Skip to content
Post Views: 4,312
அக்கா உன்கிட்ட பேசினாளா காயத்ரி…? ஏக்கம் தாங்கிய விழிகளுடன் கவலை தோய்ந்த குரலில் கேட்டார் தமயந்தி.
இல்லம்மா…. போன மாசம் ஒரு முறை சௌமி அக்காக்கு பேசினப்போ வேண்டா வெறுப்பா பேசுச்சே அதோட சரி…
அவளா தான் போன் பண்ணல… நீயாவது அவளுக்கு பண்ணி பேச வேண்டியது தானே…?
ம்ம்ம்மா…முகத்தில் அடித்த மாதிரி என்னை தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்லும் போது நான் எப்படி வெட்கம் கெட்டு பேச…. என்ன தான் அக்கானாலும் மான ரோஷம் இல்லாம இளிச்சுட்டு பேச என்னால முடியாது. உங்க பொண்ணு தானே நீங்களே பேச வேண்டியது தானே…,? பொறிந்து தள்ளினாள் காயத்ரி.
Advertisement
அவ என்னை இந்த ஜென்மத்தில் மன்னிக்க போறதில்லை… வழிந்த கண்ணீரை முந்தானையின் நுனியால் துடைத்துக் கொண்டார்.
அம்மா பவிஅக்கா எப்படியும் யுவிக்கு பேசியிருக்கும்.
அவன் எனக்கு சொல்லவே இல்லையே…?
Advertisement
யுவி சொல்ல மாட்டான்… அவன் அக்கா செல்லம்.
Advertisement
இந்த வாரம் லீவுக்கு வருவான் தானே… அப்போ கேட்குறேன்… வேதனையுடன் தூணில் சாய்ந்து கண் மூடினார் தமயந்தி.
எனக்கு ரெக்கார்டு ஒர்க் இருக்கு நான் போய் எழுதுறேன்…. காயத்ரி அறைக்குள் போய் விட்டாள்.
எவ்வளவு நேரம் கட்டிலில் உருண்டு புரண்டும் உறக்கம் தழுவவில்லை தமயந்திக்கு.
Advertisement
தன்னையே வெறுத்த நிலையில் கண்ணீர் வற்றும் வரை அழுதே கரைந்தார்….
என் பொண்ணு என்னை வெறுத்துட்டாளே… என் பவி என்னை புரிஞ்சுக்க மாட்டாளா?
இல்லை… நான் தான் அவளை புரிஞ்சுக்கல… விடியும் வரை உழண்டு கொண்டு தான் இருந்தார்.
இதயத்தின் வலி அவரை உறங்கவே விடவில்லை.
ஏங்க என்னை இப்படி தவிக்க விட்டு போயிட்டீங்க…. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தன் காதல் கணவர் சங்கர நாராயணனை எண்ணி கண்ணீர் உகுத்தார்.
“————“
மா அத்த ஏமிந்தி….? எந்துக்கு பயாத்தக்கு ராலேதா?( அத்தை எங்கே? எழுந்து வெளியில் வரலையா?) கவலையுடன் மருமகளை கேட்டார் கிருஷ்ணா.
லேது மாமைய்யா என்றாள் சர்வதனி.
ராம் சரணின் மனைவி. கிருஷ்ணாவின் ஒன்று விட்ட தங்கை கோதாவரியின் மகள்.
நேற்றில் இருந்து சாப்பிடாமல் சுருண்டு படுத்திருந்தார் தாரணி.
கிருஷ்ணா இளைய மகன் ராமை அழைத்து தாரணியை போய் பார்த்து வர சொன்னார்.
ம்ம்ம்மா… ராம் தயக்கமாய் அழைத்தான்.
ம்ம்ம்ம் என்றார் முனகலாய்.
மி பக்கன லேனி கொடுக்கு குரிஞ்சி மிரு அண்டோலன செண்டுதாறு. நி பக்கன உன்ன ஈ கொடுக்கு நீக்கு தெலியலேதா (உங்க பக்கத்தில் இல்லாத மகனை நினைத்து கவலை படறீங்க உங்க பக்கத்தில் இருக்கும் இந்த மகனை உங்களுக்கு தெரியலையா)
நுவ்வு நா பக்கன லேகபோயினா இலகே அண்டோலனா செஸ்தானு அன்னாடு.( நீ என் பக்கத்தில் இல்லைனாலும் இப்படி தான் கவலை படுவேன் என்றார் )
இனி அதிகம் தெலுங்கு கலக்காதவாறு எழுதுவோம். வேறொன்னும் இல்லை நட்பூஸ் சப் டைட்டில் வேற டைப் பண்ண செம்ம போரிங்கா இருக்கு… )
அம்மா…ஹரி இங்கே இல்லைன்னு எங்களுக்கும் கவலையா தான் இருக்கு… அவன் பிடிவாதம் உங்களுக்கு தெரியாதா? ஆதங்கத்துடன் தாயிடம் புலம்பினான் ராம்.
புரியுது ராம்… மூனு வருஷம் ஆச்சு அவன் இந்த வீட்டை விட்டு போய்…எம்புள்ள நான் இருந்தும் அனாதை போல கடல் கடந்து போய் கஷ்டப்படுறான்.
இங்கே ஒருநாளைக்கு எத்தனை விதமா சமைக்கிறோம்… அங்கே என் பிள்ளை காஞ்சு போன பிரட்டை சாப்பிட்டு வேலைக்கு போறான்.
என் பிள்ளை எங்கோ வேதனைபட்டு கிடக்க எனக்கு வகை தொகையா சாப்பாடு தேவையா?
அவனை யாரும்மா கஷ்டப்பட சொன்னது?
எல்லாம் அவன் எனக்கு பிள்ளையா பிறந்த பாவம்… தழும்பிய தண்ணீரை துடைத்துக் கொண்டார்.
அவனுக்கு மட்டும் தான் வருத்தமா? எனக்கு இல்லையா?
ராமின் முகம் கண்டு உள்ளம் வெதும்பினார் தாரணி.
ராம் சொல்வதும் உண்மை தானே….. இந்த வீட்டில் யாருமே நிம்மதியாய் இல்லையே…? உயிரோடு இருக்கிறார்கள் ஆனால் உயிர்ப்போடு இல்லை.
அம்மா உங்களால எப்படி சாப்பிடாம ரெண்டு நாளா இருக்க முடியுது? தாயின் கரம் பற்றி மென்மையாய் வருடினான்.
அப்படியும் உயிர் போக மாட்டேங்குதே…
அம்மா ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க…. அவன் குரல் நடுங்கியது.
அத்தம்மா இந்த ஜூஸையாவது குடிங்க…. ஆரஞ்சு பழச்சாருடன் வந்து நின்றாள் சர்வதனி.
எனக்கு பசியில்லம்மா…. மருமகளிடம் இலக்கமாகவே பேசினார் தாரணி.
மாமய்யா உங்களை நினைத்து கவலையா இருக்கார்….
நீங்க சாப்பிட்டாம இருக்கிறது தெரிந்ததும் அவர் காலையில் இருந்து சாப்பிடலை.
மருமகளின் பேச்சுக்கு மாமியாரின் புறம் இருந்து எவ்வித முக பாவமும் இல்லை.
அம்மா நீங்க இப்படி சாப்பிடாம அடமா இருக்கிறதுனால சர்வா சாப்பிடாம இருக்கா…
என்ன ராம் சொல்ற…? அய்யோ வயித்து பிள்ளைக்காரி இப்படி சாப்பிடாம இருக்கலாமா?
Bp, சுகர் இருக்கிற நீங்க சாப்பிடாம இருக்கலாமா? மருமகள் உரிமையுடன் அதட்டினாள்.
சர்வதனி சாப்பிடவில்லை என்றால் நிச்சயம் தன் அன்னை மனமிரங்குவார் என்று தெரிந்து தான் இப்படி பேசி வைத்தான் ராம்.
வாம்மா சாப்பிடலாம்… மருமகள் கரம் பற்றி அழைத்து போனார் தாரணி.
முகம் கசங்கி நடை தளர்ந்து நடந்து வரும் மனைவியை வேதனையுடன் பார்த்து தலை கவிழ்ந்தார் கிருஷ்ணா.
கிருஷ்ணா கூடத்தில் நிற்பதை கணக்கில் கொள்ளாது கடந்து சென்றார் தாரணி.
இந்த பாராமுகம் இன்று நேற்றல்ல… மூன்றாண்டு தொடர்கதை இது!
“—————-“
அக்கா பருப்பெல்லாம் வறுத்து வச்சிட்டேன்… கட்டிப் பெருங்காயம் பொரிச்சுட்டேன்…. ஒரு கொத்து கறிவேப்பிலை கூட வறுத்துட்டேன் மிளகாய் போதுமா பாருங்க…..? எண்ணெய் விட்டு வறுத்த மிளகாயை கொண்டு வந்து காட்டினாள் பவி. இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளும் இட்டலி மிளகாய் பொடி அரைக்க தான் இந்த தயாரிப்பு எல்லாம்…
அக்கா இந்த மிளகாய் போதுமா?
இன்னும் ஒரு நாலு வறுத்து போடும்மா . ஹரிக்கு காரமா இருந்தா தான் பிடிக்கும்.
தடுப்பூசி போட்டு வந்து குழந்தைகள் இரண்டும் விம்மி விம்மி அழுது சௌமியை படுத்திக் கொண்டிருக்கிறது.
அக்கா… நமக்கு பிடித்த மாதிரி தான் நாம செய்யணும்!
அடுத்தவங்களுக்காக பார்த்து செய்யக் கூடாது.
குழந்தை பிறந்த உடம்பு ரொம்ப காரம் தாங்காது….
அவருக்காக ஏன் நீங்க யோசிக்கிறீங்க? அவர் மேல் அக்கறை காட்ட யாரும் இல்லையா?
ஏன் இல்லாம? பெரிய குடும்பமா எர்ரபள்ளியில் இருக்காங்க.
அப்படியா?
ம்ம்ம்ம்…. ஊருக்கு ஒருமுறை போயிட்டு வான்னு சொன்னா போக மாட்டேங்கிறார்.
ஏனாம்?
ஹரி என்கிட்ட எதுவும் சொன்னது இல்லை.
பிரண்டுன்னு சொன்னீங்க?
ஆமா… அதுக்காக
அவர் பர்சனலில் நான் தலையிட்டது இல்லை.
அவராவும் சொன்னதில்லை …. நானும் கேட்டதில்லை.
அப்புறம் என்ன அதுக்கு பேரு பிரண்ட்ஷிப்?
நீ வந்து ஒரு மாசம் முடிந்து போச்சு….! அக்கான்னு வாய் நிறைய கூப்பிடற…. குழந்தைங்க கிட்ட அன்பும் அக்கறையுமா உருகுற… ஆனா என் பேச்சை கேட்கறியா?
அக்கா…. வாயடைத்து போனாள்.
சரி…சரி…..நோ டென்ஷன். அன்னைக்கு மசாலா வேர்க்கடலை செய்தியே ரொம்ப நல்லா இருந்துச்சு! இன்னைக்கு செய்யலாமா? சாப்பிடணும் போல இருக்கு…..பேச்சை மாற்றினாள் சௌமி.
“—————“
என்ன யுவி உன் அக்கா நல்லா இருக்காங்களா? கேலியாய் கேட்டுக் கொண்டே அவன் தட்டில் சூடான தோசை வைத்தாள் காயத்ரி.
என் அக்கா அவங்க நல்ல மனசுக்கு ஏத்த மாதிரி ரொம்ப நல்லா இருக்காங்க…. அவள் கேட்ட தொணியிலே பதில் கூறியவன் பூண்டு சட்னியில் ஒரு வாய்,மிளகாய் பொடியில் ஒரு வாய் என்று தொட்டு தொட்டு சுவைத்துக் கொண்டிருந்தான்.
அது சரி உன் அக்கா நல்லா தான் இருப்பாங்க…. பெத்தவங்க நல்லா இருக்காங்களான்னு ஒரு வார்த்தை கேட்க அவங்களுக்கு நேரம் இல்லையோ…?
ம்ம்ம்ம்…. பெத்தவங்க மத்தவங்க மாதிரி நடந்துகிட்டா இப்படி தான் நடந்துக்க தோணும்!
நீ அர்த்தம் இல்லாம பவிக்கு சப்போர்ட் பண்ற யுவி…. சூடாகிப் போனாள் காயத்ரி.
நீ அர்த்தம் இல்லாம பவியை வெறுக்கிற மாதிரியா?
யுவி…! நரம்புகள் புடைக்க சப்தமிட்டாள்.
ஷ் ஷ் ஷ்… அம்மா எழுந்துக்க போறாங்க… எதுவானாலும் காலையில் பேசலாம்…. போய் தூங்கு!
பவித்ராவின் தம்பி யுவராஜ் தஞ்சாவூர் பாரத் பொறியியல் கல்லூரியில் EEE இரண்டாமாண்டு மாணவன்.
விடுதியில் தங்கி படிப்பவன் மாதம் ஒரு முறையோ இருமுறையோ வீட்டிற்கு வருவான்..
காயத்ரி தர்மபுரம் ஆதீனம் மகளிர் கல்லூரியில் M.CA முதலாமாண்டு மாணவி.
பவித்ரா அக்கா இருந்தால் இந்நேரம் ஏதாவது பேசிட்டே இருக்கும். அக்கறையா ஹாஸ்டல் ரூம்மேட்டில் இருந்து ஹாஸ்டலில் கொடுக்கும் உணவு வரை விசாரிக்கும்…. வருத்தம் தோய்ந்த முகத்துடன் படுத்துக் கொண்டான் யுவி.
“—————“
யுவா நான் கொடுமைகாரியாவே இருக்கட்டும் இந்த பவித்ரா கிளம்புறப்பவும் ஒரு வார்த்தை போயிட்டு வரேன்னு சொல்லல , போய் ஒரு மாசம் ஆகுது அங்கிருந்தும் ஒரு போன் போட்டு என்கிட்ட பேசல….என்னை மொத்தமா ஒதுக்கிட்டாளா?
அவ ஏன்டா இப்படி இருக்கா…? காபி டம்ளரை மகனுக்கு நீட்டிக் கொண்டே விசும்பினார் தமயந்தி.
அம்மா இங்கே நடந்ததுக்கு அக்கா நம்மை தலை மூழ்கிட்டு கண்காணாம எங்காவது போயிருந்தா என்ன பண்ணியிருப்ப….?
யுவி… துடித்து போனார் தமயந்தி.
ஏம்மா இவ்வளவு அலறுற?
டேய் நா அவளை பெத்தவ… கண்கள் சிவப்பேறி முகம் இறுகி வார்த்தைகள் கடிபட்டு வந்து விழுந்தது.
வேணாம்மா ப்ளீஸ் அக்காவை பேச்சா வச்சு நமக்குள்ள சண்டை வேணாம்….
அக்கா மனசுல சீக்கிரம் ஆறும் லேசான காயம் ஏற்படல…. இதயத்தை குத்தி கிழித்து ஆழமான கத்தியை உள்ளே இறக்கி கொடூரமான ரணத்தை உண்டாக்கி இருக்கோம்.அது அவ்வளவு சீக்கிரம் ஆறாது.
அக்கா கொஞ்சம் கொஞ்சமா தன்னோட வலி வேதனையை மறந்து வெளியில் வரும். அப்போ அக்காவே உங்கிட்ட பேசும்!
காபியை அருந்திவிட்டு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட கிளம்பி விட்டான் யுவராஜ்..
“————–“
டேய் ஹரி உனக்கு அத்தை பொண்ணு மாமா பொண்ணு எதுவும் இல்லையா? டேபிள் டென்னிஸ் விளையாடிவிட்டு இருவரும் அமர்ந்து வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டிருந்தனர்.
ஏன்டா திடீர்னு? குறும்புடன் சிரித்தான் ஹரி.
இல்ல…. அப்படி யாராவது இருந்தா அவங்களை பார்க்கவாவது இந்தியாக்கு போவியேன்னு…. அகிலன் கண்சிமிட்டி நண்பனின் தோள் தட்டினான்.
நம்ம ஊரு படம் நிறைய பார்த்து வளர்ந்தவன் நீ… அது தான் இப்படி எல்லாம் பேசுற…! லேசாய் உதட்டை சுழித்து சிரித்தான் ஹரி..
எனக்கு ஒரு தங்கச்சி இல்ல மச்சி… இருந்திருந்தா இந்த சுந்தர தெலுங்கனை கடத்திட்டு போய் மாப்பிள்ளை ஆக்கி இருப்பேன்… மெய்யாலுமே அகிலனின் குரல் நைந்து கர கரத்து இருந்தது.
நல்ல வேளை நான் தப்பிச்சேன்… வாய் விட்டு சிரித்தான் ஹரி…
சிரிச்சா ராஜ கம்பீரமா இருக்கடா..
இப்போ தான் உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை ஆக்குவேன்னு சொன்ன… அதுக்குள்ள நீ என் அழகில் மயங்கி நிற்கிற…. பொங்கி வந்த சிரிப்பை அதக்கி கொண்டு செல்ல அடிகளை கொடுத்தான்.
ஏன்டா இப்படி பண்ற…? வாழ வேண்டிய வயசுல வாழணும் அகி.
உனக்கு எர்ரபள்ளி போக பிடிக்கலைன்னா பரவாயில்லை மச்சி .
உனக்கு இங்கேயே ஒரு பொண்ணு பார்ப்போம். கல்யாணம் பண்ணிக்கோ ஹரி.உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும் மச்சி. இப்போ தனிமை சுகமா தான் இருக்கும்… வாலிபம் கடந்து போனபின்னே தனிமையே சுமை ஆகிடும!
சரிங்க அகிலானந்தா….
டேய் நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. கோபத்தில் பல்லை கடித்தான் அகிலன்.
நானும் சீரியஸா ஒன்னு சொல்லவா?
இதயா,இனியன் எப்போ கொஞ்சம் வளருவாங்கன்னு காத்திட்டுருக்கேன். அவங்களை என்கிட்ட கொடுத்துட்டு நீங்க இன்னொன்னு பெத்துக்கோங்க! அவங்களை வளர்த்துட்டு என் லைஃப்….
பளார் என அறைந்திருந்தான் அகிலன்.
——–தொடரும் ——
error: Content is protected !!