Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அங்கணம் நின்றான் அந்தியூறான்

அந்தியூரான் – 10

அந்தியூரான் – 10
புணரும் புணராத காலை வேளையில் மூக்கை உறிஞ்சி கொண்டே சிவகாமியின் முன் அங்குமிங்கும் திரிந்து கொண்டு இருந்தாள் விசாலாட்சி.

 

வேலையே இல்லாமல் வேலை செய்வது போல அங்குமிங்கும் நடந்து கொண்டு தனது கருத்தை கவர முயலும் மருமகளை எண்ணி சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது சிவகாமிக்கு இருந்தும் அடக்கி கொண்டார்.இப்போது அவர் கொஞ்சம் அசைந்து கொடுத்தால் போதும் பேசி பேசியே காரியம் பண்ணி விடுவாள் விசலாட்சி. அதனைக் கொண்டே அவளது செயலை கண்டும் காணாமல் இருந்தாள் சிவகாமி.


Advertisement

 

அப்படி என்னதான் நடந்தது?…

 

Advertisement

அன்று குமாரியும் விசாலாட்சியும் அடித்துக் கொண்டதை பார்த்த மாத்திரத்தில் தணிகாசலம் பெரும் முடிவை எடுத்து விட்டான்.அது இருவரையும் தன்னுடன் கூட்டி செல்வது என்று.முதலில் அவன் விசாலாட்சியை பேச அழைத்து.வார இறுதி நாட்கள் இருவரும் அங்கு வந்து விட வேண்டும் என்பதைச் சொல்ல தான் அழைத்திருந்தான்,

Advertisement

 

அதற்குள் இவர்கள் இருவரும் சண்டை பிடிப்பதை பார்த்து தனது முடிவை மாற்றிக் கொண்டான்.இதனை விசலாட்சியிடம் சொன்னதும் அவளுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி.

 

Advertisement

‘என்ன சொல்றீங்க? அங்க என்னால தனியா இவளை வச்சுக்கிட்டு இருக்க முடியாது.நீங்களே வாரம் ஒரு நாள் இங்க வாங்க’ என்றவளை ஆழ்ந்து பார்த்தவன்.

 

‘ஏன் மீதம் உள்ள நாள் முழுக்க நீயும் உன் மவளும் எங்க அம்மா, அப்பா உயிரை எடுக்கவா? என்ன மல்லுக்கு நிக்கிறீங்க.இரண்டு பேரும் இங்க இருக்குறது சரி வராது.கொஞ்ச நாள் அவங்க நிம்மதியா இருக்கட்டும்’ என்றதும் முறைத்தவள்.

 

‘நான் வரல’ இது போல் எல்லாம் அவனிடம் பேசியது இல்லை. இயல்பான பேச்சுக்கள் இல்லாத போது இது போல் பிடிவாதமான பேச்சுகளுக்கு மற்றும் சாத்தியமா என்ன?,ஆனால் இன்று இவர்கள் இருவரும் வெகு இயல்பாக உரையாடி நின்றனர்.

 

உள்ளுக்குள் கொள்ளையாகப் பயமிருந்தாலும் அதனை வெளியில் காட்டி கொள்ளாமல் சரிக்கு சரி நின்றாள் விசாலாட்சி.முதல் மனைவி அமைதி என்றால் இவள் வேறு ரகம் அமைதியென்றும் சொல்ல முடியாது அடாவடி என்றும் சொல்ல முடியாது.

 

விசலாட்சியை கணிக்க முடியாமல் மனதுக்குள் பல்லை கடித்த தணிகாசலம் கொஞ்சம் குரலை உயர்த்தி, ‘வர சொன்னா வரனும் உன்னைத் தனியா விட்டதுக்குத் தாண்டி உன் அண்ணங்காரன் பஞ்சாயம் பண்ணுனான்’
‘அதுக்காக ஒன்னும் நீங்க என்னைக் கூட்டிகிட்டு போக வேண்டாம்’
“ஓ! நாங்க பயந்துகிட்டு செய்ரோம்.அப்படி வேற உனக்கு நினைப்பு இருக்கா.உங்க அண்ணன் பெரிய இவேன். அவனுக்குப் பயந்துகிட்டு உன்னைக் கூட்டிட்டு போகல. என் பொண்ணு கூட இருக்கனும் அதுக்குத் தான், என்றவனிடன் அடுத்து என்ன சொல்லி மறுப்பது என்று தெரியாமல் முழித்து நின்றவளை பார்த்து.
‘ஒரு வாரம் இங்க இருங்க. அடுத்த வாரம் சனி கிழமை வந்து கூட்டிட்டு போறேன். அதுக்குள்ள அங்க இருக்குறதுக்கு உண்டான வசதி பண்ணிடுவேன், என்றவன் விஷயம் அவுளோதான் என்பது போல அவளை கடந்து செல்ல தணிகாசலத்தின் மீது கோபம் கோபமாக வந்தது விசாலாட்சிக்கு.
முதல் முறையான நீளமான பேச்சுக்கள் என்றால் இருவருக்கும் இந்த இரு நாட்கள் பேசிய பேச்சுக்கள் தான்.அவர்கள் அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க தொடங்கினர்.தணிகாசலம் தன்னிடம் சொன்னதைச் சொல்லி மாமனார், மாமியார், மகள் என்று விசலாட்சி நியாயம் கேட்க.அத்தனை பேரும் அவளுக்கு எதிர் திசையில் தான் நின்றனர்.
அந்த கடுப்பில் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறாள் விசாலாட்சி.மீண்டும் பாத்திரத்தை நங்கென்று வைத்தவளை முறைத்த சிவகாமி, “நீ எத்தனை தரம் அந்தப் பாத்திரத்தை போட்டாலும் இங்க ஒன்னும் வேளைக்கு ஆகாது”
“இதெல்லாம் அநியாயம் அத்தை”
“எதுடி அநியாயம்? உன் புருஷன் கூடப் போயி வாழ்ன்னு சொல்றது உனக்கு அநியாயமா?”
“அத்தை! அத்தை! தனியா என்னால சமாளிக்க முடியாது அத்தை.உங்க பேத்தியை பத்தி தெரியும் தானே” என்றதும் இன்னும் விசாலாட்சியை முறைத்த சிவகாமி.
“என் பேத்திய விட மருமக சேட்டை தான் அதிகம்.அவளை விட உன்னை தான் என்னால சமாளிக்க முடியல ஒழுங்கு மரியாதையா இரண்டு பேரும் நடைய கட்டுங்க.என் நாலாவது பொண்ணுக்கு இரண்டாவது பேத்தி பிறக்க போகுது.அவ பேறு காலத்துக்கு வர போரா.அவளை இங்க வந்து இரண்டு மாசம் வச்சுக்கப் போறேன் நான் என் கொள்ளு பேரனை பார்க்கனும்”
உண்மையும் ,பொய்யுமாக சிவகாமி விசாலாட்சியை வெறுப்பேற்ற.மேலும் அவரிடம் வாக்குவாதம் செய்யாமல் போட்டது போட்ட படி தனது அறைக்கு செல்ல போனவளை,
“இந்தா விசலாட்சி! சமையலை அப்படியே விட்டுட்டு போற”
“நான் இல்லனா நீங்க தானே பார்க்கனும் பாருங்க” என்று முறைத்து விட்டு செல்ல.
“அடி கொழுப்பே!” என்றவர் அவளை அடிப்பது போல் வேகமாக எழுந்து கொள்ள பார்க்க.அவரை விட வேகமாக ஓடி சென்று தனது அறைக்குள் புகுந்து கொண்டாள் விசலாட்சி.அதுவரை மனைவி, மருமகள் கூத்தை பார்த்திருந்த சிவராமன் வழமை போல் உரக்க  சிரித்து சிவகாமியிடம் சிக்கி கொண்டார்.
“என்ன சிரிப்பு? இல்ல என்ன சிரிப்புன்னு கேட்டேன்? ஏழு பிள்ளை பெத்திருக்கேன்.ஏழு கூட்டல் போட்டு சம்மந்தம் பண்ணிருக்கேன்.அதுவும் போகத் தலைக்கு ரெண்டுன்னு பேர பிள்ளைங்க அதுவும் போதாதுன்னு கொள்ளு பேத்தி, பேரன்.
இத்தனை பேரை பார்த்து வந்தவக் கிட்டையே என்ன ஆட்டம் சேட்டை உங்க மருமக.இன்னும் மகன், மகள் மருமகன்னு என் பேச்சுக்கு மறுப்பு சொல்லி நிக்காதுங்க, ஆனா இதுங்க இரண்டும் என்ன பேச்சு பேசுதுங்க பாருங்க”மருமகள், பேத்தி என்று இரு பெண்களும் அவரைப் பாட படுத்தியதின் பலனை முழுமையாகத் தாங்கி நின்றார் சிவராமன்.
“சிவா விடு அதுங்க இல்லனா வீடே கலை இழந்து போயிடும்” என்றதும் சிவகாமி அமைதியாகி விட்டாள்.அவருக்கும் அந்த வருத்தம் உண்டு என்றாலும் மகன், மருமகள் மனம் நிறைந்து  வாழ வேண்டும் என்ற கவலை உண்டு அல்லவா.
“எனக்கும் அவளுங்க சத்தம் இல்லாம இருக்குறதை எண்ணி கஷ்டந்தாங்க, ஆனா தணிகாவை அப்படியே விட முடியாது. அவனே நல்ல முடிவு எடுத்திருக்காங்க.இதுங்க அவன் கூட இருக்குறது தான் நல்லது முட்டி, மோதி, கட்டி, உருண்டு அதுங்களே குடும்பம் பண்ணி பார்க்கட்டும். அப்போ தான் சரி வரும்”மனைவி சொல்வதும் சரிதான் என்று எண்ணியவர்.
“ஹ்ம்ம்! நல்ல படியா இருந்தா சரி”
“அதுங்களுக்கு வேண்டி கொஞ்சம் பொடி, ஊறுகாய் எல்லாம் பண்ணனும் கடைக்குப் போக ஆள் வர சொல்லுங்க” என்றதும் உடனே எழுந்து கொண்ட சிவராமன்.
“நீ சிட்டை போட்டு வை நான் பழனியப்பனை வர சொல்லுறேன்” என்று விட்டு போக சிவகாமி அவர்களுக்கு என்ன தேவையோ அதனை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.
அங்கே அறைக்குள் நுழைந்த விசலாட்சியைப் பார்த்த குமாரி, “விசா என்ன சோகமா இருக்க ” என்றதும் அவளிடம் சென்று அமர்ந்தவள் அப்படியே அவள் மடியில் சரிந்து படுத்து கொண்டாள்.
“என்ன விசா?” உட்காந்த வாக்கில் குனிந்து விசாலாட்சி கன்னத்தில் விழுந்த முடியை விளக்கி அதில் தனது மூக்கை வைத்து தேய்த்து முத்தம் வைக்க. சின்னவள் செயலில் சிறு புன்னகை கொண்டாள் விசாலாட்சி.
“பட்டு கன்னம்” தாய்யை கொஞ்சியவள் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தாள் விசாலாட்சி. மீண்டும் அவளது கன்னம் உரசி மிக மென்மையாக,
“என்ன விசா?”
“ஊருக்குப் போகப் புடிக்கலடி உன் அப்பன் கிட்ட சொல்லேன்”
“அப்பா என்கிட்ட கண்டிப்பா சொல்லிட்டார் விசா. அவரை எதிர்த்து பேச கூடாது தப்பு” என்றவளை முறைக்க.
“எனக்கும் அப்பா பயம் விசா”
“ப்ச் போடி” என்றவள் மீண்டும் மௌனமாக படுத்து கொண்டாள்.
“விசா!”
“ஹ்ம்ம்!”
“நம்ப மரகதம் அம்மாச்சி வீட்டுக்கு போயி ஒரு இரண்டு நாள் இருந்துட்டு வரலாமா?” என்றதும் துள்ளி எழுந்து அதிசயமாக அவளை பார்த்த விசாலாட்சி.
“என்ன? உண்மையா நீ அங்க வரியா?”
“சிவா தாத்தா தான் பேசிகிட்டு இருந்தார். நம்ப ஈரோடு போற முன்னுக்கு நீயும் அம்மாவும் அங்க போயிட்டு வாங்க நான் அப்பாகிட்ட பேசுறேன்னு சொன்னாரு” என்றதும் சிறு ஆறுதல் பிறக்க  உற்சாகமாக இருந்தவள்.
“அது என்ன இரண்டு நாள் நம்ப ஊருக்கு போறதுக்கு முதல் நாள் இங்க வரலாம் பள்ளி கூடம் மாறத்தானே போற”
“ஆமா விசா” என்றதும் இரு பெண்களும் உற்சாகமாக பயணத்தை திட்டமிட தொடங்கினர். பெண்கள் பேசி கொண்டே தங்களுக்கு வேண்டியதை எடுத்து வைத்து கொண்டனர். அடுத்து வந்த இரு தினங்கள் மட்டும் இருந்துவிட்டு. சிவராமன் துணையுடன் தணிகாசலத்துக்கு தண்ணி காட்டிவிட்டு இரு பெண்களும் கோவைக்கு பயணப்பட்டனர்.
இவர்கள் வரவு அறிந்து முத்து, காந்திமதி கூட அங்கு கூடிவிடச் சின்னவளுக்குத் தான் கொண்டாட்டமாக இருந்தது.அங்கு சென்ற நொடி அவர்களிடம் ஒட்டி கொண்டாள்.
பட்டம் பூச்சியாகப் படபடத்து திரிந்தவளை பார்த்து பூரித்து நின்றனர் பெரியவர்கள்.இதில் ஒதுக்கம் கொண்டது என்னவோ அமுதன் தான்.விசாலாட்சி வற்புறுத்தி அவனைப் பணிக்கு விடுமுறை எடுக்கச் சொல்ல.
அவனுக்கும் தங்கையுடன் பேசி வேண்டி இருப்பதால் இரு தினங்கள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொண்டான்.வழமை போல இரவு உணவுக்கு மரகதமும், காந்திமதியும் தயார் செய்து கொண்டிருக்க.குமாரி அவர்களுக்குச் சிறு, சிறு உதவிகள் செய்து கொண்டிருந்தாள்.
விசாலாட்சியிடம் பேச வேண்டி அவளை அமுதன் மாடிக்கு அழைத்துச் சென்று இருந்தான் போலும்.வெகு நேரம் விசாலாட்சி காணாமல் போக, “பாட்டி அம்மா எங்க?” என்றவளை அர்த்தமாகப் பார்த்து நின்றனர் பெண்கள்.
மற்ற நேரமெல்லாம் விசா என்று அழைப்பவள்.வெகு உணர்ச்சி பிடியில் இருந்தாலும் ஒரு குழந்தையாக அம்மாவை தேடினாலும் இயல்பாக ‘அம்மா’ என்று அழைத்தாள். அதில் அத்தனை தவிப்பு இருப்பதை இரு பெண்களும் கண்டு கொண்டனர்.
“அமுதன் மாமா கூட மெத்தையில இருக்கா சாமி போ”
“வேற எதுவும் செய்யணுமா பாட்டி?”
“இல்ல எல்லாம் ஆச்சு. நீ போயி உன் அம்மாளை பாரு” சிறு சிரிப்புடன் சொன்னால் காந்திமதி.அவள் சொன்னது தான் தாமதம் சிட்டாக பறந்து விட்டது சின்ன சிட்டு.போகும் சின்னவளை சிரிப்புடன் பார்த்த காந்திமதி,
” மரகதம்!”
“என்ன அண்ணி?”
“நீ எண்ணி பயந்தது போல எதுவும் நடக்காது. நம்ப விசாவே விலகி போனாலும் இந்த சின்னக் குட்டி கட்டி இழுத்துக்கும் பாரு” குமாரியின்,அன்பும் சேட்டையும், அவ்வப்போது மிளிரும் அறிவு கூர்மையும் கண்டவர்.அவளை சரியாகக் கணித்துச் சொன்னார்.
“ஹ்ம்ம்! பழகி பார்த்தா தானே அண்ணி குணம் புரியும். அவங்க சொன்னதை வச்சு அமுதன் சொன்னதை எண்ணி நான் பயந்து போயிட்டேன்”
“இனி கவலை வேணாம் மரகதம்”
“நல்லது நடந்தா சரி தான் அண்ணி “இரு பெண்கள் மனதும் நிறைந்து கிடக்க வெகு ருசியாகத் தயாரானது இரவு உணவு.
அங்கே மாடிக்கு சென்ற குமாரி, “ஏய் விசா!” என்று அழைத்துக் கொண்டே அமுதனுக்கும், விசாலாட்சிக்கும் இடையில் வந்து இடித்துக் கொண்டு அமர.அவள் அமர்ந்த அழகில் திண்டில் இருந்து கீழே சரிய பார்த்தான் அமுதன்.
எங்கே அவன் கீழே விழுந்து விடுவானோ என்ற பயத்தில் விசாலாட்சி அலற.சட்டெனச் சுதாரித்துக் கீழே குதித்து விட்டான். குமாரியின் செயலில் அத்தனை கோபம் அவனுக்கு.
“ஏய் அறிவில்லை! எருமை மாடு கணக்கா இப்படி தான் மேல வந்து விழுவியா?” என்று ஏகத்துக்கும் கத்தி வைக்க கண்ணில் நிரம்பி விட்டது சின்னக் குட்டிக்கு.
“பிள்ளையும் ஆளையும் பாரு…” மேலும் இரு வார்த்தைகளை விடத் தேம்பி கொண்டே விருட்டெனக் கீழே ஓடி விட்டாள் குமாரி.அமுதன் திட்டியதும் அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த விசாலாட்சி.
“என்ன அண்ணா ?” என்றதும் தான் கொஞ்சம் நிதானித்தான்.
“ப்ச்! கீழே விழுந்திருப்பேன்டி”
“தப்பு தான் அதைக் கொஞ்சம் மென்மையா சொல்லி இருக்கலாம் அவ அழுதா சமாளிக்கவே முடியாது” குமாரியை பற்றி அறிந்தவளாக விசாலாட்சி சொல்ல.தனது தவறை உணர்ந்த அமுதன் ப்ச்! சலித்து.
“சரி விடு” தன்னைக் கொண்டே பெரும் யோசனையில் அவன் இருக்க.அவனது மனநிலையைச் சரியாகக் கணித்தவள் அண்ணனை அவசரமாகச் சமாதானம் செய்து விட்டு கீழே ஓடினாள். விசாலாட்சி எண்ணியது போல் தான் தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தாள் குமாரி.
“குமாரி” அழைத்து கொண்டே அவள் அருகில் அமர்ந்து கொண்டு அவள் தோள் தோட்டவளை பார்த்து.
“விசா நான் வீட்டுக்கு போறேன்.அப்பாவ வர சொல்றியா?” என்றதும் அமுதன் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
“விசா அம்மா கூப்புடுறாங்க பாரு”
“ஏன்?” என்றவள் பார்வை சின்னவளிடமே இருக்க.
“ப்ச்! போ நான் பேசுகிறேன்” என்றதும் இன்னும் அவனை அதிர்ந்து பார்த்தவள்.
“அண்ணே அவளை ..”. எதுவோ சொல்ல போக.
“போ விசா பாப்பா வருவா” என்றதும் அவனது ‘பாப்பா’ என்ற விளிப்பில் கொஞ்சம் நிம்மதியானவள் சின்னவளை பார்த்துக் கொண்டே வெளியில் சென்று விட்டாள்.
இங்கனம் இனிதே தொடங்கியது அழகான ஓர் அத்தியாயம்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!