Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 21.2

“வேலை இருக்கும்மா, நைட்டுக்குள்ள முடிச்சாகனும்” என்றவன், “உங்களுக்கு தூக்கம் வரலையா?” என்றான்.

“வரல” என்றவர் கண்கள் அறையை நோட்டமிட, பொன்மணி தென்படவில்லை. கிச்சன் சென்று உண்டுருக்கிறாளா என்று பார்க்க, பொன்மணிக்கான உணவு அப்படியேத்தான் இருந்தது.

வெளியே வந்து “அவ ஏன் சாப்பிடல?” என்றார்.

“உங்களுக்காக பார்த்து இங்க வரலேனு சொன்னா. மிரட்டி கூட்டிட்டு வந்தேன். எனக்காக பார்க்கலயேன்ற கோபத்துல திட்டினேன். அதுக்கு அழுதிட்டிருக்கா. அழுது முடிச்சதும் சாப்பிடுவா, நீ போய் படும்மா” என்றான் வேலையில் கவனம் வைத்தபடி.



Advertisement

“எவ்வளோ நேரம் வேலை இருக்கும்?”

“இரண்டு, இல்ல மூணுமணி நேரத்துல முடிஞ்சிடும்மா”

“டேய்…” என பதறியவருக்கு எப்படி மகனிடம் சொல்ல என்று தயக்கமானது.

Advertisement

“எதுக்கும்மா இவ்வளோ டென்ஷன் ஆகுறிங்க? டைட் ஒர்க் போய்ட்டிருக்கு, இன்னும் பதினஞ்சு நாளைக்கு இப்படித்தான் போகும்னு நான்தான் முன்னவே சொன்னேனே” என்றான்.

Advertisement

ஊரில் என்றால் இப்படி விசயத்தை உறவுகளிடம் சொல்லி விளக்கியிருக்கலாம். இங்கு என்ன செய்வது? இவன் அப்பாகிட்ட சொன்னா எல்லாம் அவன் பார்த்துக்குவானு இதுக்கும் என்னைத்தான் திட்டுவார்.

நாமே சொல்லிவிடலாம் என்று யோசித்திருக்க, “என்னம்மா யோசனை?” என்றான்.

“இன்னும் ஒரு மணிநேரத்துல வேலை முடிஞ்சிடும்னா உள்ள போய் படு, இல்லைனா ஹால்லதான் படுக்கனும்” என்று ஒருவழியாக சொல்லி முடித்தார் செல்லம்மாள்.

Advertisement

புருவம் சுருக்கி ஆச்சர்யத்தோடு அன்னையைப் பார்த்தவன், “அப்படியா சொல்றிங்க?” என்றான்.

மகன் முன்னே நிற்க பிடிக்காமல் தனது மொபைலை தேடியபடி, “ம்… ஊர்ல ஜோசியருக்கு போன் செய்தேன், நேரம் குறிச்சு கொடுத்தாங்க. எப்படி நடக்க வேண்டிய விசயம்” என வெம்பி, “நம்ம குலசாமியை வேண்டிக்கிட்டு போ, வேலை நாளைக்கு பார்த்துக்கலாம். முதல்ல அவளை சாப்பிட சொல்லு” என்று உள்ளே சென்றார்.

எழுந்து அன்னை அறைக்குள் சென்றவன், “குலசாமிகிட்ட ஈஸியா ப்ளஸிங் வாங்கிடுவேன், உங்ககிட்ட வாங்குறதுதான் கஷ்டம், பெருமையும் கூட. முழு மனசோட நீங்களும் அப்பாவும் என்னை ப்ளஸ் பண்றிங்களாம்மா?” என்றான்.

“என்னடா இப்படி கேட்குற?” என செல்லம்மாள் கலங்கிவிட, “ம்ப்ச் ம்மா… உடனே அழுவிங்களா?” அன்னையை அணைத்துக்கொண்டவன், “தேங்க்ஸ்ம்மா” என்றான்.

“உன் தேங்க்ஸ்ஸை நீயே வச்சிக்கோ. என்னை வில்லினே முடிவு பண்ணிட்டல்ல? உன் சந்தோசத்தை விட வேற என்ன வேணும் எங்களுக்கு?” என்றார் வேதனையோடு.

“சரி… சரி… விடுங்க” என தேற்றி “எதையும் நினைக்காம ரெஸ்ட் எடுங்க. இனி எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்று தந்தையிடமும் சொல்லி வெளியேறியவன், கதவை பூட்டி மின் விளக்கை அணைத்துவிட்டு தனதறைக்குள் சென்றான்.

கட்டிலில் படுத்திருந்தவளிடம் “பொன்மணி எழுந்துபோய் சாப்பிடு” என்றான்.

எத்தனை திட்டினாலும் அறைக்குள் இருந்திருந்தால் பொன்மணி சமாளித்திருப்பாள். லேப்டாப்பை எடுத்துக்கொண்டு வெளியேற எத்தனித்ததும் அழுகை வந்துவிட, இவள் அழுவதில் இன்னும் கோபம் வந்தது  திருனேஷ்வரனுக்கு.

“எல்லாரையும் யோசிப்ப… என்னை யோசிக்கமாட்ட. நீ எப்போ வருவ, எப்போ என்னை விட்டு விலகுவனு என்னால தினம் தினம் தவிச்சிட்டிருக்க முடியாது.

இன்னைக்கு எனக்காக உன்னை ஏத்துக்க சம்மதிச்ச என் அம்மா, நாளைக்கு ஊருக்கு போன பின்ன யாராவது ட்விஸ் பண்ணி விட்டாங்கனா எதாவது சொல்லுவாங்க. அவங்க சுபாவம் அப்படித்தான். அப்படி நடந்தா என்னைப் பத்தி யோசிப்பன்ற நம்பிக்கை எனக்கு இல்ல, கண்டிப்பா பொட்டியை தூக்கிட்டு கிளம்பிடுவ.

நான் திரும்பவும் உனக்காக ஏங்கனும். வேணாம்… எனக்கு இப்படி உன்னோட வாழ வேண்டாம். என் அம்மா ஹாஸ்ட்டல்ல விட்டப்போ தவிச்சதை விட இந்த தனிமை ரொம்ப கொடுமையா இருக்கு. என்னால உணர்வுகளோட போராட முடியல.

யார் என்ன சொன்னாலும் என்னை விட்டு போகமாட்டேன்னு எனக்கு உன்மேல நம்பிக்கை வரட்டும். மத்தது அப்புறம் பார்த்துக்கலாம்” என்று வெளியேறியிருந்தான்.

தனிமை ரொம்ப கொடுமையா இருக்கு என்று வேதனையோடு கணவன் பேசியது மனதை பலமாக தாக்க, “சாரிங்க, நீங்க கூப்பிட்டதும் வந்துருக்கனும்” என்றாள்.

“சரி மன்னிச்சுட்டேன், போய் சாப்பிடு” என்றான் கட்டளையாக.

உண்டு வந்தால்தான் சற்று கோபம் தணிந்து வேறு பேசுவான் என்று கிச்சன் சென்றவள் பத்து நிமிடத்தில் உண்டு அறைக்குள் வந்தாள்.

கட்டிலில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான்.

திருனேஷ்வரன் அருகில் வந்தவள், “உங்களை தனியா விடனும்னு நான் நினைக்கலைங்க. ஆன்ட்டி அங்கிள்க்காகத்தான் யோசிச்சேன். இனி யார் என்ன சொன்னாலும் உங்களை விட்டு போகமாட்டேன்” என்றாள்.

“அப்படியா? சூப்பர். ரொம்ப சந்தோசம். போய் படு” என்றான்.

இவள் விளக்கை அணைக்கப்போக, “வேலை செய்துட்டிருக்கேன்ல? லைட்டை எதுக்குடி ஆஃப் பண்ணப்போற?” என்றான் அதட்டலாக.

“அவ்வளோ அவசரமான வேலை இல்லை அதுனு எனக்கு தெரியும். என்னை கூட்டிட்டு வர வந்தது, அந்த நாயால திரும்ப நான் தங்கியிருக்க இடத்துக்கே போனது, அங்கயிருந்து ஸ்டேஷன் போனதுனு எவ்வளோ அலைச்சல்? லேப் எடுத்து வச்சிட்டு படுங்க” என்றாள் அக்கறையாக.

“உனக்கு என்னைப்பத்தியும் தெரியாது, என் வேலையைப் பத்தியும் தெரியாது. என்னை கடுப்பேத்தாம ஒழுங்கா படுத்துடு”

“தெரியும்” இவள் முணுமுணுக்க,

“என்ன சொன்ன?”

“பால் வேணுங்களானு கேட்டேன்”

தன்னை சீண்டவே பேசுகிறாள் என்று புரிய, “எதுவும் வேணாம்”

“எனக்கு வேணுமே”

“அம்மா வாங்கி வச்சிருப்பாங்க, கிச்சன்ல இருக்கும் பாரு”

“உங்களுக்குத்தான் பால் கேட்டேன், எனக்கு வேணும்னு கேட்டது உங்களை” என்று இயன்றவரை தலைகுனிந்தாள் சிவந்த முகத்தோடு.

தனக்காக எதையும் செய்வாள் என்றறிவான். அதனால்தானே அப்படி தோன்றிய கணமே மணம் முடித்துக்கொண்டான். ஆனாலும் இன்று வர மறுத்தது ஏமாற்றத்தை கொடுத்ததோடு, தேவையான நேரத்தில் தவிக்க விட நினைத்தவள் மீது கோபம் குறையாமல் இருக்கவே, “டென்ஷன் பண்ணாதடீ” என்றான் முறைப்பாக.

“உங்களுக்கு முறைக்கவே தெரியல, முறைக்கிறதா நினைச்சு நல்லவன் ஆகுறிங்க” என்றவள் மெத்தையில் படுத்து போர்வையால் தன்னை மறைத்துக்கொண்டாள்.

பொண்டாட்டியை தொடாம இருக்கிறவன் எப்படி நல்லவன் ஆக முடியும் என்று அன்று சொன்னதை இன்று பொன்மணி நினைவு படுத்த, அவள் மீதான கோபம் குறைவதை புரிந்து தன்மீதே அதீத கோபம் வந்தது.

லேப்டாப்பை எடுத்து வைத்து, அவளின் போர்வையை உருவினான் வேகமாக.

இவள் கவிழ்ந்து படுக்க, “என்னைப் பாருடீ” என்றான் கட்டளையாக.

“நீங்களே பார்க்க வைங்க” என்றாள்.

பட்டென தன்புறம் திருப்பியவன், பொன்மணியை உறுத்துப் பார்த்தான்.

தனக்காக எத்தனை தவித்திருக்கிறான் என்பதை அவனின் கோபமும் விலகலும் எடுத்துரைக்க, “சத்தியமா உங்களை தவிக்க விடனும்னு நினைக்கலங்க. எனக்கு ஆன்ட்டி முன்னாடி வர தைரியம் இல்ல. உங்களுக்கு அடுத்து என்னால அதிகம் பாதிச்சது அவங்கதானே?” என வேதனையோடு சொன்னவள்,

“இனிமே எந்த காரணத்துக்காகவும் யார் என்ன சொன்னாலும், நீங்களே என்னை விலக நினைச்சாலும், உங்களை தனியா விடமாட்டேன், எனக்கும் அது நரக வேதனையா இருக்கு” என கலங்கினாள்.

“ம்ப்ச் அழாத” என அதட்ட, “இனி சாரி கேட்கவேமாட்டேன். அப்படியொரு சிட்டிவேஷன் வர விடமாட்டேன்” என்றாள் உறுதியாக.

“சரி எடுத்துக்கோ” என்றான் கோபமில்லாமல்.

“என்ன?” என்றாள் புரியாமல்.

“நான் தேவைனு சொன்னல்ல? என்னை எடுத்துக்கோ” என்றான்.

“ஆத்தி” என இவள் கண்களை அகல விரிக்க, “என்னடீ பேச்சு மாறுற? உன் ஆசையை நிறைவேத்த உன் மேல உள்ள கோபத்தை போக்கி பெரிய மனசு பண்ணி சம்மதிச்சிருக்கேன், கிடைக்கும்போதே எடுத்துக்கோ” என்றான் பெரிய மனதாக.

“உங்களுக்கு வேணும்னாலும் நீங்கதான் எடுத்துக்கனும், எனக்கு வேணும்னாலும் நீங்களேதான் கொடுக்கனும்” என்றாள் கிசுகிசுப்பாக.

அவளின் நெற்றியில் கடித்தவன், “இதென்ன நியாயம்?” என முறைத்தான் பொய்யாக.

“இதான் பொண்ணுமணி நியாயம்”

“முத்தமாவது கொடுடீ”

“நகருங்க, ரெஸ்ட்ரூம் போய்ட்டு வரேன்” என்று அவனிடமிருந்து விலகி, விளக்கணைத்து மெத்தைக்கு வந்தாள்.

விலகியிருந்தபோது அணலாய் தகித்த மனது மனைவி அருகில் வந்தபின்னே ஜில்லென்று இருப்பதை விந்தையாய் உணர்ந்தவன், “இப்போ உன் விருப்பத்துக்கு லைட் போடாம… அப்புறம் என் விருப்பத்துக்கு லைட் போடனும். சரியா?” என்றவன் மனைவியோடு சரிந்தான் கட்டிலில்.

கேட்டபோது கொடுக்காத முத்தத்தை அவன் கேளாமலே கொடுத்தாள்.

மனதில் மெச்சியபோதும் “கன்னத்துல கொடுத்து கடமையை கழிக்கிற… இங்க யார் கொடுப்பா? ஒவ்வொன்னும் கேட்டு வாங்கனுமா?” என்று உதட்டை குவிக்க, “அதை நீங்க கொடுங்க” என்றவள், அதன்பின்னே சிறு எதிர்ப்பும் காட்டவில்லை கணவனுக்கு.

கணவனின் கோபம் தணிந்தது பெரும் மகிழ்வென்றால்… திருனேஷ்வரனின் பெற்றோர் சம்மதத்தோடு கணவனோடு இருப்பது  பெரும் நிம்மதியை கொடுக்க, திருனேஷ்வரனுள் மூழ்கி அவனுள்ளே தொலைந்தாள்.

தன்னுள் மொத்தமாய் சரணடைந்த அவனின் பொண்ணுமணி பொன்னெழிலாய் ஜொலித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!