Skip to content
Post Views: 4,997
அந்தியூரான் -19
மாலை பொழுதின் ரம்மியம் அந்த வீட்டில் நிறைந்து நிற்க.முரண்டி நிற்கும் தனது செல்ல அன்னையிடம் பேச சொல்லி கெஞ்சி கொண்டிருந்தாள் குமாரி.
“விசா! இப்போ பேச போறியா என்ன? நானும் மூணு நாளா உன் பின்னாடி கெஞ்சிட்டு இருக்கேன்” குமாரி விசாலாட்சி பின்னே அலைய.அவளை கண்டு கொள்ளாமல் தனது கை வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் விசலாட்சி.
Advertisement
“ப்ச்! விசா இப்போ பேசப் போறியா? இல்லையா?” குரல் அழுகைக்கு மாற அப்படி ஒரு கோபம் விசாலாட்சிக்கு.
Advertisement
“இப்படி அழுது அழுதே காரியம் பண்ணுடி நீ”
Advertisement
“என்னைக் கண்டாலே உனக்குப் பிடிக்கல தானே” உண்மையில் குமாரிக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது. விசா இல்லையென்றால் குமாரியின் வாழ்வில் தாய் என்ற அத்தியாயத்திற்கே இடமில்லாமல் போயிருக்கும். அதனால் தான் இந்த அரிவை அவளிடம் அத்தனை நெருக்கம் காட்டி நிற்பது.
Advertisement
“எதாவது பேசி வைக்கனுமுனு பேசாதடி முதல கண்ணைத் துடை”என்றதும் விசும்பி கொண்டே கண்ணைத் துடைத்தாள் அவளது நிறத்திற்கு அழுததால் முகமெல்லாம் சிவந்திருந்தது.
“ப்ச்! வா இங்க என்று அழைத்தது தான் தாமதம் மடுவை தேடி பசுவை மோதிய கன்று போல் விசாவின் நெஞ்சோடு மோதி இறுக்க அணைக்க.அவள் மோதிய வேகத்தில் இருவரும் கட்டிலில் விழுந்தனர்.
“எரும! எரும! எழுந்திரிடி இப்படியா வந்து மேல விழுவ ஐயோ! வலி உயிர் போகுது”
“ப்ச்! திட்டாத விசா”
“முதல எழுந்திரி நீ” என்றவள் அவளை எழ செய்து அவளும் எழுந்து அமர்ந்தாள்.
“இன்னும் சின்னப் பிள்ளையா நீ” குமாரியை கடிய மீண்டும் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.
ப்ச்! பாப்பா என்றவள் குமாரியை அனைத்துக் கொண்டு சிறுது நேரம் இருந்தாள். பின்பு அவளை விலக்கி, “குமாரி நான் சொல்லுறதை கேளேன். நீ என் அண்ணனை கட்டிக்கிட்டா எனக்குத் தாண்டி நிம்மதி. நான் உன்னைப் பிரிய வேண்டாம்.உன்னை எண்ணி பயந்துக்க வேண்டாம்.எங்க அம்மா கைக்குள்ள நீ இருக்குறன்னு எண்ணி. நான் இங்க ரொம்ப நிம்மதியா இருப்பேன்”
“அப்புறம் ஏன் விசா வேணா சொல்லுற?”
“நிலைமை புரியாம பேசுறடி உன் அப்பனுக்கும் என் அண்ணனுக்கும் ஆகாது.ஒரு தகப்பனா எங்க அண்ணன் எனக்காகப் பேசுனது உங்க அப்பாக்கு பிடிக்கல. அது எப்படி ஒரு சின்னவன் என்னை நிக்க வச்சுக் கேள்வி கேட்கலாம்னு இப்பவும் என்கிட்ட பேசுவாரு.என்னை எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பாததுக்கு இது தான் காரணம்” இது குமாரிக்குப் புதிய செய்தி
“என்ன விசா சொல்லுற? ஒரு நிமிடம் தான் சின்னவளுக்கு அதிர்ச்சி அடுத்த நொடியே நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமானவள்.இதுக்குத் தான் நீ பயந்தியா நான் கூட உனக்குப் பிடிக்கலையோன்னு நினைச்சேன்” என்றதும் சின்னவளை பெரியவள் முறைக்க.
“இப்படியே இருந்தா நீயும் இப்படியே இருப்பியா விசா. நீயும் அம்மாச்சி வீட்டுக்கு போகணும் தானே”தன்னை கொண்டு தான் மகள் பேசுகிறாள் என்று எண்ணிய விசா.
“ஆமாடி” வருத்தமாகச் சொல்ல
“அதுக்குத் தான் சொல்றேன் நான் அமுதன் மாமாவை கல்யாணம் பண்ணிகிட்டேனு வை.நீ அங்க வந்து தானே ஆகணும்”
“அதானே கொஞ்ச நேரத்துல நான் கூட என்னவோன்னு எண்ணி வச்சுட்டேண்டி பிசாசு, பிசாசு அப்படியே அப்பனை கொண்டு காரியம் சாதி. இங்க பார் எங்க அண்ணன் நீ எண்ணி வைக்கிற மாதிரி இல்லை”
“அட போ விசா ஆனால பட்ட உன்னையே நானும் அப்பாவும் வளைகலையா.அது மாதிரி மாமாவும் என் வழிக்கு வருவாங்க. நான் கூட உனக்கு விருப்பம் இல்லயோன்னு எண்ணி வச்சேன் இப்போ சரி தான்” என்றவள் துள்ளி கொண்டு ஓட.
“ஏய்! ஏய்! நான் சொல்றதை கேட்டுட்டு போடி”
“பேசிக்கலாம் விசா” என்றுவிட்டு ஓட தலையில் கை வைத்து அமர்ந்து விட்டால் விசாலாட்சி.இன்னும் சற்று நேரத்தில் அமுதன் வந்து விடுவான். அதனை எண்ணி வச்சாலே உள்ளுக்குள் பெரும் போர் முரசு மூண்டது.ஒரு சில விஷயங்களில் அமுதன் வைத்து பார்த்து பேசும் ரகமில்லை.
இல்லை என்பதையும் முடியாது என்பதையும் தயக்கம் இல்லாமல் சொல்லும் ரகம்.குமாரி விளையாட்டு போல் எதாவது பேசி அதற்கு அமுதன் படக்கெனப் பதில் கொடுத்தால் குமாரியால் அதனைத் தாங்கி கொள்ளவே முடியாது.
ஒரு தாயாக மகளை மட்டுமே எண்ணினாள் விசாலாட்சி யோசனையில்.உழன்று கொண்டு இருந்த விசாலாட்சியைக் கலைத்தது சிவகாமியின் குரல்.
“விசா இங்க வா!” என்றழைக்கத் தற்காலிகமாக அந்த யோசைனையில் இருந்து கலைந்து அடுத்த வேலைக்குச் சென்றாள்.அன்று வந்த நாத்தனார் குழு இன்னும் உள்ளது குமாரியின் கல்யாணம் உறுதி தெரியாமல் யாரும் அந்தியூரை விட்டுச் செல்வதாக இல்லை போலும்.
அதன் பின் வந்த ஒரு மணி நேரம் ரெக்கை கட்டி கொண்டு பறக்க. வேட்டி சட்டையில் கொஞ்சம் தோரணையாக தான் வந்தான் அமுதன்.அவனது தோற்றம் கண்டு கந்தனுக்கு அத்தனை நிறைவு.
“வாங்க! வாங்க அமுதன்! ” என்று எல்லாரும் அழைத்து உள்ளே செல்ல. அரவம் கேட்டு குடும்ப மக்கள் அனைவரும் கூடி விட்டனர். வழமை போல் விகல்பமே இல்லாமல் அவனை கண்ட களிப்புடன் “வாங்க அமுதன் மாமா” குரலை சற்று உயர்த்தி அழைக்க.முதல் முறையாக கொஞ்சமாக அவளை பார்த்துச் சிரித்தான் அமுதன்.
“வந்தவனை வாசலோடு அனுப்பிடுவா போல உன் பேத்தி. அழகி குமாரியை கூட்டிட்டு போ” சிவகாமி பேத்தியை முறைக்க.அழகி குமாரியை அழைத்துக் கொண்டு மெத்தைக்குச் சென்று விட்டாள்.விசாலாட்சி வெளியில் வரவே இல்லை.
ஒரு தந்தையாக அமுதனை வரவேற்க வேண்டியவன் அவனை ஆழ்ந்து பார்த்து வா! என்பது தலை அசைத்தானே ஒழிய வா! என்று வாய் திறந்து அழைக்கவில்லை.தோரணையாக வந்தவனை முடி தொடங்கி அடி வரை ஒரு அலசும் பார்வை பார்த்தான்.
நல்ல வேலை அமுதன் பாதங்கள் வேட்டிக்குள் பதுங்கி கொண்டது.இல்லையென்றால் தணிகாவின் ஆராய்ச்சி அமுதன் நககன்று வரை சென்று இருக்கும்.
“அம்மாடி தம்பிக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வாங்க”
“இல்ல மாமா இப்போ தான் குடிச்சிட்டு வந்தேன் தண்ணி போதும்” என்றதும் ராணி தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க.அதனை வாங்கி அருந்தியவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.அவன் மட்டுமே வந்திருந்தான் இந்தத் திருமணம் உறுதி என்று தெரியாத நிலையில் அம்மா, மாமா, அத்தை என்று யாரையும் அலைய வைக்க அவன் விரும்பவில்லை.
அவனது நிலை புரிந்தார் போல “பாப்பா! மேல இருக்கா பேசுங்க” கந்தன் சொல்ல.ஒரு வித சங்கடமிருந்தாலும் வழமை போல அதனை மறைத்து மாடியை நோக்கி நடையைக் கட்டினான். அதனை குமாரியும் உணர்ந்தது தான் வியப்பு.
அழகி அமுதன் வரவை கண்டு படியில் வந்து நின்று கொள்ள.அவன் அழகியை கடந்து குமாரியை நெருங்கி நேர் கொண்டு பார்த்து நின்றான். முதல் முறை பார்வை கொஞ்சம் மாற்றத்தை கொடுத்தது.சில நொடிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.முதலில் அவர்களது மௌனத்தை கலைத்தது குமாரி தான்.
“எப்படி மாமா இருக்கீங்க பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சுல்ல” வெகு இயல்பாக பேசினாள்.
அவளது இயலபை எண்ணி உள்ளுக்குள் வியந்தவாறே “ஹ்ம்ம்! ரொம்ப வருஷம் ஆச்சு தான்..என்றவன் பின் சில நிமிடங்கள் எடுத்து கொண்டு எதை வச்சு என்னை நீ கல்யாணம் பண்ண யோசிச்சிருக்க.என்னை பத்தி என்ன தெரியும் ஹ்ம்ம்!..
“என்ன தெரியணும் விசாவோட அண்ணன், விசா மாதிரியே தான் இருப்பீங்க இது போதும் எனக்கு” என்றதும் பல் தெரியாமல் சிரித்தவன்.
“அது சரி நான் அவளை மாதிரி பொறுமை கிடையாது அவளை கொண்டு என்னை கணிச்சு வைக்காத”
“தெரியுமே ஆனா விசா மாதிரி பொறுப்பு”
“ப்ச்!” அடுத்து என்ன கேட்பது என்று சலித்து அவன் நெற்றியை நீவி கொள்ள.இயலபாக அவனை நெருங்கி அவனது கையைப் பற்றியவளை திடுக்கிட்டு பார்த்து அவன் விலகப் பார்க்க
அழகாக கெஞ்சியது கொஞ்சும் கிளி “மாமா! மாமா! உங்களை ரொம்பப் புடிக்கும்.விசாவ எவ்வளவு புடிக்குமோ, அப்பா, தம்பிய எவ்வளவு புடிக்குமோ அதே அளவு உங்களையும் புடிக்கும்.நான் உங்களை கல்யாணம் பண்ணா என்னைப் பத்திரமா பார்த்துக்குவீங்க
ஒரு சண்டை போட்டா கூட விசாவை கோவில்ல வந்து பார்த்துக்கிட்டிங்க தானே அது போல என்னையும் பார்த்துப்பீங்க.அப்புறம் எனக்குத் தோணும் போதெல்லாம் நான் விசா கூட இருக்கலாம்.
அவள் அளவு அவள் இந்தத் திருமணத்தை எதற்கு உறுதி கொண்டால் என்பதைச் சொல்ல.அவளது நோக்கம் இப்போது சரியாக விளங்கியது ஆக தாயை பிரியாமல் இருக்கத் தன்னைத் துணை தேடி உள்ளாள்,ஆனால் எனக்கு இது போதுமா? இது என் வாழ்க்கை அல்லவா உள்ளுக்குள் சிறு கோபம்.
மேலும் தணிகாவின் மகளை உரிமையாகச் சீண்டி பார்க்க தோன்றியது போலும்.
“ஏண்டி நீயும் உன் ஆத்தாளும் பிரியாம இருக்க உங்கப்பன் கிட்ட சொல்லி வீட்டோட மாப்பிள்ளை பார்க்க சொல்லுடி உன் தேவைக்கு நான் ஆளா” என்று வேட்டியை மடித்துக் கட்டியவனைப் பார்த்து எங்கே திருமணத்தை மறுத்து விடுவானோ என்று பயந்தவள்.
“ஐயோ! மாமா அதுக்கு மட்டும் இல்ல உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும்”
“குடும்பமே சுயநலம் பொய் பேசி என்னை ஏமாத்த பாக்கறியா?” என்றதும் பதறி.
“இல்ல மாமா உண்மைக்கும் ரொம்ப ரொம்பப் புடிக்கும்.என்னை பார்த்தாலே சண்டை கட்டுவீங்க தானே,ஆனா நானும் விசாவும் தினமும் உங்களை பத்தி தான் பேசிப்போம்” பயத்தில் உளறி கொட்டி நின்றவள் வதனம் பெரும் போதையைக் கொடுக்க முயன்று முறுக்கி நின்றான் அமுதன்.
“நான் என்ன விசாலாட்சியா ஏமாந்து போக?” என்றதும் அவனை முறைத்துக் கொண்டு
“இப்போ என்ன நான் வேணாம் தானே? சரி வேணாம் விடுங்க” என்றவள் அவனைக் கடந்து செல்ல போக பட்டென இழுத்து அனைத்துக் கொண்டான் அமுதன்.
அவனது எதிர்பாரா செயலில் அதிர்ந்து நின்றவள், “என்னடி சுரன்னு கோபம் வருது.அப்போ மாமா வேணாமா?என்றவன் அவளைத் தன் முன் நிறுத்தி கன்னத்தில் விழுந்த அவள் முடியை காதோரும் சொருகி விட.
முகம் கொள்ளா புன்னகையுடன்,”அப்போ கல்யாணம் பண்ணிக்கலாமா மாமா”
“ஹ்ம்ம் பண்ணிக்கலாம்”
“ஐ! நான் தாத்தா கிட்ட சொல்றேன் என்று ஓட போனவளை மீண்டும் தன்னுடன் இறுக்கி கொண்டவன்.
“என் தங்கச்சிய ரொம்பப் புடிக்குமா?” ஒருவிதமான குரலில் மெல்லமாகக் கேட்க.
“என் விசாவை ரொம்ப ரொம்பப் புடிக்கும்”
“ஓ! உன் விசாவா”
“ஹ்ம்ம்! உதட்டை சுழித்து கொண்டு தோரணையாகத் தலையை ஆட்டி கொண்டவள் நெற்றியில் முட்டி.
“நான் என்ன பேச வந்தேன் தெரியுமா? உன் கிட்ட பேசி நடப்பை எடுத்து சொல்லி இந்தத் திருமணம் வேணான்னு சொல்ல வந்தேன்” என்றவனைக் கலவரமாகப் பார்த்து வைத்தால் குமாரி.
“மாமா!”
“ப்ச்! ஆள்மயக்கி நாலு வாக்கியத்துல என் எண்ணத்தையே மாத்தி வச்சுட்டியே.சொன்னா மட்டும் கோபம் வருது அப்பனை கொண்டு நீயும் ஏமாத்து காரிதாண்டி” என்றவன் வெகு உரிமையாக கன்னம் தீண்டி விலக. மின்னல் வேகமென்றாலும் அது கொடுத்த தாக்கம் அப்படி தான் இருந்தது.
கொஞ்சம் பதட்டமாகி விட்டாள் குமாரி, “மாமா”
“கீழ ஓடு” என்று அவளை விட
” மாமா!”
“கல்யாணம் பண்ணிக்கலாம்டி வேற எதுவும் இப்போ பேசுற நிலையில நான் இல்லை ஓடிடு” என்றவன் அவளது கையை விட விட்ட நொடி பறந்தே விட்டது பருவ சிட்டு.
பேத்தியை எடுத்த ஓட்டத்தில் பீதியாகி போன அழகி அவளுக்கு பின்னால் ஓடி சென்றாள்.குமாரி வந்த வேகத்தில் விசாவை தான் இறுக்க கட்டி கொண்டு அவளது நெஞ்சில் முகம் புதைந்து கொண்டாள்.உண்மையில் அவள் வந்த வேகத்தைப் பார்த்து அனைவரும் பயந்து தான் நின்றனர்.அவள் பின்னிலே அமுதனும் வர அனைவர் பார்வையும் அவளைத் தீண்டி நின்றது.
“ஹ்க்கும்! தொண்டையைச் சரி செய்து கொண்டவன் பார்வை தணிகாவை ஒரு நொடிக்கு குறைவாக தீண்டி பின் சிவராமனிடம் நிலைத்தது.
“மாமா கிட்ட சொல்லி முறையா ஏற்பாடு பண்ண சொல்றேன்” என்றவன் கையெடுத்து கும்பிட அப்படி ஒரு புன்னகை ஆண்களுக்கு.
“ரொம்ப சந்தோசம் அமுதா” என்ற சிவராமன் அவன் கைகளைப் பிடித்துக் கொள்ள கந்தனும் அவனை மெல்லமாக அனைத்து விடுவித்தார்.
“அப்போ நான் கிளம்புறேன்”
“அது என்ன சாப்பிடாம போறது” என்ற சிவகாமி அவனை வற்புறுத்தி இரவு உணவை உண்ண வைத்த பின்னே வழியனுப்பி வைத்தார்
அம்மாச்சி குழுவுக்குக் கொஞ்சம் நெருடல் தான் இருந்தும் வீட்டு ஆண்கள் சிலவற்றை எடுத்து சொல்ல அரைமனதாக ஒப்புதல் கொடுத்தனர்.இதில் எதிலும் தணிகா தலையிடாமல் ஒதுங்கி நின்று கொண்டான்.
சிவராமனும், கந்தனும் அதனை கவனித்துக் கொண்டு தான் இருந்தார்கள்.கிட்டிய தனிமையில், “மாமா மாப்பிள்ளைக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலையோ?”
“அவன் பேசி ஒப்புதல் கொடுத்த பிறப்பாடு தான் குமாரியை விட்டு உங்களைப் பேச சொன்னேன் மாப்பிள்ளை, ஆனா இவன் என்னனா வந்த பையனை வான்னு கூடக் கூப்பிடாம இருக்கான் நானும் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன்”
“இது சரியா படல இரண்டு நாள் விட்டுருவோம் நாளை மறுநாள் நம்ப இரண்டும் பேரும் பேசுவோம் மாமா”
“சரிதான் மாப்பிள்ளை” என்றவர்கள் அடுத்து என்ன என்று பேச தொடங்க விட்டனர்.
error: Content is protected !!