சுபியை கூட்டிட்டு வருவே தானே? பாப்பாத்தி நினைவு படுத்தினார்.
டைம் இருந்தா பார்க்கலாம்! சூழ்நிலை எப்படின்னு சொல்ல முடியாது.
ஸ்டேஷனில் அவனுக்கு சிந்தை பதியவே இல்லை.மாலை மூன்று மணிக்கு பர்மிஷன் பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டான்.
ஏதேதோ உணர்வுகள்…. சிலிர்ப்பு, சிரிப்பு எல்லாமுமாய்…. அவனே அவனுக்கு புதிதாய் தெரிந்தான்.
Advertisement
எதற்கும் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டான், நண்பர்கள் கூட அவனை கல்லுளி மங்கன் என்று கேலி செய்வதுண்டு, அவ்வளவு அழுத்தக்காரன். இந்த நிமிடம் அவனுக்கே அவனை அந்நியப்படுத்தியது.
சர்பிரைஸா அவ முன்னாடி போய் நிற்கணும்! சீக்கிரம் ஊர் வந்துவிடாதா? இதயம் எகிறி அவனுக்கு முன் பாய்ந்து பறந்து சென்றது.
ஊருக்குள் நுழையும் போதே அரசமரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பூவராகன் மருமகனை கண்டு கொண்டார்.
Advertisement
வாங்க மாப்பிள்ளை… எதிரில் வந்து நின்றார்.
Advertisement
வாங்க மாமா போகலாம் என்றான்.
நீங்க போங்க கோயில் திருவிழா பற்றி பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு.பத்து நிமிஷத்தில் வந்துடுவேன் என்றார்.
“—————————“
Advertisement
அடக்க முடியாத ஆர்வத்துடன் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு ஓடினான்.
நானா கேட்டேன் கல்யாணம்? எங்கிருந்து பிடிச்சீங்க அந்த ஆளை…. தாயிடம் கத்திக் கொண்டிருந்தாள்.
அப்படியே வெளியே நின்றுவிட்டான்.
குட்டி என்ன பேச்சு ஆளு கீளுன்னு பல்லை உடைச்சுடுவேன்! நவமணி அதட்டினார்.
போலீஸ் மாப்பிள்ளைன்னதும் பல்லை இளிச்சுக்கிட்டு கட்டிக் கொடுத்தீங்க! அந்த ஆளு எவ்வளவு கஞ்சன் தெரியுமா? எவளும் அந்த ஆளு கூட குப்பை கொட்ட முடியாது.
குடும்பம், கௌரவம்னு நாலையும் நினைச்சு நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்.
எல்லாத்துக்கும் கணக்கு எல்லாத்துக்கும் ஒரு வியாக்கியானம். பொம்பள தோத்தா போ!
இந்த வயசுலேயும் நீ கிழிக்கிற கோட்டை அப்பா தாண்டுறது இல்லை. ஆனா எனக்கு தேடி பிடிச்சு கொண்டு வந்தீங்களே ஒருத்தரை என்னை கால் தூசுக்கு மதிக்கிறது இல்லை.
அவங்க அண்ணனை கட்டின அண்ணிங்க எப்படி வாழறாங்க தெரியுமா? எல்லாம் என் தலைவிதி.
எனக்குன்னு ஆசாபாசம் இருக்க கூடாதா? சம்பாதிக்காத பொண்டாட்டின்னா என்ன சொன்னாலும் கேட்டுக்கணுமா?
சாப்பிட தோன்றவில்லை, பசி என்ற உணர்வு இருந்தால் தானே… கட்டியவள் போதும் போதும் என்ற அளவிற்கு செவிக்கு உணவளித்து அனுப்பி வைத்தாளே…. மனமும் வயிறும் நிறைந்து விட்டது.
பேசிவிட்டோமே என்று கூட அவள் யோசிக்கவில்லை பேசி மாட்டிக்கொண்டோமே என்ற கவலை தான் அவளுக்கு.
“——————————-“
என்ன மன்னரு சுபியை அழைச்சுட்டு வருவேன்னு பார்த்தேன் என்றார் பாப்பாத்தி.
இல்லம்மா நேத்து எனக்கு டைம் இல்லை. நீங்க வேணா போன் பண்ணி கூப்பிடுங்க! நான் மதுரைக்கு கிளம்பணும். ஆளுங்கட்சி மாநாடு பிரம்மாண்டமா நடத்துறாங்க எனக்கு எட்டு நாள் அங்கே பந்தோபஸ்து டியூட்டி போட்டிருக்காங்க.
முகம் வாடி இருந்த மகனை கண்டு கொண்டார் பாப்பாத்தி.
என்ன மன்னரு ஏதாவது பிரச்னையா சாமி? கவலையுடன் கேட்டார்.
அதெல்லாம் இல்லைம்மா நைட் ரெண்டு மணிக்கு தான் வந்தேன் சரியான தூக்கம் இல்லை.
சரிப்பா நீ பார்த்து போயிட்டு வா! நான் சுபிக்கு பேசறேன் என்றார்.
அதுமட்டும் தான் உனக்கு தெரியும்! ஏன்னா இது தான் வெளிப்பார்வை. அவரு கிட்டதட்ட ஒரு கோடி கடனில் இருக்காரு தெரியுமா?
அப்பா அதிர்ந்து விழித்தாள். கூட வேலை பார்க்கிற பிரண்ட்ஸ் யாரோ அவரை பிரெயின் வாஷ் பண்ணி பணம் ஆறுமாசத்தில் டபுள் ஆகிடும்னு சொல்லி ஏதோ ஷேரில் இன்வெஸ்ட் பண்ணி அது திவாலாகி போச்சு.
இவர் இன்வெஸ்ட் பண்ணினதோட இல்லாம இவருக்கு பழக்கபபட்டவங்களை இழுத்து விட்டிருக்காரு. அவங்க உன்னை நம்பி தான் பணம் போடறோம் பணத்துக்கு நீ தான் பொறுப்புன்னு சொல்லி தான் கொடுத்திருக்காங்க.
இப்போ ஷேர் மார்க்கெட் ஊத்திகிச்சு பணம் கொடுத்தவங்க சுத்தி இவர் கழுத்தை நெறிக்கிறாங்க. விஷயம் வெளியில் தெரிந்தால் அவருக்கு வேலை போகிடவும் சான்ஸ் இருக்கு.
என்னப்பா சொல்றீங்க? பதறினாள்.
என்ன பண்றதுனு தெரியாம கையை பிசைஞ்சுட்டு நிற்கிறாங்க! வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்தும் பிரச்னை தீரலை.
நாலு நாளைக்கு முன்னாடி தேவிகா வந்து ஒரே அழுகை. எம்புருஷன் சரியா சாப்பிடறது இல்லை தூங்குறது இல்லை. ஏதாவது செய்துக்குவாரோன்னு பயமா இருக்கு.
வீட்டில் யாருக்கும் தெரியாது நம்ம நிலத்தோட பத்திரத்தை LDB பேங்கில் அடமானம் வைத்து நாற்பது லட்சம் கொடுத்திருக்கேன்.
அப்பா…. திகைத்து அமர்ந்துவிட்டாள்.
இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதை பிடிக்க நினைத்தால் இப்படித்தான் ஆகும்.மெத்த படித்து ப்ரொபசரா இருக்கிற மனுஷன் எப்படி ஈஸியா ஏமாந்துட்டார் பார்த்தியா?
உன் புருஷனை நினைத்து பாரு! ஒவ்வொரு முடிவிலும் எவ்வளவு யோசனை, தெளிவு…. நான் பிரம்மிச்சிருக்கேன் அந்த புள்ளைய பார்த்து.
பேராசை,வெட்டி பந்தா எல்லாம் வாழ்க்கையை அழிச்சுடும்.
இருப்பதை கொண்டு சந்தோஷமா,நிம்மதியா வாழ பழகிக்கணும்!
உங்க அண்ணா கிருஷ்ணா எவ்வளவு வெட்டி செலவு பண்றான் தெரியுமா? ரெண்டு பேரும் IT கம்பெனியில் வேலைபார்க்கிறாங்க ஆனா மாசக்கடைசியில் அஞ்சோ பத்தோ கேட்டு போன் பண்ணுறான்.
உன் புருஷனை பார்த்தியா பெத்தவங்கட்ட இருந்து ஒரு பைசா வாங்காம அவங்களுக்கு தேவையானதை செய்து பக்கத்தில் இருந்து கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கிறாரு.
உண்மையிலே உன் மாமனார் மாமியார் கொடுத்து வைத்தவங்க! புண்ணியம் செய்து தங்கமான பிள்ளையை பெத்திருக்காங்க.
இந்த சின்ன வயசுல எவ்வளவு உழைப்பு உழைக்குது அந்த புள்ள…. பெருமையா இருக்குடா குட்டி,ஒரு நல்லவன் கையில் தான் நம்ம பொண்ணை கொடுத்திருக்கோம்னு.
நம்ம வேதா சித்தி பொண்ணு பிரபாவதி இருக்காளே அந்த பொண்ணை அவ புருஷன் பிசினஸ் பண்ண போறேன் பத்து லட்சம் உங்க வீட்டுல வாங்கிட்டு வான்னு துரத்தி விட்டுட்டான்.
நம்ம மாப்பிள்ளை அப்படியா சொல்லு?
கார் வாங்க போறேன்னு எனக்கு சொன்னார். பணம் கொஞ்சம் கொடுக்கிறேன்னு சொன்னேன் வேண்டாம் மாமா நீங்க கேட்டதே போதும்னு சொல்லிட்டார்.
நீ அங்கே ஓய்வே இல்லாம வேலை செய்றதை சகிச்சுக்க முடியாம தான் நாலு நாள் ரெஸ்ட் எடுக்கட்டும்னு என்கிட்ட சொல்லிட்டு தான் உன்னை விட்டுட்டு போனார்.
என்னை போலவே உன்னை கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கிற ஆண் மகனா தேடித்தான் உனக்கு மாப்பிள்ளை பார்த்தேன்.
நான் தேடிக் கண்டுபிடித்த தங்கத்தை நீ தகரமா நினைக்கிறயே…
இப்படி பொண்டாட்டியை தாங்குற மாப்பிள்ளை யாருக்கு அமையும்?
விழி நீர் பெருக்கெடுக்க சிலையாய் அமர்ந்திருந்தாள்.