Skip to content
Post Views: 2,164
அவள் என்னவென்று இவனை பார்த்தாள்..
Advertisement
“பசிக்குது வா, சாப்பிடலாம், எனக்கு ரொம்ப டயாடா இருக்கு” என்றவன் அவன் சண்டையில் இருந்த டையை கழுத்தில் இருந்து கழட்ட..
அவன் செய்வதை பார்த்து கொண்டு இருந்தவள்,, “நீங்க போய் சாப்பிடுங்க” என்றாள்..
Advertisement
Advertisement
“உன்ன விட்டு தனியா சாப்பிடமுடியாது, வா பொம்மா பசிக்குது” என்று பாவமாக கேட்க..
வைஷுவுக்கு அவள் பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது.. ஒருதன் தண்ணீயோ, சாப்பாடோ கேட்டால், கேட்டவுடனே எடுத்து கொடுத்திறனும், தாகத்துக்கு உடனே தண்ணீ கொடுக்கலண்ணா?. பெரிய பாவம் வந்து சேரும்,, அதே மாதிரிதான் ஒருதர் பசிக்குது அப்படியின்னு சொன்னா , நம்ப கிட்ட இருக்குற உணவை கொடுக்குறத பெரிய புண்ணியம், பசியோட இருக்க விடறது பாவம் என்று கூறியது ஞாபகம் வர..
Advertisement
வைஷு ஒன்றும் பேசாமல் கைகழுவி வர.. வீ. பியும் கைகழுவி டைனிங் டேபிள் வந்தான். உணவை வீ. பியின் முன் பிரித்து வைத்தவள்,, தண்ணீர் கொண்டு வந்து அவன் முன்னாடி வைத்து விட்டு நகர…
அவளின் கையை பிடித்தவன் “சாப்பிடு நாளைக்கு தாத்தா வீட்டுக்கு போக தெம்பு வேணும்” என்றான்…
அவளோ வேண்டாம் என்பது போல் தலையாட்ட..
“பிஸிஸ் டா, சாப்பிட்டு என்னை திட்டு, வாங்கிக்கிறேன்” என்று பாவமாக முகத்தை வைத்து அவளிடம் கேட்டவனை மறுக்க முடியாமல்..
“நீங்க ஏன் சார், என்கிட்ட இப்படி நடந்துக்கிறீங்க, எனக்கு கஷ்டமா இருக்கு, என்கிட்ட பாசமா பேசாதீங்க”… என்றவள் அவன் பக்கத்தில் உள்ள சேரில் தலைக்கு மேல் கைவைத்து அமர்ந்து விட..
“சாப்பிட்டு பேசு” என்று மீண்டும் சொல்ல.. இவன் விடமாட்டான் என்று நினைத்தவள், ஒரு பார்சலை பிரித்து இரண்டு இட்லியை உண்டு முடித்தவள், எனக்கு போதும் என்று எழுந்து சென்று சோபாவில் அமர்ந்து கொள்ள..
வீ. பிக்கு அவள் இவ்வளவு சாப்பிட்டதே பெரிய விசயம் என்று அவனும் உண்டு விட்டு அவள் அருகில் அமர்ந்து “சொல்லு”
என்றான்…
“என்ன சொல்லனும்?” .
“தியேட்டருல என்ன நடந்துச்சு?””..
அவளுக்கு அழுகை வருவது போல் இருக்க,,”அழாமல் சொல்லு” என்றான் வீ. பி…
பிரகதி போன் பண்ணியதிலிருந்து, இந்திரா தேவி தன்னை எதுவும் கேட்காமல் அடித்தது முதல், பின்பு கடைசியில் கேட்டது வரை சொல்லி முடித்து கதறி அழுதவளை..பார்த்தவன்..
அவளின் கையை பிடித்து “வா அம்மா கிட்ட போய் உண்மையா சொல்லுவோம் வா” என்று வைஷுவை அழைக்க..
“வேண்டாம் சார்?”. என்பது போல் தலையாட்டினாள்.
“உன்ன தப்பா புரிஞ்சு கிட்டாங்க, போல வைஷு, அதான், நம்ம போயி சொல்லுவோம் வா”..
“எனக்கு அப்படி ஒன்னும் அவங்க என்னை தப்பா புரிஞ்சுகிட்ட மாதிரி தெரியல,, என் மேல அவங்களுக்கு கோபம், இவளை என்ன செய்யலாமுன்னு நெனச்சு அடிச்ச மாதிரி இருக்கு.. அதுக்கு நீங்க தான் காரணம்?”..
“நா, நானா பொம்மா”..
‘ஆமாம் நீங்க தான், நீங்க எதுக்கு உங்க அம்மாகிட்ட, என்னை மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி இருக்கீங்க, ஏன் அப்படி சொன்னீங்க?”…
“உன்னை எனக்கு பிடிச்சிருக்கு பொம்மளு”…
“சார் சும்மா விளையாடதீங்க, நீங்க எங்கே நான் எங்கே?”..
“பொம்மா உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா, நான் கல்யாணம் பண்ண உன்ன தான் பண்ணிக்குவேன் புரிஞ்சுக்கோ?”..
“சார் ஏன் சார் , ஊருல பொண்ணா இல்ல, என்னை ஏன் சார் இப்படி தர்ம சங்கடம் படுத்துறீங்க, நான் யாரையும் கல்யாணம் பண்ணுற ஐடியாவுல இல்ல”… என்றாள்..
“அப்போ நீ கடைசி வரைக்கு இப்படியே தான் இருக்க போறீயா”.. என்றான்.
“ஆமாம்” என்று வைஷு தலையாட்ட..
“அப்போ யாழினி எப்படி போனாலும் உனக்கு கவலையில்ல”..
“யாழினிக்கு என்ன?”..
“நான் யாரையாவது கல்யாணம் பண்ண அவ யாழினியை நல்லா பாத்துப்பாளா அத யோசிச்சீயா?.. இப்போ என் அப்பா போனுல என்ன சொன்னாரு தெரியுமா?..
அந்த சஞ்சனாவை நான் கல்யாணம் பண்ணிக்கனுமாம்,, அதனால தான் கோபப்பட்டு போனை தூக்கிபோட்டு ஒடச்சேன்”..
அவன் சொன்னதும் சஞ்சனாவா? என்று அதிர்ச்சியானாள்..
“சொல்லு அந்த சஞ்சனாவை நான் கல்யாணம் பண்ணிக்கவா?.. நீ யாழினியை பாத்துக்குற மாதிரி அவ யாழினியை நல்லா பாத்துப்பாளா?.. பாத்துக்க மாட்டா.. அவளுக்கு வீ. பி யோட பொண்டாட்டி அப்படி என்கிற பேரு தான் வேணும்,,.. அவ யாழினியை நல்லா பாத்துக்க மாட்டா,, எங்க இரண்டு பேரோட வாழ்க்கை அவ்வளவு தான்,, பாவம் சித்தி கொடுமையில யாழினி கஷ்ட பட போற.. என்னால அதை பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா, முடியாது.. சண்டை வரும், எல்லாருடைய வாழ்க்கையும் நாசமா போகும்.
நீ என்னை கல்யாணம் பண்ணா, யாழினியை நல்லா பாத்துப்பா, நான் எந்த டென்ஷனும் இல்லாம, என் வேலையை பார்ப்பேன்..
அதனால தான் உன்னை கல்யாணம் பண்ண அம்மா கிட்ட கேட்டேன், அவங்க ஓகே சொல்லு வாங்கன்னு நெனச்சேன், அவங்க ஒத்துக்கல, சண்டை” அவ்வளவு தான் என்று பேச்சை நிறுத்த..
அவன் பேசுறது சரி என்றே தோன்ற, அந்த சஞ்சனாவை நினைத்து பார்த்தாள், அவள் இன்று தியேட்டரில் தன்னை பார்த்து ஏளனமாக பார்த்து, கோணலாக சிரித்ததை நினைத்தவள்,, . அவள் கண்டிப்பாக யாழினியை நல்லா பாத்துக்க மாட்டா,, நான் என்ன செய்வேன்.. யாழினியின் முகம் கண்முன்னே வந்தது,, அவள் சிரிக்கும் போது அழகாய் இரண்டு கன்னக்களில் கண்ணகுழி அழகாய் இருக்கும் அதை நினைத்து பார்த்தவள்,, அது அவளிடம் நிறந்தரமாக இருக்க வேண்டும் என்று நினைத்தவள்..
நான் எப்படி இவரை கல்யாணம் பண்ணிக்க முடியும்.. அது முடியாது.. “சார் நான் வேணா உங்களுக்கு ரு நல்லா பொண்ணா பார்க்கட்டுமா”..
“எப்படி பாப்ப? நல்ல பொண்ணுன்னு எப்படி கண்டுபிடிக்க முடியும்,, நெத்தியில எழுதியா ஒட்டீயா இருக்கும்?”..
“இல்ல சார் பழகி பார்த்து”,,..
“அதுக்கு எல்லாம் நேரம் இல்ல வைஷு” என்றான்..
“சார் என்னை குழப்புறீங்க,, நான் நாளைக்கு என் தாத்தா வீட்டுக்கு போயிருவேன்.. நீங்க ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க”…
“ஓகே வைஷு நீ கிளம்பு, யார் எப்படி போனா உனக்கு என்ன? யாழினியை யார் அடிச்சா என்ன, சாப்பாடு கொடுக்காம, கொடுமை படுத்துனா உனக்கு என்ன?.. இந்த வீ. பி யோட வாழ்க்கை எக்கேடு கெட்டு போகட்டும், நமக்கு என்ன,, நமக்கு தாத்தா வீடு இருக்கு தாத்தா வீட்டுக்கு போகனும்அவ்வளவு தானே வைஷு கிளம்பு”… என்று வீ. பி கோபமாக பேச..
வீ. பி அப்படி சொல்லி முடித்ததும்,, வைஷுவுக்கு அழுகை வர..
“அழுத, கொன்னுடுவேன்,, வாயை மூடு”.. என்றான்..
கண்கள் கலங்கிய படியே “என்னை சுயநல வாதி அப்படியின்னு சொல்லுறீங்களா?”
” உன்னை நான் அப்படி நினைப்பேனா வைஷு, உனக்கு நான் ஒரு உதவி செஞ்சேன்,, அது மாதிரி எனக்கு உதவி செய்யின்னு நான்சொல்ல மாட்டேன்,”, என்றவன்..
“சார்”என்றவள் எதோ பேச வர..
“நீ யாழினிக்காக யோசி,, எனக்காக யோசிக்காத ,, என் விதி, நான் என்ன பண்ணபோறேனோ எனக்கே தெரியல”.. என்றவன் கண்மூடி சோபாவில் சாய்ந்து இருக்க..
வைஷு யாழினியை எண்ணி வருத்தப்பட்டவள்.. அந்த தாய்யில்லா பிள்ளை யார்கிட்ட மாட்டிகிட்டு கஷ்டபட போகுதோ.. என்று வருத்தபட்டவள்..
வீ. பி தன் குடும்பத்துக்கு செய்த பண உதவியை நினைத்து பார்த்தவள்.. வீ. பியையும்,, யாழினியையும் நினைத்து பார்த்தவள்.ஐயோ இது சரி வருமா?.. இந்திரா தேவியை நினைத்து பார்த்தாள், அவர் கண்டிப்பா என்னை ஏற்று கொள்ள மாட்டார்,, வீ. பி சாரையை சும்மா விடவும் மாட்டார்,, எப்படியோ சம்மதிக்க வச்சு கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்,, யாழினி பாவம்.. என்று நினைத்தவள்..
“சார்” என்றாள்…
“நீ போய் தூங்கு,, நாளைக்கு உன்னை தாத்தா வீட்டுல கொண்டு போய் விட சொல்லுறேன்”..
“சார், அது, அது வந்து நான் யாழினிக்காக உங்களை”?..
“உங்களை”?.. என்று வீ. பி இழுத்தபடியே கேட்க..
“உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”…
“அப்படியா!..”?..
“உண்மையா தான் சொல்லுறீயா பொம்மா, அப்பறம் பேச்ச மாத்த கூடாது” என்றான், வீ. பி..
“அப்படி யெல்லாம் இல்லை சார் பேச்சை மாத்த மாட்டேன், யாழினிக்காகவும்,, உங்க நல்லமனசுக்காகவும் தான் சார்”.. “சரி அப்போ, நாளைக்கே கோவில் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்”..
“என்னது நாளைக்கே வா!?!”…..
“ஆமாம் வைஷு, ஒன்ன நெனச்சா உடனே செஞ்சுறனும், தள்ளி போட கூடாது, நான் நாளைக்கு எங்க வீட்டுக்கு போன, அம்மா என்னை மிரட்டி சஞ்சனாவை என் தலையில் கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க,.. நீ தான் சம்மதம் சொல்லிட்டீயே,, அப்பறம் என்ன. நீ போய் தூங்கு, நான் நாளைக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணுறேன்” என்று கூற..
வைஷு குழப்பமாக அமர்ந்திருக்க.. “என்ன பொம்மா?”.
“பயமா இருக்கு?”.. என்றவளின்.
அருகில் சென்றவன்..”இனி நீ எதற்கும் வருத்தபடவோ, பயப்படவோ கூடாது, நான் இருக்கேன், இனிமே உனக்கு எது நடந்தாலும், அது என்னை மீறி தான் உன்கிட்ட வரும், போய் தூங்கு” என்று அவனின் கையை நீட்ட..
நீட்டிய கையை பிடித்து எழுந்தவளை,, போ என்று சொல்ல..
வைஷு தலையாட்டி விட்டு. ஒரு அறை நோக்கி சென்றாள்..
வீ. பி க்கு அப்பாடா,, நம்பிட்டா, என்றவன்.. இன்னொரு அறைக்கு வந்தவன்.. பிரகாஷுக்கு போனில் அழைக்க..
அழைப்பை ஏற்றவன் “சார் மேம் மெரேஜுக்கு ஓகே சொல்லிட்டாங்களா?”
“சக்சஸ்” என்றான். வீ. பி துள்ளி குதித்து….
error: Content is protected !!