Skip to content
Post Views: 3,888
வேறென்ன? உரக்க கேட்டான்.
ஒண்ணுமில்ல உதடு பிதுக்கினாள்.
சாப்பிட்டியா?
ம்ம்ம்ம்ம் இல்லைனா உங்கம்மா விட்டுடுவாங்களா?
Advertisement
உங்க வீட்டுல சொன்னியா?
இல்லை….. ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு சொல்லிக்கலாம்னு அத்தை சொல்லிட்டாங்க!
அதுவும் சரி தான்.
Advertisement
சுனாமிங்க கிளம்பிடுச்சா?
Advertisement
சுனாமியா?
உன் ஓரகத்திங்க தான். நாலு மாசத்துக்கு ஒருமுறை சுருட்டிட்டு போக வருவாங்களே….
அய்யயோ என்ன பேசறீங்க? அவங்களுக்கு தெரிந்தால் அவ்வளவு தான்.
Advertisement
தெரியட்டுமே என்ன இப்போ? பொய்யா சொல்றேன்?
உங்கட்ட முடியாது சாமி.
சரி அதை விடு! பீரோவில் பிரவுன் கலர் வாலட்டில் பணம் இருக்கும். குழந்தைங்களுக்கு ஆளுக்கு இரண்டாயிரம் கொடுத்தனுப்பு!
நிஜமாவா?
ஏன் நம்ப முடியாத நியூஸ் என்ன சொல்லிட்டேன்? எப்போவும் கொடுக்கிறது தான்! என்னால் முடிந்தது அண்ணன் பிள்ளைகளுக்கு. முன்னாடிலாம் ஆயிரம் தான் கொடுப்பேன் இப்போ விலைவாசி ஏறிடுச்சு இல்ல…. சிரிப்போடு சொன்னான்.
எப்போ வறீங்க?
தேடறியா?
இல்லை டைம்பாசுக்கு கேட்டேன்.
சரி அப்போ இன்னும் பத்து பதினைந்து நாளில் வர பார்க்கிறேன்.
எது?
நீ தானேடி சொன்ன டைம்பாசுக்கு தேடறேன்னு….
அக்கறை இருந்தா வரப்போறீங்க!
இம்ப்ருமெண்ட் தான் சிரித்துவிட்டான்.
சீக்கிரம் வருவீங்க தானே…? குரலில் ஏக்கம் கொட்டி கிடந்தது.
ம்ம்ம்ம்ம்ம் என்றவனுக்கு அவ்வளவு தவிப்பு காற்றாய் கலந்து இப்போதே பறந்து அவள் கைகளுக்குள் தஞ்சமடைய மனம் துடியாய் துடித்தது.
வீடியோ கால் பண்ணலாம் என்று தான் நினைத்தான். வேண்டாம் நேரில் பார்த்துக் கொள்வோம் என்று பிடிவாதமாக இருந்து கொண்டான்.
“———————“
காலை டிபனை முடித்துக் கொண்டு கிளம்பினார்கள்.
உடம்பை பார்த்துக்கோ சுபி. நல்ல ஹாஸ்பிடலுக்கு போங்க! பணம் செலவாகிடும்னு கவர்மெண்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடப் போறாரு உன் புருஷரு.
சங்கீதா சொன்ன விதத்தில் கோபம் வந்துவிட்டது சுபிக்கு. ஆனாலும் பல்லை கடித்துக் கொண்டு அமைதிகாத்தாள்.
பை சித்தி என்று குழந்தைகள் கட்டிக்கொள்ள…. ஆளுக்கு இரண்டாயிரம் கொடுத்தாள்.
சுபிக்கு முத்தமிட்டு கிளம்பவே மனமில்லாமல் கிளம்பினார்கள் குழந்தைகள்.
அடுத்த லீவு எப்போ வரும்னு இருக்கு சித்தி….. சுருதி சிணுங்கினாள்.
அடுத்த லீவ் சீக்கிரம் வந்துடும் என்று குழந்தையின் கன்னம் கிள்ளி முத்தமிட்டாள்.
அடுத்த லீவுக்கு வரும்போது குட்டி பாப்பா வந்துடுமா? ஆர்வமாய் கேட்டாள் குழந்தை.
ம்ம்ம்ம்ம் என்று சிரிப்புடன் தலையாட்டினாள்.
அத்தை சுபிக்கு அஞ்சாவது மாசம் சீர் கொடுக்க சொல்லுங்க வந்துடறோம் என்றாள் சங்கீதா.
நீங்க இல்லாமலா என்றார் சிரிப்புடன்.
இரு காரிலும் மூட்டை மூட்டையாய் பொருட்கள் ஏற…. சுபிக்கு சிரிப்பு வந்துவிட்டது. இதை தானே மன்னர் சொன்னான்.
அனைவரும் கிளம்பி பூஜை அறையில் நிற்க எல்லாருக்கும் விபூதி வைத்து பணம் கொடுத்தார் பூமாலை. இது எப்போதும் நடக்கும் நடைமுறை.
உடம்பை பார்த்துக்கோம்மா…. மன்னர் வந்தா சொல்லிடு! ஜெயராமன் விடை பெற்றான். அதுபோலவே சரவணனும் தன் குடும்பத்துடன் விடை பெற்றான்.
இரு காரும் இரு திசையில் பிரிந்து போக…. மனம் கலங்கியது பாப்பாத்திக்கு.
பத்து நாட்களாக வீடே கலகலவென்று இருந்தது. குழந்தைகளின் சண்டையும், சிரிப்பும் பெரியவர்களின் அதட்டலும் வீடு வீடாய் உயிர்ப்புடன் இருந்தது.
இனி அடுத்த விடுமுறைக்கு தான் வீடு நிறையும்!
சுபி சாப்பிடும்மா என்றார்.
நான் சாப்பிடுறேன் நீங்க போய் கொஞ்சம் படுங்க என்றாள்.
இந்த கதையே வேண்டாம். நீ அரை இட்லி சாப்பிடுவ… உன் புருஷன் எனக்கு போன் பண்ணி கத்துவான். எதுக்கு வம்பு? என் முன்னாடியே சாப்பிடு!
பேச்சு கொடுத்துக் கொண்டே நான்கு இட்டலி சாப்பிட வைத்தார்.
எப்போ வரான் உன் புருஷன்?
நாளை மறுநாள் வராறாம்.
சரி நீ கொஞ்சம் நடந்துட்டு போய் படு!
அவ்வளவு களைப்பாக இருந்தார் பாப்பாத்தி.
இந்த பத்து நாளும் அவர் செய்த வேலை அப்பப்பா…. மூன்று வேளையும் அடுப்படியில் வெந்து போனார் என்பதே உண்மை.
எவ்வளவு உடல் அசதியிலும் மனுஷி ஒரு நாள் கூட அலுத்து கொண்டதே இல்லை. தெய்வ பிறவியோ…
“———————–“
புதன் நள்ளிரவு வீடு வந்தான் மன்னர்.
ஹாலில் போர்த்திக் கொண்டு படுத்திருந்த மகனை புரியாமல் பார்த்த பாப்பாத்தி போர்வையை விலக்க முயன்றார். போர்வையின் மீது நெருப்பாய் கொதித்தது.
மன்னரு….. மெல்ல உசுப்பினார். ம்ம்ம்ம்ம் என்று சொல்லக்கூட அவனுக்கு தெம்பில்லை அவ்வளவு அணத்தல்.
பதட்டத்துடன் கணவரை எழுப்பி அழைத்து வந்தார்.
நீ போய் குடிக்க பால் காய்ச்சி கொண்டுவா என்றவர் தண்ணீரில் ல் துணியை நனைத்து நெற்றியில் துடைத்து விட்டார்.
ஆஸ்பத்திரிக்கு போவோமா மன்னரு? கவலையுடன் கேட்டார்.
இல்லப்பா காலையில் பார்த்துக்குவோம். இப்போ மாத்திரை போட்டுக்கிறேன் என்றான்.
ரூமில் போய் படு என்றார்.
இல்லப்பா அவளுக்கு காய்ச்சல் தொத்திக்கும்.
சரி இந்த ரூமில் வந்து படு!
அப்பா நான் இங்கேயே படுத்துகிறேன் என்றான்.
மகனுக்கு மிளகு மஞ்சள் தூள் கலந்த பால் கொடுத்தவர் தைலம் கொண்டு வந்து தேய்த்து விட்டார்.
ம்மா நான் பார்த்துகிறேன் நீங்க போய் படுங்க என்றான்.
நல்ல கதையா இருக்கு என்றவர் மகனுக்கு தலைமாட்டில் பிளாஸ்கில் வெந்நீர் வைத்துவிட்டு அவனுக்கு பக்கத்திலே பாய்விரித்து படுத்துவிட்டார்.
நடுவில் இருமுறை எழுந்து தொட்டு பார்த்தார் பாப்பாத்தி. இன்னும் உடல் சூடாக தான் இருந்தது.
“———————“
நைட் வந்துருவேன்னு சொன்ன மனுஷன் ஒரு மெசேஜ் கூட பண்ணல…. அக்கறை இருந்தா ஓடிவர தோணும்! ஆகாத பொண்டாட்டி தானே நானு….. எதை மனதில் வச்சுக்கிட்டு இந்த மனுஷன் இப்படி நடந்துகிறாருன்னு புரியாமலா இருக்கு.
வாய் தவறி பேசிட்டேன் அதுக்கு பழி தீர்க்க இதுவா நேரம்? அழுகை வந்தது. போன் பண்ணி பார்க்கலாமா என்று கையில் எடுத்தவள் நாம ஏன் பண்ணனும்? அக்கறை இல்லாத மனுஷனுக்கு தொங்கிட்டு நாம கால் பண்ணனுமா? கண்ணீரை துடைத்துக் கொண்டு உருண்டு புரண்டு ஒருவழியாக தூங்கி போனாள்.
காலையில் ஓசையின்றி எழுந்து வேலை செய்ய தொடங்கி விட்டார் பாப்பாத்தி.
சசியை வரவழைத்து மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
மதுரையில் இருந்து பிரயாணம் செய்து வந்த அசதி, எட்டு நாள் டைட்டான டியூட்டி, மாத்திரை கொடுத்த அயர்வு எல்லாம் சேர்ந்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் மன்னர்.
மணி ஆறரை ஆகுதே… எவ்வளவு நேரம் படுக்கையில் புரண்டு கொண்டிருக்க முடியும்?போன் எடுத்து பார்த்தாள். கணவனிடமிருந்து எந்த அழைப்பும் செய்தியும் வரவில்லை. காலை பொழுதே சோர்வாக இருந்தது அவளுக்கு.
அழுகையும் கோபமும் வந்தது. இதெல்லாம் கர்ப்ப கால அறிகுறி என்று அவளுக்கு புரியவில்லை.
காலைக்கடன் முடித்து கதவை திறந்து வெளியில் வந்தவள் கண்டது முகத்தை போர்வையால் மூடி படுத்திருக்கும் உருவத்தை தான்.
அத்தையா? மாமாவா? அய்யோ என்னாச்சு? பதட்டமாய் போய் போர்வையை விலக்கினாள். கணவனை கண்டவள் புரியாமல் பார்க்க…
அவள் வளையொலி சத்தத்தில் சட்டென்று எழுந்தமர்ந்தான்.
என்னங்க…. ஏன் இங்கே…? பயத்துடன் அவன் நெற்றியில் கை வைக்க…
தொடாதடி எனக்கு ஃபீவர். தள்ளிப்போ என்றான்.
அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
என்னாச்சு? விம்மினாள்.
ஒண்ணுமில்ல…. எட்டு நாள் கஷ்டமான டியூட்டி,உடல் அசதி, தண்ணி சேரல….
ஏன் எனக்கு சொல்லல? உதடு பிதுக்கியவளுக்கு கண்ணில் நீர் கொட்டியது.
ம்ம்மா…. சத்தமாய் குரல் கொடுத்தான்.
என்னப்பா என்று ஓடிவந்தார்.
மனைவியை கண் காட்டினான்.
என்னாச்சு சுபி? பால் எடுத்துட்டு வரட்டுமா? பேச்சை மாற்றினார்.
கணவன் வந்து தன்னை எப்படி எல்லாம் கொண்டாடுவான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு அழுகை தான் வந்தது.
சுபி மனுஷன்னா தலைவலி காய்ச்சல் வரது சகஜம் தான். இதுக்கு போய்…. மருமகளை ஆறுதல் படுத்தியவர் அவளை தள்ளியே நிற்க வைத்தார்.
அவனும் இந்த நான்கு நாட்களாக எவ்வளவு ஆசையை தேக்கி வைத்திருந்தான். தன்னை தந்தையாக்கிய மனைவிக்கு ஆயிரம் முத்தமிட்டு அணைத்துக்கொள்ள வேண்டும் என்று கனவில் மிதந்து வந்தான்.
நேற்று காலையில் இருந்தே லேசான இருமல் தலைவலி குளிர் என்று ஆரம்பித்துவிட்டது.
தூரத்தில் அமர்ந்திருந்த மனைவியை ஆசையாய் பார்த்திருந்தான். அள்ளி அணைத்துக்கொள்ள ஆவல் தான் ஆயினும் முடியாதே…
மிகவும் இளைத்து சோர்வுடன் இருந்தாள்.
அவனையே விழி அகட்டாது பாத்துக் கொண்டிருந்தாள்.
என்ன என்று விழியால் கேட்டான்.
அவள் கவலையுடன் அவனை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
ம்மா எனக்கு காபி என்றான்.
நீ பல் தேய்ச்சுட்டு வா என்றவர் காபி போட போய்விட்டார்.
போனை எடுத்துட்டு வா என்றான்.
எதுக்கு? என்றாள் வாடிய முகத்துடன்.
எடுத்துட்டு வா என்றான்.
அவள் போய் எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர மெசேஜ் வந்த சத்தம்.
லவ் யூ சுப்புக்குட்டிம்மா என்ற மெசேஜ்.
விழி நீர் மல்க நிமிர்ந்து பார்த்தாள். அவ்வளவு சோர்விலும் அவன் கண்களில் ஒருவித பூரிப்பு.
அவள் அப்படியே அமர்ந்திருக்க….
என் குட்டி குட்டிமா என்ன சொல்றாங்க? அப்பா வந்திருக்கேன்னு சொல்லு!
அவளுக்கு அழுகை வந்தது. கண்ணீரை துடைத்துக் கொண்டு அறைக்குள் போய்விட்டாள்.
பல் தேய்க்க வெளியில் வந்தவன் அழைத்துவிட்டான் மனைவிக்கு.
எடுத்து காதில் வைத்தவள் எதுவும் பேசவில்லை.
சுப்பு என்னடி? அத்தனை குழைவு அவன் குரலில்.
எனக்கு உங்களை இப்போ கட்டிப்பிடிக்கணும் விசும்பினாள்.
லூசாடி நீ! வைரல் பீவரா இருந்தா என்ன பண்றது.
அதுக்கு என் கண் முன்னாடி வராம இருந்திருக்கணும் தேம்பி அழுதாள்.
செல்லம் போலீஸ்காரன் பொண்டாட்டி இப்படி எதுக்கெடுத்தாலும் அழலாமா?
போங்க உங்களுக்கு என் மேல அன்பே இல்லை… ஏக்கத்தில் சிணுங்கினாள், புலம்பினாள்
அன்பு இல்லாமலா நாலாவது மாசமே உண்டாகிட்ட?
ச்சீ போங்க…. அழுது கொண்டே சிணுங்கினாள்.
நீ அழு மூஞ்சியா இருந்தா என் பொண்ணும் அப்படியே இருந்துட போறா….
போங்க…. நாங்க அப்படியே இருந்துட்டு போறோம்….. விசும்பினாள்.
வயிறு வளர்ந்துட்டா கட்டி பிடிக்க முடியாதே அப்போ என்னடி பண்ண? சீரியஸாய் அவன் கேட்க…. அவளுக்கு வெட்கமாய் வந்துவிட்டது.
அவனுக்கும் அவ்வளவு ஏக்கம்! நல்ல செய்தி சொன்ன மனைவியை எவ்வளவு கொஞ்ச வேண்டும் என்னென்னவோ பேச வேண்டும் என்று அவ்வளவு ஆசை. அவ்வளவு பழம், பருப்பு வகைகள் வாங்கி வந்திருந்தான்.
சரி ஹாஸ்பிடல் போய் வாங்க!
எனக்கு சாதாரண காய்ச்சல் தான்,சசியை கூட்டிட்டு ஹாஸ்பிடல் போய் வரேன். நீ நல்லா சாப்பிடு சுப்பு. ரொம்ப மெலிஞ்சுட்ட…. அவ்வளவு கவலை கொண்டான்.
“———————“
104° காய்ச்சல்,கண்டிப்பா வைரல் பீவர் தான்.நாலு நாளாவது ஆகும் சரியாக. மத்தவங்களுக்கு இன்பெக்க்ஷன் ஆகும் கவனமா இருக்கணும் என்றார் மருத்துவர். காய்ச்சல் விட்டு விட்டு வரும். சாயந்திரத்தில் தான் காய்ச்சல் அதிகமாகும். டேபிலெட் ரெகுலரா எடுக்கணும் என்று எச்சரித்து இரண்டு ஊசி போட்டு அனுப்பி வைத்தார் மருத்துவர்.
ஹாஸ்பிடல் விட்டு வெளியில் வருவதற்குள் சுபி அழைத்துவிட்டாள்.
டாக்டர் என்ன சொன்னாரு?
சும்மா வைரல் பீவர் தான் மூனு, நாலு நாளில் சரியாகிடுமாம்.
மூனு,நாலு நாள் ஆகுமா? அவள் குரல் உள்ளே போனது.
சுப்பு நீ வேணா ஊருக்கு கிளம்பறியா? சசியை கொண்டு வந்து விட சொல்லவா?
அவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.
வீட்டுக்கு வந்தவனை பிடித்துக்கொண்டார் பாப்பாத்தி.
என்னடா சொன்ன என் மருமகளை? அவ ஒரே அழுகை.
ம்மா அவளுக்கு இன்பெக்க்ஷன் ஆகிடுமேன்னு ஊருக்கு போறியான்னு கேட்டேன்.
அவ்வளவு தூரம் பிரயாணம் பண்ணி அவ போக வேண்டாம்.
உடம்பு குணாமாகுற வரைக்கும் நீ பின்னாடி வீட்டில் படுத்துக்கோ! நான் பார்த்துக்கறேன் அவளை.
இந்த மாதிரி நேரத்தில் புருஷனை தேடும் மனசு! என்றவருக்கு அவ்வளவு வருத்தம்.
“————————–“
சுப்பு சாப்பிடு என்று மெசேஜ் பண்ணினான்.
அவள் பதில் அனுப்பவே இல்லை.
ம்மா சுபி சாப்பிட்டாளா?
முருங்கை காய் சாம்பார் கேட்டாளேன்னு செய்து கொடுத்தேன். நல்லா தான் சாப்பிட்டா கொஞ்ச நேரத்துல வாந்தி எடுத்துட்டா….
என்னம்மா…. வாந்தி எடுத்துட்டாளா? டயர்டா இருக்குமே…. அவ்வளவு சோர்வு அவனுக்கு. இந்த நேரத்தில் மனைவிக்கு அருகில் இருக்க முடியாத இயலாமையை எண்ணி நொந்து கொண்டான்.
குழந்தை பெத்துகிறது லேசான விஷயம் இல்லப்பா…. இதெல்லாம் கடந்து தான் வரணும்!
இந்தா ரசம் கரைத்து வச்சிருக்கேன் குடிச்சுட்டு மாத்திரை போட்டு படு என்றார்.
காய்ச்சலின் வீரியத்தில் வாயெல்லாம் கசந்தது அவனுக்கு.
ம்மா அவளுக்கு ஜூஸ் ஏதாவது போட்டு கொடுங்க! ரொம்ப பயப்படுவா என்ன ஏதுன்னு கேட்டு தைரியம் சொல்லுங்க! தவித்து விட்டான்.
நீ அவளை நினைத்து கவலை படாதே மன்னரு நான் பார்த்துக்கறேன், மன்னருக்கு ஆறுதல் சொல்லி போனார் பாப்பாத்தி.
“———————-“
error: Content is protected !!