Skip to content
Post Views: 3,618
தான் கொண்டு வந்த உடைமைகளை க்ளோஸட்டில் (closet ) அடுக்கிக் கொண்டிருந்த பவித்ராவின் மொபைல் அழைத்தது. யாரென்று அவளுக்குத் தெரியும்… அவள் தனியே ரிங்க் டோன் எல்லாம் செட் செய்யவில்லை என்றாலும் அழைப்பில் யாரென்று அவள் அறிவாளே….
இரண்டு முறை அடித்து ஓய்ந்தது…. எடுத்து பார்த்ததில் அழைத்தது அவர் தான்.சற்று வலியுடன் மொபைலை சைலன்ட் மோடில் போட்டாள்.
அடுத்த நிமிடமே சௌம்யாவின் மொபைல் அழைத்து ரீங்காரமிட்டது. அழைப்பில் ரேணுகா.
ஹலோ சௌமி … நல்லா இருக்கியாம்மா?
Advertisement
சொல்லுங்கத்தை நான் நல்லா இருக்கேன் நீங்க நல்லா இருக்கீங்களா? மாமா எப்படி இருக்கார்?
நான் நல்லா இருக்கேம்மா. மாமாக்கு என்ன ராஜா மாதிரி இருக்காரு. குழந்தைங்க எப்படி இருக்காங்க?
நல்லா இருக்காங்கத்தை இப்போ தான் குளிப்பாட்டி தூங்க வைத்திருக்கோம்.
Advertisement
பவித்ரா பொண்ணு நல்ல விதமா வந்து சேர்ந்துட்டாளா?
Advertisement
ம்ம்ம்ம் சேஃபா வந்து சேர்ந்துட்டா. உங்க பிள்ளை ஏர்போர்ட்டில் போய் பிக்கப் பண்ணிட்டு வந்தாரு.
பவித்ரா வந்து சேர்ந்த விஷயத்தை வீட்டுக்கு சொல்லலை போல… இப்போ அவ அம்மா தமயந்தி கால் பண்ணி பார்த்திருக்காங்க அவ கால் பிக் பண்ணலை போல… உடனே எனக்கு பண்ணிட்டாங்க.
ஒன்னும் பிரச்சனை இல்லத்தை பவித்ராவை நான் பார்த்துக்கிறேன்.
Advertisement
பாவம் சௌமி அந்த பொண்ணு மிகுந்த வேதனையில் வந்திருக்கா நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே… ரேணுகா வருத்தம் கொண்டார்.
நீங்க கவலை படாதீங்கத்தை பவித்ரா நல்லா இருக்கா… நாங்க பார்த்துக்கிறோம்.
அவ அம்மா உன் மொபைல் நம்பர் கேட்டாங்க கொடுத்திருக்கேன். உனக்கு கால் பண்ணினா பேசு!
கண்டிப்பா பேசறேன்… அவங்களை கவலை படவேண்டான்னு சொல்லுங்கத்தை.
சரிம்மா அங்கே குளிர் அதிகமா இருக்குன்னு அகி சொன்னான். குழந்தைங்களை கவனமா பாருங்க!
சரிங்கத்தை…!
பவித்ரா குழந்தைகளை நல்லா கவனிச்சுக்குவா… நீ கவலை படாதேம்மா.
சரிங்கத்தை என்றவளுக்கு அவ்வளவு தெம்பு வந்திருந்தது.
“——————“
மாமியாரிடம் பேசி முடித்த அடுத்த நிமிடம் புது எண்ணில் இருந்து வாட்சப் மூலம் அழைப்பு.
ஹலோ!
ம்ம்மா நான் தமயந்தி, பவித்ராவோட அம்மா.
சொல்லுங்கம்மா!
பவித்ரா நல்லபடியா வந்து சேர்ந்துட்டாளா?
ம்ம்ம்ம்… வந்து சேர்ந்துட்டா. இப்போ தான் சாப்பிட்டு ரூமுக்கு போனா… ஏதாவது வேலையா இருப்பா அது தான் நீங்க கால் பண்ணினது அவளுக்கு தெரிந்திருக்காது.
இல்லம்மா அவ நான் போன் பண்ணினது தெரிந்தாலும் எடுக்க மாட்டா…. அவர் குரல் கமறியது.
அம்மா எல்லாம் போக போக சரியாகிடும்… நீங்க கவலை படாதீங்க! ஆறுதல் படுத்தினாள் சௌமியா.
பணத்துக்காக அவளை அனுப்பல…நீங்க இருக்க தெம்பில் தான் நான் அமெரிக்கா அனுப்பவே ஒத்துக்கிட்டேன்.
அவளுக்கு இடமாற்றம் ஒரு மன மாற்றமா இருக்கும் நீங்க கவலை படாதீங்கம்மா! ஆறுதல் படுத்தினாள் சௌமியா.
“——————-“
இனியன் சிணுங்கிய அடுத்த நிமிடம் நல்ல உறக்கத்தில் இருந்த இதயாவும் சிணுங்க தொடங்கினாள்.
இரட்டை குழந்தை வளர்ப்பில் இது தான் பெரிய சிக்கல். ஒரு குழந்தை விழித்து எழுந்தால் அலாரம் அடித்தது போல் அடுத்த குழந்தையும் அழ ஆரம்பிக்கும்.
மதியம் மோர் குழம்புக்கு தோதாக புதினா மல்லி துவையல்
அரைத்துக் கொண்டிருந்த பவித்ரா குழந்தைகள் சிணுங்களில் அரக்க பரக்க ஓடி வந்தாள்.
சௌமியா இதயாவை தூக்கி பால் புகட்ட… பவித்ரா இனியனை அள்ளிக் கொண்டு மடியில் வைத்து தட்டிக் கொடுத்தாள்.
இனியன் மீண்டும் சிணுங்க… அக்கா ரெண்டு குழந்தைக்கும் ஃபீட் பண்ற அளவுக்கு பால் சுரக்குதா? கவலையுடன் கேட்டாள் பவித்ரா.
இல்லம்மா… ரெண்டுக்கும் வயிறு நிறையறது இல்ல… தாய்ப்பால் கொடுத்தே ஆகணுமேன்னு ரெண்டுக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்து மேனேஜ் பண்றேன்.
டாக்டர்ஸ் என்ன பார்முலா மில்க் பிரிஸ்கிரைப் பண்ணினாங்க?
ByHeart Whole Nutrition Infant Formula. அதோ டேபிள் மேல இருக்கு பாரு!
அக்கா நான் ஒன்னு சொல்லவா…? ஒரே நேரத்தில் ரெண்டு குழந்தைக்கும் பீட் பண்ண நினைக்காதீங்க. ஒரு நேரம் ஒரு குழந்தைக்கு முழுசா கொடுங்க… அடுத்த நேரம் இன்னொரு குழந்தைக்கு கொடுங்க!
அட…இந்த ஐடியா நல்லா இருக்கே… உடனடியாய் ஒப்புக் கொண்டாள் சௌமியா.
அக்கா இப்போ இதயாக்கு வயிறு முட்ட கொடுங்க நான் இனியனுக்கு பால் பவுடர் கலக்கி கொடுக்கிறேன்.
“———————“
சௌமி…சௌமி உரக்க குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் ஹரி.
குழந்தைகளுடன் ஹாலில் இருந்தாள் பவித்ரா.
ஹலோ நீக்கு செவிட்டித்தனம் தேனைக்கி? ச்சே பல்லை கடித்தவன் தெலுங்கை விடுத்து இங்கே கரடி மாதிரி கத்திட்டு இருக்கேன் நீ கல்லு மாதிரி உட்கார்ந்திருக்க… பவித்ராவிடம் கேட்டான்.
அவள் வாயை திறந்தால் தானே…
ஏய் மாயவரம் பொண்ணு சௌம்யா எக்கட? பதில் சொல்ல மாட்டியா… எரிச்சலுடன் கேட்டான்.
சாரி எனக்கு கரடி பாஷை தெரியாது… மீண்டும் குழந்தைகளிடம் ஐக்கியம் ஆனாள்.
அஹங்காரம் அன்டே எமிதி நீக்கு கௌரவம் தெளியதா?
ஹலோ தமிழ்… தமிழ்… தமிழில் பேசுங்க!
நாக்கு தமில்லாம் ராது. டெலுகு மத்ரமே மாட்டலாடதனு.
கோபத்திலும் தாபத்திலும் தாய் மொழி இயல்பாய் வந்து நின்றுவிடும் அல்லவா… ஹரிசரணுக்கும் அவ்வாறே..
நாக்கோ மூக்கோ… எனக்கு தெரியாது. சௌம்யா அக்கா தலைவலின்னு படுத்திருக்காங்க.
அதை முன்னமே சொல்றதுக்கு எந்தா?
இவர்களின் சத்தத்தில் குழந்தைகள் உன்னிப்பாய் கை கால் உதைத்து குஷியாய் விளையாட சௌம்யா கொட்டாவி விட்டபடி வந்து நின்றவள்.
ஹரி ஆமெதோ ஏம் கோடவா படுத்துன்னாடு
ஹே சௌமி ஈ ஆயம்மா நன்னு டென்ஷன் பெட்டிண்டி.
ஹரி ஆயம்மா அனக்கன்டி கண்டித்தாள் சௌமி.
ஆமே கலெக்டரா?
ஹரி ப்ளீஸ் இவ எங்க ரிலேட்டிவ்… ஹரியின் பேச்சில் பிடித்தமின்யை சௌமியின் முகம் சுருங்கி அதிருப்தியாய் காட்டியது.
உன் அடிமை வர லேட் நைட் ஆகும். அவனுக்கு கிளையண்ட் மீட்டிங் இருக்கு. அவன் வரும்போது சாப்பிட்டு வந்துடுவான் அதை சொல்ல தான் கூப்பிட்டேன். உனக்கு கால் பண்ணி பார்த்தானாம்.
சரி…. நீ சாப்பிடறியா? சப்பாத்தி மஷ்ரூம் கிரேவி இருக்கு.
நாக்கு ஒத்தம்மா…நேனு நூடுல்ஸ் செய்தானிக்கு வெல்தானு.
இறுகி அமர்ந்திருந்த பவித்ராவை முறைத்துக் கொண்டே வெளியேறினான் ஹரி.
பவித்ரா ஹரி கொஞ்சம் பட பட பட்டாசு. நீ ஃபீல் பண்ணாதே சரியா…?
பட பட பட்டாசு இல்லக்கா திமிர் கர்வம் அதிகம் கொண்ட ஆளு…..!
ச்ச ச்ச… அவர் கொஞ்சம் பிடிவாதம் கொண்ட முன் கோபி அவ்வளவு தான் மற்றபடி ரொம்ப நல்லவர்
உங்க பிரண்டாக்கா…? சிரிப்புடன் கேட்டாள் பவித்ரா.
என்னோட சீனியர். அகிலன் கிளாஸ்மேட்.
எங்கே ?
IIT Hydrabad.
ஓ… நீங்க மூனு பேருமே IT யா?
இல்லை… அவங்க ரெண்டு பேரும் IT நான் CS
அங்கே தான் தெலுங்கு கத்துக்கிட்டிங்க போல…
ம்ம்ம்ம்… மெஜாரிட்டி ஸ்டூடண்ட்ஸ் சுந்தர தெலுங்கு தான் பேசுவாங்க… அவங்களோட பேசி பழகி தானாவே தெலுங்கு வந்துடுச்சு!
அதன் பிறகு அந்த டாப்பிக்கில் பவித்ரா ஆர்வம் காட்டவில்லை.
அக்கா இனியனுக்கு பின்னாடி பாருங்க எப்படி சிவந்திருக்கு…இப்படி இருந்தா குழந்தைக்கு தோல் உறிந்து புண்ணாகிடும்.
டாக்டர் ஆயின்மெண்ட் கொடுத்திருக்காங்க.
அக்கா குழந்தைக்கு டயப்பர் போட்டு வெந்து போயிருக்கு… பிஞ்சு தோல் தாங்குமா? டயப்பர் போடறதை பகலில் நிறுத்துங்க… நைட்ல வேணா போட்டுக்கலாம்.
பவித்ரா இங்கே துணி யூஸ் பண்ணினா ஹைஜீனிக்கா
இல்லைனு கிண்டல் பண்ணுவாங்க.
அக்கா அடுத்தவங்க கிண்டல் பண்ணுவாங்கன்னு யோசிக்க கூடாது. குழந்தைக்கு எது சரியா வருமோ அதை செய்வோம்.
காட்டன் துணி யூஸ் பண்ணுவோம். நல்லா டெட்டால் போட்டு அலசி காயவைப்போம்…
ட்ரை பண்ணி பார்ப்போம் பவித்ரா என்றாள் சௌமி.
“—————“
பவித்ரா வந்து ஆறு நாட்கள் ஆகி விட்டது. சௌம்யா இப்போது தான் நிம்மதியாய் சிரிப்புடன் வளைய வருகிறாள்.
குழந்தைகளை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டாள் பவித்ரா.
இருவருமாய் சேர்ந்து வித விதமாய் சமைக்கத் தொடங்கினார்கள்.
அகிலனுக்கு இப்போதெல்லாம் அருமையான சாப்பாடு.
மச்சி இப்போல்லாம் பள பளன்னு இருக்க… மேரேஜ் பண்ணி புது மாப்பிள்ளையா இருந்தப்போ கூட இப்படி இல்லையேரா …. ஹரி ஏகத்துக்கும் கலாய்த்து தள்ளினான்.
பவித்ரா வந்ததில் இருந்து சௌமி முகத்தில் சிரிப்பு வந்திருக்கு. அவ முகத்தில் சிரிப்பு இருந்தா எனக்கு அது பெரிய நிம்மதி.
ஆயம்மா வந்ததிலே மனசுக்கு நிம்மதியோ அண்டி வயித்துக்கு நிம்மதி… அவன் வயிற்றில் செல்லமாய் குத்தினான் ஹரி.
ஹரி அந்த பொண்ணு நர்சிங் படித்தவ… எங்களுக்காக வந்திருக்கா… சும்மா அவளை ஆயம்மான்னு சொல்லாதடா.
ம்க்கும்… முகத்தை முறுக்கினான் ஹரி.
எங்க சொந்தக்கார பொண்ணுடா. நீ இப்படி பேசினா அவ மனசு கஷ்டப்படும்.
எந்தாரா சொந்தம்?
என் அத்தையோட நாத்தனார் இருக்காங்க இல்லையா அவங்க நாத்தனாரோட ஓரக்தி பொண்ணு.
எதுவும் புரியாது பாவமாய் பார்த்தான் ஹரி.
உனக்கு புரியாதுன்னு தான் சொந்தக்காரப் பொண்ணுன்னு சொன்னேன்.
நாத்தனார்? தானி அர்த்தம் ஏமிதி…
ம்ம்ம்ம்… சிஸ்டர் இன் லா!
ஓ…. உங்க ரிலேஷன்ஷிப் நாக்கு அர்த்தம் காலேது.
நாளைக்கு சன்டே அவுட்டிங் எங்காவது போகலாமா? அதை சொல்லு!
நான் கிளம்பினா சௌமி டென்ஷன் ஆகுறா.
பாவம்ரா சௌமி…
மிரு ஆமெனு என்னி நெலாலு பயாடிக்கி திசுக்கேல்லாரு (எத்தனை மாதம் ஆகுது அவளை வெளியில் கூட்டிட்டு போய்)
குழந்தைங்களை இன்னும் வெளியில் எங்கேயும் கொண்டு போனதில்லை.
ஆயம்மா பிள்ளல்னி ச்சூஸ்குண்டுண்டி.(ஆயம்மா பிள்ளைகளை பார்த்துக் கொள்வாள் )
டேய் லூசு உன் அடங்காத வாயில் ரெண்டு போடணும்… முறைத்தான் அகிலன்.
ரே அகி ஆமெரு ச்சூஸ்துண்ட்டேனே நாக்கு பாதகா உண்ட்டி (அவளை கண்டாலே எனக்கு கடுப்பா இருக்கு)
ஏன்டா?
தெளியது!
ரொம்ப தப்பு ஹரி…. காரணம் இல்லாம பிறர் மேல வெறுப்பு வருவது ரொம்ப தப்பு.
நேனு ஏமி செய்யகலன்னு… (நான் என்ன செய்ய )
ஹரி உனக்குள்ள இருக்க ஹரிசரண் நந்தமூரி எர்ரபள்ளி அடிக்கடி எட்டி பார்க்கிறான்….
அகிலனின் பேச்சு ஹரியை வெகுவாய் தாக்கியது.
வேணாம்ரா நேனு ஹரிசரணா மட்டும் இருந்துட்டு போறேன்… அவன் விழி படலம் சிவப்பேறி அவனை உஷ்ணமாக்கியது.
எதுக்கு டென்ஷன் ஆகுற…? உன் குடும்ப பெருமைக்கு, கொட்டி கிடக்கும் வசதிக்கு நீ ஏன் இப்படி இங்கே கஷ்டப்பட்டு வாழணும்?
கஷ்டப்பட்டு வாழல… இஷ்டப்பட்டு தான் வாழ்ந்துட்டு இருக்கேன்… அடிகுரலில் சீறினான்.
——— தொடரும் ——–
error: Content is protected !!