Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amitham 13 2

வீ. பி அவனின் வேலையை முடிந்து வந்து  கட்டிலை பார்க்க, தாயிம் மகளும்  இருவரும் கட்டியணைத்து  தூங்குவதை பார்த்தவன்.  அவர்களுக்கு சற்று இடைவெளிவிட்டு படுத்துக்கொண்டான்,, நான், என் பொம்மா,, என் பங்காரம் எல்லாரும் ஒன்னா இருக்கோம் என்ற மனநிறைவோடு தூக்கி இருந்தான்..

வைஷுவுக்கு , வீ. பிக்கு திருமணமாகி ஒருவாரம் முடிந்து இருந்தது,,  வைஷுவுக்கு காலில் அடிப்பட்ட இடம் நன்றாக ஆறியிருக்க.. அவள் அவள்வேலைகளை அவளே பார்த்துக்கொள்ள, தப்பி தவறி கூட கீழே செல்லவில்லை வைஷு.. அவளிற்கான உணவு  மேலே அவள் ரூம்பிற்கே வந்து விட.. கீழே செல்ல அவசியம் இல்லாமல் போனது.. யாழினி ஸ்கூலுக்கு போக ரேடியாக உதவி செய்வாள் வைஷு.. மகளின் அழகை பார்த்து, பார்த்து புரித்துப்போவாள்..



Advertisement

சௌசன்யா  தினமும் வைஷுவிடம்  வந்து பேசுவாள்.. நாகில்லி கூட மருமகளிடம் வந்து பேசிவிட்டு சொல்வார்,, ஆதித்யா கூட மனைவியை பார்க்க வரும் நேரம் நன்றாக பேசுவான் வைஷுவிடம்.. சௌசன்யா  மகன் கிருஷ்கூட நன்றாக பேசுவான், “வைஷுஸு அத்தையா, வைஷுஸு அத்தையா”  என்று அவளை  சுற்றி  சுற்றி வருவான்..

Advertisement

இந்திரா  தேவி மகனின் அறை பக்கமே வருவதில்லை..

Advertisement

வைஷுவுக்கு  உடல் சரியானதால்..  வீட்டில் இருக்க முடயவில்லை. டான்ஸ் கிளாஸ் எடுக்க போகலாம் என்று முடிவு பண்ணி.. இதை யாழினியிடம்  சொல்லி.. “உங்க நானாகிட்ட  அம்மா டான்ஸ் கிளாஸ் போகலாமான்னு  கேளு”  என்றாள்…

Advertisement

யாழினி இரவு வீ. பி வந்தவுடன். “நானா  மீ டான்ஸ் கிளாஸ் போறாங்கலாம்,, உங்க கிட்ட கேட்க சொன்னாங்க  போகட்டுமா?”..

“உங்க மீக்கு நான் இங்கே  இருக்குறது இப்பா தான் கண்ணுக்கு  தெரியுதா, என்கிட்ட நேரடியாக  கேட்க சொல்லு யோசிச்சு  சொல்லுறேன்” என்றவன் குளியல் அறைக்கு  சென்று விட..

இவர் வேற  இவர் கிட்ட எப்படி பேசி அனுமதி வாங்க என்றவள்,, ஒரு ஆணியும்  வேண்டாம், நான் டான்ஸ் கிளாசே போகல போதுமா.  என்று முடிவுக்கு வந்திருந்தாள் வைஷு…

வைஷு தினமும் அவளின் தாத்தா, பாட்டியிடமும், சௌமியாவிடமும் பேசிவிடுவாள், இன்னும் தனக்கு திருமணமானதை யாரிடமும் சொல்ல வில்லை.. சொன்னாள் ஆயிரம் கேள்வி வரும் என்றே.

வீ. பி தினமும் வைஷுவின் முகத்தையே  ஆசையாக, காதலாக,  பார்ப்பான், அவளோ அவனிடம் முகத்தை கூட காட்டாமல்  ஒதுங்கி போக.. போடி என்று அவனும் இப்போது பார்ப்பது இல்லை..

அவளுக்கு ஏதாவது கேட்கனும், சொல்லனும் என்றாள், யாழினியைவிட்டு  கேட்பாள்..

வீ. பிக்கு வைஷு எப்போது தன்னிடம் உரிமையா வந்து பேசுவாள்.. அவளுக்கு வேண்டியதை அவளே தன்னிடம் கேட்க வேண்டும்,  என்று ஆசையோடு எதிர் பார்த்து காத்திருந்தான்.

வீ. பி அவளுக்கு வேண்டியதை அவள் முகம் பார்த்தே செய்து விடுவான்..

எத்தனை  நாள் என்கிட்ட பேசாமல் இருப்பேன்னு  பாக்குறேன்டி என்று  பொறுமையாக காத்திருந்தான்..

வைஷுவுக்கு  வீ. பியிடம்  எப்படி

சுமுகமாக நடந்துகொள்வது  எப்படி பேச, எப்படி பழக, அவனாக பேசினால் ஒரு வார்த்தையில் பதில் சொல்வாள்.. அவனே தன்னிடம் பேசினாள், பேசம்  எண்ணத்தில்  தான்  இருந்தாள்..

எங்கே அவனின் முகத்தை பார்த்தாள், தான் அவனிடம்  உருகிவிடுவோமோ, என்ற பயம்.. அவனின் சிறு பார்வை கூட.. அவளிடம் ஆயிரம் கதை கூற.. அவன் கண்ணை பார்ப்பதை தவிர்த்தாள்.. அவனின் கண்பார்வை அவளால் எதிர் கொள்ள முடியவில்லை அவளால்.. எவ்வளவு அன்பு, பாசம், காதல் அத்தனைக்கு தான் தகுதி ஆனாவளா, அவனின் ஆழமான காதலுக்கு எப்படி எதிர் வினையாற்றுவது என்று தெரியாமல்.. அவனை பார்ப்பதை தவிர்க்க..

இவனுக்கு  அவள் தன்னை பார்க்க தவிர்ப்பது போல் தெரிய.. அவனும் வீம்புக்கு  இவளிடம் பேசமால் இருந்தான்..

அன்று மதியம்  12 மணி போல் வீ. பியின்  வேலைகார பெண் வந்து, “வைஷுமா  உங்களை  பார்க்க  ஒருதர் வந்து இருக்கார்” என்று  கூறி  செல்ல..

 “என்னை பார்க்க வா”   என்று சொல்லிக்கொண்டே  கீழே வர..

கேஷவன் வாசலில் நிற்று இருப்பதை பார்த்தவள்.. சத்தியமாக கேஷவனை இவள் எதிர் பார்க்க வில்லை,, நீண்ட வருடம் ஆகிவிட்டது  இவரை பார்த்து பேசி.. எப்படி இங்கே வந்தார்,? யாரிடம் விசாரித்தார்?  என்று  குலம்பிய படியே கீழே வந்தவள்..

கேஷவனை பார்க்க, அவரும் மகளை  பார்த்தார்.. பொன் தாலி அணிந்து,புடவையில்கட்டி, தலையில் பூவும், நெத்தி உச்சியில் வைத்திருந்தா பொட்டும் சொல்லியது  அவருக்கு சேதி.. பிரகாஷ் இவரிடம் அனைத்தையும் போனில் சொல்லி அழைத்திருந்தான்  வீ. பியின் கட்டளைப்படி..

கேசவனிடம் வந்தவள் வாங்க. என்று  ஒரே வார்த்தையில் உள்ளே அழைக்க..

கேஷவனுக்கு மகள் நீண்ட வருடம் கழித்து பேசியது  சந்தோஷமே..

ஆனால்  யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்தது அவருக்கு கோபத்தை தர..  உள்ளே வந்து அமர்ந்தவர்..

மகளை  பார்த்து  “நாங்க ஒன்னும் செத்து  போகல வைஷுமா!.. உயிரோட தான் இருக்காம்,, ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே” என்றார்  மகள் கல்யாணமான செய்தி கேட்டு வந்த வருத்தத்தோடு…

அவளோ தந்தை மீது அவளுக்கு கோபம் இருந்தாலும், எப்படி விசயத்தை அவரிடம் சொல்ல என்று மருகி, கைகளை பிசைந்த வாறே  நிற்க..

வெளியே இருந்து உள்ளே வந்த  வீ. பி,, கேஷவனை பார்த்து, “மாவ்வையா ரண்டி”  என்று அவரின் அருகில் வந்தவன் அவரின் காலில் விழ..

எழுந்துக்கொண்ட கேஷவன்,! “வேண்டாம் தம்பி” என்று கூற.. “நான்  உங்களுக்கு  மாப்பிள்ளை மாமா காரு” என்றவன்… “பொம்மா ரா, மாவ்வையா கிட்ட ஆசீர்வாதம் வாங்க என்று வைஷுவை பக்கத்தில்   அழைத்து நிற்க  வைத்து இருவரும் கேஷவனின் காலில் வில,, “இரண்டு பேரும்  நல்லா இருங்க “.. என்றார் கேஷவன்  மகளை பார்த்து..   இப்படி சொல்லாம்  திருமணம் முடித்ததை எண்ணி  அழுதவரை..

பார்த்து,,”அப்பா”  என்று கூறி வைஷுவும்  அழ..

“நான்  அப்பா இல்லடா, அப்பாவா,, இருந்தா  என்கிட்ட   நீ சொல்லி  இருப்பா'” என்றார்..

“யாரோ  ஒருத்தர் சொல்லி,  என் பொண்ணுக்கு கல்யாணம் ஆனது தெரியவருது, அப்போ நான் எப்படி பட்ட அப்பாவா” இருந்துருக்கேன்..

“இல்லப்பா” என்ற   வைஷு ஏதோ சொல்ல  தயங்க.

“மாவ்வையா” என்றவன்..

“வைஷுவை ஒன்னும் சொல்லாதீங்க, நான்  தான் அவளை  கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணி கிட்டேன், என்னை மன்னிச்சிருக்க”  என்று இரண்டு கைகளை கூப்பி கேசவனிடம் மன்னிப்பு  கேட்க

இந்திரா  தேவி மகன்  ஒருவரிடம் கைகூப்பி மன்னிப்பு  கேட்டு நிற்பதை பார்த்தவர்..

“விஜேய்” என்று ..

இந்திரா தேவி கத்த..

சத்தம்  கேட்டு, மூவரும் இந்திரா தேவியை  பார்க்க.

“விஜய்  என்ன பண்ணுற? யார் இவன்? என்று  மகனின்  முன்னாடி கோபமக  வர..

“மீ, இவங்க வைஷுவோட அப்பா, கல்யாணம் விசயம் கேள்வி பட்டு வந்திருக்காங்க”

“என்னா வேணா  இருக்கட்டும், அதுக்காக நீ மன்னிப்பு கேட்பியா”.. என்றவர் வைஷுவை முறைக்க..

அவளோ வீ. பி யின் பின் சென்று அவனின் சட்டை பிடித்துக்கொண்டு நின்று  கொள்ள..

இந்திரா தேவியை, கேஷவனிடம்  வீ. பி அறிமுகம் படுத்தி வைக்க..

கேஷவன் நீண்ட ஆண்டுகள் கழித்து  இந்திரா தேவியை பார்த்த அதிர்ச்சியில்  நிற்க.

இந்திரா தேவி தன் எதிரில் நிற்ப்பவன் வைஷுவோட சொந்தம்   என்று தெரிந்து அவரின் முகத்தை கூடபார்க்க வில்லை.

“இனி இவ வீட்டுல இருந்து, ஒரு ஒருத்தறா  வருவாங்க, எல்லார்கிட்டையும் மன்னிப்பு கேட்டு நிப்பீயா,, இது உனக்கு தேவையா வீ,பி, இதுக்குதான் நான் சொன்னா பொண்ணை நீ ” என்று சொல்வதற்குள்..

“மீ போதும், தேவையில்லாமல், பேசாதீங்க” என்றான் வீ. பி..

“நான்  தேவையில்லாமா பேசுறேனா, பாரு இவனும், இவன் மூஞ்சும், ட்ரெஸ்சையும்.. உனக்கு நான் எப்படி பட்ட வீட்டில் பொண்ணு பார்த்தேன்  தெரியுமா?.. இவன்  அவன் பொண்ணை பார்க்க வெறுங்கையை  வீசிட்டு வந்து இருக்கான், பொண்ணுக்கு  என்ன சீர் செய்வான் இவன்” …என்று கேஷவனின் முகத்தை சரியாக பார்க்காமல் பேச..

“உன் கௌரவம் என்னாவாகுமுன்னு  யோசிச்சீயா,, லோக்கல்  ஆளுங்க மாதிரி இருக்காங்க, நாளைக்கு இவங்க  வீட்டுக்கு உன்னால போக முடியுமா?  நம்ம யாழினியை அங்க அனுப்ப முடியுமா?.. இதோ  நிக்குறாளே இவ” என்று  வைஷுவை பற்றி இன்னும் நிறைய பேச..

“மீ போதும்”  என்றான் வீ. பி..

“நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிட்டேன். வைஷுவை  பத்தி நீங்க  எதுவும் பேச கூடாதுன்னு,, திரும்ப, திரும்ப  தப்பா பேசுறீங்க,, நான்  விருப்பட்டு  இவளை  கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி இருக்கேன், என் உயிர்மா இவ,, இவ  இல்லண்ணா உங்க மகனுக்கு வாழ்க்கையே இல்ல.. கடைசி வரைக்கும் தனி மரம் தான்,, அதை தெரிஞ்சி கிட்டும் இப்படி   பேசுறீங்க,, ஓகே  நல்லது தான். இனி ஒரு நிமிசம்  கூட இந்த வீட்டுல  நான் இருக்க மாட்டேன், யாழினியை கூட்டிட்டு நான் கிளம்புறேன்”   என்றவன்.

“வா வைஷு”   கிளம்பலாம்  என்று அவளை மேலே அவன் அறைக்கு  போக அழைக்க..

“விஜெய்” என்றவர்,, “அம்மா  கோபத்துல ஏதோ சொல்லிட்டேன் என்னை விட்டு போகாத  விஜெய், யாழினியில்லாமல்  என்னால இருக்க முடியாது” என்றார் கலங்கி குரலில்..

அவரின் கையை தன் கையில் இருந்து பிரித்து விட்டவன்.. “நான் போகனுமுன்னு  முடிவு பண்ணிட்டேன் மீ போறேன்”.. என்றவன்..

வைஷுவை பார்த்து  “கிளம்பு போ உன் ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு வா, போகலாம்”  என்றான்..

அவளே அமைதியாக நிற்க..

“வாடி” என்று அவளின் கைபிடித்து இழுக்க..

அவளோ வரமாட்டேன் என்பது போல் நிற்க..

“ஏய்  பொம்மா  வாடி போலாம்”.. என்றான்..

அவள் “வேண்டாம்”  என்பது  போல் தலையாட்ட..

“ஏய் லூசாடி  நீ, உன்னையும் , உங்க அப்பாவையும்  என் மீ திட்டுறாங்க, எப்படி எல்லாம் பேசுறாங்க  உனக்கு கோபம் வரல”..

“இல்லை” என்றாள்..

“நீ ஏண்டி இப்படி இருக்க, நீ இப்படி இருந்தா உன்னை மீ..  மறுபடியும் பேசுவாங்க வா நம்ம தனியா போகலாம், இங்கே உன்னையும், என்னையும்  வாழ விடமாட்டாங்க வா”..என்றான் வீ. பி..

அவள்  வரமுடியாது  என்பது போல கல் போல் நிற்க.. இந்திரா தேவிக்கு ஆச்சரியம் மகன் கூப்பிட்டு செல்லாமல் இருப்பவளை  வியந்து பார்க்க..

“வைஷு வா”  என்று வீ. பி பல்லை கடிக்க..

“அவங்க  என்னையும் என் அப்பாவையும்  தானே பேசுனாங்க,   பேசுனா பேசிட்டு  போகட்டும், அவங்களுக்கு உரிமை இருக்கு பேசட்டும்”  என்றாள்..

“என்ன உரிமையா, ஏய் மீ உன்னை  திட்டுறாங்கடி”..

“திட்டுனா திட்டட்டும்  வாங்கிக்கிறேன்,, நீங்க சும்மா இருக்க” என்றாள்..

வீ. பிக்கு இவள் என்ன பேசுகிறாள், மூளை  எதுவும் வெர்க் ஆகாலியா,, “பைத்தியம்” என்றான்..

பைத்தியம் என்றது  அவனை பார்த்து முறைத்து பார்த்தவள்.. “நீங்க சொன்னதுக்கு  எல்லாம் ஓகே சொன்னேன்  பாருக்க நான் பைத்தியம் தான்”  என்று கண்கலங்கியவளை..

“டேய், பொம்மா, பொம்மளு தெரியாம சொல்லிட்டேன் டா சாரிடா பொம்மா, நீ வாடா , மீ இன்னும் இங்க இருந்தா, இன்னும் கோபப்படு வாங்க, வா போகலாம்” என்று அவளை அழைக்க..

“மாப்பிள்ளை  வேண்டாம், அதான் வைஷு சொல்லுறாளே, தனியா எல்லாம் போக வேண்டாம்,, என்றார் கேசவன்..

“மாமா நீங்களும் புரிஞ்சுக்காம பேசுறீங்க,,” என்றான்..

“இல்லை மாப்பிள்ளை உங்க அம்மா என்ன சொன்னாங்க பொண்ணுக்கு சீர் கொண்டு வரலண்ணு தானே  சொன்னாங்க,, நான் என் பொண்ணு  50 சவரம் நகை எடுத்து வச்சிருக்கேன், அதை குடுத்துடுறேன்,, ஒரு இடம்  பெங்களூரு இருக்கு அத வேணா வைஷு பேருல எழுதி வச்சுருவேன்.. என்னால முடிஞ்சத நான் செய்யுறேன்.. என் அப்பா,  அம்மாவுக்கு வைஷுவை ரொம்ப பிடிக்கும்  அவங்களும் அவளுக்கு செய்வாங்க  மாப்பிள்ளை.. இதற்கு மேல என்னால முடியாது”..

 என்று கேசவன் வருந்த..  “மாமா நீங்க எதுவும் செய்ய வேண்டாம், வருத்தபடாதீங்க”..

“இல்லை மாப்பிள்ளை  என்னால முடிஞ்சத நான் கடைசி வரைக்கு என் பிள்ளைகளுக்கு செய்வேன்,, என் அப்பா  சாதாரண விவசாயி,  கிருஷ்ணப்பா, அவங்க பையன்  நான், என் பொண்ணுக்கு செய்யவேண்டியதை  நாளைக்கு கொண்டு  வந்து  செஞ்சிடுறேன்.. என் பொண்ணை திட்டாதீங்க.. நீங்க  திட்டினாலும் அவ உங்களை எதிர்த்து பேச மாட்டா”..என்றவர் திரும்ப..

இந்திரா தேவி அப்பொழுது தான் கேசவனை உற்று நன்றாக பார்த்து..

“கேஷவா”   என்று அழைக்க..

“நான்  உங்க தம்பி கேஷவன்  இல்லக்கா,, வைஷுவோட அப்பா கேஷவன்” என்றார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!