Skip to content
Post Views: 1,318
அத்தியாயம் 16
“சார்! நான் கோர்ட்டுக்கு போவேன்!” பரமசிவம் எகிற,
Advertisement
“கொஞ்ச நேரம் அமைதியா இரு மேன் நானே உன்ன அனுப்பி வைக்குறேன்!” என்ற ஹரிஷ்,
“அப்புறம்! கல்யாணம் எப்ப டா?” என்று ரகுவிடம் திரும்ப,
Advertisement
Advertisement
“டேய்! நானே பிரச்சனை மேல பிரச்சனைனு போய்ட்டு இருக்கேன்.. இப்ப போய்…” என்ற ரகு முகத்தின் வெட்கம் கண்டு ஹரிஷ் இன்னும் பேச,
“ஓஹ்! நல்லா பணக்காரனத் தான் பார்த்து வச்சிருக்கா.. அதான் உன் பின்னாடி வந்து நின்னு அவ்வளவு சீன் போட்டாளா? சார் என் மேல என்ன கேஸ் போட்டீங்க? நான் என் லாயர்கிட்ட பேசனும்.. அவளை சும்மா விடமாட்டேன்..” பரமசிவம் பேசி முடிக்கவெல்லாம் இல்லை.
Advertisement
“அடிங்…” என்ற ஹரிஷ்,
“அம்புட்டு பெரிய இவனா நீ? ஏன் டா அடிச்சி பிரிச்சி மூலைல போட்டு வச்சிருக்கேன்.. நேத்துல இருந்து இங்க தான் இருக்க.. ஒரு நாய் எட்டி பாக்கல இந்த நாய் என்ன பண்ணுதுன்னு.. இதுல இவக லாயர கூட்டியார நாங்க காவல் கிடக்கணுமாம்..” என்று பேச்சினூடே மீண்டும் அடி வெளுக்க,
“சார் சார் சார்!” என்று அத்தனை சார் சொல்லியும் விடவில்லை ஹரிஷ்.
“சார்! குட்டி என் அக்கா பொண்ணு சார்.. நான் தான் கல்யாணம் பண்ணுற முறை மாமன் சார்.. இந்த ஆளு சொல்லுதத எல்லாம் நம்பாத சார்!” பரமசிவம் பேச்சில்,
“ஒரு நிமிஷம் இரு!” என்று அவன் அருகில் ஹரிஷ் சென்று முகத்தை ஆராய்ந்து,
“எல்லா பக்கமும் நல்லா தான் உடைச்சு வச்சிருக்கேன்.. ஆனாலும் எப்படி டா உன் வாய்ஸ் வெளில கேட்குது..” என்று கூறி,
“சார தெரில? பல ஜெயில பார்த்தவறு போல.. அதான் அடி எல்லாம் வேலைக்கு ஆகல..” என்று கூறினான் ரகுவிடம்.
“இவன் அடங்குவான்னு தோணல ஹரி..” என்றான் ரகு அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையோடு.
“இவனுக்கு ஏன் டா இவ்வளவு நேரம் யோசிச்சுட்டு நிக்குற.. தட்டி விட்டா போதும்னு நினச்சேன்.. இவருக்கு லாயர் எல்லாம் இருக்காராம்.. சரி நீ அந்த பொண்ணை கூட்டிட்டு வா.. இல்ல வேண்டாம்.. ஒரு சைன் மட்டும் நான் தர்ற பேப்பர்ல வாங்கிட்டு வா.. இவன் லாயர் வந்து என்னத்த கழட்டுறான்னு நான் பாக்குறேன்..” என்றான் ஹரிஷ்.
“யோவ்! பெரிய இடம்னா என்ன வேணா செய்வியா? நீயே அவளை வச்சுக்க.. ஆனா நான் அவகிட்ட பேசணும்.. பேச சொல்லு.. இல்ல நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..”
“பார்த்தியா ரகு! சார் விட்டு குடுத்துட்டார்.. ரொம்ப தேங்க்ஸ் சார்.. நாங்க கூட்டிட்டு வந்துடுறோம்!” அத்தனை கிண்டல் ஹரிஷ் பேச்சினில்.
“ரகு! நான் சொல்றேன்.. நீ சைன் மட்டும் வாங்கு.. நான் பார்த்துக்குறேன்.. ஏகப்பட்ட கேஸ்க்கு ஆள் சிக்காம பெண்டிங்ல கிடக்கு.. குறைஞ்சது முப்பது வருஷம் நான் கேராண்டி இவனை உள்ள வச்சு செஞ்சிக்குறேன்!”
“ப்ச்! இவன் எப்படி போனா எனக்கென்ன ஹரி.. பட் ஆரா..” என்று சிந்தித்தவன்,
“ஓகே நான் ஆராவோட ஈவ்னிங் வர்றேன்!” ரகு சொல்ல,
“யோவ் இப்ப கூட்டிட்டு வாயா!” என்றான் கெஞ்சல் போல பரமசிவம்.
“அட சும்மா இரு ப்ளடி இடியட்!” என்ற ஹரிஷ்,
“சூர் ரகு? ஒன்னும் ப்ரோப்லேம் இல்லையே?” என்றான்.
“ம்ம் இல்ல ஹரி.. எவ்வளவு நாள் ப்ரோப்லேம்னு அவளும் பயந்துட்டு இருப்பா”
“வெல் அப்ப ஓகே! நீ கிளம்பு ரகு.. மெதுவா கூட்டிட்டு வா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. கோர்ட் வேற ரெண்டு நாள் லீவு.. வெளில வேலையும் இல்ல.. இவனுக்கு நான் கம்பெனி குடுத்துக்குறேன்..” என்று ஹரிஷ் சொல்லி ரகு கிளம்பிவிட்டான்.
*****************
காரில் அலுவலகம் வந்து கொண்டிருந்த ரகு நந்தாவிற்கு அழைத்தான்.
“சொல்லு ரகு!”
“மாமா வேலையா இருக்கீங்களா?”
“ஆபீஸ்ல தான் இருக்கேன்.. என்னனு சொல்லு!” என்று நந்தா கேட்க, நடந்ததை விவரித்தான் ரகு.
“ம்ம் சரியா தானே பண்ணிருக்க.. ஆல்ரெடி தர்ஷி எல்லாம் என்கிட்ட சொல்லிட்டா.. இப்ப உன் பிரண்ட் மூலமா ட்ரீட் பண்றதும் சரி தான்.. தேவைனா ஆராத்யாவை கூட்டிட்டு போறது தான் சரி!” என்றான் நந்தாவும்.
“ஆனா ஆராக்கு டவுட் வருமே நான் ஏன் இதெல்லாம் பண்றேன்னு!” ரகு கேட்க,
“டேய்! டவுட் வரணும் டா.. நீயா எதுவும் சொல்ல போறதில்ல அடலீஸ்ட் நீ பண்றதை வச்சாவது அந்த பொண்ணா புரிஞ்சிக்கட்டும்..”
“மாமா!”
“மாமா தான்.. நான் தான் சொல்றேன்.. நீ ஆராத்யாகிட்ட ஸ்டேஷன்னு சொல்லியே கூட்டிட்டு போ.. அவளா ஏன் இதெல்லாம் பண்றனு கேட்டா அப்படியே கான்வர்சேஷன் பில்டப் பண்ணி எல்லாத்தையும் சொல்லிடு.. டேய் இதுக்கு மேல என்னை பேச வைக்காத டா.. அது சரி வராது.. நான் உன் அக்கா ஹஸ்பண்ட்..” என்று கெஞ்சலான குரலில் கேட்க, ரகு சிரித்தவன்,
“என்னவோ சொல்றிங்க.. ட்ரை பண்ணி பாக்குறேன்..” என்ற ரகுவும் முடிவுக்கு வந்திருந்தான்.
எத்தனை நாள் தான் பார்த்து பார்த்து பேசி நாட்களை மட்டும் கடத்துவது.. புரிந்து கொண்டால் தானே தன்னை தெரிய வரும் அவளுக்கு.. என்று நினைத்து மதியம் நெருங்கும் வேளையில் அலுவலகம் வந்தவன் தன் அறைக்கு சென்றுவிட்டான் எப்பொழுதும் போல.
அழைக்காமலே விஷால் வந்து அறை கதவை தட்ட, “எஸ்!” என்றபடி தன்னிடத்தில் அமர்ந்து கணினியை உயிர்ப்பித்தான் ரகு.
அன்றைய வேலைகளைப் பற்றி கூறிய விஷால், “சார்! நியூ ப்ராஜெக்ட்க்கு டீம்மா நாலு பேர் செலக்ட் பண்ணியாச்சு.. நீங்க லிஸ்ட் பார்த்துட்டிங்கன்னா அதை ஓகே பண்ணிடலாம்!” என்று நியாபகப்படுத்த,
“ஓஹ் நோ!” என்று சட்டென வார்த்தையோடு அந்த நியாபகமும் அப்பொழுது தான் வந்தது ரகுவிற்கு.
‘ஆரா பேர் குடுத்திருப்பாளா?’ மனதில் நினைத்தபடி அந்த லிஸ்ட்டை கையில் வாங்காமல் பார்த்தபடி மட்டும் ரகு இருக்க,
“சார்!” என மீண்டும் மீண்டும் அழைத்திருந்தான் விஷால்.
“ஹான்! யாஹ்!” என்று வாங்கிக் கொண்டவன்,
“ஒரு பத்து நிமிஷத்துல பார்த்துட்டு உங்களை கூப்பிடுறேன்!” என்று கூறி அனுப்பிவிட்டு, அந்த லிஸ்ட்டை திருப்பிப் பார்க்காமல் சுழட்டியபடி இருந்தான்.
மீண்டும் ஒரு ஆயாசம்.. அவள் பெயர் கொடுத்திருந்தால் தான் இல்லாமல் அவள் மட்டுமாய் மற்ற டீமுடன் சேர்ந்து அயல் நாட்டு பயணம். மூன்று மாதம்! நினைக்கவே மலைப்பாய் இருக்க, பிரிக்கவும் தோண்றாமல் அமர்ந்திருந்தவன் வெகு நேரம் எடுத்துக் கொண்டான் அதைப் பிரித்துப் பார்க்க.
“ஓகே! கீப் காம் ரகு! மூணு மாசம் தானே! இப்டின்றதுகுள்ள போய்டும்.. ஆனா அதுக்கு முன்னாடி அவகிட்ட நீ பேசிடு.. உன்னை தெரிய வச்சுடு!” என தனக்குள் தீர்மானம் எடுத்துக் கொண்டான் ரகு.
தொன்னுற்று ஒன்பது சதவீதம் அவள் அந்த லிஸ்ட்டில் இருப்பதாய் தான் தோன்றியது. நேற்றே அவள் சம்மதம் கூறியதாய் விஷால் கூறி இருக்க, போதாதைக்கு இவனும் நேரடியாய் கேட்டிருக்க, அவள் பெயரை முதலில் எதிர்பார்த்து திறந்த ரகுவிற்கு ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாய் அவள் பெயர் அதில் இல்லை.
நிம்மதி என்பதை விட குழப்பம் அதிகமாய் இருக்க, விஷாலை அழைத்தான் தெளிவுபடுத்த.
“இவங்க மட்டும் தானா விஷால்? வேற யாரும் வில்லிங் இல்லையா?” ரகு கேட்க,
“சார் அஞ்சு பேர் கேட்டிருந்தோம்.. நாலு பேர் தான் ரெடியா இருக்காங்க.. பட் தே வில் டு சார்..” என்றான் ரகு கேள்வி புரியாமல்.
“அதில்ல விஷால்! வேற யாரும் வில்லிங்கா இருந்து நீங்க வேண்டாம்னு சொல்லி.. ஐ மீன் நேத்து பத்து பேர்ல மீதி ஆறு பேருமே வரலன்னு சொல்லிட்டாங்களா?” நேராய் கேட்க முடியாமல் ரகு குழப்பிவிட,
“ஆமா சார்! போன ப்ராஜெக்ட் சக்ஸஸ் பண்ண கார்த்திகா, பிரேம், விக்ரம், ஆராத்யா எல்லாருக்கும் இப்ப தான் நாம ப்ரோமோஷன் கொடுத்தோம்.. சோ அவங்க நெக்ஸ்ட் பார்த்துக்கறதா சொல்லிட்டாங்க.. இன்னும் ரெண்டு பேருக்கு ஃபாரின் இன்ட்ரெஸ்ட் இல்லைனு சொல்லிட்டாங்க!” என்று முடித்துக் கொண்டான்.
” ஓஹ்! ஆனா நீங்க நேத்து யாரையோ ஆன் ஸ்பாட்ல ப்ராஜெக்ட்க்கு நேம் குடுத்ததா சொன்னிங்களே.. அது இவங்கள்ள யாரு? ” வேண்டுமென்றே அந்த லிஸ்ட்டில் இருந்த பெயர்களை காட்டி ரகு கேட்க,
“அது ஆராத்யா சார்.. பட் இப்ப அவங்க வரலைனு சொல்லிட்டாங்க..”
“ஓஹ்! எனி ரீசன்?”
“இல்ல சார்! கம்பல்ஷன் இல்லையே அதனால ரீசன் கேட்கல..”
“ஹ்ம்! ஓகே! இவங்களுக்கு நெக்ஸ்ட் ப்ரோசீட் பண்ணுங்க!” என்றவன் நிம்மதியாய் அடுத்தடுத்த வேலைகளை பார்த்து மாலை வர காத்திருந்தான்.
***************
“என்ன மேடம்! நேத்து முதல் ஆளா ப்ராஜெக்ட்ல இருந்திங்க.. இன்னைக்கு என்ன? கிளம்புறது தானே?” என்று கார்த்திகா கேட்க,
“அது என் இஷ்டம்.. உனக்கு என்ன?” என்று திருப்பி கேட்டாள் ஆராத்யா.
“உன் இஷ்டமா? உனக்கு இஷ்டபட எல்லாம் தெரியுமா டி?” என்று ஆச்சர்யம் காட்டினாள் கார்த்திகா.
“என்ன கொழுப்பா?” ஆராத்யா கேட்க,
“இல்ல கடுப்பு!” என முறைத்தவள்,
“நானும் நீயா சொல்றியானு ரெண்டு நாளா வெய்ட் பண்ணறேன்.. வாயே திறக்க மாட்டுற நீ! யார் டி அவன்? குட்டி பட்டினு.. ராம் சார் எங்களை எவ்வளவு கேவலமா கேட்டார் தெரியுமா? நீங்க எல்லாம் என்ன பிரண்ட்ஸ்னு கேட்டார்.. அசிங்கமா போச்சு டி!” என்றாள் கோபமாய்.
“ராம் சாரா? இது எப்ப?” என்று ஆராத்யா விழிக்க,
“நீ வேற! நீ மயங்கி விழுந்த அப்புறம் என்னன்னவோ நடந்துச்சு.. ரோபோக்கு உயிர் வந்தா எப்படி இருக்கும்.. அந்த மாதிரி வேற ஒரு ரகுராமை பார்த்தேன் டி நான்.. மனுசன் என்னமா கவனிச்சார் தெரியுமா உன்னை.. ப்ச்.. எனக்கு கூட ஒரு டவுட் இருக்கு அவர் மேல.. ஆனா அதை சொன்னா இவனுங்க அடிக்க வர்றானுங்க!” என்று மொத்தமாய் உளறி வைக்க, புதிய தகவல்களில் திடுக்கிட்டு போயிருந்தாள் ஆராத்யா.
“ப்ச்! எங்கேயோ ஸ்டார்ட் பண்ணி எங்கேயோ போயாச்சு! சரி சொல்லு… அவன் யாரு?” என்று கேட்க,
“உனக்கு சொல்ல கூடாதுன்னு இல்ல கார்த்தி.. ஆனா வேணாம்.. அவன் மட்டும் இல்ல.. என்னை தவிர எனக்கு தெரிஞ்ச என்னோட பழைய நியாபகம் யாருக்கும் வேண்டாம்!”
“ஆரா!”
“ப்ளீஸ் கார்த்தி! அண்டர்ஸ்டாண்ட்!” ஆராவின் கெஞ்சலுக்கு மதிப்பாய் வேறெதுவும் அதன்பின் கேட்கவில்லை கார்த்திகா.
error: Content is protected !!