Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன்♥️45

சொல்லுங்க சார்! ஒன்னும் பிரச்னை இல்லையே…

பிரச்னை தான் தம்பி அது தான் கால் பண்ணினேன்.

என்னாச்சு? ஏதேதோ யோசனை அவன் மனதிற்குள்.

பவி அமெரிக்காவில் இல்லை என்பது தமயந்திக்கு தெரிந்து போச்சு!

எப்படி…? சோர்வுடன் கேட்டான்.

இப்போதுதான் தந்தைக்கு ஆபரேஷன் முடிந்து கொஞ்சம் நிம்மதியாய் மூச்சு விட்ட வேளையில் அந்த நிம்மதிக்கு ஆயுள் ஐந்து நிமிஷம் கூட இல்லை அதற்குள் மறு பிரச்சனை கிளம்பி பூதாகரமாய் நிற்கிறதே…

தம்பி ஒரு வாரமா பவியை போனில் காண்டாக்ட் பண்ண முடியலை….

பயந்து போய் சௌமிக்கு கால் பண்ணி பேசி இருக்காங்க…. அந்த பொண்ணு இந்தியாக்கு அனுப்பிட்டோம்னு சொல்லிடுச்சு!

சௌமியா? வேற என்ன சொன்னா….?

அந்தப் பொண்ணு எதுவும் சொல்லாமல் சமாளிச்சுடுச்சு!

ம்ம்ம்ம்….!

எங்களுக்கு தெரியாமல் என்கிட்ட சொல்லாம என் பொண்ணை எப்படி தனியா அனுப்பலாம்னு தமயந்தி ஒரே அழுகை….

கொஞ்ச நேரத்தில் அகிலன் தம்பி போன் பண்ணி பவித்ரா இன்டர்வியூ அட்டென்ட் பண்ண ஆந்திரா போயிருக்கிறதா சொல்லி சமாளித்து இருக்கிறார்.

அந்த சோர்விலும் சற்று நிம்மதி நண்பன் அகிலனை எண்ணி….

பவித்ராவை பார்த்தே ஆகணும்னு ஒரே அடம்… என் பொண்ணுக்கு என்ன ஆச்சு ஏதாச்சுன்னு நேத்தில இருந்து சாப்பிடவே இல்லை… சுகர் லோ ஆகி பிபி ரைஸ் ஆகி மயங்கிடுச்சு தமயந்தி.

அய்யயோ…. இப்போ எப்படி இருக்காங்க?

நல்லா இருக்காங்க… ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்  ட்ரிப்ஸ் போட்டு மெடிசின் கொடுத்து கூட்டிட்டு வந்திருக்கேன்.

பவி எங்கே…. கொஞ்சம் பேச சொல்லுங்களேன்!

இங்கேயும் கொஞ்சம் பிரச்னை தான்…. நடந்ததை அவருக்கு சுருக்கமாக கூறினான்.

தம்பி இதெல்லாம் சரியா வருமா….? கவலை தோய்ந்தது மணவாளன் குரலில்.

ஏன் சார் என் மேல் நம்பிக்கை இல்லையா?

அப்படி இல்லை…. உங்க வீட்டுல முழு மனசா ஏத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். இங்கேயும் என் தங்கச்சி ஏத்துக்கறது கஷ்டம்…

அதுக்காக விட்டுவிட சொல்றீங்களா?

எல்லாரையும் கஷ்டப்படுத்தி ஏன்னு தான்…!

சார் உங்களுக்கு பவித்ரா நலனில் அக்கறை இருக்கு தானே…?

என்ன தம்பி இப்படி கேட்டுட்டீங்க…?

பவித்ரா என்னைத் தவிர யாரையும் இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணிக்க மாட்டா கடைசிவரை உங்க வீட்டோடையே கல்யாணமே செய்துக்காம இருந்துடுவா பரவாயில்லையா?

தம்பி…. அலறி விட்டார்.

உங்களை மிரட்டுவதற்காக சொல்லலை அவள் என்னை அவ்வளவு நேசிக்கிறா… அதேசமயம் உங்க வீட்டை எண்ணி பயப்படறா…

சரி தம்பி நீங்க உங்க அப்பாவை பாருங்க!

பவித்ராவை சீக்கிரம் கிளம்பி வர சொல்லுங்க! அதுக்கு முன்னாடி ஒரு போன் போட்டு காயத்ரிக்கு பேச சொல்லுங்க.

சரி சார் நானே கூட்டிட்டு வரேன்.

ஐயோ நீங்களா?

ஏன் சார்….?

இல்ல… பவித்ரா வரட்டும் நான் தமயந்திட்ட உங்க விஷயத்தை பேசறேன். திடு திப்புன்னு நீங்க கூட வந்து நின்னா பிரச்னை வேற மாதிரி போக வாய்ப்பிருக்கு. நான் பேசி புரிய வச்சிட்டு பிறகு உங்களுக்கு தகவல் சொல்றேன்.

இல்லை… நான் தனியா அவளை அனுப்ப மாட்டேன்!

ஒன்னும் ஆகாது நான் பார்த்துக்கிறேன். அவசரமாய் வாக்குறுதி கொடுத்தார் மணவாளன்.

என்ன பார்த்துப்பீங்க?

சட்டென்று அவனுக்கு கோபம் முகிழ்ந்தது.

நான் அவளோட தாய் மாமன்… மணவாளனுக்கும் கோபம் துளிர்த்தது.

சார் வேணாம்…. ஏற்கனவே சூடு வைத்தவங்க உங்க தங்கச்சி.

நான் இல்லைன்னு சொல்லல…. ஆனா அதே கோபத்தோட தமயந்தி இன்னும் இருப்பான்னு அர்த்தம் இல்லை.

சார் பவித்ரா மேல ஒரு சின்ன துரும்புபட்டாலும் அங்கே எத்தனை தலை உருளும்னு தெரியாது.

உள்ளுக்குள் திக்கென்று இருந்தாலும்…. தம்பி எங்க குடும்பத்தில் வெட்டு குத்துங்கிறது எல்லாம் கெட்ட வார்த்தை தான். நாங்க ரொம்ப சாத்வீகம்.

ஆனா எங்க குடும்பத்தில் அப்படி இல்லை சார்.

புரியுது தம்பி நான் பார்த்துக்கிறேன். நீங்க பவித்ராவை அனுப்பி வைங்க!

சரி சார் நான் அனுப்பி வைக்கிறேன். உங்களை நம்பி. உங்களை மட்டும் நம்பி.

எனக்கு உங்க தங்கச்சியோட எஸ்,நோ எல்லாம் பெரிய விஷயம் இல்லை. என் வீட்டுலேயும் தான்.

நாங்க டீன் ஏஜ் இல்லை சார். உங்களுக்கு புரியது தானே…அவ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால கற்பனை பண்ணி பார்க்க கூட முடியாது.

அவளுக்காக எதை இழக்கவும் தயாரா இருக்கேன். யாருக்காகவும் அவளை இழக்க மாட்டேன்.

உங்க அன்பு புரியுது தம்பி. எங்க பவிக்கு இதை விட நல்ல மாப்பிள்ளை அமையாது. 

பக்குவமா எடுத்து சொல்லுங்க உங்க தங்கச்சிக்கு.

நான் இப்படி பேசறேன்னு என்னை முரடனா நினைச்சுட வேண்டாம். என் பரம்பரை சொத்து சுகம் இல்லை என்றாலும் என்னால பவித்ராவை நிம்மதியா சந்தோஷமா வைத்து வாழ முடியும்!

நான் எதுக்காகவும் பெருசா ஆசைப்பட்டது இல்லை. என் ஒரே ஆசையும்,கனவும் பவித்ரா தான்.

எனக்கு பவித்ராவை சந்தோஷமா கொடுங்க! சண்டை சச்சரவு கண்ணீர் சாபம் இதெல்லாம் வேண்டாம் என் பவியை மனப்பூர்வமா எனக்கு கொடுத்துடுங்க  ப்ளீஸ்.

இவ்வளவு நேரம் ஆணவத்துடன் பேசியவன் குரல் இப்போது அடைத்துக் கொண்டது.

தம்பி நான் காதலுக்கு எதிரியில்லை. சங்கர நாராயணன் என் தங்கச்சி தமயந்தியை விரும்பி பெண் கேட்டார்னு சந்தோஷமா கட்டி கொடுத்தவன் நான்.

பவித்ராவை பற்றி எனக்குத் தெரியும். அவ பிடிவாதமான பொண்ணு. அவ உங்களை ஆசைபட்டுட்டா கடைசிவரை உறுதியா இருப்பா. நீங்க தைரியமா இருங்க பார்த்துக்கலாம்.

சரிங்க சார் அனுப்பி வைக்கிறேன்.

“——————-“

என்ன ஹரி இவ்வளவு நேரம் பேசிட்டு வர…? ராம்சரண் கேள்வியுடன் பார்த்தான்.

ஒரு முக்கியமான கால்!

சரி சாப்பிடு! யோசனையுடன் தமையன் முகம் நோக்கினான். பவித்ராவின் பார்வையும் ஹரியில் தான் பதிந்தது.

நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன் என்று வெளியேறினான்.

அவன் சிந்தையாவும் பவித்ரா தான். அனுப்பலாமா வேண்டாமா?என்று பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது.

பெற்றவர்க்கு இல்லாத உரிமையா என்று கேள்வி எழுப்பியது ஒரு மனம்.

பவியை அவர்கள் மோசமாக நடத்தி விட்டால்? தவித்தது மற்றுமொறு மனம்.

காரிடாரில் தனியே ஒரு இருக்கையில் யோசனையுடன் அமர்ந்திருக்க…. மொபைல் அழைப்பு அகிலனிடமிருந்து.

சொல்லுரா அகி!

மச்சி, பவித்ரா அம்மா கேள்வி கேட்டு குடைஞ்சுட்டாங்கடா.

ம்ம்ம்ம்!

ஹைதராபாத்தில் பெரிய ஹாஸ்பிடலில் ஜாப் ஆபர் இருக்குன்னு போயிருக்கா. உங்களுக்கு அவளே கால் பண்றேன்னு சொன்னதுனால தான் நான் கால் பண்ணலைன்னு சொல்லி சமாளித்தேன்.

ம்ம்ம்ம்ம்ம்ம் என்றான் பெருமூச்சுடன்.

என்னடா ஹரி? கொஞ்சம் கலவரம் சூழ்ந்து கொண்டது அகிலனுக்கு.

இங்கே கொஞ்சம் சூழ்நிலை சரியில்லை.

என்னடா சொல்ற?

நானாக்கு  ஹார்ட் அட்டாக். ஆஞ்சியோ பண்ணி இருக்கு.  அம்மா ஒரு பக்கம் மயங்கிட்டாங்க.

அய்யயோ என்னடா சொல்ற? இப்போ எப்படி இருக்கு?

நானா ஃபைன். பவித்ரா மாமா கால் பண்ணினார்.

ம்ம்ம்ம்ம் என்றான் அகிலன்.

பவித்ராவை அனுப்ப சொல்றாரு!

அது தானே முறை!

கொஞ்சம் தயக்கமா இருக்கு அகி.

ரொம்ப யோசிக்காதடா…. எது நடந்தாலும் பார்த்துக்கலாம்.

எப்படி இருந்தாலும் பவித்ரா சைடுக்கும் தெரிந்தாகணும்! அவங்க முடிவு என்னன்னும் தெரிந்தாகணுமே…

நீ சொல்றதும் சரி தான் அகி.

ஹரி ரொம்ப கோபம் வேண்டாம். கொஞ்சம் நிதானமாவே இரு!

சரிடா நாளைக்கு அவளை அனுப்பி வைக்கலாம்னு நினைக்கிறேன்.

நிச்சயம் நல்லதே நடக்கும் மச்சி.

“——————“

என்ன இங்கே உட்கார்ந்துட்டிங்க? அருகில் வந்து அமர்ந்தாள் பவித்ரா.

சும்மா தான்!

வாங்க சாப்பிடலாம்!

நீ இன்னும் சாப்பிடலையா?

உங்களோட சேர்ந்து சாப்பிட்டுக்கிறேன்.

நீ போய் சாப்பிடும்மா!

ஏன் ஒரு மாதிரி அப்செட்டா இருக்கீங்க?

அதெல்லாம் ஒண்ணுமில்ல.

எங்க  வீட்டிலிருந்து பேசினாங்களா?

ஆச்சரியமாய் அவள் முகம் நோக்கினான்.

எங்க மாமாவா?

இவ்வளவு புத்திசாலியா இருக்காளே… ஆச்சரியம் அவனுக்கு.

என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?

புரியாமல் பார்த்தான்.

என்னை அனுப்புறதை பற்றி!

பவி… சற்று அதிர்ந்து விட்டான்.

என்னைக்கு கிளம்பணும்?

உங்க அம்மாவை நம்பி அனுப்ப மாட்டேன். அவன் முகம் சிவந்தது.

அவங்க என்னோட அம்மா.

அது தான்டி எனக்கு பயமா இருக்கு!

இப்படிலாம் பேசாதீங்க!

வேறெப்படி பேச?

அவள் பதில் பேசவே இல்லை.

சொல்லு!

சொல்லு சொல்லுன்னா… என்ன சொல்லணும்?

என் அம்மா ரொம்ப மோசமில்லை.

அப்போ கொஞ்சம் மோசம்னு ஒத்துக்குற?

உங்கட்ட பேச முடியாது!

பேச வேண்டாம்… ஆனா என் கூடவே இரு!

இதென்ன பிடிவாதம்?

ஆமா பிடிவாதம் தான். என் பவி என்னோடவே இருக்கணும்!

நான் இன்னும் அவங்க பொண்ணு தான்!

யாரு இல்லைனு சொன்னது?

எப்படி இருந்தாலும் என் சைடில் ஏத்துக்க போகிறாங்களா? மறுக்க போகிறாங்களான்னு ஒரு முடிவு தெரியணும் தானே…?

அவங்க யாரு மறுக்க?

இதற்கு எப்படி பதில் சொல்ல? என்ன பதில் சொல்ல?

பதில் சொல்ல முடியாதுல்ல அப்போ போக வேண்டாம்.

நல்லா இருக்கு உங்க நியாயம். கல்யாணம் பண்ணாம நான் உங்க கூட இருக்கிறது சூப்பர்.

இப்போ என்ன உன் பிரச்னை? விவாகம் தானே வா இன்னைக்கே பண்ணிக்குவோம்….

பண்ணிக்கலாமே… வாங்க போவோம் கரம் பற்றி அழைத்தவளை  மிரட்சியுடன் பார்த்தான் 

என்ன மேன் லுக்கு?

எப்படியும் என்னை அனுப்ப முடிவு பண்ணியிருப்பீங்க அப்புறம் எதுக்கு இந்த டிராமா?

பயமா இருக்குடி…. கண்கள் மூடினான்.

நம்ப ட்ரை பண்றேன். இந்த ஹரி சரண் நந்தமூரிக்கு பயம்…. ம்ம்ம்ம்…. சிரிக்காம இருக்க ட்ரை பண்றேன்.

உனக்கு கவலையா இல்லையா? வெறுப்பேற்றும் அவளை கண்டன பார்வை பார்த்தான்.

எதுக்கு கவலை? என்ன நடந்தாலும் என் பாவா பார்த்துப்பார். மெல்ல அவன் கரத்தின் மீது தன் கரம் பதித்தாள்.

என்னால எதுவும் முடியாதது இல்லைரா அம்மாயி. என்னை எதுவும் தடுக்க முடியாது. ஆனா ரெண்டு சைடிலும் முழு மனசா சம்மதிச்சு சாஸ்திர சம்பிரதாயத்தோட நம்ம விவாகம் நடக்கணும்னு கொள்ளை ஆசை எனக்கு.

கண்டிப்பா இரு தரப்பிலும் சம்மதிக்காம நடக்காது…!

“——————–“

ஏர்போர்ட்டில் இறுக அவள் கரம் பற்றி அமர்ந்திருந்தான்.

நான் போகவா? வேண்டாமா? குழந்தை போல் முறுக்கிக் கொண்டிருப்பவனை ஆசையாய் சலித்துக் கொண்டாள்.

பதில் இருந்தா சொல்ல மாட்டேனா? முகத்தை கொணட்டினான்.

உங்களை…. அவன் தலையை சிலுப்பி விட்டு கையில் கிள்ளினாள்.

உனக்கு மூனு நாள் தான் டைம்!

அப்புறம்? சிரிப்புடன் கேட்டாள்.

அப்புறம் என்ன… கடத்தல் தான். கடுப்புடன் பதில் கொடுத்தான்.

சரி என்றாள் நமட்டு சிரிப்புடன்.

பவி உங்க அம்மா ஒத்துக்கலைனா? கலங்கியது குரல்.

இல்லைனா என்ன தற்கொலையா பண்ணிக்க முடியும்? கைநிறைய சம்பாதிப்பேன். நாடோடியா ஒவ்வொரு கன்ட்ரியா சுத்தி திரிவேன்…. எமன் வந்து கூப்பிடும் போது போய் சேர்ந்துடுவேன்!

அடியேய் குலாபி என் டயலாக் சுட்டு எனக்கேவா…? அவள் காதை திருகினான்.

காப்பி ரைட்ஸ் வாங்கிட்டீங்களா என்ன?

உன்னை…. அவள் கரம் பற்றி தோளில் சாய்த்துக் கொண்டான்.

மிஸ்டர் ஹரிசரண் இது பப்ளிக் பிளேஸ்.

நோ மிசஸ் ஹரிசரண் இது என்னோட ஷோல்டர். பிரேவேட் பிளேஸ் தான்… வெரி செக்கியுர்டு பிளேஸ் டூ…

மனமே இல்லாமல் அவ்வளவு வலியுடன் விமானம் ஏற்றினான்.

கண்ணீருடன் விடை பெற்றாள் காரிகை.

“——————-“

ம்மா எந்த சூழ்நிலையிலும் உங்க பாவாவை நீங்க இவ்வளவு நேசிக்கும் போது…

ராம்சரணுக்கு சந்தோஷமா எல்லாரும் சேர்ந்து விவாஹம் பண்ணி வச்சு அவன் இப்போ நானா ஆகப்போறான் இதை எல்லாம் பார்க்கும் போது எனக்கும் வாழணும்னு ஆசையா இருக்கும்மா.

எனக்கு பிடிச்சவளை உங்க சம்மதத்தோட விவாகம் பண்ணி சந்தோஷமா வாழணும்!

ஒரு மனசு உங்களை தாண்டி போக கூடாதுன்னு சொல்லுது! இன்னொரு மனசு நீ வாழ தகுதி இல்லாதவனான்னு கேட்குது.

நான் என்னம்மா பண்ணட்டும்? கலங்கிய மகனை அணைத்துக்கொண்டார் தாரணி.

நா மேனகொடலு எக்கட? (என் மருமகள் எங்கே ) மீசையை நீவிக் கொண்டார் சுப்ப கிருஷ்ணா நந்தமூரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!