Skip to content
Post Views: 2,371
“நீ ஓகே தான்,, நான் தான் ஓகே இல்ல, மனசு ஏதோ சரியில்ல நான் இங்கேயே இருக்கேன்”.. என்றவன் கண்மூடி படுத்து விட..
இருவருக்கும் கொஞ்ச நேரம் கூட தூக்கமில்லை,, வெறுமனே கண்மூடி இருந்தனர் இருவருமே…
Advertisement
வைஷுவுக்கு மனதில் நிறைய கேள்விகள்,, என்னை பத்து வருசமா லவ் பண்ணாறாம், அப்போ ஏன் என் கிட்ட வரல,, நடுவுல கல்யாணம் பண்ணி யாழினி வேற,, ஒரே குழப்பமா இருக்கே.. என்று கண்மூடி இருந்தாள். எப்படியோ என் விசயத்தை சொல்லியாச்சு அது போதும் என்று கண்மூடி கொஞ்ச நேரத்தில் அலாரம் அடிக்க..
Advertisement
இருவரும் எழுந்து கொண்டனர், வீ. பி வெளியே சென்று வைஷூவுக்கான உடையை எடுத்து வந்தவன்.. அவளிடம் தர..
Advertisement
அதை வாங்கி பிரித்து பார்த்தாள்.. மஞ்சள் நிறத்தில் காட்டன் பட்டு புடவையும் பச்சை வர்ண பிளாவுஸ்சும் இருந்தது.. ஒன்று பேசாமல் குளியல் அறை நோக்கி சென்றாள்..
Advertisement
வீ. பி இன்னொரு அறைக்கு சென்று குளித்து உடை மாற்றி வந்தான் அவனும் மஞ்சள் நிறத்தில் வேஷ்டியும் வெள்ளை சட்டையும்,, மஞ்சள் கலர் துண்டும் போட்டு ரெடியாகி வந்தான்..
வைஷுவின் அறையை பார்க்க.. அவளோ மஞ்சள் வர்ணபுடவை கட்டி, தலையை துவட்டி கொண்டு இருந்தாள்..
“ரெடியா பொம்மா”..
“அஞ்சு நிமிசம் சார் முடி காயல, இதோ” என்று பேன் முன்னாடி நின்று தலை முடியை காயவைக்க..
“சாரி பொம்மா ஹேர் ட்ரையர் இல்லா”..
“பரவா இல்லை சார்” என்றவள்.. முடியை தலற பிண்ணி, எந்த ஒரு ஆபரணம், மேக்கப் இல்லாமல் வந்தவளை பார்த்தவன்,, அவன் கழுத்தில் போட்டிருந்த இரண்டு செயினையும் கலட்டி வைஷுவின் கழுத்தில் போட..
வேண்டாம் என்று சொல்லும் முன் அவள் கழுத்தில் போட்டு விட்டிருந்தான்..
அவள் ஏன் என்பது போல் பார்க்க..
“உன் கழுத்தில் ஒன்றுமில்லை பொம்மா, எனக்கு புடவை வாங்கனுமுன்னு தோணுச்சு நகை வாங்கனுமுன்னு தெரியலடா சாரி” என்றான்…
“அதான் ஒன்னுக்கு இரண்டா போட்டீங்களே, இதுவே போதும் சார்”..
“வா” என்று அவளை அவன் குல தெய்வமான சிரிஜில்லாவில் உள்ள வேமுலவாடா என்ற ஊரில் உள்ள ஸ்ரீராஜராஷேஸ்வரா சுவாமி கோவிலுக்கு அழைத்து சென்றான்.. இது ஒரு சிவன் கோவில்..
பிரகாஷ் முன்பே சென்று கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் பண்ணி இருக்க..
இரண்டு பேரும் கோவில் வந்து இறங்கினார்கள்.. கோவில் வாசலில் உள்ள பூக்கடையில் வைஷுவுக்கு நிறைய பூ வாங்கி வீ. பி தர..
அவன் குடுத்த அனைத்து பூ சரத்தையும் தலையில் வைத்துகொண்டாள்..
அந்த பூ கடைகாரர்,, வீ. பியை தெரியும் என்பதால், முகத்தையே பார்க்க,, “ஏண்டி” என்றான் வீ. பி…
“பெல்லி அம்மாய்யி வளையல் போடல” என்று கூற..
“உங்க கிட்ட இருக்க” என்றான் வீ. பி..
கடைகாரர் ஒரு பாக்ஸை எடுத்து தர.. அந்த பாக்சில் பச்சை கலர் கண்ணாடி வளையல் இருந்தது..
“வாமா,, நான் போட்டு விடுறேன்” என்று கடைகாரர் சொல்ல..
கடைகாரரிடம் இருந்த பாக்ஸை வாங்கியவன், “நா பொம்மாவுக்கு நேனே ஏஸ்தா,, என்று அவனே அவளுக்கு கைநிறைய வளையல் அணிவித்து இருந்தாள்… தங்க வளையல் வாங்கி குடுத்தாலும், இவ்வளவு மகிழ்ச்சி இருந்திருக்காது வீ. பிக்கு அவ்வளவு மென்மையாக வைஷுவில் கையில் அனைத்து வளைகளையும் போட்டு விட்டவன்,, அவளின் இரண்டு கைகளுக்கும் வளையல் போட்டு முடித்து விட்டு,, அவளின் கைகளுக்கு முத்தமிட,,
கையை வேகமாக இழுத்துக்கொண்டாள் வைஷு..
கடைகாரர் வீ. பியை பார்த்து சிரிக்க.. தன் கையில் இருந்த சில ஐனூறு ரூபாய் தாளை கடைகாரடிடம் தந்தவன், நன்றி சொல்லிவிட்டு.
இரண்டு பேரும் கோவில் உள்ளே நுழைய,, பிரகாஷ் வந்து எல்லாம் ஓகே, வாங்க என்று மணமேடைக்கு இருவரையும் அழைத்து சென்றான்..
வைஷுவுக்கு ஏனோ பயமாக இருக்க, மெல்ல நடந்தவளை கைபிடித்து அழைத்து வந்தான் வீ. பி..
இருவரின் பொறுத்தம் அமோகமாக இருந்தது,, வீ. பியின் மலர்ந்து முகத்தை இது வரையிலும் யாரும் பார்த்தது இல்லை. இன்று அவனுக்கு நெருக்கமான சிலரை பிரகாஷ் அழைத்திருந்தான்,, அனைவரும் வீ. பியை ,, அதிசயமாக பார்ப்பது போல் பார்த்திருக்க.. சடங்குகள் நடந்து கொண்டிருந்தது..
பிரகாஷ் வீ. பி யை பார்த்து “சார்” என்று ஏதோ சொல்லி கண்ணடிக்க.. ஐயரிடம் போதும் சீக்கிரம் மந்திரத்தை சொல்லுங்க வரவேண்டியவங்க வந்துட்டாங்க என்று சொல்ல..
ஐயர் வேகமாக மந்திரத்தை சொல்ல.. இந்திரா தேவி வேகமாக கோவில் உள்ளே தன் குடும்பத்தோட நுழைய.. வீ. பி நினைத்தது போலவே இந்திரா தேவிக்கு தகவல் போயிருந்தது கோவிலின் வழியே,, அவன் திட்டமிட்டதே தன் தாயின் முன் வைஷுவின் கழுத்தில் தாலிகட்டவேண்டும் என்றே.. யாருக்கு தெரியாமல் என்றால் ஊரில் எத்தனை கோவில் உள்ளது..
அவன் எதற்காக இந்த கோவிலை தேர்ந்தெடுத்தான்,, எப்படி விசயம் இந்திரா தேவிக்கு போகும் அவர் வருவார் என்றே எதிர் பார்த்து காத்திருந்தான்…
அவன் நினைத்த படியே பதட்டமாக இந்திராதேவி தன், மகனா? இருக்காது என்று நினைத்தே வர..
வீ. பி சரியாக தன் குடும்பம் தன்னையையும் , வைஷூவையும் பார்க்கும் நேரம் ஷைஷுவின் கழுத்தில் மஞ்சள் கயிரினாள் ஆனா அவர்களின் முறைபடியானா பொட்டு தாலி என்பார்கள்,, இட்லி போன்ற வடிவில் இருக்கும்,, அதை வைஷுவின் கழுத்தில் கட்டியிருந்தான்..
இந்திரா தேவி நிறுத்துங்க என்று சொல்ல வருமுன் தாலியை கட்டி இருந்தான் வைஷுவின் கழுத்தில் நாகில்லி விஜயேந்திரன்…
இந்திராதேவிக்கு கோபம். பலமடங்காக வைஷுவை முறைத்து பார்க்க ..
அவளோ வீ. பி யை தவிர வேறயாறையும் பார்க்கவில்லை..
வீ. பி அவளை பார்த்து வெற்றி புன்னகை ஒன்றே வீச..அவளிடம் இருந்து சிறு புன்னகை ஒன்றே..
இந்திரா தேவிக்கு மகன் செய்த செயல் பிடிக்காமல் “விஜய்” என்று கத்த.. தன் தாயை பார்த்து சிரித்தவன்,, வைஷுவின் தோளில் கையைபோட்டவாறே இந்திரா தேவியின் அருகில் வந்தவன்,, “அம்மா சந்தோசமா”?.. என்று கேட்க..
“நானா ஐ யம் ஹாபி” என்று வீ. பி,யின் மகள் யாழினி அவன் மேல் தாவியவள்,, “ஆண்ட்டி” என்று வைஷுவை அணைத்துக்கொண்டாள்,,
வைஷுவுக்கு யாழினி அணைக்கும் போதெல்லாம் ஏதோ சொல்ல தெரியாத உணர்வு வர. என்னவென்று தெரியவில்லை..
இந்திரா தேவி யாழ் என்று கத்தி இருக்க..
யாழினி பயந்து போனாள்.
“அம்மா” என்று வீ. பி அழைக்க..
“அப்படி கூப்பிடதே என்னை,, என்னை அவமான படுத்ததானே இவள கட்டி இருக்க”..
“நான் ஏன் மா உங்களை அவமானம் படுத்த போறேன்,, நீங்க நேத்து வைஷுகிட்ட நடந்துகிட்டது சரியா?.. தப்பு பெரிய தப்பு,, இவள அடிக்க யாரு உங்களுக்கு உரிமை குடுத்தா?.. நீங்க பண்ண காரியத்தால தான்,, நான் இவ்வளவு சீக்கிரமா இந்த முடிவு எடுக்கு வேண்டியத போச்சு,, இல்லண்ணா இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு இவளை கல்யாணம் பண்ணி இருப்பேன்,, எவ்வளவு நாள் ஆனாலும் இவளை தவிற வேற யாரையும் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன்”.. என்றவனை முறைக்காமல் வைஷுவை பார்த்து இந்திரா தேவி முறைத்து..
“உனக்கு எவ்வளவு திமிர் இருந்த என்ன பையனை கல்யாணம் பண்ணி இருப்ப?”” என்று வைஷுவின் அருகில் வர…
அவளை தன்னோடு சேர்த்து அணைத்து வைத்துக்கொண்டவன்…
“ம்மா,, இவ என்னோட பொண்டாட்டி, நீங்க இனி இவள கண்டிக்க உரிமை இல்ல,, இவள யாரும் ஒரு வார்த்தை பேச கூடாது, அப்படி பேசுனா,, யாழினியை கூட்டிட்டு நான் தனியா போயிடுவேன்” என்ற மகனை பார்த்தவர்,, என் மகனா?.. இப்படி பேசியது அதற்கும் காரணம் இவளே என்று நினைத்தவர்.
“டேய் உனக்காக நான் எப்படி பட்ட பொண்ணெல்லாம் பார்த்தேன்” என்று கண்கலங்கியவரை.
“ம்மா திரும்ப சொல்லுறேன், நான் விருப்ப பட்டு தான் வைஷுவை கல்யாணம் பண்ணி இருக்கேன்”..
என்ற மகனை முறைத்தவர்..
“நான் ஒத்துக மாட்டேன்” என்றார்..
“நீங்க இப்படி பேசுனா, உங்க மகன நீங்க பாக்க முடியாத இடத்துக்கு போயிருவேன்”…
“விஜேயா” என்று கதறி அழுத்தார் இந்திரா தேவி..
நாகில்லி வெங்கடேஸ்வரர்,, மனைவின் அருகில் வந்து அவரின் தோளை தொட..
“பாவா நம்ம விஜேய் எப்படி பேசுறான்னு பாருங்க” என்று அழுக..
“நானா” என்றிருந்தான் வீ. பி..
“நேன் செப்புதா” என்றவர்..
“உனக்கு என்ன பிரச்சனை, அவன் தான் அந்த பொண்ண எனக்கு பிடிச்சு இருக்குன்னு சொல்லி கல்யாணமும் பண்ணிட்டான்,, இப்போ எதுக்கு நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற?.. இந்த பொண்ண பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணா தான் தெரியுது,, தேவையில்லாம பேசி,, உன்மகனை, உன்னவிட்டு போக வச்சுறாத அமைதியா இரு”. என்றார்
“எல்லாரும் என்னையே சொல்லுங்க,, நான் என் வீ. பிக்கு என்னை மாதிரியே பொண்ணு பார்த்தேன், இவன் இவளை?” என்று புலம்ப..
“நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு இந்திரா,, நாம கல்யாணம் பண்ணப்போ நீ ஒரு டான்சர்,, அவ்வளவு தானே,, படி படியா தானே மேல வந்த, அந்த பொண்ணும் நல்லா வருவ, என் பையனை வாழ விடு,, அவ்வளவு நான் சொல்வேன்”… என்றார்..
“நான் ஒன்னும் பேசலை, வா யாழினி நம்ம பேசுனா உங்க அப்பனுக்கும், தாத்தனுக்கும் கோபம் வருது வா நாம வீட்டுக்கு போலம், யாரு வேணாலும் என்ன வேணா பண்ணிக்கட்டும் எனக்கு என்ன என்று புலம்பிய படியே வெளியே சென்றார் இந்திரா தேவி..
யாழினி தந்தையை பார்த்து சிரித்தபடியே தன் அம்மம்மாவுடன் சென்றாள்..
தன் மகள் சௌசன்யாவை அழைத்த நாகில்லி வெங்கடேஸ்வரர்,, தம்பியை, மருமகளையும் அழைத்து கொண்டு கோவிலை சுத்தி வணங்கி விட்டு வீட்டுக்கு வர மாறு சொல்ல…
“நானா” என்று தந்தையை அணைத்திருந்தான் வீ. பி..
“எப்புடு சந்தோசமாக இரு” என்றவர். மருமகளை பார்த்து “வாழ்த்துக்கள் மா” என்றார்.. அவர் சொன்னவுடனே, அவர் பாதம் பணிந்திருந்தாள் வைஷு..
“எப்புடு பாஹா உண்டாலி” (எப்பையும் நல்லா இருக்கனும்) என்று இருவரையும் வாழ்த்தி விட்டு, மனைவியை நோக்கி சென்றார்..
இந்திரா தேவி காரில் வரும் போது கணவரை பார்க்காமல் வர..
அவரின் தோளில் கைபோட்டு தன்னோடு இழுத்துக்கொண்ட நாகில்லி வெங்கடேஸ்வர்,, “கோபமா?”.. என்று கேட்க…
இந்திரா தேவி கணவரின் தோளில் முகத்தை புதைத்து அழ…
“நீ அழுவுற அளவுக்கு இங்க ஒன்னும் நடந்துறல,, வீ. பி அவனுக்கு பிடிச்ச பொண்ணா கல்யாணம் பண்ணி இருக்கான்,, நீ இதுக்கு ஏன் அழுவுற,, சந்தோஷம் தான் படனும்”..
இந்திரா தேவிக்கு கோபம் வந்து “அவள் தான்”என்று வைஷுவை ஏதோ சொல்ல வர..
“இந்திரா இனி அந்த பொண்ணு நம்ம குடும்பம், பார்த்து பேசு,, உன் மகன் முகத்தை பார்த்தீயா?”…
“இல்லை” என்றவரிடம்,,.
“முதலில் உன் மகன் முகத்தை பாரு, எவ்வளவு சந்தோசமா இருக்கான்,, ஏதோ சாதிச்சா மாதிரி, ஏதோ தேடுன பொக்கிஷம் கிடைச்சா மாதிரி அவன் முகம் எவ்வளவு பிரகாசமா இருக்கு நீ பாத்தீயா? “..
மறுபடியும் “இல்லை” என்று தலையாட்ட..
“உன் மகனை நல்லா பாரு, அவன் தான் அந்த பொண்ணை ஏதோ சொல்லி மிரட்டி கல்யாணம் பண்ணி இருக்கான்.. உன் பையன் பண்ணுனதுக்கு நீ அந்த பொண்ண திட்டுற,, அந்த பொண்ணு முகத்தை பார்த்தீயா, பயந்து போன மாதிரி இருக்க..
யாழினியை பார்த்து மட்டும் தான் சிரிச்சா,, கல்யாணம் பொண்ணு மாதிரியா இருந்தா,, ஏதோ மனசு வருத்தத்தோட இருக்குற.. அந்த பொண்ண இனி தப்பா பேசாத.. அப்படி பேசுனா உன் மகன் உனக்கு இல்லை அவ்வளவு தான் நான் சொல்வேன், அவன் வாழ்க்கையை அவன வாழ விடு” என்றார் நாகில்லி.. இந்திரா தேவி அமைதியாக வீடு வர..
சஞ்சனாவுக்கு வீ. பி கல்யாணம் விசயம் தெரிந்து போலீசை அழைத்துக்கொண்டு இந்திரா தேவி வீட்டுக்கு வந்தாள் ..சஞ்சனா?…
error: Content is protected !!