Skip to content
Post Views: 3,897
என்ன சொல்றீங்க அகி…. நைட்டே என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல… கடிந்து கொண்டாள் சௌமி.
ஈவினிங் லைட்டான ஃபீவர் தான்…. ஆபிசிலே டேபிலெட் போட்டுட்டு தான் வந்தான்.
இப்போ போன் பண்ணி குளிருது, தலை வலிக்குது,உடம்பு வலிக்குது இன்னைக்கு லீவ் போட்டிருக்கேன்னு சொல்றான்.
சரி வாங்க போய் பார்த்துட்டு வருவோம்…!
Advertisement
ஏய்… உன்னை வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கான். வைரல் பீவரா இருந்தா உனக்கு இன்பெக்ஷன் ஆகிடும்… அப்புறம் குழந்தைகளுக்கும் ஸ்பிரெட் ஆகிடும். நான் போய் பார்த்துட்டு வரேன். அகிலன் மாடி ஏறி அடுத்த பிளாட்டுக்கு சென்றான்.
தடிமனான பிங்க் வண்ண க்வில்ட் பிளாங்கெட்டை கழுத்து வரை போர்த்தி உடம்பை குறுக்கி படுத்திருந்தான் ஹரி.
“ஹரி “என்ற பதட்டமான நண்பனின் குரலில் அசதியாய் கண்களை திறந்தான். கண்கள் எரிந்தது. உடலின் வெம்மை கண்களை கரிக்க வைத்தது.
Advertisement
ம்ம்ம்ம்ம்…. என்று முணங்கி எழ முயன்றான்… முடியவில்லை.
Advertisement
என்னடா இப்படி படுத்திருக்க…? ஒரு நாளும் சுணங்கி படுக்காத நண்பன் இப்படி துவண்டு கிடப்பது அகிலனை பதட்டப்படுத்தியது.
ஒண்ணுமில்லரா… லைட்டா ஃபீவரிஷா இருக்கு… தட்டுத் தட்டுமாறி தலையணையில் கழுத்தை அணைவாய் சாய்த்து அமர்ந்த வாக்கில் பேசினான்.
டேய் இது லேசான ஃபீவரா? நெற்றியில் கை வைத்து பார்த்தவன் கடிந்து கொண்டான்.
Advertisement
டேபிலெட் போட்டா சரியாகிடும்!
மெடிக்கல் கிட் எங்கே வச்சிருக்க…? கண்களை சுழற்றி தூழாவியவன் எதிரில் இருக்கும் க்ளோஸட்டை திறந்து பார்த்தான்.
ஹரி டெம்ப்ரேச்சர் செக் பண்ணு…! தெர்மோமீட்டரை எடுத்து அவன் கையில் திணித்தான்.
ஓ காட் 104 ° உனக்கு லேசான பீவரா…?கிளம்பு ஹாஸ்பிட்டலுக்கு!
அகி சொன்னா கேளுரா… ஆபிசுக்கு டைமாகுது… நீ கிளம்பு! சலிப்புற்றான்
நான் பர்மிஷன் கேட்டுக்கிறேன்… நீ கிளம்பு!
ஈவினிங் போகலாம்… இப்போ நீ ஆபிசுக்கு கிளம்பு! மீண்டும் சரிந்து படுத்துக் கொண்டான்.
நான் பேசினா நீ சரிப்படமாட்ட இரு சௌமிட்ட சொல்றேன்…
டேய்…. ஏன்டா நீ வேற… நெற்றியை நீவிக் கொண்டான் கடுத்த முகத்துடன்.
எழுந்திரு மேன்…! முதலில் பிரஷ் பண்ணு… கை பிடித்து எழுப்பி ரெஸ்ட் ரூமிற்குள் கொண்டு போய் விட்டான்.
அவன் காலைக் கடன் முடித்து பல் துலக்கி முகம் கழுவி வருவதற்குள் சௌமிக்கு அழைத்து காபி எடுத்து வர கூறினான் அகிலன்.
அடுத்த பத்தாவது நிமிடம் காபியும் இடியாப்பம், காய்கறி குருமாவுடன் பவித்ரா வந்து சேர்ந்தாள்.
நீயா… என்பது போல் ஹரிசரண் சிடுசிடுப்புடன் நோக்க…. நான் வந்த வேலை முடிந்தது என்பது போல் டேபிளில் வைத்து விட்டு சென்று விட்டாள் பவித்ரா.
செல்லும் அவளை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி.
காபி சாப்பிடு ஹரி! கோப்பையில் ஊற்றி அவனுக்கு நீட்டிய அகிலன் சாப்பிடுவதற்கு பிளேட்டும் சுடு தண்ணீரும் கொண்டு வந்து வைத்தான்.
டேய் அகி கொடுமை படுத்துற… காபி சாப்பிட்ட அடுத்த நிமிஷம் டிபன் சாப்பிடுவாங்களா?
வெறும் வயித்தோட ஹாஸ்பிடல் போகக் கூடாதுடா… கொஞ்சமா சாப்பிடு! அப்போ தான் டேப்லெட்ஸ் எடுத்துக்க ஈஸியா இருக்கும். வற்புறுத்தி இரண்டு இடியாப்பம் சாப்பிட வைத்தே அழைத்து சென்றான்.
“—————–“
வாங்க அகிலன் நல்லா இருக்கறீங்களா? புன்னகை யுடன் நலம் விசாரித்தார் மருத்துவர் ராம் குமார்.
நல்லா இருந்தா உங்க கிளிக்கிற்கு ஏனுங்க வர்றோணும்? பதிலுக்கு சிரித்தான் அகிலன்.
ராம் குமார் கோயம்புத்தூரை சேர்ந்தவர். பல வருடங்களாய் அமெரிக்காவில் வசிப்பவர். வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். நம்ம ஊரு மனிதர்கள் என்றால் அவருக்கு ஊர்ப்பாசம் அதிகப்படியாய் பொங்கும். அதிகமாய் பேசி கொஞ்சமாய் பீஸ் வாங்குவார்.
அகிலனுக்கு நல்ல பரிச்சயமான மருத்துவர்.
என்ன தான் அமெரிக்காவை வளர்ச்சி அடைந்த நாடு என்று பெருமையாய் தூக்கி வைத்து கொண்டாடினாலும் அங்கு மருத்து வசதி அவ்வளவு எளிதல்ல… நினைத்த நேரத்தில் பெரிய மருத்துவ மனைகளுக்கு சென்று உயரிய வைத்தியம் பார்த்து விட முடியாது.
மருத்துவரின் அப்பாயின்மெண்ட் பெறுவதற்குள்ளே நொந்து நூடுல்ஸ் ஆகி வந்த நோய் அதுவே சொல்லாமல் கொள்ளாமல் போய் விடும்
அங்கு கண்டிப்பாக மருத்துவ காப்பீடு பெறுதல் நலம்… இல்லை என்றால் நம்ம ஊரில் இருந்து சொத்து சுகத்தை விற்று கொண்டு போய் தான் வைத்தியம் பார்க்க முடியும்! அத்தனை காஸ்ட்லி அங்கு மருத்துவம்.
நம்ம ஊரு போல வராது என்று உள்ளுக்குள் புலம்பினாலும் வெளியில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் அங்கு செட்டிலான நம்ம ஊரு குடியேறிகள் ( வந்தேறிக்கு ஆப்போசிட் குடியேறி… ஹா ஹா எப்பூடி நம்ம தமிழ் புலமை? )
இப்படியாக நம்ம ஊரு மக்களுக்கு ச்சீப் அன் பெஸ்ட் மருத்துவர் ராம் குமார் தான்.
அந்த ஏரியா கவர்னரை விட பாப்புலர் நம்ம ராம் குமார் டாக்டர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஹரியும் இரண்டோரு முறை வந்திருக்கிறான் அகிலனோடு….
சொல்லுங்க…! மருத்துவர் ஸ்டெதஸ்கோப்பை காதில் இருந்து கழட்டினார்.
இவனுக்கு நேத்துல இருந்து ஃபீவர்!
அப்படியா?ஹரிசரணுக்கு BP, இதயத் துடிப்பு எல்லாம் பார்த்துவிட்டு கண்களை இமை விலக்கி சோதித்து பார்த்தார்… நாக்கை நீட்ட சொல்லி பரிசோதித்து பார்த்தார்.
சளி ஏதும் இருக்கா?
இல்லை என்றான் ஹரி.
எனக்கு தெரிந்து வைரஸ் காய்ச்சல் போல இல்லை… எந்த டெஸ்டும் வேணாம்.
பனி காத்துல அலைந்திருக்கலாம்….மன உளைச்சலினால் வந்த காய்ச்சலாவும் இருக்கலாம்.
நல்லா ரெஸ்ட் எடுத்து ரெண்டு நாள் மருந்து மாத்திரை எடுத்துப் பாருங்க!
அப்படியும் சரியாகலைனா வாங்க பிளட் டெஸ்ட் எடுத்து பார்த்துடுவோம்.
அவ்வளவு தான் ட்ரீட்மெண்ட் …. அமெரிக்க மருத்துவர்கள் போல பல நூறு டாலர்கள் பிடுங்கவில்லை. அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் என்று பயமுறுத்தவும் இல்லை.
“—————“
ஆபிசில் இருந்து ஒன்னா தானே வந்தோம்? பனிக் காத்துல எங்கே போன?
நைட் தூக்கம் வரல… டெர்ரசில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்தேன்.
எப்போ?
லெவன் ஓ கிளாக்!
இடியட் நேத்து வெதர் ரிப்போர்ட் என்ன தெரியுமா? -10° மேன்.
தலையிலடித்துக் கொண்டவன் அதற்கு மேலும் அவனை கடிந்து கொள்ள முடியாது படுக்கையை சரி செய்தான்.
ஹரி மேனேஜ் பண்ணிப்ப தானே…?
மாத்திரை கொடுத்து விழுங்க வைத்து போர்த்தி விட்டவன் கை கடிகாரத்தை பார்த்துக் கொண்டான்.
அகி நீ கிளம்புறா…. டூ அவர் தானே பர்மிஷன் சொல்லி இருக்க… சோர்வாய் கண்களை மூடிக் கொண்டான்.
சரி….. சௌமி வந்து பார்ப்பா… ஏதாவது வேணும்னா அவட்ட கேளு!
அவ இங்கே வர வேண்டாம்!
டாக்டர் தான் வைரல் பீவர் இல்லைன்னு சொல்லி இருக்காரே…?
அவர் சொல்லிட்டா…? நாம ஏன் ரிஸ்க் எடுக்கணும்?
டேய் ஒழுங்கா கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு! அதட்டி விட்டு கிளம்பினான் அகிலன்.
“—————“
பவி நான் போய் ஹரியை பார்த்துட்டு இந்த ரசம் சாதம் கொடுத்துட்டு வரேன்.
அக்கா இருங்க நீங்க போக வேண்டாம்….நான் போய் பார்த்து கொடுத்துட்டு வரேன்.
குழைத்து கரைத்த ரசம் சாதமும் தொட்டுக் கொள்ள இஞ்சி ஊறுகாயும் கொண்டு சென்றவள் மரியாதைக்காக கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள்.
போர்வைக்குள் உடலை குறுக்கி படுத்திருந்த ஹரியின் நெற்றியில் கை வைத்து பார்க்க…. உடல் சூடு முற்றிலும் குறைந்து இருந்தது.
தலைபாரத்தில் அனத்திக் கொண்டிருந்துவனின் நெற்றியில் மென்மையான கரம் பட….. அந்த கரத்தை தெம்பாய் பற்றிக் கொண்டான்.
ஏதோ ஒரு உந்துதலில் படக்கென கண்விழித்தவன்
ஏய் எடுறி கையை…. பதறியவன் பட்டென்று தட்டி விட்டான்.
இல்ல… நான்… சாரி.. உங்களுக்கு… அது… காய்ச்சல் சரியாகிடுச்சான்னு…
ஏய் உன்னை யாருடி இங்கே வர சொன்னது? என்னை தொட்டு பார்க்கிற அளவிற்கு உனக்கு தைரியமா?
ஸ்டாப் இட்! ஓவரா கற்பனை பண்ணிக்காதீங்க…. எவ்வளவு அருவெறுப்பா யோசிக்கிறீங்க…?
என்ன கற்பனை பண்ணிட்டு பேசறேன்… நீ கண்டுட்ட…? அது என்ன ஒரு ஆம்பளையை தொட்டு பார்க்கிறது.
ச்சீ… நீங்களும் உங்க கோணல் புத்தியும்y! நீங்க பெரிய டேஷாவே இருந்துட்டு போங்க… அதுக்காக என்னை கேவலமா நினைச்சுடாதீங்க கையில் கொண்டு வந்த நீலகிரி தைலத்தை கட்டிலில் வீசிவிட்டு கண்ணீருடன் வெளியேறினாள்.
போடி…. என் கண் முன்னாடி வந்துடாத….மூச்சு வாங்க கத்தியவன் மீண்டும் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டான்.
ஏன் எனக்கு மட்டும் எங்கே சென்றாலும் நிம்மதியே இல்லை.. அப்படி என்ன பாவம் செய்து பெண்ணாய் பிறந்தேன்?
அப்படி என்ன என் மீது வன்மம்? இவனுக்கு ஏன் என்னை கண்டாலே எரியுது?
மாடிப்படியில் நின்று கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டவள் இயல்பாக கீழே இறங்கி சென்றாள்..
என்ன பவி ஹரி என்ன பண்றாரு?
அக்கா அவருக்கு பீவர் இப்போ இல்லை… சாப்பாடு வேணாம்னு டென்ஷனாகி கத்துறாரு… நீங்க போய் பார்த்து சாப்பிட சொல்லிட்டு வாங்க…!
கிச்சனுக்குள் நுழைந்து கையை சோப் போட்டு கழுவிக் கொண்டு குழந்தைகளிடம் சென்று விட்டாள்.
இந்த ஹரி ஏன் இப்படி குழந்தையாட்டம் அழிச்சாட்டியம் பண்றாரு? புலம்பிக் கொண்டே சென்றாள் சௌமி.
“—————–“
ஏய் சௌமி உன்னை யாரு வர சொன்னது? சினத்தில் கத்தினான்.
நீ இப்போ ஓகே தானே…?
ஏன் சாப்பாடு வேணாம்னு சொன்ன?
நான் எப்போ சொன்னேன்… உள்ளுக்குள் யோசித்தபடி
“பசிக்கல…. “சௌமியின் முகத்தை ஆராய்ந்தான்… பவித்ரா எதுவும் கூறவில்லை என்பது புரிந்தது.
சூடா ரசம் சாதம் இருக்கு பாரு!
ஆஹாரம் ஒத்தம்மா… நா நோறு செதுக்கா உந்தி ( சாப்பாடு வேண்டாம். வாய் கசக்குது )
அதுக்கு சாப்பிடாம இருந்து மயங்கி கிடக்க போறியா?
நேனு பிரட் தீஸ்குண்டாடும்மா…
ஏது பிரட் சாப்பிட போறியா?
உனக்கு காய்ச்சலில் வாய் கசக்கும்ன்னு தான் பவி இஞ்சி ஊறுகாய் அரைத்திருக்கா… கொஞ்சம் ரசம் சாதம் சாப்பிடு ப்ளீஸ்.
நான் சாப்பிடறேன் நீ கிளம்பு!
நீ சாப்பிட்டா தான் நான் போவேன்… கெட்டிலில் வெந்நீர் இல்ல போல… இரு நான் சுட வைக்கிறேன்.
வெந்நீரில் சீரகம் போட்டு டம்ளரில் ஊற்றி வைத்து சாப்பாட்டு கிண்ணத்தை அவனுக்கு நகர்த்தி வைத்தாள்.
அவளை சங்கட படுத்த விரும்பாத ஹரி குழைந்த ரசம் சாதத்தை ஊதி ஊதி ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டான். பச்சை கொத்தமல்லி இலைகளின் வாசம்… பெருங்காயத்தின் தூக்கலான மணம்…. மிளகின் காரம் தொண்டைக்கு அத்துனை இதமாய் இருந்தது. பக்க பலமாக இஞ்சி ஊறுகாயின் விறு விறுப்பு நாவில் உமிழ் நீரை அதிகம் சுரக்க வைத்தது.
சாப்பிட்டு முடித்தவனை டேபிளட் போட வைத்து விட்டே அகன்றாள் சௌமி.
இந்த ஆயம்மா ஏன் இப்படி பண்றா…. தலையணையை குத்தினான்.
————-தொடரும் ———
error: Content is protected !!