Skip to content
Post Views: 5,637
அந்தியூரான்– 14
ஈரோட்டில் மீண்டும் வழமை திரும்பிருக்க.திரும்ப விசாலாட்சியின் ஓட்டம் தொடங்கியது.வீடு,குமாரி,வேலையென்று ஓடியது.என்னது வேலையா? ஆம்! அவளும் இப்பொழுது வீட்டில் இருந்தே துண்டு முடித்து போட்டு குடுக்கிறாள்.
தைக்க தெரியும் என்பதால் துண்டுக்கு முடிச்சு போடுவது.கைலி மூட்டுவது என்று அவளது நேரம் ரெக்கை கட்டி கொண்டு பறந்தது.குமாரியின் விழா முடிந்து அன்றைய தின பேச்சுக்கு பிறகு.அவள் இயல்பாக இருப்பது போல் தெரிந்தாலும்.
Advertisement
அவள் இயல்பாக இல்லை என்பதை தணிகாசலம் கண்டு கொண்டு தான் இருந்தான். இங்கு வந்து கொஞ்ச நாட்களாகத் தான் இருவருக்கும் சின்ன நெருக்கம் கண்டிருந்தது.அதுவும் அன்றைய தினத்திற்குப் பிறகு சுத்தமாகத் தொலைந்து போனது.
Advertisement
அவனும் அவளுடன் பெரிதாகப் பேசி கொள்ளவில்லை.தேவையை மட்டுமே குமாரியை முன் நிறுத்தி பார்த்துச் செய்து கொண்டனர் இருவரும்.அப்படியான ஒரு நாளில் தான் அமுதனும், மரகதமும் வீடு தேடி வந்தனர்.
Advertisement
அப்பொழுதும் குமாரியை பற்றி அவள் எதுவும் சொல்லவில்லை.அவளை பார்க்க மட்டுமே வந்திருந்தார்கள்.வழமை போல அண்ணன் தங்கையின் வாழ்க்கையை முன் நிறுத்தியே பேசி வைத்தான்.சில பல விசாரிப்புகள் அறிவுரைகள் என்று தான் பேச்சுச் சென்றது.
Advertisement
அப்பொழுது தான் தனது தையல் மிஷினை அவள் கேட்க.அடுத்த நாளே கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றான் அமுதன். அதில் இன்னும் கடுப்பானான் தணிகாசலம். தன்னிடம் கேட்காமல் அண்ணனிடம் என்ன கேட்பது? என்ற கோபம் வேறு.
அதன் அவன் கோபத்தை காட்டினாலும் விசாலாட்சி மௌனம் சாதிப்பாள்.அதில் அவனது பொறுமை எங்கோ செல்ல. இன்று பேசி விடவேண்டுமென்று வேலையை விட்டுட்டு வந்து விட்டான்.
இப்பொழுது அவள் வேலையில் வெகு மும்மரமாக இருக்க.அவளை பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான்.இது போல் வேளையில் அவன் வீட்டுக்கு வருவது அரிது என்பதால் ஒரு நொடி தனது வேலையை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தவள் மீண்டும் தனது வேலையைத் தொடர.
“திமிரு” சத்தமாகவே சொன்னவன் அவளுக்கு முன்னில் வந்து நின்றான். என்ன என்பது போல் ஒரு பார்வையை மட்டுமே கொடுத்தாள் விசாலாட்சி.
“பேசனும்”
“சொல்லுங்க?” என்றவள் கை வேலையை மட்டும் விடவே இல்லை. அதில் இன்னும் கடுப்பானவன் கையில் உள்ள துணியைப் பிடுங்கி எரிந்து விட்டு அதே வேகத்தில் அவளை எழும்பி நிற்க வைத்தான்.
“என்னடி திமிரா?”
“இப்போ புரியுதா அலட்சியம் எப்படி ஒரு கோபத்தைத் தருதுன்னு. எங்களுக்கும் நீங்க அலட்சியம் பண்ணும் போது அப்படித் தான் வருது” என்றதும் அவளை உஷ்ணத்துடன் பார்த்தான் தணிகாசலம்.
“என்ன? உண்மை தானே?”
“இப்போ இதுக்குப் பதில் சொல்லி வச்சா. பேச்சு தொடர்ந்து கிட்டே தான் போகும் அதுவும் போக எனக்கு எட்டு குத்து இளசு கிட்டயெல்லாம் என்னால விளக்கம் வச்சு நிக்க முடியாது” என்றவனை இப்போது விசாலாட்சி முறைத்து நின்றாள்.
“என்னடி முறைப்பு பேச முடியாதா உன்னால?” அவளது மௌனமும் வதைத்து தான் நின்றதும்,மூவர் மட்டுமே இருக்கும் கூட்டுக்குள் இருவர் பேசி கொள்ளவில்லை என்றால்? அந்த மௌனம் அத்தனை வதை செய்யும் போலும்.அவனே இறங்கி வந்து சண்டை கட்ட தொடங்கி விட்டான்.
“என்ன பேசனும்?”
“ப்ச் இங்க பார் நான் விவாதம் பண்ண வரலை. என்னோட இயல்பே அதான். நீ அன்னைக்கு ஒன்னும் ஒன்னும் சொல்ல போதுத் தான். உன் பக்கம் எனக்குப் புரியுது” என்றதும் இப்போது அவனைத் தீர்க்கமாகப் பார்த்தவள்.
“தன் இணையோட பக்கமிருந்து பார்க்க முடியாதவர் கல்யாணம் ஏன் பண்ணிக்கனும்?.பிள்ளைக்குத் தான் கல்யாணம் அப்படின்னாலும் கட்டிட்டு வந்து பொண்னுக்குன்னு ஒரு எண்ணம் இருக்கு தானே அவளுக்கும் கல்யாணத்தோட அடிப்படை தேவைகள் இருக்கும் தானே?
அவள் இருப்பு தொடங்கி. அவளுக்கான தேவைகள்,உணர்வுகள்,மதிப்பு,மரியாதை இதெல்லாம் இருக்கும் தானே? அதெல்லாம் எப்படி அவளுக்குக் கிடைக்கும்? அவள் கணவனைக் கொண்டு தானே. அப்புறம் எப்படி என் பக்கம் உங்களுக்குப் புரியாம போகும்? நீங்க பேசுறது வேடிக்கை தான் போங்க”
“ப்ச் விசா!” மகளைப் போல் நெருக்கம் காட்டுவது இந்த அழைப்பு மட்டும் தான் அதுவும் சில நாட்களாக.உருக துடித்த மானங்கெட்ட மனதை கடுமையாக எச்சரித்து நின்றாள் விசாலாட்சி.
“சொல்லுங்க?”
“ரொம்பச் சலுச்சுகாதடி நான் உன் விஷியத்துல சரியில்ல ரொம்பத் தப்புதான் இப்போ என்ன செய்யனும்?”
“நீங்க எதுவும் செய்ய வேணாம் அதுவும் நான் சொல்லி எதுவும் செய்யவே வேணாம்?”
“ஏய்!” என்றவன் ஒரு அடி நெருங்கி விட்டு தலையை உலுக்கி கொள்ள.அவனது குரலில் அதிர்ந்து விட்டாள் விசாலாட்சி.ஆளுமையான தோற்றம் கொண்டவன் மீது கணவன் என்ற உரிமை இருந்தாலும்.உள்ளுக்குள் பெரும் பயம் இருக்கத் தான் செய்தது.
அவளது மிரண்ட தோற்றத்தை கண்டு கொஞ்சம் தனிந்தவன் பொறுமையாக அவளிடம் தன்னை விளக்கும் பொருட்டு,”கொஞ்சமா நான் சொல்லுறதை காது கொடுத்து கேளுடி?”கெஞ்சுவது போல் பேச அமைதியாக இருந்து கொண்டாள்.
“வழக்கமா உண்மை கசக்கும் நான் சொல்ல போற உண்மையும் உனக்குக் கசப்பை தரும்.இருந்தாலும் மனசு விட்டுப் பேசிடுறது நல்லது” என்றவன் தரையில் அமர்ந்து கொண்டு.அவளையும் அமர் என்பது போல் கண் காட்டி வைக்க.
அவளும் அவனுக்குச் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டாள்.மெல்ல பேச்சை தொடங்கினான் தணிகாசலம்.
“செல்வியை இப்போ இந்த நொடி வரை மறக்க முடியல” என்று அவளது முகம் பார்க்க எந்த உணர்வும் இல்லாமல் அவனைப் பார்த்து வைத்தாள் விசாலாட்சி.
“சின்ன வயசுல இருந்து எனக்கு அவ தான்னு சொல்லியே வளர்த்தாச்சு. நானும் அவளை ரொம்ப உரிமையா தான் பார்த்துக்கிட்டேன். ஆசையா கல்யாணம் பண்ணி நல்லா இருந்தோம் வருஷ கணக்கு கூடி போச்சு குழந்தை வரமில்லை.
அதுக்குப் பெருசா நாங்க அலட்டி வைக்கலன்னு வை.ஊரும், உறவும் தான் பேசி வச்சாங்க.தீடீர்னு கடவுளே வந்து வரம் தந்த கதையா பிள்ளை உண்டாச்சு.ரொம்பச் சந்தோசமா இருந்துச்சு எல்லாம் பிள்ளை பிறக்கிற வரை தான்.
குமாரி பிறந்து ஒரு மணி நேரந்தான் செல்வி இருந்தா.அப்புறம் போயி சேர்ந்துட்டா.நல்லா இருந்தா பிள்ளையை வச்சுக்கிட்டு பேசிகிட்டு இருக்கும் போதே வெட்டு வந்திருச்சு காப்பாத்த முடியாதுனு சொல்லிட்டாங்க.
இதை யாருமே எதிர்பார்கல.எல்லாம் முடிஞ்சு பிள்ளையைக் கையில கொடுத்தா நான் எப்படி வளர்ப்பேன் அவளை.கடவுள் புண்ணியத்துல வீட்டுல பொம்பளைங்க இருந்தாங்க இல்லனா என் நிலை?
பிள்ளை பக்கத்துல படுத்து பசிக்கு அழுவா. நானும் அவளைத் தூக்கி சமாதானம் பண்ணனும் தோணும், ஆனா நான் எழுந்து உட்காந்து பண்ண முடியாது தெரியுமா? புத்தி சொல்லும் மனசு செயல் பட மறுத்து நிக்கும்.
கிட்டத்தட்ட பிள்ளையைக் கூடப் பார்க்காம சில வருடத்தை இப்படி தான் கடந்தேன்.இப்போ தான் தேவலாம், குமாரி கொஞ்சம் வளர்ந்து வரவும் எனக்கு அவளைச் சரியா பார்த்துக்க முடியாம போகுமோன்னு பயம் வந்திருச்சு” என்றதும் வாய் சும்மா இருக்காமல்.
“அந்தப் பயம் எதுக்கு உங்களுக்கு? அவளை அத்தை தானே பார்த்துக்கிட்டாங்க? அது போல அவங்களே பார்த்திருப்பாங்க”
“எகத்தாளம் பேசத்தாடி, ஆமா எனக்கு ஒரு துணை வேணும் போதுமா”
“ஹ்ம்ம்! அப்படி உண்மை சொல்லிட்டு போக வேண்டியது தான் ” உதட்டை சுளித்துக் கொண்டாள்.
“வாழ்க்கை இப்படி தான். ஒரு பொண்ணு வந்தா அவ கூட நம்ப வாழ்க்கைனு எண்ணி வைக்காம நான் கல்யாணம் பண்ணல,ஆனா எண்ணியதை சத்தியமா செயல் படுத்த முடியல. என்னை எந்த ஒரு விசியத்துலையும் யாரும் சுட்டி காட்டி ஒரு குறை சொன்னது இல்லை.தப்புச் செஞ்சா கூட அதைச் சரி பண்ணிட்டு போயிகிட்டே இருப்பேனே தவிர யாரையும் பேச விட மாட்டேன்,
ஆனா உன் விஷியத்துல எல்லாமே தலை கீழே நடக்குது.அது ஏன்னு தான் புரியல” என்றவன் சில நொடி மௌனம் கொண்டு.
“கொஞ்சம் அவகாசம் குடு என்னை மாத்திக்கப் பாக்குறேன் என்ன?” எதுவும் சொல்லாமல் அவனை ஒரு பார்வை பார்த்து அவள் செல்ல பார்க்க.கோபமாகி அவளது கை பற்றி நிறுத்தியவன்.
“இந்த திமிர் தானே வேணாங்குறது.பக்கம் பக்கமா உசுர கொடுத்து உருகி கிட்டு பேசி வச்சிருக்கேன் நீ பாட்டுக்கு போற” என்றவன் பேச்சில் அதுவரை இருந்த பொறுமை காற்றில் பறக்க.
“இப்போ என்ன விளக்கம் வச்சிக்கன்னு என்னைப் பேச சொல்லுறீங்க?”
“விசா ஏட்டிக்கு போட்டி பேசி வைக்காத நான் பேச்சை வளர்க்க விரும்பல”
“சரி உங்க பக்கம் விளக்கம். எல்லாம் எனக்கு நியாயமாவே படல. பேசுனீங்க கேட்டுட்டேன் அவளோதான்” என்றதும் கோபம் உச்சிக்கு நின்றது தணிகாசலத்திற்கு.
அவனது முகமே அவனது உணர்வை எடுத்துக்காட்ட தன்னை நிதான படுத்திக் கொண்டவள்,”எனக்கு உங்க கிட்ட நிறையக் கேள்வி கேட்கனும்” என்றவள் சில நொடிகள் மௌனம் கொண்டு கேள்வி கணைகளை தொடுத்தால்.
“முதல் மனைவியை மறக்க முடியாதவர் என்னத்த எண்ணி வச்சு என்னைக் கல்யாணம் பண்ணீங்க?
“பொம்பளைங்க இல்லாத வீடுன்னா கூடச் சரினு சொல்லலாம். இங்க வீடு முழுக்கப் பொண்ணுங்க தான்.உங்க அக்கா மகளுங்க, அதுங்க பொண்ணே பெரிய பொண்ணுங்கள இருக்கு அப்புறம் என்ன?
வசதி இல்லாதவரா? அதுவும் இல்லை.பணம் கொட்டி கிடக்கு.அம்மா இல்லாத குறைய அவ உணர்ந்தா தான் உண்டு. மத்த படி அவ இளவரசி கணக்கா தான் இருக்கா.அம்மாச்சி, தாத்தா, அப்பாயி, தாத்தான்னு அத்தைங்கன்னு செல்லம் வேற.இதுல எதுக்கு ஊரார் வீட்டு பொண்ணு?
சரி கல்யாணம் பண்ணியாச்சு அப்போ அந்தப் பொண்ணுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கனும் தானே.
சரி அதுவும் உங்களால முடியாதுனா. உங்களுக்குத் தோது கொடுக்குற பொண்ணைப் பார்த்து, இப்படி தான் இருப்பேன். என்கிட்ட எதுவும் எதிர்பார்த்து வராத.அடிப்படையா கிடக்கிறது கூடக் கிடைக்காதுன்னு முன்னுக்கே சொல்லி கல்யாணம் பண்ணிருக்கலாமே.
அதுவும் இல்லையா என்னிலும் கீழே ஏழை பட்ட பொண்ணுங்க இருக்காங்க.அவங்களைப் பார்த்து கல்யாணம் முடிச்சிருக்கலாம் தானே? ஏன் சொல்றேன்னா எங்க அண்ணன் நிக்க வச்சுக் கேள்வி கேட்டது உங்களை உருத்திக்கிட்டே இருக்குல.
அந்த மாதிரி ஏழை பட்ட பொண்ணுங்கல பார்த்தா. பசை உள்ள இடம் வேறயா உங்களை எதிர்த்து நின்று யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க” என்றவளது பேச்சில் உள்ள ஆதங்கம் புரிந்தாலும் இன்னும் இறங்கி வர மனமில்லாமல் விறைத்து நின்றவனை ஒரு பார்வை பார்த்தவள் அதிராமல் ஒரு குண்டை தூக்கி போட்டால்.
“எனக்கு எங்க அம்மா வீட்டுக்கு போகனும்” என்றதும் அதிர்ந்து அவள் முகம் பார்த்தவன்.
“என்ன என்னை வளைக்க மிரட்டி பாக்கறியா?” என்றவனைப் பார்த்து பல்லை கடித்தவள்.
“சரிதான் போடா” என்றுவிட்டு செல்ல.
“ஏய்!” பாய்ந்து கொண்டு வந்தவன் அவளை நெருங்கும் முன்பே ஓடி சென்று கதவை அடைத்து கொண்டாள்.
கோபத்தை அடக்கும் வழி தெரியாமல் வெளியில் சென்று விட்டான் தணிகாசலம். அதன் பிறகு ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை விசாலாட்சி.குமாரியை பள்ளிக்கே சென்று அழைத்துக் கொண்டு அந்தியூரில் சிவகாமி கையில் உப்படைத்து விட்டு.
அவர் கேட்ட எந்த வித கேள்விக்கும் பதில் சொல்லாமல் கோவைக்கு நடையைக் கட்டிவிட்டாள்.அவரவருக்கு அவரவர் நியாயம் என்பது நியாமாக இருந்தாலும் சில இடங்களில் அரிவை பெண்ணுக்குச் சுயம் துளைத்து நிற்க முடியவில்லை.
குமாரி மட்டுமே உறுத்தல் அதனை கொண்டு தான் அத்தனை பொறுமை காத்து நின்றாள்,ஆனால் அவளது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா.
இத்தனை நேரம் உருக்கமாகப் பேசி வைத்த அனைத்தும் ஒண்ணுமில்லை என்பது போல் விசாலாட்சி சென்றுவிட.செல்வி இறப்புக்கு நிகரான நிலையில் நின்று இருந்தான் தணிகாசலம்.சில இடங்களில் அவனது தவறு தன்னிலை விளக்கம் மட்டுமே கொடுத்து நின்றதே ஒழிய தவறை சுட்டி காட்டி திருத்த முன் வரவில்லை.
மீண்டும் ஒரு பிரிவில் நின்றான் முதுமகன்.
error: Content is protected !!