Skip to content
Post Views: 3,520
பவித்ராவின் அறையில் இருந்து வெளியேறிய ஹரி ஹாலுக்கு வந்து சோஃபாவில் தொய்ந்து சரிந்தான்.
அப்பாடா ஒரு வழியா மூச்சு முட்டிய காதல் அவஸ்தையில் இருந்து கொஞ்சம் விடுபட்ட நிம்மதி. இதயம் இலகுவாகிவிட்ட ஆசுவாசம். இருபதில் வர வேண்டிய காதல் முப்பதில் வந்து தொலைத்ததை எண்ணி அவஸ்தையாய் ரசித்தான்.
பவித்ராவின் அறை கதவை திறந்து கொண்டு அவன் வெளிவருவது கண்டு மீண்டும் தன் அறைக்குள் சென்றுவிட்டாள் சௌமி.
என்ன சௌமி ஹாட் வாட்டர் கேட்டேனே…?
Advertisement
ஷ்… ஹரி ஹாலில் இருக்கார்.
இருக்கட்டும்!
பவித்ரா ரூமுக்குள்ள இருந்து வந்தாரு.
Advertisement
ஹி ஹி… அசடு வழிய சிரித்தவனின் கையில் கிள்ளினாள்.
Advertisement
எதுக்குடி கிள்ளின….? வலியில் லேசாய் முகம் சுழித்தவன் பதிலுக்கு வலிக்காமல் அவள் கன்னம் கிள்ளினான்.
ஹரி அதுக்கெல்லாம் சரிப்பட மாட்டாருன்னு உங்களுக்கு தெரியாதா? தலை சாய்த்து நக்கலாய் சிரித்தாள்.
நேரம் தான்… அவளை முறைத்தான்.
Advertisement
ஏன்னா நீங்களே அதுக்கு சரிப்படாத ஆளு தான்!
அடிங்க… அவள் கரம் பற்றி இழுத்தணைத்து கன்னத்தில் கடித்தான்.
நானா ப்ரபோஸ் பண்ணவே அன்ஃபார்டுனெட்டா உங்களுக்கு லவ் வந்துச்சு! உங்க பிரண்ட் மட்டும் எப்படி இருப்பாரு…?
நான் சரிப்படாமலா ஒன்னுக்கு ரெண்டா ஒரே டெலிவரில பெத்துகிட்ட….? மீசையால் குத்தி அவளை சிலிர்க்க வைத்தான்.
அய்ய…. பேச்சை பாரு! பெரிய உலக மகா சாதனை தான்.
இல்லையா பின்ன…. வீரபாண்டிய கட்டபொம்மன் போல் மீசையை திருகினான்.
உங்க பெருமை போதும். ஹரிக்கும் பவிக்கும் இடையிலே ஏதோ பிரச்னை ஓடிட்டு இருக்கு… அது பத்தி யோசிக்காம… அவன் தலையை களைத்து விட்டாள்.
ம்ம்ம்ம்… நானும் ஒரு வாரமா பார்த்துட்டே இருக்கேன். ரெண்டும் அப்நார்மலா தான் திரியுது!
அந்த பொண்ணு போனும் கையுமா திரியுது… அவன் மிளகாயை அள்ளி மூஞ்சியில் பூசின மாதிரி கடு கடுன்னு பார்க்குறான்.
ஏதோ பேசிட்டு வராருன்னு பார்க்கிறேன்.
ம்ம்ம்ம்… அப்படி தான் இருக்கும்.
அவங்க அம்மா பிரஷர் கொடுக்க ஆராம்பிச்சுட்டாங்க! பையனுக்கும் கல்யாண ஆசை வந்துடுச்சு…
என்ன பிரச்னையா இருக்கும்? கவலையுடன் கேட்டாள் சௌமி.
அது அவங்க பிரச்சனை… அவங்களே பேசி தீர்த்துக்கட்டும்! ஹெல்ப் கேட்டா மட்டும் நாம உள்ளே நுழைவோம்!
எது எப்படி இருந்தாலும் ஹரி அவன் லவ்வில் தீவிரமா இருக்கான்.
ரெண்டு பேருமே பாவங்க! ஹரிக்கு பவித்ரா நல்ல பொருத்தமா இருப்பா. அவளை மகாராணியா வாழ வைப்பார். இவ புரிஞ்சிக்கணுமே… சுமுகமா ரெண்டு பேரும் சேர்ந்தா போதும். உண்மையான அக்கறையில் வருத்தம் கொண்டாள்.
சீக்கிரம் நல்லது நடக்கும்! எல்லாம் ஹரி பார்த்துக்குவான். ஹரி இருக்க பயம் ஏன்? மனைவிக்கு ஆறுதல் கூறினான்.
“——————”
இரவு முழுதும் சிவராத்திரி தான் பவித்ராவிற்கு.
நல்ல உறக்கம் அமையக் கூட வரம் வாங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவளை வதைத்தது.
அவன் மனம் திறந்து கொட்டி விட்டு போய் விட்டான். அவளால் தான் கிரஹித்துக் கொள்ள முடியவில்லை.
பல வித யோசனையின் முடிவில் ஹரி மேல் தான் இன்னும் கோபம் அதிகமானது.
கட்டாயப்படுத்தி காதல் வருமா? அந்த முட்டாளுக்கு ஏன் புரியவில்லை? இவனுக்கு வந்தால் எனக்கும் காதல் வந்தே தீர வேண்டுமா என்ன? ஆணாதிக்கவாதி. எங்கிருந்து எனக்குன்னு வரானுங்களோ?
பல வித யோசனை அவளை உருட்டி புரட்ட உறக்கம் எப்படி வரும்?
வீங்கிய முகத்துடன் காலையில் வெளியில் வந்த பவித்ராவை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள் சௌமி.
காபி போட பாலை அடுப்பில் ஏற்றி வைத்து விட்டு. டிபனுக்கு சாம்பார் செய்ய பருப்பு ஊறபோட்டாள்.
பொறுத்து பொறுத்து பார்த்த சௌமி… என்ன பவி முகம் வீங்கி இருக்கு… காய்ச்சலா? கேட்டே விட்டாள்.
அதெல்லாம் இல்லக்கா… சரியா தூக்கம் வரல… கொஞ்சம் தலைவலி.
வேறொன்னும் பிரச்னை இல்லையே…
அதெல்லாம் இல்லக்கா… சாருக்கு காபி கலந்து தரவா?
அழுத்தக்காரி…. உள்ளுக்குள் வறுத்தெடுத்தாலும் அவள் கலந்த காபியை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்கு சென்று விட்டாள்.
“——————“
ஹரி இந்த இரண்டு நாளாக பவித்ராவை பார்க்க கூடாது என்பதற்காகவே அகிலன் வீட்டுக்கு வருவதில்லை.
நாம பேசிட்டோம்… அவளுக்கு யோசித்து தெளிய அவகாசம் வேண்டும் என்றே இந்த விலகல்.
அகிலனுடன் ஆபிசில் பார்த்து பேசுவதோடு சரி.
பவித்ராவோடு கொஞ்சம் கடுமையான பேச்சுவார்த்தை நிகழ்ந்தேறி இருக்கும் என்று அகிலனால் யூகிக்க முடிந்தது. அதனாலே அவன் எதையும் தோண்டி துருவ விரும்பவில்லை.
என்ன சார் வீட்டு பக்கம் வரதே இல்லை… ஆபிசில் பிடித்து வைத்து கேட்டு விட்டான் அகிலன்.
கனடா போற பிராஜக்ட் விஷயமா கொஞ்சம் ஒர்க் அதிகம் இருக்கு மச்சான்.
சௌமி நல்லா இருக்காளா? குட்டீஸ் எப்படி இருக்காங்க
ஆமா என் வீட்டுக்கு வர உனக்கு பிளைட் டிக்கெட் கிடைக்கல பாரு… நொடித்துக் கொண்டான் அகிலன்.
அதுக்கில்ல மச்சி பவித்ராட்ட பேசியிருக்கேன். அவ கொஞ்சம் யோசிக்கட்டும்! அவளுக்கு டைம் கொடுக்கனும் இல்ல….
ஓகே…. அழுத்தி கூறியவன் நண்பன் முகத்தை பார்த்து ஏதாவது கண்டுப்பிடிக்க முடிகிறதா என்று பார்த்தான். வழக்கம் போல் சுழியம் தான்.
சரிடா நான் கிளம்புறேன், நீ வரல….?
இல்ல இன்னைக்கு டெஸ்டிங் டீமோட எனக்கு ஒரு சின்ன மீட்டிங் இருக்கு நீ கிளம்பு!
அகி ஒரு நிமிஷம்… இதை பவித்ராட்ட கொடுத்துடு!
ஆபிஸ் பேக்கில் இருந்து புத்தம் புது மொபைல் ஒன்றை எடுத்து அட்டை பெட்டியுடன் நீட்டினான்.
அகிலனுக்கு கொஞ்சம் புரிந்தது. இரண்டு நாளாக பவித்ரா கையில் போன் இல்லை.
ஓ சார் அவ மொபைலை கைத்தவறி உடைச்சுட்டீங்க…!
ம்ம்ம்ம்ம் என்றான் ஒருவித அவஸ்தையுடன்.
நந்தமூரி இண்டிக்கு கொடாலுக்கு இ சிம்பிள் போனா?
டேய் ரொம்ப பண்ணாத… இதை அவட்ட கொடுத்துடு!
அஞ்சு லட்சத்துக்கு ஆப்பிள் ஐ போன் வாங்கி கொடுக்க நான் ரெடி… அவ வாங்கிக்க மாட்டா.
சரியா தான் புரிஞ்சு வச்சிருக்க… மெச்சிக் கொண்டவன் இதையே அவ வாங்கிக்க மாட்டான்னு நினைக்கிறேன் என்றான்.
தெரியும்… இருந்தாலும் ட்ரை பண்ணு!
தெரிந்தே ஏன்டா? நொந்து கொண்டான்.
தெண்டமா தானே சுத்திட்டு இருக்க.
நேரம் தான்…. சிரித்துக்கொண்டான்.
என்ன பிரச்னை என்று ஹரியும் சொல்லவில்லை அகிலனும் கேட்கவில்லை.
“———————“
பவித்ராக்கு அவனை காணாதது ஒருபுறம் நிம்மதியாகவே இருந்தது.
வேலை முடிந்த பிறகு கொஞ்ச நேரம் போனை நோண்டிக் கொண்டிருப்பாள். இப்போது டிவி முன் அமர்ந்து விடுகிறாள்.
பவி உன் தம்பி கால் பண்ணியிருக்கான் பேசு! மொபைலை கொடுத்து விட்டு போனாள் சௌமி.
இந்த வாரம் அக்கா அழைக்கவில்லை என்று அவனே அழைத்து விட்டான்.
தம்பியிடம் பேசிவிட்டு மொபைலை கொடுத்தவளிடம்
உன் போன் என்னாச்சு பவி என்றாள் சௌமி.
அது… கைத்தவறி கீழே விழுந்து உடைந்துடுச்சுக்கா.
ஓ… என்றவள் வேறெதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
மொபைல் வாங்கணும்கா!
ம்ம்ம்ம்…. அதுவரை என்னோட பழைய மொபைல் இருக்கு அதை யூஸ் பண்ணிக்கோ!
சரிங்கக்கா!
ஆபிஸில் இருந்து உள்ளே வந்த அகிலன் முதல் வேலையாக பவித்ராவிடம் மொபைலை நீட்டினான்.
என்ன சார் இது?
மொபைல்!
அது தெரியுது! எனக்கெதுக்கு?
ஹரி கொடுக்க சொன்னான்.
சாரி எனக்கு வேண்டாம் ப்ளீஸ். அவள் கை நீட்டி வாங்கவே இல்லை.
இல்லம்மா உன் மொபைல்.. அவன்… உடைச்சு… அதுதான்…
பரவாயில்லை சார். அக்கா எனக்கு அவங்க பழைய மொபைல் தரேன்னு சொல்லியிருக்காங்க. அதுவே எனக்கு போதும்!
இது எதிர்பார்த்தது தான் என்றாலும் மீண்டும் அவளிடம் கொடுக்க முயற்சித்தான்.
அவள் அங்கே நின்றால் தானே….
“—————–“
ஹரி தான் இவ மொபைலை உடைச்சதா?
ம்ம்ம்ம்!
இவ மொபைலை கைத்தவறி உடைச்சுட்டேன்னு சொன்னா?
அவங்களுக்குள்ள ஏதோ காரசாரமா நடந்திருக்குன்னு புரியுது.
எதுவோ பேசி இருக்கான்னு நினைக்கிறேன். பவிக்கு கொஞ்சம் டைம் கொடுக்க தான் இங்கே வராம இருக்கான்.
ரெண்டு பேருமே அழுத்தக்காராங்க தான்…பெருமூச்சு விட்டாள் சௌமி.
பவி பாவங்க. எவ்வளவு தான் வேதனையை அனுபவிப்பா…?
நீ பாரு!ஹரி அவளை இனி வேதனை பட விட மாட்டான்.
வாழ்க்கையின் முற்பகுதி கஷ்டமா இருந்தாலும் பிற்பகுதியில் சந்தோஷமா இருக்கப் போறா.
என்னவோ மனசுக்கு திக் திக்குன்னு இருக்கு. பவியோட அமைதியும் ஹரியோட பிடிவாதமும் நினைச்சாலே தவிப்பா இருக்கு.
நம்ம லவ் தான் உப்பு சப்பு இல்லாம கல்யாணத்தில் முடிஞ்சு போச்சு… அவன் லவ்வாவது கிக்கா இருக்கட்டுமே…
இது கிக்கா உங்களுக்கு? எனக்கு பயமா இருக்கு.
அட லூசு ரொம்ப சீக்கிரமே ஹரிக்கும் பவிக்கும் மேரேஜ் நடக்கப் போகுது பாரு.
எவ்வளவு பெரிய வாழ்க்கையை சந்தோஷமா அந்த பொண்ணு வாழப்போறா… அவ்வளவு நம்பிக்கை ஹரி மீது.
“——————-”
Mr handsome can we go on date… சிணுங்கினாள் லிடியா.
I’m not interested.
அவளும் பல வழிகளில் முயன்று விட்டாள். நாகரிகம் கருதி கூட அவளோடு இரண்டு வார்த்தை அவன் பேசியதில்லை.
அவன் விலகி செல்ல செல்ல தான் அவளுக்கு அதீத விருப்பம்.
அவனது ஆளுமையும் கம்பீரமும் அவளை இம்சித்தது.
அவளை எத்தனை பேர் பார்க்கிறார்கள் அவள் பார்வை வட்டம் ஹரி மீது தான்.
Hari…I love indian culture and
Idians too. கொஞ்சினாள்.
Is it…என்றவன் அவ்விடம் நிற்கவில்லை.
பின்னோடு ஓடினாள்.
Are you going to get married?
Yeah After coming from Canada.
Oh! Have you selected the bride.
Yeah… My Gulabi’s name is Pavithra which means holy.
Is it true?
Undoubtedfully!
Do you want to see my girl? Look at here… தன் மொபைலில் இருக்கும் அவள் படத்தை காட்டினான். இனி தன்னை தொந்தரவு செய்ய மாட்டாள் என்று.
லிடியாவின் முகம் கூம்பி போனது.
Indian men never like foreign girls…. மனம் வாடிவிட்டாலும் வாழ்த்து கூறினாள்.
“——————“
வாடா… எப்போ பிளைட்?
நைட் இலெவன் தர்ட்டி.
பேக்கிங் ஓவரா?
ய்யா… பேசிக் கொண்டிருந்தானே தவிர அவன் கண்கள் பவியை தேடியது.
சௌமி எங்கே?
இதயாக்கு கொஞ்சம் பீவரிஷா இருக்கு. குழந்தை சிணுங்கிட்டே இருக்கா…
ஓ… நான் பார்த்துட்டு வரேன்.
அறைக்குள் சென்று சௌமியை பார்த்தான். குழந்தை இதயாவை மடியில் வைத்து தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இனியன் உறங்கிக் கொண்டிருந்தான்.
என்ன சௌமி குழந்தைக்கு பீவரிஷா இருந்தா ஹாஸ்பிடல் போக வேண்டியது தானே…?
வா ஹரி…. மருந்து கொடுத்திருக்கேன். க்யூர் ஆகலைன்னா நாளைக்கு ஹாஸ்பிடல் போகலாம்.
டேக் கேர். நான் நைட் கிளம்புறேன்.
சரி ஹரி. பார்த்து போயிட்டு வா!
காபி சாப்பிடு!
நீ இரு… நான் பவித்ராட்ட கேட்டுக்கிறேன்.
ஹரி கிச்சனுக்குள் நுழைய… அகிலன் தன் அறைக்கு சென்று விட்டான் அவர்கள் பேசட்டும் என்று.
பவித்ரா… அமைதியாய் அழைத்தான்.
திரும்பி பார்த்தவளின் முகத்தை ஏக்கமாய் பார்த்தான். தன்னை தேடி இருப்பாளா என்று… இந்த ஐந்து நாள் அவனுக்கு தான் ஐந்து யுகமாக இருந்தது அவளுக்கு இல்லை போலும்.
ஒரு கப் காபி கிடைக்குமா?
அவள் எதுவும் பேசவில்லை. காபி போட தொடங்கி விட்டாள்.
நான் நைட் கிளம்புறேன். ஒன் வீக் ஆகும் ரிட்டனாக…
கேட்டு கொண்டிருந்தாளே தவிர அவள் புறமிருந்து எந்த பேச்சு மூச்சும் இல்லை.
என்னை பற்றி எதுவும் யோசிக்கலையா நீ…? கிச்சன் மேடையில் சாய்ந்து நின்று வலியுடன் அவளை பார்த்தான்.
உங்களுக்கு ஒன் அன் ஹாஃப் ஸ்பூன் சுகர் ஓகே வா?
பவி நான் உன்னை கொஞ்சம் கூட பாதிக்கலையா? குரல் கம்மிவிட்டது அவனுக்கு.
சார் காஃபி ஸ்ட்ராங்கா தானே…?
ஆமா… உன்னை மாதிரி டபுள் ஸ்ட்ராங்கா …!.
அவள் முறைத்து பார்த்தாள்.
என்ன பார்க்கிற… உனக்கு இன்னும் ஒன் வீக் தான் டைம்.
நீ ஓகே சொல்ற…! சொல்லலைனா வேற ஹரியை பார்ப்ப.
இந்தாங்க சார் காபி…! ஒரு சிறிய பிளேட்டில்
காரபூந்தியும் வைத்து கொடுத்து விட்டு நகர்ந்தாள்.
நா குலாபி… அவள் கரம் பற்றினான்.
அவள் தடுமாறி நின்றாள்.
உன்னிடம் வீரத்தை காட்ட எனக்கு விருப்பம் இல்லரா அம்மாயி. நீ என்னோட எதிரி இல்லை. என்னோட உயிர். நீ சந்தோஷங்கா சம்மதிச்சு நம்ம விவாஹம் நடக்கணும்.
பாவா நம்பிக்கையோட கிளம்புறேன் … என்னை ஏமாத்திடாத குலாபி. அவள் கன்னம் தட்டிவிட்டு கிளம்பினான்.
———-தொடரும் ———
error: Content is protected !!