Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 19.1

அத்தியாயம் 19

மனைவி தன்னோடு வாழ சம்மதித்ததில் இரவு ஒன்பது மணிபோல்  விட்டிற்கு வந்தவனின் மனம் சந்தோசத்தில் மிதக்கவே முகமும் ஜொலித்தது.

கதவை திறந்து வைத்து மகன் வரவிற்காக காத்திருந்த செல்லம்மாவும் வில்வராஜும் “வா திருனேசு, இவ்வளோ நேரம் வேலையிருக்குமா? மதியம் போன் செய்தேன், எடுக்கல” என பரபரத்தார் செல்லம்மாள்.



Advertisement

“வேலையிருந்ததும்மா, மெஸ்க்கு போன் பண்ணி மதியம் சாப்பாடு கொடுக்க சொன்னேன், கொடுத்துட்டேனு சொன்னாங்க. நீங்க சாப்பிட்டிங்களா? சாப்பாடு பிடிக்கலனு சாப்பிடாம இருந்துட்டிங்களா?”

“நீ சொல்லியிருப்பனு எனக்கு தெரியாது திருனேசு, அவங்க கொண்டு வரதுக்கு முன்னாடியே நான் சமைக்க ஆரம்பிச்சிட்டேன்”

“சமைச்சிங்களா? ட்ராவல் செய்த டையர்டோட எதுக்கு செய்திங்க? மளிகை, காய் ஏதும் வீட்டுல இருந்திருக்காதே, வெளில போனிங்களா?” என்றான் கோபமாக.

Advertisement

“ரொம்ப தூரம்லாம் போகலப்பா, மசால் செலவெல்லாம் வீட்டுலயிருந்தே எடுத்துட்டு வந்திருந்தேன். காய்கறி மட்டும் இங்க பக்கத்துல இருக்க மளிகை கடைல வாங்கினோம், அப்பாக்கு கடையில வாங்கி சாப்பிடக்கூடாதில்ல? அதான் நானே சமைச்சேன்” என்றார்

Advertisement

“சரி விடுங்க, இனி இப்படிலாம் வெளில போகக்கூடாது” என்றவன், “நைட் சமைக்க என்ன வேணும்?” என்றான்.

“நைட்டுக்கு ஏதும் வேணாம் திருனேசு, மதியம் நீ வருவனு வெய்ட் பண்ணி நாலு மணிக்கு மேலதான் சாப்பிட்டோம். பழம் போதும்”

“சரி நான் போய் பழம் வாங்கிட்டு வரேன்”

Advertisement

“இல்லப்பா, நம்ம காட்டுல இருந்து செவ்வாழை, கொய்யாப்பழம்லாம் எடுத்துட்டு வந்துருக்கேன், நீ சாப்பிட கிச்சடி செய்யட்டு மா?” என்றார்.

“வேணாம்மா, எனக்கு பசியில்ல, நானும் அஞ்சு மணிக்குத்தான் சாப்பிட்டேன்” என்றவன் அறைக்குள் சென்றுவிட்டான்.

முகம் கழுவி உடை மாற்றி வருவான் என்று செல்லம்மாள் வில்வராஜ் காத்திருக்க, அரைமணி நேரம் ஆகியும் திருனேஷ்வரன் வெளியே வரவில்லை.

முகம் கழுவி வந்ததும் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வர, ஏற்று பேசியவன் முகம் அத்தனை கடுமையாக மாறியது. இருப்பினும் சற்றே நிதானித்து, “நீங்க யார்? என் நம்பர் எப்படி கிடைச்சது?” என்றான்.

“உங்களை ஃபாலோ பண்ண ரூபலஷ்மி மேடம் வச்ச ஆள்சார் நான். இப்போவும் இதையெல்லாம் மேடம்கிட்டதான் சொன்னேன், அவங்கதான் உங்க நம்பர் கொடுத்து உங்ககிட்டயே சொல்ல சொன்னாங்க” என்றார் பழனிசாமி.

பழனிசாமி சொன்ன விசயங்களை திருனேஷ்வரனால் கிரகிக்கவே முடியவில்லை. இதைப்பற்றி தற்போது பேசினால் பெரிதாய் காயப்படுத்தி விடுவோம், ஆனால் நிச்சயம் பேச வேண்டும், என்று தன்னை நிதானப்படுத்த முயன்றான்.

எத்தனை முயற்சி எடுத்தும் திருந்தவேமாட்டாரா? என்னை புரியவே புரியாதா? என்று அன்னை மீது கோபம் கோபமாக வந்தது.

“திருனேசு..” என்று வில்வராஜ் அழைக்கவே, “டோர் லாக் பண்ணிட்டு படுங்கப்பா, எனக்கும் டையர்டா இருக்கு” என்றான் உள்ளிருந்தபடியே.

“சாப்பிடாம கூட படுக்கற? உடம்பு என்னத்துக்கு ஆகுறது?” என்றார் செல்லம்மாள்.

திருனேஷ்வரனிடமிருந்து பதிலில்லாமல் போகவே, “உன்னோட இருக்கத்தான வந்தோம்? பொழுதுக்கும் ஆஃபீஸ்ல இருந்துட்டு இப்போ ரூம்க்குள்ள அடைஞ்சிட்ட” என்றார் ஆற்றாமையோடு.

“காலைலயிருந்து உக்கார்ந்து வேலை பார்த்து ரொம்ப டையர்டா இருக்கும்மா, ரெஸ்ட் எடுத்தாதான் நாளைக்கு வேலை பார்க்க முடியும்” என்றான் சோர்வாக.

“அதுக்கு சாப்பிடாம கூட படுப்பியா?”

“ஈவ்னிங்தான் சாப்பிட்டேன், பசிக்கலனு முன்னவே சொன்னேனேம்மா” என்றவன் தற்போதும் உள்ளேயேதான் இருந்தான்.

“வெளில வா திருனேசு, அரைமணி நேரமாவது பேசிட்டிருக்கலாம், அப்புறம் பசிக்கும், சாப்பிட்டு தூங்குவ” என்றார் செல்லம்மாள்.

வெளியே வந்தவன், “எனக்கு டையர்டா இருக்குனு சொல்றேன், புரிஞ்சுக்கிறிங்களா? இன்னைக்கு விட நாளைக்கு ஒர்க் அதிகம். என் மைண்ட் எல்லாம் அதுலதான் இருக்கு” என்றான் சலிப்பாக.

“சரிப்பா, சரிப்பா, நீ போய் படு, நாளைக்கு பேசிக்கலாம்” என்றார் வில்வராஜ்.

தந்தை சொன்னதும் உடனே உள்ளே சென்றிருந்தான். அடுத்தநாள் காலை ஏழு மணிக்கு வெளியே வந்த மகனின் தோற்றம் கண்டு, மிகுந்த ஏமாற்றம் அடைந்தார் வில்வராஜ்.

திருனேஷ்வரன் அலுவலகத்திற்கு தயாராகி வந்திருக்க, “இவ்வளோ சீக்கிரம் போகனுமா திருனேசு?” என்றார் செல்லம்மாள்.

“ஆமாம்மா” என்று தனது பணியைப் பற்றி விளக்கி, “இன்னும் ஒரு மாசத்துக்கு இப்படித்தான் இருக்கும்” என்றவன், “சமைக்க என்னம்மா வேணும்?” என்றான்.

“பொழுதுக்கும் சும்மா உக்கார்ந்துட்டு எப்படி இருக்கிறது? கடை பக்கத்துலதான் இருக்கு, வாங்கி சமைச்சிக்கிறேன்” என்றவர் முகம் ஏமாற்றத்தை காண்பித்தது.

“சரிம்மா நான் கிளம்பறேன்”

“நாளைலயிருந்து சீக்கிரம் சமைச்சிடறேன், வீட்டுல இருந்தே எடுத்துட்டு போய்டு” என்றார்.

“பார்க்கலாம்மா” என்று கிளம்பினான்.

அடுத்து வந்த நாள்களிலும் காலை ஏழு மணிக்கு கிளம்புபவன், இரவு பத்து மணி போலத்தான் வருவான். காலையில் அன்னை சமைத்ததை உண்டு செல்பவன், மதியத்திற்கு எடுத்து செல்ல மாட்டான். இரவும் உண்டுவிட்டேன் என்பான்.

மூன்று நாள் பொறுத்திருந்த செல்லம்மாள் நான்காவது நாள் காலையில், “ஞாயித்துக்கிழமைலயும் போகனுமா?” என வெடிக்க ஆரம்பித்தார்.

“ஒரு மணி நேரம் கழிச்சு போறேன்” என்றதும், “டீ போட்டுட்டு வரேன், உக்காரு” என்று சமையலறை சென்று பத்து நிமிடத்தில் டீயோடு வந்தார்.

வாங்கி பருகியவன், “நீங்க வந்த அன்னைக்கே கார்டியாலஜிஸ்கிட்ட அப்பாயின்மண்ட் கேட்டுருந்தேன், இன்னைக்கு ஈவ்னிங் அப்பாயின்மண்ட் கிடைச்சிருக்கு. நாலு மணிக்கு போகனும்ப்பா” என்றான் தந்தையிடம்.

மகன் தவறிழைக்கவில்லை நாம்தான் மகனை புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்பதை நினைத்து நினைத்தே சில மாதங்களுக்கு முன்னே வில்வராஜிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

மருத்துவமணை சென்றதில் மைல்ட் அட்டாக், இதயத்திற்கு ரத்தம் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது, மாத்திரையில் சரி செய்திடலாம், ஆனால் கவனமாக இருக்க வேண்டும் என்றிருந்தனர்.

“எதுக்குப்பா? போன வாரம் போய் செக்கப்பண்ணிட்டு வந்துட்டேன், மாத்திரைலயே கட்டி கரையுதுனு டாக்டர் சொன்னாங்கனு உன்கிட்ட சொன்னேனேப்பா”

“சொன்னிங்கப்பா, என்னோட பிஸி ஸ்கெட்யுல் முடிஞ்சதும் நானே அழைச்சிட்டு வந்து பார்க்கலாம்னு நினைச்சிருந்தேன். நீங்களே வரவும் செக் பண்ணிடலாம்னு நினைச்சேன். இவர் எக்ஸ்பீரியன்ஸ் டாக்டர். இவர்கிட்ட செக் பண்ணிட்டா சேட்டிஸ்ஃபைடா இருக்கும்”

“சரிப்பா, போய்ட்டு வரலாம்” என்றார்.

“ஆஃபீஸ் எங்க இருக்கு? இங்கயிருந்து ரொம்ப தூரமா?” என்றார் செல்லம்மாள்.

“ம் கொஞ்சம் தூரம்தான்ம்மா, பைக்ல போகவே ஒருமணி நேரம் ஆகும்”

“அப்போ ஆஃபீஸ் பக்கத்துலயே வீடு பார்த்துக்கலாமில்ல?”

அன்னை எங்கு சுற்றி எங்கு வருவார் என்று அறிந்தவனாக “இந்த வீடு நான் ஜெயில்லயிருந்து வெளில வந்ததும் மேடம் தயவால கிடைச்ச வீடும்மா. மேடம் மட்டும் இந்த வீட்டை ஏற்பாடு பண்ணலைனா ப்ளாட்ஃபார்ம்லதான் இருந்திருப்பேன்” என்றான்.

“உன் தாத்தா சேர்த்து வச்ச அஞ்சு ஏக்ரா காடும், உன் அப்பா கட்டின வீடும் இருக்கும்போது நீ எதுக்கு ப்ளாட்ஃபார்ம்ல இருக்கனும்?”

பொறுக்க முடியாமல் “பெத்தவங்களே என்னை நம்பாதபோது சொந்த வீடே சுடுகாடா தெரிஞ்சது. அதான் அங்க வரல” என்றான் இறுகிய முகத்தோடு.

“திருனேசு” எனப்பதற, “ம்மா ப்ளீஸ் தயவு செய்து அழ ஆரம்பிச்சிடாதிங்க” என்றான் கட்டளையாக.

பத்து நிமிடம் அமைதியில் கழிய, “வேற என்னம்மா பேசனும்? எனக்கு வேலையிருக்கு” என்றான்.

“உனக்கு இங்கதான் தொழில்னா சொல்லு, கொஞ்சம் காட்டை வித்துட்டு இங்க வீடு வாங்கிக்கலாம், எங்களால அங்க தனியா இருக்க முடியல”

“வேணாம்மா”

“வேணாம்னா? காட்டை விற்க வேணாமா? இல்ல நாங்க உன்னோட இருக்க வேணாமா?”

கோபம் வந்தபோதும் “காட்டை விற்க வேணாம், சொந்த வீட்டுலதான் இருக்கனும்னு இல்ல, வாடகை வீடு பார்த்துக்கலாம், அடுத்த மாசமே பார்க்கலாம்” என்றான்.

“உனக்கில்லாதது எதுக்கு? சொந்தமாவே வாங்கிக்கலாம்” என்றார் பிடிவாதமாக.

“ஏன் இங்க விட்டு வர அந்த போலீஸ்காரி ஒத்துக்கமாட்டாளா?” என்று வழக்கம்போல் வார்தையால் வதைத்தார் செல்லம்மாள்.

“செல்லம்மா” என்று வில்வராஜ் பதறி அதட்ட, “அம்மா இப்படி பேசலனாதான்ப்பா அதிசயம்” என்றவன், செல்லம்மாள் யார் யாரிடம் என்னென்ன கேள்விகள் கேட்டார் என்று விளக்கி, “அம்மா விசாரிக்கும்போது நீங்களும்தானே பக்கத்துல இருந்திங்க? இப்போ எதுக்கு கோபப்படுறிங்க?” என்று தந்தை மீதும் குற்றம் சுமத்தினான்.

“ஓ… எங்களை வேவு பார்க்க கூட ஆள் வச்சிருக்காளா?”

“சொல்லுங்க… இன்னும் என்னென்ன சொல்லனுமோ சொல்லுங்க, இஷ்டத்துக்கு நினைச்சுக்கோங்க… ஆனா எல்லாமும் செய்துட்டு என்மேல அன்பிருக்கமாதிரி மட்டும் காட்டாதிங்க. என்னால சகிக்க முடியல” என்றான் கடுப்பாக.

“திருனேசு” என்று உடைந்தவர், “உன்னை தப்பா நினைக்கலடா, என் அன்பை பொய்ன்றியா?” என்றார் கண்ணீரோடு.

“எங்கயிருந்துதான் உங்களுக்கு அழுகை வருமோ?” என்று கடுகடுத்தவன், “மேடம் தப்பானவங்கனு எதை வச்சு சொல்றிங்க?” என்றான்.

“ஒரு கல்யாணம் ஆகாத பையன் இருக்க இடத்துக்கு எதுக்கு வரா? உனக்கு வீடு பார்த்து வைக்கனும்னு அவளுக்கு என்ன அக்கறை?”

“அவங்களை மாதிரி நல்லவங்க இருக்கிறதாலதான்ம்மா என்னை மாதிரி சில பேராவது பொய் வழக்குலயிருந்து தப்பிக்கிறாங்க. என்னை புரிஞ்சவங்களுக்கே அந்த நேரம் என்னை புரியல, அவங்க மட்டும்தான் என்னை நல்லவிதமா நினைச்சாங்க. அவங்க மட்டும் இல்லைனா சத்யப்ரகாஷ்கிட்ட வாங்கின காசுக்கு, போக்சோ மட்டுமில்ல, கஞ்சா கடத்தல், கொலை வழக்குனு இன்னும் பல வழக்குல மாட்டியிருப்பேன்”

“அப்போ உதவி செய்ததால அவளை நல்லவனு நினைச்சிட்டிருக்கடா, அவ உன்னை” என்றவருக்கு ரூபலஷ்மியின் எண்ணத்தை சொல்ல வாய் வரவில்லை.

“என்னை… சொல்லுங்கம்மா, ஏன் பாதில நிறுத்திட்டிங்க?” என்றான்.

செல்லம்மாள் முகம் பெரும் தவிப்பிற்குள்ளாக, “அப்போவும் நீங்க என்னை நம்பல, இப்போவும் உங்களுக்கு என்மேல நம்பிக்கை இல்ல” என்றான் மிகுந்த வேதனையோடு.

“உன்மேல நம்பிக்கை இல்லாம இல்ல திருனேசு, அந்த பொம்பள” எனும்போதே, “தயவு செய்து அவங்களை மரியாதை இல்லாம பேசாதம்மா, எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு” என்றான்.

“இல்லடா” என்று மன்றாட, “யார் வேணா எப்படி வேணும்னாலும் இருக்கட்டும், என்னை உங்களுக்கு புரிஞ்சிருந்தா இப்படி எல்லார்கிட்டயும் விசாரிச்சிருக்கமாட்டிங்க, விசாரிச்சதோட இல்லாம என்கிட்ட கேட்கவும் நாலு நாளா தவிச்சிட்டிருக்கிங்க..

மேடமைத்தான் தப்பா நினைச்சேன்றிங்க, யாரோட வச்சு தப்பா நினைச்சிங்க? இப்படி கேட்டா அவங்களோட சேர்த்து எனக்கும்தான் அசிங்கம்னு கொஞ்சம் கூட யோசிக்கமாட்டிங்களாம்மா?” என்றான் ஏக கடுப்போடு.

“என்னை மன்னிச்சுடுடா” என்று வருந்தி சரணடைய, “உங்களை மன்னிக்குற இடம் எனக்கு வேண்டாம்மா, முடிஞ்சா என்னை புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க.

பத்து வயசு வரைக்கும்தான் உங்களோட இருந்தேன்னாலும், நான் உங்க ரத்தம்தானே? நீங்க நினைக்கிற மாதிரி என்னைக்கும் தரங்கெட்டு போகமாட்டேன்.” என்றான் மன்றாடலாக.

திருனேஷ்வரனின் முகம் மொத்தமாய் சிவந்திருக்க, கைகளில் நரம்புகள் புடைத்திருக்க, கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது. பெற்றவர்களிடம் தன்னை புரிய வைக்கும் நிலை… அதிலும் இந்த விசயத்தில் என்பது பெரும் வேதனையை உண்டாக்கியிருக்க, கண்ணீர் வெளி வந்திடுமோ என்று பயந்தவன் சட்டென வெளியேறினான்.

மகனின் இந்த நிலை செல்லம்மாவாலும் தாங்க முடியாமல் போக, “திருனேசு” என்று பின்னோடு ஓடிச்சென்று மூச்சு வாங்க முன்னே நின்று “ஒரு நிமிஷம் வாடா” என்றார் மன்றாடலாக.

பெரு மூச்சிழுத்து தன்னை சமன் செய்ய முயற்சித்து, “கோபமா போறேனேனு நினைக்காதிங்க, முக்கியமான வேலையிருக்கு. சாப்பிடாம இருந்து என்னை கஷ்டப்படுத்தாதிங்க, மூனு மணிக்கு வந்து அப்பாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்” என்று கிளம்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!