Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 9 1

ஜதி தரும்  அமுதம்

அத்தியாயம் – 9



Advertisement

Advertisement

வைஷுவுக்கு  என்ன நடந்தது என்று  தெரியும் முன்னே..

Advertisement

வீ. பி அவளை  இழுத்துக்கொண்டு கார் உள்ளே சென்றவுடனே..

Advertisement

“பிரகாஷ்  வண்டியை  எடு”  என்க..

கார் வேகம் எடுத்தது..

வைஷுவுக்கு விஜயேந்திரன் தான் தன்னை  காருக்குள்  இழுத்து வந்திருக்கிறேன்  என்று உணர்ந்தாள்.

வீ. பி அவளை பின் சீட்டில் இழுத்தவாறே  படுத்த  வாக்கில் அவளை பிடித்து வைத்திருந்தான்..

வீ. பி யின்  மேல் இருந்தவள்  கோபம்  கொண்டு அவனை கண்ட படி அடிக்க ஆரம்பித்து இருந்தாள்..

அவனோ நீ என்ன வேனா செய். என்பது போல் அவளை எழ விடாது  தன் இரண்டு கையால் அவளை பிடித்திருக்க.

 வைஷுவுக்கு வீ. பி நடந்துக்கொள்வது  பிடிக்காமல்,, “என்னை விடு, விடுங்க”  என்று அவனிடம் போராட..

“நீ அமைதியா  என்  கூட  பேசுறேன்னு  சொல்லு விடுறேன்” என்றான்..

“நான்  அமைதியா போகனுமா?,, என்னை  எல்லாரும் பேசுவீங்க, நான் அமைதியா போகனுமா”..

“உன்னை  யாரு அமைதியா  போக சொன்னது?”..

“நல்லா பேசுறீங்க எல்லாரும். என்னை விடுங்க,”  என்றாள்..  “நான்  உன்னை விட வரல,, உன்னை இனி விடவும் முடியாது”.

வைஷுவுக்கு  அவன்   மேல் இருந்து எழுந்தால் போதும்  என்று இருக்க.. “விடுங்க வீ. பி”.. என்றாள்..

அவனோ முடியாது என்பது போல் தலையாட்ட..

மீண்டும் அவனை தன் கையால் தோளில் மார்பிலும்  அடிக்க    தொடங்கினாள்,,  அடித்து முடித்து  கதறி அழ..

வீ. பி யின் கை அவளின் முதுகை வருடி விட.. அதை தட்டி விட பார்க்க.. மீண்டும் வருடி விட்டவனை அவனின் மார்பின் மீது தலை வைத்திருந்தவள், கண்மூடி குழுங்கி அழ..

“போதும் அழாத”  என்றான்.

“எல்லாரும் சேர்ந்த என்னை அழ, வச்சுட்டு அழாத சொன்னா”..  என்று மீண்டும் அழ..

“சரி நீ அமைதியா இருக்கேன்னு சொல்லு உன்னை விடுறேன்”  என்றான்..

அவளின் அழகை குறைந்து அமைதியாக இருக்க..

மெல்ல அவளை தன்னிடம்  இருந்து தூக்கியவன் அவனின் பக்கத்தில்  உள்ள சீட்டில் உட்கார வைக்க. அமைதியாக  இருந்தவள். தன்னை சரி பண்ணி கொண்டு.. மூச்சை இழுத்து  விட்டு.  அமைதியா இரு  என்று  தனக்கு தானே சொல்லி கொண்டாள்…

வீ. பி அவளின் கழைந்த முடியை  சரி பண்ணி விட அருகில் வர..

அவனை பார்த்து முறைத்தவள்.

“பிரகாஷ் வண்டியை ஸ்டாப் பண்ணுங்க”  என்றாள்..

பிரகாஷ் வீ. பியை பார்க்க.. “ஓட்டு”  என்பது போல் கண்ஜாடை காட்ட..

பிரகாஷ் காரை நிறுத்தாமல் ஓட்டினான்..

“சார் காரை ஸ்டாப் பண்ண சொல்லுங்க நான் கிளம்பனும்”..

“எங்கே?!.. என்றான் வீ. பி..

“நான்  எங்கேயோ போறேன்  உங்களுக்கு என்ன சார்,, காரை ஸ்டாப் பண்ண சொல்லுங்க”..

“முடியாது என்கிட்ட பேசு”..

“என்ன  பேசனும்? உங்க கிட்ட பேச  என்ன இருக்கு, என்னை இறக்கி விடுங்க சார்”..  என்றாள் கோபமான குரலில்..

“சரி எங்கே போகனும் சொல்லு. அங்கே போய் விடுறேன்”..

“நான் போயிப்பேன்  விடுங்க என்னை”  என்றவள் காரில் டோரை திறக்க  முயல, அவளால் முடியவில்லை..

“ஆட்டோ மெட்டிக் புல்  லாக், நீ  திறக்க முடியாது” என்றான் வீ. பி…

மீண்டும்   வீ. பி யை அடிப்பது  போல் வந்தவள்.. கார் சீட்டை தன் கையால் அடித்து விட்டு இவனிடம் எப்படி சொல்லி  புரியவைக்க என்று யோசிக்க..

கார் ஒரு பெரிய வீட்டிற்கு  நுழைந்தது.. அது வீ. பியோட இன்னொரு வீடு..

காரை  வீட்டின் முன் நிறுத்திய  பிரகாஷ், கார் கீயை வீ. பி யிடம் கொடுத்து விட்டு,, வைஷுவை பார்த்து “சாரி மேம்”  என்று சொல்லி விட்டு  சென்று விட்டான் பிரகாஷ்..

வைஷு வீ. பியை பார்த்து “எதுக்கு என்னை இங்கே கூட்டிட்டு   வந்தீங்க, உங்க அம்மா சொன்னது நிஜமாக்கவா”.. என்று அழுதவளை..

“அழுதா எல்லாம் சரியாகு முன்னா சொல்லு, நானும் உன் கூடா சேர்ந்து அழுவுறேன்.. எதுவும் அழுதா சரியாகாது,, அப்புறம் எதுக்கு அழுவுற, அழுது உன் உடம்ப கெடுத்துக்காத வைஷு,, கண்ணீர் விட நிறைய விசயம் இருக்கு.. தப்பே செய்யாம நீயேன்  அழுவுற.. யார் உன்ன பத்தி சொன்னா உனக்கு என்ன,,  நீ யாருன்னு  உனக்கு தெரியுமுல்ல, அப்போ ஏன், எதுக்கு வருத்தபடுற.

நீ சொன்னது உண்மையின்னு. உன்ன  தப்பா பேசுனவங்க கிட்ட காட்டீக்கவா?.. முதல்ல  அழுவுறத நிப்பாட்டு,  பேசிக்கலாம் உள்ளே வா”   என்றவன்  கார் கதவை திறந்து  வெளியே  வந்து அவள் பக்க கதவை திறந்து விட்டவன்..

“வா  பொம்மா”   என்றான்..

“நான் வரலை, நான் என் தாத்தா வீட்டுக்கு போறேன்,, என்னை ஸ்ரீரங்கபட்டிணத்துல  விடுங்க”.. என்றாள்..

“சரி  நாளைக்கு போகலாம் வா”..

“இல்லை என்னால  வர முடியாது, நான் தாத்தா வீட்டுக்கு போகனும்” என்று பிடிவாதமாக பேச..

“இங்கே பார் பொம்மா என்னால இப்போ உன்னை கொண்டு போய் விடமுடியாது. மதியம் கூட நான்  சாப்பிடல, ஒரு மீட்டிங்குல இருந்து ஓடி வந்து இருக்கேன்,, எனக்கு ஓய்வு தேவைடி, சொன்னா புரிஞ்சுக்கோ வா காலையில் பேசலாம்”என்றான்..

அந்த வீட்டில் யாரும் இல்லை, கதவு பூட்டியே இருக்க, வீ. பி கதவை திறக்க போனவன், வீட்டின் கதவை திறந்து,  “வா பொம்மளு” என்றவள், வீட்டின்  உள்ளே சென்று விட..

அவளோ போவதா வேண்டாமா? என்று  குழப்பத்தில் இருக்க..

வீ. பி சார் தன்னை விட போவதில்லை ,  என்று  புரிந்து கொண்டவள்.. காரில் இருந்து வெளியே வந்து, வீட்டின் வாசல்அருகே வர..

“வா பொம்மா”… என்றான்..

இவர் வேற பொம்மா, பொம்மளு, கொம்மலுன்னு,, கூப்பிட்டு கிட்டு.. என்று புலம்பிய படியே வீட்டின் உள்ளே வர..

 வீ. பி யாருடனோ போன் பேசிக்கொண்டு இருந்தான்..

இவள்  அவன் பேசுவதை கேட்காமல் இருந்தாள்..

சிறிது நேரம் கழித்து அவன் தன் தந்தையிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்து கொண்டவள்..

வைஷு சோபாவில் அமர்ந்து இருந்தாள். வீ. பி முதலில் சோபாவில் உட்கார்ந்து பேசினான், பின்பு நடந்து கொண்டேன் பேசினான்,, பிறகு கோபமாக  பேசிக்கொண்டே நடந்தான்.

அவன் தனக்காக தான் பேசுகிறேன், என்று  புரிந்துக்கொண்டவள், இவனாவது தன்னை புரிந்து கொண்டானே, என்று நிம்மதி கொண்டாள்…

மீண்டும் வீ. பி தந்தையிடம்  கோபமாக பேசியவன், போனை தூக்கி எறிந்து இருந்தான்..

அவன் போனை தூக்கி எறிந்ததும், பயந்து போனவள், அவனை பார்க்க, குறுக்கும், நெடுக்கமாக நடந்தவன்  கோபத்தில் சுவரில்  தன் கைகொண்டு  தன் கையை அடித்துக்கொண்டவனை பார்த்தவன்.இவள் கோபம் பின்னுக்கு போய்.. “என்னாச்சு சார்?”..

அவனோ அவளிடம் பேசாமல் அவன்  தலையை கோதி தண்ணீர் குடித்து அவனை சரி பண்ணிக்கொண்டிருந்தான்.

அப்படி என்ன சொல்லியிருப்பார்  வீ. பி அப்பா?.. என்று யோசித்தவள்.  அவன் பக்கம் வர..

தெலுங்கில் ஏதோ பேசி கொண்டு இருந்தவன், வைஷு வரவும் “ஒன்னும் இல்ல நீ போய் உட்கார்” என்றான்.

“என்னாச்சு, ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க”..

“எல்லாருக்கும்  நான்  நிம்மதியா இல்லாமல்  திரியனும், அவ்வளவு தானை, ஆடுங்க உங்களால முடியுற வரைக்கும் ஆடுங்க, ஆனா நீங்க நினைக்குறது நடக்காது”.. என்றான் கோபமாக..

 என்ன இவன்? நம்ம  பேச வேண்டியத  இவன் பேசுறான், பேசிட்டு திட்டுறான்.. என்று வைஷு ஒரு மாதிரி பார்க்க..

“என்ன லூசு மாதிரி  உளறுகிறேனா?”..

அவள் “ஆமாம்”  என்று தலையாட்டி பின்பு “இல்லை” என்று தலையாட்ட..

“சார்”  என்று பிரகாஷ் வர..

“எல்லாம்  வாங்கிட்டு  வந்தீயா?”. என்று கேட்க..

“ஊம், சார்”  என்றவன், அனைத்தையும் வீ. பியிடம் கொடுத்தவன்..

வைஷுவை பார்த்து “சாரி மேடம்” என்றான்..

“நான் பேசமாட்டேன்” என்றவள் சொல்லிவிட்டு  சற்று  தல்லி  அமர்ந்து விட..

“காலையில் 6 மணிக்கு வா, நாங்க ரெடியா இருக்கோம்”.. என்றான் வீ.பி…

“ஓகே சார்” என்று பிரகாஷ் கிளம்பி விட..

பிரகாஷ் கொண்டு வந்ததில் உணவை மட்டும் எடுத்துவந்தவன்.. வைஷு அருகில்  வந்து  “பொம்மா”  என்று அழைக்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!