இதுங்க ரெண்டு பேருக்கும் இடையில் என்னவோ ஓடிட்டு இருக்கு… போனையே கையால் தொடாத பிள்ளை இவன் வந்தா மட்டும் போன் பேசுது…. தனக்கு தானே பேசிக் கொண்டே குழந்தைகளை கொஞ்ச சென்று விட்டான்.
கொஞ்சம் கேரட் ஜுஸ் கிடைக்குமா? பவித்ராவிடம் கேட்டான்.
ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்… அத்தான் லைனில் இருக்காரு… பேசிட்டு உங்களுக்கு ஜுஸ் போட்டு தரேன்.
அத்தான்… அத்தான்… எவன்டி அவன் அத்தான்…? டேபிள் மீதிருந்த பீங்கான் தட்டை எடுத்து சுவரில் அடித்தான்.
சார்… நடுக்கத்துடன் பார்த்தாள்.
சத்தம் கேட்டு அகிலன் ஓடிவந்தான்.
சில்லு சில்லாய் உடைந்து கிடந்த தட்டை பார்த்தான்.
இதுவும் கை தவறி தான் உடைஞ்சுது அது தானே…
அதே தான்… தலையை கோதிக் கொண்டு நின்றான் ஹரி.
ம்மா பவித்ரா எல்லா பீங்கான் பாத்திரத்தையும் இவனுக்கு கைக்கு எட்டாத உயரத்தில் வை…! இல்லாட்டா அதையும் கை தவறி உடைத்துடுவான்… நண்பனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே மீண்டும் அறைக்குள் சென்றான் அகிலன்.
ஏய்… இனி எவன் கிட்டயும் இப்படி சிணுங்கி சிரிச்சு பேசிட்டு இருந்தேன்னு வையேன்… பல்லை உடைச்சுடுவேன்… அவள் கரம் பற்றி காதுக்குள் மிரட்டல் விடுத்தான்.
சார் கையை விடுங்க! உங்க லிமிட் தான்டி நடந்துகிறீங்க…! என் அத்தான்கிட்ட என்னை பேசக்கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு சார்?
நான் யாரா… அவள் கழுத்தை பற்றிவிட அவன் கரம் நீண்டு வர…
சார் OVW (Office on Violence Against Women) 911 க்கு கால் பண்ணிடுவேன்.
உங்க மிரட்டுற வேலையை என்கிட்ட வச்சுக்காதீங்க!
என் அத்தான் தானே என் வாழ்க்கை, கனவு, எதிர்காலம் எல்லாம்… நீங்க எப்படி அவர்கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்லலாம்? நீங்க யாரு முதல்ல?
கூடிய சீக்கிரம் எங்க மேரேஜ் நடக்கும். முதல் பத்திரிகை உங்களுக்கு தான்… அவன் கரத்தை தூசு போல் தட்டிவிட்டு சென்றாள்.
அதற்கு மேலும் அங்கு நிற்க பிடிக்காதவன் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
ஏன்டி இப்படி பேசின… ஏன் இப்படி பேசின…. உறுமியவன் மொபைலை எடுத்து ஸ்ரீனிக்கு அழைத்தான்.
சொல்லு ஹரி…!
ஸ்ரீனி ஒரு டீட்டெயில்ஸ் கலெக்ட் பண்ணனும்.
சொல்லு ஹரி என்ன டீட்டெயில்ஸ்… யாரு பத்தி?
சொல்றேன்… வாட்சப் பாரு! அந்த அட்ரசில் உள்ள அந்த நபர் பற்றி A to Z எனக்கு தெரிந்தாகணும்!
சரி!
இன்னைக்கே தெரியணும்!
இன்னைக்கேவா? ஸ்ரீனி வியப்புடன் கேட்டான்.
எஸ்.. இன்னைக்கு நைட் நான் தூங்கணும்னா எனக்கு இந்த டீட்டெயில்ஸ் வேணும். ஹரியப் மேன்… டூ இட் இம்மிடியேட்லீ.
ஹரி இந்த கேஸ்.. எனக்கு சந்தேகமா இருக்கு மேன் …!நமட்டு சிரிப்புடன் கேட்டான் ஸ்ரீனி.
டேய் ஃபூல் சந்தேகமே வேண்டாம்… நிஜம் தான்… அப்புறம் என்ன… கோ ஃபாஸ்ட்.
இந்த ஸ்ரீனிவாசனை டிடெக்டிவ் என்று மட்டும் ஈஸியாக சொல்லி விட முடியாது. பல அரசியல் பெரும்புள்ளிகளுக்கு, முக்கிய பிரமுகர்களுக்கு உளவு சொல்பவன்… ஏழு கடல் ஏழு மலை தாண்டிய ரகசியத்தை கூட தோண்டி துருவி விடும் ஜித்தன்.
அவனிடம் ஒப்படைத்த விஷயம் என்றுமே தோற்றதில்லை. எல்லா இடத்திலும் அவனுக்கு செல்வாக்கு உண்டு. மறைமுகமாக அரசியல்வாதிகளையே ஆட்டிவைக்கும் வல்லமை கொண்டவன்.
ஹரிக்கு தாய் வழி உறவினன் இந்த ஸ்ரீனி.
ஓகே மேன்… ஐ வில் ட்ரை!
எது ட்ரையா? மகனே இந்தியாக்கு பறந்து வந்து அடிப்பேன்.
எனக்கு உன் மெசேஜ் தான் ஸ்லீப்பிங் டேபிளட் மாதிரி.
முடிச்சுட்டு லைனில் வர்ர… மிரட்டி விட்டு ஹரி ஓய்ந்து அமர… ஸ்ரீனி சிரித்துக்கொண்டான்.
“——————–“
பவி, ஹரியை பத்தி நீ என்ன நினைக்கிற…? குழந்தைக்கு டயப்பர் மாற்றிக் கொண்டே சௌமியா கேட்க…
நான் ஏன் நினைக்கப் போறேன்…? அசட்டையாய் கேட்டுக் கொண்டே சப்பாத்தி மாவு பிசைந்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.
இல்ல… நீ பார்த்த வகையில ஹரி எப்படி? மீண்டும் துருவினாள்.
ஸாரிக்கா…நான் அவரை சரியா கவனிச்சதே இல்லையே… வேணும்னா பார்த்துட்டு சொல்லவா?
தெளிவா இருக்க… சிரித்துக்கொண்டே குழந்தையை தோளில் தட்டிக் கொண்டிருந்தாள் சௌமி.
சரி அதை விடு!
மேரேஜ் எப்போ பண்ணிக்கப் போற? எப்படியாவது அவள் வாயை பிடுங்கினால் வார்த்தை வரும் என்ற ஒரு நப்பாசை சௌமிக்கு.
நீங்க எத்தனை வயதில் மேரேஜ் பண்ணிட்டீங்க? எதிர் கேள்வி கேட்டவளை ஒருவித அசூயையுடன் பார்த்தாள் சௌமி.
நான் டுவெண்ட்டி செவனில் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.
எனக்கு டுவெண்ட்டி ஃபோர் தான் ஆகுது!
என்னமா ரிப்ளை கொடுக்குறா… சௌமியால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
எப்படியும் இவளிடம் வார்த்தைகளை வாங்க முடியவில்லையே…? சப்பென்று ஆகிப்போனது சௌமிக்கு.
அக்கா யூடியூப்பில் ஒரு தால் மக்னி ரெசிபி பார்த்தேன். அது டிரை பண்ணவா?
ம்க்கும்… ரொம்ப முக்கியம்… ஹரி நீ அய்யோ பாவம் தான். உள்ளுக்குள் நண்பனுக்காய் வருந்தினாள்.
“—————“
டி வி பார்த்தான், பாடல் கேட்டான், தன் அறையை ஒழுங்கு படுத்தினான்… குப்புற படுத்தான், மல்லார்ந்து படுத்தான், ஹாலில் சிறு நடை பயின்றான்….எப்படியும் நேரம் போகவில்லை.
கடிக்க இன்னும் விரலில் நகம் இல்லை.
வெறுப்பாய் இருந்தது. பூமி சுற்றாமல் நின்று விட்டதோ என்ற ஐயப்பாடு அவனுக்கு.
இந்த இடியட் ஸ்ரீனி என்ன முட்டை போடுறானா? பேரு பெத்த பேரு… உள்ளுக்குள் வசைபாடினான்.
அவன் தவியாய் தவித்துக் கொண்டிருந்த வேளை மொபைல் அழைப்பு… துள்ளி ஓடி அழைப்பை ஏற்று பார்த்தால் அவன் அன்னை.
அய்யோ என்றானது! ஆர்வம் இல்லாத குரலில் தாயிடம் பேசினான்.
அந்த பொண்ணுட்ட பேசினியா ஹரி…? அவ்வளவு ஆர்வம் தாரணியின் குரலில்.
இன்னும் இல்லம்மா…!
ஏம்ப்பா தள்ளி போட்டுட்டே போற..? எதிர்பார்ப்பில் இருந்த குரல் கவலைக்கு தாவி விட்டிருந்தது.
சீக்கிரம் பேசிடுவேன்மா…!
எம்புள்ள தயங்குறானா…? என்னால நம்பவே முடியல ஹரி. உனக்கு சங்கோஜமா இருந்தா எனக்கு நம்பர் அனுப்பு நான் பேசி பார்க்கிறேன்.