Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️32

அவனை நிமிர்ந்து பார்க்கும் திராணி இல்லாமல் தலை தாழ்த்தியபடியே என்ன உளறுறறீங்க என்றாள்.

நீ பயங்கர அழுத்தம் பவி…. சோர்வுடன் அவளை விலக்கி கட்டிலில் அமர்ந்தான்.

உனக்கு எந்த குற்றவுணர்வும் வேண்டாம்னு தான் நான் உன்னை தேடி வந்தேன்.

எனக்கு என்ன குற்றவுணர்வு? பதை பதைப்பை அடக்கி வீராவேசமாய் நொடித்துக் கொண்டாள்.

பவி இன்னும் ஏன் இந்த பொய்யான முகமூடி?

எது பொய்? நீங்க என்ன உண்மையை கண்டுட்டீங்க?

எனக்கு நீங்க வேண்டாங்கிறதுல ஆரம்பத்தில் இருந்தே நான் தெளிவா தான் இருக்கேன்.எனக்கு வேலை இருக்கு… நீங்க கிளம்பினா நல்லா இருக்கும்… வாயிலை நோக்கி கை காட்டினாள்.

ஹா ஹா ஹா…. அசுரத்தனமாய் அவன் சிரிக்க பாவை அவள் மிரண்டு தான் போனாள்.

உன்னையே நீ ஏன் ஏமாத்திக்கிற?

என்ன நடந்தாலும் சமாளிக்க நான் இருக்கேன்.

நீங்க யாரு சார் எனக்கு அட்வைஸ் பண்ண,சப்போர்ட் பண்ண…? நீங்க எனக்கு என்ன சொந்தமா பந்தமா? கிளம்புங்க இங்கே இருந்து.

பார்த்த விழி பார்த்தபடி மந்தகாச புன்னகை சிந்தினான்.

உங்களை கிளம்ப சொன்னேன்…விழிகளை உருட்டினாள்.

சரி வா போகலாம்…! தலையணையை எடுத்து மடிமீது வைத்து அதில் கையூன்றிக் கொண்டு அவளையே வெகு ஆசையாய் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

நீங்க திருந்தவே மாட்டீங்க… தலையில் அடித்துக் கொண்டாள்.

பவி இங்கே வாயேன்… கை நீட்டி அழைத்தான்.

அவள் அசையாமல் நிற்க…

நான் விரும்புற இந்த அம்மாயியையே விட மாட்டேன். இவ என்னை விரும்புற அம்மாயி ஆச்சே விட்டுட்டு போவேனாரா?

சார் எதையாவது கற்பனை பண்ணிட்டு உளறாதீங்க….! முகத்தை கடினப்படுத்தி கண்களில் காரம் ஏற்றி பேசினாள்.

பொங்கி வந்த சிரிப்புடன் அவளை நெருங்கி வந்தவன் மலர் செண்டு போல் அவளை தூக்கி கொண்டு வந்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

செல்லம்… நா குலாபி… நீ பாவாவை மறக்க மாட்ட… யாரையும் விவாஹமும் செய்ய மாட்ட… உன்னால அது முடியாது.. ஏன்னா இந்த அம்மாயி மனசுக்குள்ள இந்த ஹரி மட்டும் தான் இருக்கான் எப்போவுமே இருப்பான்.

தன் கரம் இரண்டையும் நெருக்கி அவளை சுற்றி வளைத்துக் கொண்டான்.

விடுங்க… விடுங்க என்னை… உங்க கற்பனைக்கு நான் பொறுப்பில்லை.. துள்ளி எழ முயன்றவளை வாகாய் அழுத்தி பிடித்து தன் முகம் பார்க்க திருப்பினான்.

நுவு தொங்கத்தனம் நன்னு ச்சூடு… அவள் முகத்தை நிமிர்த்தினான்.

அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்து வியர்க்க தொடங்கியது… பிடிப்பட்டு விட்டோமோ என்ற அச்சம்.

நா செல்லக்குட்டி அம்மாயிக்கு பாவான்னா சால இஷ்டம்னு தெரியும்!

உன்னை கண்டு கொண்டேன் என்பதாய் காதலும் கவிதையுமாய் மொழிந்தது அவன் விழிகள்.

அவள் அமைதியாய் அவஸ்தையாய் நெளிய… நான் மட்டும் லவ் யூ இல்லை நீயும் லவ் யூன்னு தெரிஞ்சு தான் உன்னை துரத்திட்டு வந்தேன். அவள் வாசம் பிடித்து சிலாகித்து சுவாசித்தான்.

மாட்டிக் கொண்டோமோ என்று அவள் யோசனையில் கரைய…

அம்மாயி இப்புடு ச்சூடுரா… ஹரிசரண் கண்ணில் இருந்து எதுவுமே தப்ப முடியாது… அவள் கழுத்து வளைவில் மோவாய் வைத்து அவள் கரத்தோடு தன் கரம் கோர்த்துக் கொண்டான்.

அவள் திரு திருத்து விழிக்க… இப்படி பார்க்காதம்மா பாவா ஏற்கனவே சரண்டர்.. நீ வேற இப்படி பார்த்து வைத்தால்… ஏடா கூடமாய் ஏதாவது பண்ணிடப் போறேன்…வில்லங்கமாய் சிரித்தான்.

அவள் வாய்மொழி மறந்திருக்க… விழிகள் கலங்க தொடங்கி விட்டது.

த்ச்சு… இப்போ ஏன் கண் கலங்குற….?

நீ ஒன்னும் தப்பு பண்ணல… என்னை பிடிக்கும்கிறது ஒன்னும் பாவ காரியம் இல்லைரா. அவன் குரல் கரைந்து உருகியது.

நா.. நான்.. என்ன….சொல்ல வரேன்னா…

ஷ்ஷ்… எனக்கு தெரியும்… நீ வெளிப்படையா ஒப்புக்க மாட்ட…!

இப்போ கூட சொல்லிக்காட்டி உன்னை இன்னும் அவஸ்தைக்கு உள்ளாக்க விரும்பாம தான் பொறுமையா இருக்கேன்.

நாளைக்கு ஆந்திரா போயிடலாம்… அவள் கரத்தை நெஞ்சாங் கூட்டுக்குள் பொதித்தான்.

என்னென்னவோ பேசி என்னை பைத்தியமாக்க பார்க்கறீங்க… அவன் சட்டையின் காலர் நுனியை பற்றிக் குலுக்கினாள்.

கண்டதை எண்ணி தவிக்காதே… நான் பார்த்துக்கிறேன்… அவள் கண்ணீர் துடைக்க நீண்ட கரத்தை எரிச்சலுடன் தட்டிவிட்டாள்.

நீங்க ஒன்னும் என்னை பார்த்துக்க வேண்டாம்… போய் உங்க பிழைப்பை பாருங்க! நான் அடுத்த வாரம் மாயவரம் போகப்போறேன்.. நீங்களும்  உங்க ஊரை பார்க்க கிளம்புங்க!

இன்னும் எதுக்கு இந்த கோழைத்தனம்…. இவ்வளவு பிடிவாதமா இருந்து என்ன சாதிக்கப் போற…?

சொல்லி தொலையேன் உன்னை பிடிக்கும்…

உன்னை தவிர யாரும் என் மனசுல இல்லைன்னு சொல்லிட்டா உன்னை யாரு இங்கே தூக்கு கயிற்றில் ஏற்றப் போறாங்க….? இல்ல உன் கிரீடம் இறங்கிடுமா?

இழுத்துப் பிடித்த பொறுமை பறத்தோட மடியில் இருந்தவளை இடித்து கட்டிலில் தள்ளினான்

உருண்டு சுவரோரம் சென்றவள் தலை தூக்கி இமைவெட்டாது அவனை பார்த்திருக்க…

நான் சொல்லவா… உனக்கு பாவா மேல எவ்வளவு பிரியம்னு….

என்ன சொல்வாய் சொல்லேன் பார்ப்போம் என்பதாய் அவனில் பார்வையை நிலை நிறுத்தி இருந்தாள்.

நானும் நீயா சொல்லலைனாலும் பரவாயில்லை என்னை புரிஞ்சுப்பன்னு காத்திருந்தேன்.

நீ இவ்வளவு அழுத்தமா இருந்து எனக்கு நெஞ்சடைக்க வைக்குற…. பைத்தியம் பிடிக்குது.

எனக்கே ஆச்சரியமா இருக்கு என் பொறுமையை பார்த்து… இது நானே இல்லை…

ஹரி நினைச்சா என்ன வேணா பண்ண முடியும்!

என் ஆணவத்தை அகங்காரத்தை உன்கிட்ட காட்ட,நம்ம காதலில் காட்ட நான் விரும்பல…

தட்டி தூக்கி தோளில் போட்டுட்டு போயிட்டே இருப்பேன். எவனாலும் என்னை ஒன்னும் கழட்ட முடியாது.

அரசியலில் இருந்து சினி ஃபீல்டில் இருந்து எல்லா இடத்திலும் எர்ரபள்ளி குடும்பத்துக்கு செல்வாக்கு உண்டு. எதையும் சாதிக்க இந்த ஹரியால் முடியும்.

உன்னை போர்ஸ் பண்ணக் கூடாதுன்னு பொறுமையா இருக்கேன்.புரிஞ்சுக்கோ பவி…! கிளம்பு நம்ம ஊருக்கு போவோம்… இல்லைன்னா வா உங்க வீட்டுக்கு போய் பேசுவோம்.

அவன் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த வார்த்தைகள் எல்லாம் வெடித்து சிதறி வெளியே வந்தது.

நான் எங்கேயும் வரல… என்னை விட்டுடுங்க… சுவற்றில் சரிந்து கண்மூடிக் கொண்டாள்.

கடைசியா கேட்கிறேன் இந்த ஹரி இல்லாம இருந்துடுவியா? கண்ணில் நீர் பூத்தது அவனுக்கு.

இருப்பேன்…. உங்களை பார்க்காமல் இருக்க முடியாதுங்குற அளவுக்கு நமக்குள்ள என்ன இருக்கு…? நாகமாய் சீறினாள்.

நீ இருக்க மாட்ட… இந்த ஹரி முகத்தை பார்க்காமல்.. இந்த ஹரியை நினைக்காமல் உன்னால் இருக்க முடியாது…. உக்கிரமாய் கர்ஜித்தான்.

பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.

ஏய் இங்கே பாரு… என்னை பாருன்னு சொல்றேனில்ல…

இவ்வளவு பயமும் தயக்கமும் இருக்கிறவ பாவாவை பார்த்துட்டே இருக்கணும்னு அகிலன் வீட்டில் இருந்து என்னோட போட்டோவை கொண்டு வந்திருக்க… நிஜமா நானே உன் பக்கத்தில் இருக்க.. நிழலை போய் திருடி இருக்க… நெருங்கி வந்து அவள் காது மடலை திருகினான்.

நான் எதுவும் எடுக்கல… வார்த்தைகள் ஓங்கி ஒலியாமல் உதிர்ந்து போனது.

அடியேய்… பொய் சொல்ற….பொய் சொன்னா ஹரிக்கு பிடிக்காது. செல்லமாய் அவள் கன்னம் பற்றி கிள்ளியவன் என்னோட காபி மக் கொண்டு வந்திருக்க. என்னோட ஆலிவ் க்ரீன் டிஷர்ட் கொண்டு வந்திருக்க… என்னோட கோல்டு கலர் பென் கொண்டு வந்திருக்க…

பவி என் ஞாபகமா அந்த பொருள் எல்லாம் வேணும் நான் வேணாமாடி …? அவன் குரலின் வலி வார்த்தையின் வழி கசிந்து கொண்டிருந்தது.

வேதனையான அவன் வார்த்தைகள் அவளை சில்லு சில்லாய் நொறுக்கியது.

இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கி கண்ணீருக்கு அணைகட்டி பலவித அவஸ்தைகளில் இடிந்து அமர்ந்து விட்டவள் முகத்தை மூடிக் கொண்டாள். அவன் குற்றச்சாட்டுக்களை அவளால் மறுக்க முடியவில்லை

அம்மாயி… நான் அகி வீட்டுல டி வி ஸ்டாண்டில் போட்டோவை காணுமேன்னு தான் பர்ஸ்ட் பார்த்தேன்… நீ தான் கப்போர்ட் எல்லாம் களீன் பண்ணினன்னு சௌமி சொன்னா… அப்போவே லேசா புரிஞ்சுது… உடனே என்னோட திங்க்ஸ் அங்கே என்ன இருக்கு என்ன இல்லைன்னு ஆராய்ந்தேன்.

நான் காபி குடிக்கன்னே கோல்டு கோட்டடு கலர் காபி மக் அங்கே இருக்கும்… யூ நோ அதில் என் போட்டோ இருக்கும். அதையும் காணோம்… என் கெஸ்ஸிங் கரெக்ட் என்று புரிஞ்சுக்கிட்டேன்.

அங்கே டெலிஃபோன் டைரக்ட்டரில என்னோட பவுண்டென் பென் இருக்கும் அதையும் காணும்.

கடைசியா நான் கனடா கிளம்பும் போது அகி வீட்டுல தான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு போனேன்.. நான் விட்டுட்டு போன என் டி ஷர்ட் காணோம்…

என்னை தான் மொத்தமா திருடிட்டியே…. அப்புறம் ஏன்டி இதெல்லாம்…? குத்துக்காலிட்டு முகத்தை புதைத்திருந்தவளை மெல்ல நிமிர்த்தி அவள் உள்ளங்கை பற்றி அவளுக்கு உரமூட்டும் விதமாய்  அழுந்த முத்தமிட்டான்.

உன்னை டார்ச்சர் பண்ணி ரொம்ப மன அழுத்தம் கொடுக்குறோம்…இனி உன்னை தொல்லை பண்ணக்கூடாது உன்னை விட்டு விலகிடணும்னு நினைத்தபோது தான் என் குலாபி என்னை ரகசியமா இவ்வளவு லவ் பண்றான்னு தெரிஞ்சுகிட்டேன்.

உடனே உன்னை கண்டுப்பிடிக்க என் பிரண்ட் ஸ்ரீனிக்கு சொல்லி உன்னை தேட சொன்னேன்.

நீ என்னை இவ்வளவு நேசிக்கிறேன்னு தெரிந்த உடனே ரெக்கை இல்லாம பறந்தேன்.

உடனே டிக்கெட் போட்டுட்டேன் உன்னை தேடி ஓடிவர…

நான் உன் மனசுல இருக்கேன்னு யாருக்கும் சொல்லலை.

நான் உன்னை விரும்பினதா இருக்கட்டும். உன் மேல எந்த பழி சொல்லும் எந்த காலத்திலும் வந்துடக் கூடாது…. அவள் தலை கோதி உச்சியில் இதழ் பதித்தான்.

தான் மாட்டிக் கொண்டதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இவ்வளவு நுணுக்கமாய் இவன் தடயவியல் சோதனை செய்வான் என்று அவள் கண்டாளா ..?

கையும் களவுமாய் மாட்டிக் கொண்ட அவமானம் அவளை கொன்று தின்றது… அவன் பிடியில் இருந்து நழுவி குதித்து கிச்சனுக்குள் ஓடி கதவை தாழிட்டுக் கொண்டாள்.

அய்யோ அவனை இனி எப்படி எதிர் கொள்வேன்? என்னை எவ்வளவு கேவலமாய் நினைப்பான்… புழுவாய் துடித்தாள்.

பவி கதவை திற… அடி பைத்தியக்காரி இப்போ என்ன நடந்து போச்சு?

நீ என்னை விரும்ப நான் தகுதி இல்லாதவனா? நான் கொலை குற்றவாளியா?

என்னை சித்திரவதை செய்யாதேம்மா… ப்ளீஸ் கதவை திற!

அக்கம் பக்கம் கேட்டு விடுமோ என்றுமெல்லத் தட்டினான்….

செல்லம் கதவை திறரா. என்னை டென்ஷன் பண்ணாத… உன்னோடவே இவ்வளவு போராட வேண்டி இருக்கு… நான் இன்னும் எவ்வளவு போராடணும் தெரியுமா உன்னை கை பிடிக்க ?

உருகி உடைந்தவன் வேதனையுடன் கதவை தட்டினான். கத்தியால் கையை கிழித்துக் கொள்வாளோ… க்யாஸை திறந்துவிட்டு நெருப்பு வைத்துக் கொள்வாளோ என்று அவன் உள்ளம் துடியாய் துடித்தது.

தவறா எந்த முடிவும் எடுத்துடாதம்மா… ஹரியோட கம்பீரம் பெற்ற தகப்பனிடம் கூட குறைந்ததில்ல…  என்னை நிலை குலைய வச்சுராதடா.. சத்தியமா தாங்க மாட்டேன்ரா அம்மாயி… சந்தோஷமா தேடி வந்த என்னை சிலுவையில் அறைந்துடாதேம்மா கெஞ்சினான் மன்றாடினான்.

கதவில் சரிந்து மடங்கி அமர்ந்தவள் குமுறி குமுறி அழுதாள்.

ஏன் இவ்வளவு கேவலமாய் மாட்டிக் கொண்டோம்… தன்னையே காரி உமிழ்ந்து கொண்டாள்.

எவ்வளவு அசிங்கம் இது! இந்த மானங்கெட்ட மனசு ஏன் இப்படி நடந்து கொண்டது? பட்டும் திருந்தவில்லையே..

அன்னை இட்ட சூட்டின் தழும்பு அவளை பார்த்து சிரிப்பதாய் தோன்றியது…. கேவலுடன் வருடிக் கொண்டாள்.

————தொடரும் ——-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!