Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன்♥️7

ஹலோ பவிக்கா சொல்லுக்கா

நல்லா இருக்கியா யுவி?

ம்ம்ம்… நல்லா இருக்கேன் பவிக்கா.

ஊருக்கு போயிட்டு வந்தியா? இந்த செமஸ்டர் பீஸ் கட்டியாச்சா?



Advertisement

ம்ம்ம்ம்…. நேத்து தான் பீஸ் கட்டினேன். அம்மா ஊருக்கு போனப்போ பணம் கொடுத்தாங்க.

நீ நல்லா இருக்கியாக்கா?

நல்லா இருக்கேன் யுவி!

Advertisement

நைந்து வந்த அவள் குரலில் அவன் உள்ளம் வருந்தினான்.

Advertisement

அம்மா ரொம்ப ஃபீல் பண்றாங்க…. அழறாங்கக்கா.

ம்ம்ம்ம்ம் என்றவள் அந்த பேச்சு பிடிக்காமல் வேறு பேச்சுக்கு தாவினாள்.

நல்லா படிக்கிறியா யுவி?

Advertisement

படிக்கிறேன்கா..!

உனக்கு சொல்ல எதுவுமில்லை… உனக்கு நம்ம சூழ்நிலை புரியும்! படிப்பு மட்டும் தான் நமக்கு சொத்து. பெரிய மனுஷன் மாதிரி கண்டதையும் மனதில் போட்டு குழப்பிக்காதே படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்து.

புரியுதுக்கா…! இந்த செம்மும் சூப்பரா எழுதி இருக்கேன்.

கண்டிப்பா கேம்பஸ் செலக்ட் ஆகிடுவேங்கா.

ரொம்ப சந்தோஷம் யுவி. கஞ்சப் பையனா இல்லாம வீக் எண்ட் பிரண்ட்ஸ் கூட வெளியில் போயிட்டு வா… மூவிக்கெல்லாம் போ ..!  தலப்பாகட்டி போய் உனக்கு பிடிச்ச இறால் பிரியாணி சாப்பிடு!

சரிக்கா… சிரித்துக்கொண்டான் யுவராஜ்.

யுவி…. இது சிறகடித்து பறக்கும் வயசு.. இந்த வயசுல நல்லா என்ஜாய் பண்ணியும் பார்க்கணும்… பொறுப்பா படித்து நம்ம தகுதியையும் உயர்திக்கணும்.

கண்டிப்பாக்கா…!

நீ எப்போக்கா இந்தியா வர?

இன்னும் மூனு நாலு மாசத்துல வந்துடுவேன்னு நினைக்கிறேன்.

வரும் போது உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரணுமா?

அய்யோ…. அதெல்லாம் ஒன்னும் வேணாம்க்கா!

அக்கா அங்கே வேலை பார்க்க கஷ்டமா இருக்கா? உன்னை நல்ல விதமா நடத்துறாங்களா?

டேய் பெரிய மனுஷா… இங்கே எனக்கு எந்த கஷ்டமும் இல்லை.

சௌமி அக்கா அவங்க வீட்டுல ஒருத்தரா என்னை நடத்துறாங்க! நல்ல சாப்பாடு போட்டு மாசம் 1500 டாலர் சம்பளம் கொடுக்கிறாங்க. இதைவிட வேறேன்ன வேணும்?

ஆயிரத்தைநூறு டாலர்னா நம்ம ஊரு காசுக்கு எவ்வளவுக்கா வரும்?

உனக்கேன்டா அதெல்லாம்?

அட போக்கா… கூகுள் பண்ணி பார்த்தா தெரியப் போகுது.

ஹா ஹா…. மனம் விட்டு சிரித்தவள் யுவி 1500 டாலர்ங்கிறது  நம்ம ஊருக்கு காசுக்கு தான் அது அதிகம்… இங்கே அது சொற்பம் தான்.

அமெரிக்காவில் ரோடெல்லாம் பக்காவா இருக்குமாமே… பில்டிங்ஸ் எல்லாம் வேற லெவலில் இருக்குமாம்…

யாருடா சொன்னது உனக்கு?

என் காலேஜ்மேட் ரோஹித்தோட மாமா அங்கே தான் இருக்கார்.

அமெரிக்க கனவு வந்துடுச்சா உனக்கு? தம்பியை செல்லமாய் அதட்டினாள்.

எல்லாருக்கும் இருக்கும் கனவு தானேக்கா…

எனக்கென்னவோ இந்த அமெரிக்கா பிடிக்கலை யுவி.

உயரமான கட்டிடங்களும், உயர் ரக வாகனங்களும், பகட்டான கடை வீதிகளும், வெள்ளை தோல் மனுஷங்களும்,கண் கூசும் பிரம்மாண்டமும்

எனக்கு பிடிக்கல….

இங்கு எதுவுமே இயல்பா தெரியலை…. எல்லாமே ப்ரோக்ராம் பண்ணின மாதிரி சிஸ்டமேட்டிக்கா நடக்குது.

அக்கா அவனவனுக்கு அமெரிக்கா பிடிக்க காரணமே இது தான்…. கை தட்டி சிரித்தான் யுவராஜ்.

“—————-“

ஹலோ அகிலன் அண்ணா ஹரிட்ட பேசினீங்களா?

பேசிட்டு தான் இருக்கேன் ராம்…. அவன் கொஞ்சமும் அசரலையே…

அம்மா தினமும் அழுகையும் புலம்பலுமா இருக்காங்கண்ணா….! எப்படியாவது புரிய வையுங்க ப்ளீஸ்.

அம்மாவை கவலைப் படவேண்டாம்னு சொல்லு ராம்.

எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு ! இந்த சிடுமூஞ்சி எத்தனை நாளைக்கு அமெரிக்காவிலே இருந்துடுவான்?

அப்படி ஈஸியா சொல்லிடாதீங்கண்ணா…. என் மேரேஜ்க்கு கூட அவன் வரலையே…?

வருவான் ராம்… அவன் மனசு மாறும்! அகிலன் நம்பிக்கை கொடுத்தான்.

அண்ணா அவன் ஒருத்தன் மட்டும் விலகி போயிட்டா நிம்மதியா இருந்துடுவோம்னு நினைக்கிறான்….

எங்களை விட்டு அவனால் என்னைக்கும் சந்தோஷமா இருக்க முடியாது! சொல்லி வைங்க உங்க தோஸ்துக்கு.

எனக்கு தெரியாதா ராம்?

அப்பா உருகுளைந்து போயிட்டார்…. அம்மா தினமும் ஹரி புராணம் தான். என்னால எந்த ரிலேட்டிவ் பகங்ஷனிலும் தலை காட்ட முடியலை.

அண்ணனுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிட்ட….. அண்ணனுக்கு முன்னாடி அப்பா ஆகப்போறன்னு பேசும் போது கூசிப் போகுதுண்ணா…!

டேய் ராம் இதில் உன் தவறு என்ன? அகிலன் தேறுதல் வார்த்தைகள் கூறினான்.

நானும் அவனை மாதிரி கிளம்பி போயிருந்தா இந்த குடும்பம் என்ன ஆகும்? இதையெல்லாம் யோசிக்க மாட்டானா?

எடுத்து சொல்லி புரிய வைங்கண்ணா ப்ளீஸ்! உடைந்து போனது ராம் சரணின் குரல்.

வருவான் ராம்… கண்டிப்பா வருவான்… கூடிய சீக்கிரம் வருவான்.

எந்த குடும்பத்தில் பிரச்னை இல்லை? இப்படி விலகி போயிட்டா எல்லாம் சரியாகிடுமா?

சரி ராம்… நான் அவனை அடித்து துரத்தி விடறேன்…!

அதை செய்யுங்கண்ணா… உங்களுக்கு அடுத்தும் ரெட்டை குழந்தையா பிறக்கட்டும்!

டேய்… டேய்… போதும்டா… ஒரு ரெட்டை குழந்தைக்கே நாங்க படற பாடு….

உனக்கு வேணும்னா நான் ஆசீர்வாதம் கொடுக்கிறேன் உன் பொண்டாட்டிக்கு ரெட்டை குழந்தை பிறக்கட்டும்!

அண்ணா …. ரெட்டையா? மூனு நாலுன்னாலும் எனக்கு ஓகே தான்! அம்மாக்கு குழந்தைங்கன்னா சால இஷ்டம்.

ஹரிக்கு பெண் குழந்தைன்னா ரொம்ப இஷ்டம்.

அப்புறம் என்ன… உன் பெண்ணை தரையில் விடாம தாங்குவான் பாரு!

கண்டிப்பா செய்வான்… அவன் என்னையே தாங்கி வளர்த்தவன்… என் பெண்ணை தாங்க மாட்டானா?கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீரில் கரைந்தான் ராம்.

ராம் மனசை தளரவிடாம இரு! என்னால என்ன செய்ய முடியுமோ கண்டிப்பா செய்றேன். வாக்குறுதி கொடுத்தான்.

இந்த ஹரிக்கு என்ன கேடு வந்துச்சு? இவ்வளவு அன்பான உறவுகளை தவிக்க விட்டுட்டு இப்படி ஏன் படுத்தி எடுக்கிறான்…? அகிலனுக்கு அவ்வளவு ஆத்திரம் மூண்டது அருமை நண்பனின் மீது.

ஹரிக்கு என்ன பிரச்னை என்று அகிலனுக்கு தெரியாது.  இருவருக்குமான நட்பிற்கான வயது பதிமூன்று. இருந்தும் ஹரி திறந்த புத்தகமாக இருந்தது இல்லை. அகிலனின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவன் மூக்கை நுழைப்பதில்லை.  தன்னை பற்றியும் வெளிப்படையாய் பேசுவதில்லை.

எல்லாவற்றையும் கொட்டி கவிழ்த்து உணர்ச்சி வசப்படும் இயல்பான குணநிலை அவனுக்கு இல்லை. அழுத்தம் மிகுந்தவன், எவ்வளவு பாசக்காரனோ அவ்வளவு கோபக்காரன்.

அது தான் அகிலனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. வெளிப்படையா பேசி தொலைத்தாலாவது என்ன செய்யலாம் ஏது செய்யலாம்னு ஐடியா சொல்லலாம்… அவன் தான் அம்முக்குன்னியா இருக்கானே. ?

என்ன பெரிய புடலங்காய் காரணமா கூட இருக்கட்டும்… பெத்தவங்கட்ட என்ன கோபம் வேண்டி கிடக்கு ? அதுவும் வருஷ கணக்கா முறுக்கிட்டு நிற்கிற அளவுக்கு…

என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை ஆனால் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று அவன் மனம் பிராண்டியது.

“——————“

என்னடா வந்ததில் இருந்து வளைத்து வளைத்து பார்க்கிற? தன்னை குறு குறுப்புடன் பார்க்கும் நண்பனை வியப்புடன் கேட்டான்.

மச்சி  என் டீமுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்திருக்காளே அந்த பொண்ணு உன் பயோ டேட்டாவை என்கிட்ட கேட்குறா?

யாருடா அது? பிளேட்டில் இருந்த Tater tots ( French fries போன்றே உருளை கிழங்கில் செய்யும் சிப்ஸ். உருண்டை வடிவில் இருக்கும். சுவையும் வித்தியாசமாக இருக்கும் ) என்ற அமெரிக்க சிற்றுண்டியை போர்க்கால் குத்தி கெச்சப்பில் புரட்டி வாயிற்குள் திணித்துக் கொண்டிருந்தான் ஹரி.

லிடியா!

அதி எவரு? அந்த உரிச்ச கோழியாரா ?

உரிச்ச கோழி….!? யூ மீன் அவ டிரஸ்ஸிங் பத்தி சொல்றியா…? குபீரென்று சிரிப்பு வந்து விட்டது அகிலனுக்கு.

ஆம் அவள் உடுத்தும் உடை அப்படி…! முட்டியை மறைத்து கூட அவள் உடை உடுத்துவதில்லை.

அவ ஏன் என்னை கேட்குறா?

ம்ம்ம்ம்… எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுல்ல அதுக்குத் தான்… கடுப்பாகி போனான் அகிலன்.

ரொம்ப வருத்தம் போல… சௌமிட்ட சொல்றேன்.

சொல்லு… சொல்லு… லைஃப் ஒரு சுவாரஸ்யமே இல்லாம போயிட்டு இருக்கு!

முடிவோட தான் இருக்க போல… கையில் இருந்த போர்க்கை அகிலனின் கழுத்தில் வைத்தான் ஹரி.

மிரட்டறியா? நாளைக்கு வேணா பயப்பட ட்ரை பண்றேன்! அசால்ட்டாய் அவன் கரத்தை தட்டி விட்டவன்…

டேய் ஹரி எனக்கு தெரிந்து நம்ம ஆபிசிலே செம்ம பிகரு லிடியா தான்.  அவனவன் அந்த பிகரை பார்த்து வழிச்சு ஊத்துற ஜொள்ளை அளக்கவே முடியாது.

அவ வந்து ரெண்டு மாசம் தான் ஆகுது… நாலைஞ்சு முறை உன்னை பத்தி கேட்டுட்டா…!

நீ பயங்கர ஹேன்சம் யங் மேனாம்…. ஸ்டைலிஷ் அன் மேன்லி லுக் உனக்கு மட்டும் தான் இருக்காம். இவ்வளவு பெரிய ஆபிசில் அவளை ஒருமுறை கூட கண்டுக்காம போறது நீ மட்டும் தானாம்.

அவ சொன்னாளா…. இல்ல….நீ எக்ஸ்டரா பிட்டு போடறியா?

நம்ம மேனேஜர் ஜாக் மேல சத்தியமா அவ தான் சொன்னா….!

அவளும் அவ போடற லிப்ஸ்டிக்கும்… அவ ஒரு ஆளுன்னு என்கிட்ட பேச வந்துட்டான். போடா போய் பிள்ளைக்குட்டியை பாரு!

டேய் ஓவரா பண்ணாத… இப்போ ட்ரெண்டிங்கே பாரின் கேர்ள்ஸை கல்யாணம் பண்றது தான்.

வெள்ளைக்காரியை லவ் பண்ணி இண்டியன் கலச்சரில் மேரேஜ் பண்ணி சோஷியல் மீடியாவில் தெறிக்க விட்டு நம்ம வயித்தெரிச்சலை கொட்டிக்கிறானுங்க!

என்ன….நான் தான் அவசரப்பட்டு தஞ்சாவூரில் தலையை கொடுத்துட்டேன். உனக்கு மெக்சிக்கன் ஏஞ்சல் வலிய வந்து சிக்குது… அகிலன் அழகாய் ஆதங்கம் கலந்து ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினான்.

செருப்பு! கை முஷ்டியை மடக்கினான்.

ஹரி நீ கம்பீரமா இருக்க… உன் மேல கேர்ள்ஸ்கு ஒரு அட்ராக்ஷன் வர்ரது சகஜம் தானே…?

நீ ஏன்டா லிடியாவை கன்சிடர் பண்ணக் கூடாது?

ஒரு ஹேறும் வேணாம்ரா… கிளம்பு போகலாம்!

ஹரி… லிடியா நம்ம கல்சருக்கு ஒத்து வர மாட்டான்னு நினைக்கிறியா? உங்க நானா ஒத்துக்க மாட்டார்னு நினைக்கிறியா? நான் பேசுறேன் மச்சி.

ம நானா? சடுதியில் விழிகள் சிவந்து கழுத்து நரம்புகள் விடைத்தது அவனுக்கு.

சரி… சரி….லிடியா வேண்டாம்…. நம்ம ஊருல பொண்ணு பார்ப்போம்…! உங்க இனத்தில் உன் குடும்ப கௌரவத்துக்கு ஏற்ற மாதிரி….

நா குடும்ப கௌரவமா? இதழ் வளைத்து கோணலாய் சிரித்தவன் மித மிஞ்சிய கோபத்தில் கையில் இருந்த தடிமனான போர்க்கை வளைத்து உள்ளங்கையில் அழுத்தினான். கூர்மையான முட்கள் போன்ற முனை உள்ளங்கையில் அழுத்த….

ஏய் ஹரி… அதிர்ந்து போய் தட்டி விட்டான் அகிலன்.

டேய் சைக்கோ…..உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு பல்லை கடித்தவனுக்கு கொலைவெறி உண்டானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!