Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன்♥️25

கனடா சென்று பிராஜக்டில் பிஸியாகி விட்டான் ஹரி.

பவித்ராவிடம் போன் இல்லை என்றாலும் அகிலன் வீட்டு லேண்ட் லைனிற்கு அழைத்து பேசலாம் என்று ஒரு அவா. ஆயினும் ஆசையை அதட்டி அடக்கி வைத்துக்கொண்டான்.

நீ காதல் ரசம் சொட்ட போன் பண்ணி அப்படியே போனை எடுத்து அவ மணிகணக்கா பேசிட்டாலும்… மனசாட்சி நொடித்துக் கொண்டது.

இந்த காதலின் சிக்கலான நிலை அவனுக்கு புரியாமல் இல்லை. விருப்பம் இல்லாத பெண்ணை பாலிஷாக உருட்டி மிரட்டி விட முடியும் என்ற ஒரு சிறு நம்பிக்கை கீற்று அவன் மனதில்.



Advertisement

பவித்ராவிற்கு டைம் கொடுத்து விட்டு வந்து விட்டதால் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான்.

எதுவாக இருந்தாலும் பவித்ராவை சந்திந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணம்.எப்படியாவது புரிய வைத்துவிட முடியும் என்ற ஒரு நம்பிக்கை.

Advertisement

முடிவு எடுத்த பின்னே அதை ஏன் யோசிப்பானேன்…. தெளிவாகவே தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.

Advertisement

தன் வாழ்வில் முக்கியமான தருணம் நிகழப் போகும் வேளையை எண்ணி சிலாகித்து போனான். அந்த காத்திருத்தலை ரசித்தான்.

நா குலாபி ஏன் என்னை உனக்கு பிடிக்கல… மொபைலில் இருக்கும் அவள் புகைப்படத்திடம் பேசிக் கொண்டிருந்தான்.

பவியை மணக்க என்னென்ன பிரச்னை வரக்கூடும்… வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றெல்லாம் யோசனை செய்தே வைத்திருந்தான்.

Advertisement

பவித்ரா மறுத்துவிட்டால் அவள் கிடைக்காமல் போய்விட்டால் என்றெல்லாம் எதிர்மறையாய் அவன் யோசிக்கவே இல்லை.

அவ்வளவு ஆர்வமாய் அதிசீக்கிரமாய் வேலையை முடித்தான்.

“———————“

எதிர்பார்ப்பும் ஆவலுமாய் வந்திறங்கியவனை விமான நிலையத்திற்கு அழைக்க வந்தான் அகிலன்.

அகி, பாப்பு குட்டிக்கு பீவர் சரியாகிடுச்சா…?

ம்ம்ம்ம்ம்

இனியன் எப்படி இருக்கான்?

நல்லா இருக்கான்!

பவித்ரா நல்லா இருக்காளா என்று நாவின் நுனி வரை வந்த வார்த்தையை தொண்டை குழிக்குள் புதைத்துக் கொண்டான்.

சௌமி நல்லா இருக்காளா?

ம்ம்ம்ம்!

உனக்கு என்னறா ஆச்சு? உடம்பு சரியில்லையா?

அதெல்லாம் ஒண்ணுமில்ல நல்லா தான் இருக்கேன்.

அப்புறம் இந்த ஒருவாரத்தில் வேறென்ன விசேஷம்?

நத்திங் ஸ்பெஷல் ஹரி.

அம்மா கால் பண்ணாங்க அகி !

ம்ம்ம்ம்ம்

வழக்கம் போல தான். என்ன நினைச்சுட்டு இருக்க… உன் இஷ்டம் போல ஆடுற… கேட்க ஆளிள்ளைங்கிற தைரியம் தானே உனக்கு…எங்களை ஒரேடியா மறந்துடு….!

கல்யாணம் பண்ணிக்கிறேன்னு பொய் சொல்லிட்டு கனடாவில் வந்து உட்கார்த்துட்ட அப்படி இப்படினு இமோஷனலா பேசி ரகளை பண்ணிட்டாங்க!

இந்த மந்த் இந்தியா வரேன்னு பேசி பேசி கொஞ்சம் கெஞ்சி கரைத்து வைத்திருக்கேன்.

ஓ…. என்றான்.

என்னடா மூஞ்சி ஜிஞ்சர் ஈட்டிங் மாதிரி இருக்கு.

தலைவலி!

சரி ஒரு காபி ஷாப்பில் நிறுத்து!

வேணாம் வீட்டுக்கு போய் குடிக்கலாம் என்று சொல்ல நினைத்தவன் சரி வா என்று காபி ஷாப்புக்கு செல்லாமல் ரெஸ்டாரண்டிற்கு சென்றான்.

ஏன்ரா… நான் வரேன்னு சௌமி ஸ்பெஷலா ஏதாவது செய்து வைத்திருப்பாளே…

இல்ல வா சும்மா லைட்டா ஏதாவது சாப்பிட்டு போவோம்.

அமைதியாகவே உண்டனர்.

ஹரியின் முகத்தை பார்த்தும் பார்க்காமலும் பார்த்தும் பார்க்காமலும் உண்டு கொண்டிருக்கும் அகிலனை ஊன்றி பார்த்தான் ஹரி.

என்ரா பிரச்னை?

அதெல்லாம் ஒண்ணுமில்லை… கனடாவில் இருந்து வரியே அங்கே பயங்கர குளிராச்சே எப்படி இருக்கேன்னு பார்த்தேன்!

ஓ…. என்றவன் வேறெதுவும் பேசவில்லை. ஆனால் உள்ளுக்குள் ஒரு நெருடல்.

“——————–

போர்டிக்கோவில் காரை நிறுத்தியவன் ஹரி நைன் ஓ கிளாக் ஆகுது நீ போய் தூங்கு மானிங் பார்ப்போம் என்றான்.

சௌமி, குழந்தைங்களை எல்லாம் பார்த்துட்டு போறேன்ரா… டாய்ஸ் நிறைய வாங்கிட்டு வந்திருக்கேன், குட்டிஸ்கு உல்லன் ஸ்வெட்டர் வாங்கி இருக்கேன்.

நீ ரொம்ப டயர்டா இருக்க போ போய் தூங்கு! காலையில் வந்து பார்த்து கொடு! யாரு வேண்டாங்கிறது.

ரொம்ப அக்கறையா பொங்குற…. சரியில்லையே… சம்திங் ராங்..முறைத்து பார்த்தான்.

ஒரு அக்கறையும் இல்லை… குழந்தைங்க தூங்குறாங்க சௌமியும் தூங்கி இருப்பா அதுக்கு தான் சொன்னேன்.

பவியை நான் பார்க்கணும்னு உன்கிட்ட கெஞ்சணும்னு நினைக்கிற? நீ யாருரா பர்மிஷன் கொடுக்க? என் குலாபி என்னிஷ்டம்… கண் சிமிட்டி சிவந்து சிரிக்கும் நண்பனை இயலாமையுடன் பார்த்து நின்றான் அகிலன்.

நீயும் சரி இல்ல உன் பேச்சும் சரியில்லரா….காலையில் வந்து உன்னை செம்மையா கவனிக்கிறேன். தன் டிராவல் பேக்கை உருட்டிக் கொண்டே தன் பிளாட்டிற்கு சென்று விட்டான்.

அகிலனால் தான் அவ்விடம் விட்டு நகர முடியவில்லை.

அய்யோ விடிந்ததும் வந்து நிற்பானே என்ற பதட்டம்… துவண்டு நிற்கும் ஆருயிர் நண்பனை எப்படி கண் கொண்டு பார்ப்பது என்ற வலி. தன்னை குற்றவாளி ஆக்கி விடுவானே என்ற பதட்டம்

கணவன் கலங்கி நிற்பது கண்டு ஓடிவந்தாள் சௌமி.

என்ன அகி சொல்லிடீங்களா …. அவன் கரம் பற்றினாள்.

ம்க்கூம்…. என்னால முடியாது.

சாப்பிட்டாரா?

ம்ம்ம்ம்… சாப்பிட வச்சு தான் கூட்டிட்டு வந்தேன்.

இப்போ எதுவும் பேசாம இருந்ததும் நல்லது தான். ஹரி நிம்மதியா தூங்கி எழுந்து வரட்டும் காலையில் பேசிப்போம்.

நம்மை வெறுத்துடுவானா சௌமி? நடுங்கியது அகிலனின் குரல்.

புரிஞ்சுக்குவார்…. நீங்க டென்ஷனாகாதீங்க ப்ளீஸ் என்றவளுக்கு கைகள் நடுங்கியது.

இருவரும் ஒருவர் கரம் பற்றி ஒருவர் ஆறுதல் படுத்திக் கொண்டனர்

——–தொடரும் ———

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!