Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Mangaiyin Nizhalaai Vanthavan

Mangaiyin Nizhalaai Vanthavan 6

மங்கையின் நிழலாய் வந்தவன்🥰💕

அத்தியாயம் – 6

என்ன சொன்ன? என்ன சொன்ன? என்று திமிறிக்கொண்டு வந்தான் விஷ்ணு.

அவன்மேல கை வச்சிட்டு ஒரு அடி எடுத்துவைடா பார்ப்போம். என்னோட மீசையை வழிச்சிகிறேன்.



Advertisement

“தம்பி…..தம்பி…. ஓவரா துள்ளாத”
ஒரு நிமிஷம், இதெல்லாம்
பேசறதுக்கு நல்லாத்தான் இருக்கும் நடைமுறைக்கு ஒத்துவராதுப்பா.

தொடப்பக்குச்சி சுப்புல் மாதிரி இருந்துட்டு என்னமா பேசறான் கதிர்சார் இந்த பொடி பையன் என்றவனை ஏளனமாக பார்த்தான், வக்கில்.

“யோவ் யாரை பார்த்து தொடப்பக்குச்சின்னு சொன்ன மரியாதை கெட்டுக்கும் பாத்துக்கோ, என்று ரகு ஆவேசப்பட,”

Advertisement

விடு மாப்ள, வாங்கின காசுக்கு கொஞ்சமாவது பேசணும்னு
பேசறான். இந்த சின்ன தொடப்பக்குச்சி வச்சி முக்குல பொடைப்பா இருக்குனு கொடைஞ்சோம்னு வச்சிக்கவே கொஞ்சம் எத்தி உள்ள விட்டனா கபாலத்தையே கதிகலங்க வச்சிடும் சாம்பிள் காமிக்கலாமா? இந்த மட பயலுக்கு என்றான் விஷ்ணுதேவன்.

Advertisement

“ம்…..செஞ்சிட்டா போச்சி மாப்ள ” என்றார்கள் ரகுவும், நந்தனும் இணைந்து,

இவர்களின் கேலிபேச்சை காதுகொடுத்து கேட்கமுடியாமல் தன்னுடைய காரில் வைத்திருந்த இரும்பு ராடினை எடுத்து வந்தவன்,

யாரும் எதிர்பாராத தருணத்தில் விஷ்ணுவின் தலையில் குறிவைத்து அடிக்க போன சமயம் தந்தை முத்தரசு தடுக்க அந்த அடி அவர் தலையில் பலத்த காயத்தை உண்டாகியது.

Advertisement

“இரும்புராடின்” அடி பலமாக விழுந்ததால் உதிரம் நிற்காமல் வழிந்துகொண்டிருக்க,

துடிதுடித்தவன்,
அப்பா……. அப்பா…… கண்ணை
திறந்து பாருங்கப்பா உங்களுக்கு ஒன்றும் ஆகாதுப்பா, என்றவன் ரகுவின் கையில் அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்து செல் என்று கட்டளையிட்டு, இவன்புறம் திரும்பினான்.

அத்தனை மனக்கவலையிலும் பொறுமையாக இருந்த நம் நாயகன் அப்பாவின் இந்த நிலையை கண்டவுடன் மனது தவிக்கும் தவிப்பை பொருக்க மாட்டாமல் அவனின் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி ஓங்கி ஒரு குத்து குத்தினான் அவனது வயிற்றில்.

(வீட்டிலும், பொதுயிடங்களிலும் பொறுமையை கையாளுபவனின் இந்த திடீர் மாற்றம் யாருமே எதிர்பார்க்காதது)

வலி தாங்க முடியாமல் ஒரே அடியில் சுருண்டு விழுந்திருந்தான். அப்போதும் அடங்காமல் “நோர் கொழுப்பு சீலையில் ஒழுவுது”ன்னு கிழவிகள் சொல்லும் சொலவடைக்கு ஏற்றார் போல, மண்ணோடு மக்கி போற பயிரை எவனோ கொலுத்திப் போட்டத்துக்கு என்னை ஏண்டா வம்புக்கு இழுக்கற பிச்சைக்கார பயலே உசுரு முக்கியம்னா இதோட நிறுத்திக்க வெளுத்துருவேன் வெளுத்து.

நான் ஏண்டா நிறுத்தணும் பொறுத்ததெல்லாம் போதும்டா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னவோ சொன்னியே,

ம்ம்ம்ம்….பிச்சைக்காரனா! ஏண்டா சொல்லமாட்டா? எச்சை நாயே “நீ அனுபவிக்கும் அத்தனையும் எப்படி வந்ததுன்னு நெனச்சி பாருடா மனதில் உறுத்திகொண்டிருந்த விஷயம் வார்த்தையாக வந்துவிட்டது.”

“ப்ச் ” என்று சலித்து கொண்டவன், குருட்டு முண்டத்தை என் தலையில கட்டினதுக்கு நீயா விருப்பப்பட்டு எழுதி கொடுத்ததுடா, நான் என்னவோ விருப்பப்பட்டு அவ கழுத்துல தாலி கட்டின மாதிரி பேசற வெட்கமா இல்லையாடா? ராஸ்கேல்.

இல்லடா உண்மையாவே எனக்கு வெட்கமாவே இல்ல, உழைச்சு சாப்பிடும் எனக்கு அதெல்லாம் இருக்காது. உன்னை நீயே கண்ணாடியில் பார்த்து கேட்டால் தெரியும். கேட்டு பாக்கறயா?

டேய்…… டேய்…..,

என்ன என்ன வார்த்தை
சீக்கிகிடுச்சா? நான் சொல்லவா?
என் தங்கச்சி மனசை மாத்தி உன்னோட திட்டத்தை செயல்படுத்த நினைச்ச.

“ஆனா, அது முடியாம போனதும் இப்ப எதையாவது குருக்குவேலை பார்த்து இருக்கறதையும் அபகரிக்கலாம்னு ட்ரை பண்ணின முடியாம போனதால என்னோட உயிரா நெனச்ச பயிரை இப்படி நாசம் பண்ணிட்டியேடா” பாவி உன்னையெல்லாம் உசுரோட விட்டதே பெரிசு தப்பிச்சி ஓடிடு.

மறுபடியும் சொல்றேண்டா இதை பத்தவச்சது நான் இல்லை. எங்க போய்ட்டு என்ன மயித்தை வேணும்னாலும் புடுங்கு ஒரு ஆதாரமும் சிக்காது “ஹஹஹஹா” என்று கேவலமான சிரிப்பை சிரித்தான்.

அவனின் சட்டையை கொத்தாக பிடித்தவன் வேண்டாம்டா ரொம்ப சூடேத்தி பாக்காதேயென்று அவனின் அழுத்தத்தை கூட்டினான்.

கையெடுடா……. என்று தெனாவட்டாக நின்றான் ஜெகன்நாதன்.

கை எடுக்கணுமா? எடுத்துட்டா போச்சி என்றவன் அவனின் கையை மடக்க “க்ளிக்” என்ற மெல்லிய சத்தத்துடன் எலும்பு உடைந்து முதுகுபுறம் சேர்த்துவைத்து விட்டான்.

டேய்….டேய்…என்னடா செஞ்ச என்னோட மவனை என்ற கதிர்வேலனின் வார்த்தைகளை காதில் வாங்கி கொள்ளவில்லை கிளம்பிவிட்டான்.

“உங்களை எங்க பார்க்கணுமோ அங்க பாத்துக்கறேன்டா சிலுவண்டுகலா, கண்டுக்காம போறானுங்க, என்று பொருமிக்கொண்டே மகனை கைத்தாங்களாக அழைத்துச்சென்றார்.” கதிர்வேலன்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சின்னமனூர் கிராமத்தில் முப்பது ஏக்கர் நிலபுலன்களுடன் வாழையடி வாழையாக வாழ்ந்து கொண்டிருந்தவர் முத்தரசு.

இவரை பெற்றெடுத்த தாய்க்கு குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வழியில் நடந்த விபத்தில் இன்னொரு கருவினை தாங்கும் பாக்கியத்தை இழந்துவிட்டார். அனைத்து சொத்துக்களுக்கும் ஒரே ஒரு வாரிசு நம்ப முத்தரசு மட்டுமே.

இந்த காலத்தில் சொத்துக்காக அடித்து கொள்ளும் குணமெல்லாம் அந்த காலத்தில் இல்லவே இல்லை. அதனாலோ என்னவோ இவர்கள் வாழ்க்கையில் பிரச்சனை இல்லாமல் கடந்து செல்லமுடிந்தது.

ஓடையில் ஓடுகின்ற நீரினை போல் காலமும் நேரமும் காத்திராமல் ஓடிகொண்டிருக்க, முத்தரசு திருமணம் முடித்த கையோடு அடுத்தடுத்த வருஷம் பெற்றோர்கள் வயது முதிர்ச்சியில் இறந்த துக்கத்தின் காரணத்தால், பிள்ளைபேரு ஐந்து வருடம் கழித்தே இவர்களுக்கு கிட்டியது.

அதுவும் எளிதில் கிடைத்து விடவில்லை. திருப்பதி ஏழுமலையாணை வேண்டிகொண்டு விரதமிருந்து தவமாய் தவமிருந்து வைகுண்ட ஏகாதசி அன்று பிறந்தபிள்ளை தெய்வமே கொடுத்த குழந்தை.

ஆனால், இன்று அவனுக்கு வரும் சோதனைகள் கொஞ்ச நெஞ்சமில்லை. தெய்வத்திற்கே சோதனை வரும்போது சாதாரண மனிதன் தானே அவனும்,

விஷ்ணுதேவா பிறந்த இரண்டு வருடத்திற்கு பிறகு கண்மணி பிறந்துவிட்டாள்.

“பெண் பிள்ளை கண்ணழகி, உருட்டி உருட்டி பார்த்தே எல்லோரையும் கவரும் சிறுபிள்ளையை கண்ணின் இமை போல பார்த்து பார்த்து வளர்த்தனர்” பெற்றவர்கள் இருவரும்,

வளர வளர விஷ்ணுவுக்கும் தங்கை மீது கொள்ளைபிரியம், தங்கைக்காக எதையும் செய்ய துணிந்தவன், அன்னை சொல்லை தட்டாதவன் தங்கைக்காக அதையும் செய்ய துணிந்தான் பருவ வயதில்.

திருமண வாழ்கை எல்லாருக்கும் இன்பத்தை கொடுத்திடுமா என்ன? அதற்கு இவள் ஒன்றும் விதி விலக்கில்லையே, இன்றைக்கு குடும்பம், குழந்தை, எதிர்காலம் மட்டுமல்ல பார்வையையும் இழந்து தவிக்கிறாள் பாவை அவள்.

( அவள் மட்டுமா? ஒட்டு மொத்த குடும்பமும் இணைத்து தான்)

எந்த நேரத்தில் கண்மணி என்று பெயர் சூட்டினார்களோ, இழக்க கூடாத கண்ணின் கருமணிகளை இழந்து பார்வை இல்லாத சிறு பிள்ளையை போல வீட்டின் மூளையில் முடங்கிக்கிடக்கிறாள்.

தனது புல்லட் வண்டியை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வந்தவனை
பின்னோடு கட்டிக்கொண்டு மாமா இங்க பாத்திங்களா என்று எதிரில் இருந்த கண்ணாடியில் அவளுடைய அழகை காண்பித்தாள்.

“அவளை வாரி முன்னுக்கு அழைத்து கொஞ்சியவன், வாயாடிக்கு யாரு இந்த வேஷத்தை போட்டு விட்டது? “

“பக்கத்து வீட்டு ஈஸ்வரி அக்காதான் மாமா “

“ஏன் நிவிமா அங்குட்டு போன, பாட்டியம்மாகிட்ட சொல்லிருந்தா அவகளே செய்து விட்டிருப்பாங்களே”

“ப்ச்…. என்று சலித்துக்கொண்டாள் சின்னவள்”

பாருடா, இந்த வயசிலே இம்புட்டு சலிப்பு அம்மனிக்கு ஏன்?

அக்கம் பக்கம் சுற்றிபார்த்துவிட்டு, பாட்டிட்ட கேத்தேன் (கேட்டேன்) மாமா அதுக்கு அவங்க, “போடி போ ” உங்கம்மாளுக்கு செய்யற ஊழியம் பத்தலையோன்னு திட்டி அனுப்பிட்டாங்க என்றாள்.

நிவி சொல்லி முடிக்கும் வரை அவன் காத்திருக்கவில்லை.

அம்மா…….. ம்மா……… என்று அந்த வீடே அதிருமளவுக்கு கூப்பிட்டான்.

பின்கட்டில் மாட்டிற்கு கஞ்சி செய்து கொண்டிருந்தவர் இவனின் சத்தத்தில் அலறிக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

என்னப்பா வெளில எதாவது பிரச்சனையா? கொஞ்சம் பொறுப்பா மோர் கொண்டுவரேன் என்று அடுக்களைக்குள் நுழைய போனவரை,

உயிர் வாழ்ந்து என்ன செய்ய போறேன் மண்ணுக்கு போற உசுரு இப்ப போனாலென்ன? பத்து வருஷம் கழிச்சி போனாலென்ன?

“என் சாமி என்ன வார்த்தை சொல்லிட்டப்பா? இதுக்காகவா நானும் உங்கப்பாவும் உசுர கையில புடிசிருக்கும் சொல்லுய்யா? “

நீங்க பாசம் வச்சிருக்கற ஒரே காரணத்துக்காக நிம்மதி இல்லாத இந்த வாழ்க்கையை நான் வாழ முடியுமா ம்மா?

அய்யா, ராசா இப்ப என்ன நடந்ததுன்னு இப்படிலாம்
பேசறப்பா?

நிவிகிட்ட என்னமா சொன்னிங்க?

விஷம் விஷம் அப்பனுக்கு புள்ளை தப்பாம பொறந்திருக்கு என்று முனகியவர், வீட்டு வேலை செய்யவே நேரமில்லை. ஈஸ்வரியை ரெடி பண்ணிவிட சொல்லுன்னு சொன்னேன்.

இல்ல மாமா பொய் சொல்லறாங்க,

பாட்டி அது மட்டுமா சொன்னிங்க. ஒன்னு குருட்டு முண்டமா இருந்து உசுர வாங்குது, இன்னொன்னு நல்லா கண்ணு தெரியுதுன்னு உலகத்தையை வாங்கிகுடுக்க சொல்லி கேட்குது என்மவன் எதுக்குன்னு தவிப்பான்.
சாகமா என் உசுர வாங்குதுங்கன்னு சொன்னீங்களே மறந்துடீங்க.

அம்மாவும் என்னை உள்ள கூட்டிட்டு போயிட்டு சரியான அடி மாமா. இங்க பாருங்க எப்படி வீங்கிருக்குன்னு
என்று மழலை குரலில் வெம்பிக்கொண்டே சொன்னவளை என்ன சொல்லி சமாதானம் செய்வதென்று தெரியாமல் தினரியவன்,

இங்க பாருங்கம்மா கண்மணியை நீங்க தானே சுமந்திங்க, வேற யாரோட குழந்தையை தூக்கிட்டு வந்துட்டீங்களா?

“என்ன சாமி இப்படிலாம் பேசற?”

“வேற எப்படி பேசனும்?”

இல்லப்பா அதுவந்து,

போதும் நிறுத்துங்க இனிமேல் என்கிட்ட யாரும் பேசவேண்டாம். பிஞ்சு குழந்தைம்மா அவகிட்ட என்ன பேசணும்னு தெரியாதா?

அதுவந்து….

பேச வேண்டாம்னு சொல்லிட்டேன் என்தங்கச்சியை சுமையாக நினைக்கும் யாரும் எனக்கு தேவையில்லை என்றவன் தங்கை அறைக்குள் நுழைந்தான்.

“உடுத்த சேலை இல்லன்னு சின்னாத்தா வீட்டுக்கு போனா அவ ஈச்சம்பாயை சுத்திகிட்டு எதுக்க வந்த கதையால்லருக்கு”

இவன் நம்பகிட்ட கோவத்தை காண்பிக்கிறது, எத்தனை நாளுக்குன்னு நானும் பாக்கறேன், என்றவர், முந்தானையால் மூக்கை துடைத்துக்கொண்டு வேலையை கவனிக்க சென்றுவிட்டார்.

அங்கே அறையில், சுவற்றை மெது மெதுவாக தடவிக்கொண்டே கோல் உன்றி நடந்து வந்தவலை பார்த்து மனம் கனத்தது ஆணவனுக்கு.

கண்ணு இருடா என்று அருகில் சென்று அவளை தாங்கியவனுக்கு,

அவள் சொன்ன வார்த்தை கேட்டு செவுலில் அறைந்தது போல இருந்தது.

(அது ஒன்னு இல்லம்மா தானே இந்த பிச்சைக்கார பிழைப்பு எனக்கும் என்மவளுக்கும் என்ற வார்த்தைத்தான்)

என்ன வார்த்தைடா சொல்லிட்ட கண்ணுக்கு கண்ணா உன்னோட அண்ணா இருக்கற வரைக்கும் யாருகிட்டயும் உன்னை பிச்சை எடுக்க விடமாட்டேன் டா.

போதும் நிறுத்துன்னா நீ மட்டும் காலகாலத்துல கல்யாணம் முடிசிருந்தா அம்மா இப்படியெல்லாம் நடந்திருக்க மாட்டாங்க.

என்னம்மா பேசற இதுக்கும் என்னோட கல்யாணத்துக்கும் என்னம்மா சம்மந்தம்?

ம்ம்ம்ம்….. நீங்க என்னால தான் கல்யாணம் கட்டிக்கமா இப்படி மொட்ட மரமா தனியா இருக்கறீங்கன்னு அம்மா சாடை மாடையா பேசாத நாளில்லை.

“ப்ச் “…அதுவா, இங்க பாரு கண்மணி உனக்கு கண் ஆபரேஷன் முடியாம என்னால எதையும் செய்யமுடிலடா. அம்மாவுக்கு புரியாது நீயுமா?

“அப்படியாண்ணா நீங்க இந்தளவுக்கு பிடிவாதமா இருக்கும்போது நானும் என்னோட முடிவுல உறுதியா இருக்கிறேன்”

அவ்ளோ பிடிவாதமா இந்த அண்ணன்கிட்டயே?

ஆமாம் நான் யாரு தேவா, விஷ்ணுதேவாவோட தங்கச்சி அவர் உடம்புல ஓடற அதே ரத்தம் தானே என்னுடம்புலயும் ஓடுது எதுவாக இருந்தாலும் நான் சமாளிச்சுப்பேன்.

வெளில நாங்க தங்கறதுக்கு ஆசிரமம் பாத்திருக்கேன் எனக்கும் என்குழைந்தைக்கும் பாதுகாப்பானதும் கூட, அந்த இடமென்று மனதில் இருந்ததை உடைத்துவிட்டாள்.

அவள் சொன்னதை காதில் கேட்டவுடன் “என்ன சொன்னவென்று கை ஓங்கி விட்டான் தங்கையின் மீது”

ஒன்றும் அறியாத அவளோ உன்னோட மௌனம் எனக்கு சம்மதமா தெரியுதுண்ணா, என்றாள்.

ஹஹஹா ஹஹஹா……. அம்மா மாமா உன்னைய அடிக்க வந்து அடிக்காம அழுவுது.

மாமா அடி மாமா அம்மாவை என்னைய அடிச்சதுக்கு நீதான் மாமா அம்மாவுக்கு தண்டனை கொடுக்கணும் இல்லனா தோப்புக்கரணமாவது போடா சொல்லு மாமா நீ சொல்லு மாமா என்றாள் நிவின்யா.

கண்மணியின் ஒரே ஒரு சந்தோசம் அவள் மட்டுமே.

அடிங்கண்ணா அதான் உன்னோட நிவிம்மாவே சொல்லிட்டாங்க, ஓங்கின கையை கீழே இறக்காதீங்க அடிங்க என்று கதறினாள்.

அவளின் அழுகை தாங்க மாட்டாமல் இல்லம்மா இல்ல என்ன விட்டுட்டு ஆசிரமம் போறன்னு சொன்னதனால இப்படி கோவப்பட்டுட்டேன்.

“மத்தபடி ரெண்டு பேருமே எனக்கு ரெண்டு கண்ணு மாதிரிடா செல்லங்கலா ” இனிமேல் அண்ணனை விட்டு எங்கையும் போகமாட்டேன்னு சத்தியம் பண்ணுடா ப்ளீஸ் டா, என் குட்டிமால்ல என்று கெஞ்சினான்.

அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணனும்.

கண்டிப்பா பண்றேன் டா, உனக்காகவும் நம்ப நிவிம்மாவுக்காகவும் என்னவேணும்னாலும் செய்வேண்டா.

சொன்னதெல்லாம் போதும் சத்தியம் பண்ணுங்கண்ணா என்றாள். கண்மணி

சரி டா கண்மணி, இங்க பாரு நீ என்ன நெனச்சிருக்கியே அதை உசுர குடுத்தாவது இந்த அண்ணன் கண்டிப்பா நிறைவேத்துவான் இது சத்தியம் சத்தியம் சத்தியம் என்று உறுதி கொடுத்தான் அண்ணன்
அவன்.

தங்கையின் ஆசை தெரிந்தால் என்ன நடக்குமென்று அடுத்த பகுதியில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!