுமா எழுந்துக்கல? அறுபது வயசு அம்மா இடுப்பு வலிக்க வேலை செய்யணும் அவங்க சுகமா தூங்கணுமா?
உஷ்…. இதை நாம பேசினா சரி வராது கணவனின் வாயை பொத்தினாள்..
எங்கம்மா தான் வாயில்லா பூச்சி ஆச்சே… ஆளுக்கு ஆள் அவங்களை மட்டம் தட்டி வேலைக்காரி மாதிரி வைக்க நினைக்கிறீங்களே…
அவங்க அம்மா வீட்டுக்கு போய் நாலு நாள் தங்கிட்டு வர சொல்லு,போக மாட்டாங்க…. அங்கே இப்படி உட்கார வைத்து சேவகம் செய்ய மாட்டாங்க. சிடு சிடுத்தான்.
இப்படி கடுடுன்னு இருக்காரே இவருகிட்ட இப்போ எப்படி பேசறது? யோசனையுடன் எழுந்து ஓடினாள்.
பார்த்து போடி! பல்லை கடித்தான்.
மாமியாரோடு இணைந்து உதவி செய்து கொண்டிருந்தாள்.
குழந்தைக்கு பால் ஆத்தி கொடுத்துவிட்டு அந்த டம்ளரை சோபாவிற்கு அடியில் வைத்துவிட்டு போனாள் அஞ்சலி.
ஈ மொய்த்து கிடந்த கிண்ணத்தை மன்னர் கொண்டு போய் கிச்சன் சிங்கில் வைத்துவிட்டு வந்தான்.
பிள்ளைகள் கொட்டி விளையாடிய பொம்மைகள் ஹால் முழுதும் சிதறிக் கிடந்தது.
பூமாலை அனைத்து பொம்மைகளையும் அள்ளி கூடையில் போட்டு வைத்தார்.
அஞ்சலி, சங்கீதா இருவருமே எழுந்து வரவில்லை.
என்ன சரவணா இன்னைக்கு லீவா? பூமாலை கேட்டார்.
ஆமாம்பா லீவ் நிறைய இருக்கு. அது தான் ரெண்டு நாள் லீவ் எடுத்திருக்கேன். புதன் கிழமை போகணும் என்றான்.
சரிப்பா…. இன்னைக்கு களை பறிக்க ஆளு வராங்க நான் கிளம்புறேன் என்றார்.
நானும் வரேன் என்றான் சரவணன்.
நீ எதுக்குப்பா வெயில்ல…? உனக்கு இப்போல்லாம் வெயில் சேராது.
பரவாயில்லப்பா… ரொம்ப நாளாச்சு வயலை பார்த்து.
சரி சாப்பிட்டு போகலாம் என்றார்.
ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தனர் மாமியாரும் மருமகளும்.
சுட சுட டிபன் கொண்டு வைத்தாள் சுபி.
ஆண்கள் மூவரும் சாப்பிட்டு கிளம்பினர்.
இதில் ஆயுஷ் பசிக்குது என்று சிணுங்கினான்..
அவனுக்கு பூரியை பிய்த்து போட்டு குருமாவை ஊற்றி வைத்தாள்.
சித்தி எனக்கு ஒயிட் தோசை தான் வேணும்! அடம்பிடித்தாள் ஸ்ருதி.
ஸ்ருதி முடக்கத்தான் தோசை உடம்புக்கு நல்லது கொஞ்சம் சாப்பிட்டு பாரு!
நோ சித்தப்பா… எனக்கு வேண்டாம். கராறாய் பேசினாள்.
அப்போ பூரி சாப்பிடு!
எனக்கு பூரி சாப்பிடுற மூட் இல்லை. ஒயிட் தோசை இட்லி மிளகாய் பொடி தான் வேணும் என்றாள் அடமாய்.
அவ தான் அடமா கேட்குறாளே ஒயிட் தோசையே ஊத்திக் கொடுத்துடு சுபி என்று கொட்டாவி விட்டுக் கொண்டே போனாள் மகளை பெற்ற மகராசி.
செம்ம கடுப்பு மன்னருக்கு. குழந்தைகளுக்கு நல்லதை சாப்பிட சொல்லி ஒழுங்கா தான் வளர்க்கலை…. அதுங்க கூட இருந்து என்ன வேணும் ஏது வேணும்னு பார்க்கிறதுக்கு என்ன?
வேலை வேலைன்னு இழுத்து போட்டுக்காம சரியான நேரத்துக்கு சாப்பிடு! அவள் கன்னம் தட்டி கிளம்பினான்.
“—————————–“
தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்த சுபி ஏதோ கார் வந்து வாசலில் நிற்க யாரென்று எட்டிபார்த்தாள். சிவப்பு நிற ஸ்விப்ட் டிஸயரில் இருந்து சிரிப்புடன் இறங்கினான் மன்னர்.
இவரு என்ன காருல? புரியாமல் அருகில் போனாள்.
ஏய் சுப்பம்மா சர்பிரைஸ்னு சொன்னேனே இது தான் என்று அவளை தோளோடு அணைத்து சாவியை அவள் கையில் கொடுத்தான்.
அவள் முகம் வெளிறிவிட்டது.
சொல்லவே இல்லை? என்றாள் சுரத்தின்றி.
அது தான் சர்பிரைஸ். அவன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.
எதிர்பார்ப்புடன் மனைவி முகத்தை பார்த்தான்.
செகண்ட்ஸா? தொய்ந்து போன குரலில் கேட்டாள்
ம்ம்ம்ம் என்றான்.
.
error: Content is protected !!