Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️56

குத்துக்காலிட்டு கன்னம் தாங்கி சங்கடமாய் அமர்ந்திருந்தவளை வாஞ்சையுடன் பார்த்தவனுக்கு உயிர் மீண்டிருந்தது.

அம்மாயி ஒன்னும் பிரச்னை இல்லைரா நீ ஒன்னும் சங்கடப்பட வேண்டாம் இப்போதைக்கு மேரேஜ் வேண்டாம் இன்னும் ஒன் இயர் போகட்டும்னு சொல்லிடலாம் வற்றியிருந்த அவள் கன்னத்தை மெல்ல வருடினான்.

யோவ்…. அவன் முடியை கொத்தாக பற்றி மாவாட்டினாள். அவ்வளவு ஆவேசம் அவளுக்கு.

லேசாய் வலித்த போதும் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.



Advertisement

இன்னும் ஒன் இயர் கழிச்சு கல்யாணம் பண்ணிக்க நீ இருப்ப… நான் இருக்க மாட்டேன்…. விம்மி அழுதவள் இருகரங்களாலும் அவன் மார்பில் வலிக்க வலிக்க அடித்தாள். அவனுக்கும், அவளுக்கும் வலிக்க…

சிரிப்புடன் அவள் கரம் பற்றி சொடுக்கி இழுத்தவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.

என்னரா பங்காரம்…. அவள் கரம் பற்றி மென்மையாய் மிக மென்மையாய் வருடினான்.

Advertisement

சாரி பாவா…. உதடு துடித்து மேனி நடுங்கி கண்ணீர் அருவி கரைபுரண்டது.

Advertisement

ஆறுமாதமாய் அவள் அணைக்கட்டி அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெள்ளம் உடைப்பெடுத்தது. அவளும் எவ்வளவு தான் அழுத்தமாய் இருந்து விட முடியும்? அழுத்தம் கூடினால் பெருவெடிப்பு தானே…?

தோள் சாய தன் மனம்புரிந்தவன் அருகில் இருக்கும் நிம்மதியில் அவன் மார்பில் முகம் புதைத்து அவ்வளவு அழுது கரைந்தாள்.

பயந்துட்டேன்…. இப்படியே அழுது கரைஞ்சு ஒரு நாள் காணாம போயிடுவேனோன்னு பயந்துட்டேன்… பொய்யா உங்களுக்கு நம்பிக்கையை கொடுத்துட்டேனோன்னு மனசு குத்தி குடைஞ்சுது. வாழ பிடிக்காம பைத்தியமா நடமாடினேன்,அவன் சட்டையில் சலுகையாய் முகத்தை தேய்த்துக் கொண்டாள்.

Advertisement

ஆறுமாதம் காணாது தவித்து கிடந்த அவன் கண்கள் தனக்காய் உருகி கரைந்து மெலிந்து கிடக்கும் தன் தாரகையை தன்னோடு அணைத்து மோக்ஷம் பெற்றுக் கொண்டிருந்தது.

அவனின் செய்கை அவளை இன்னும் அழ வைத்தது.

என்னாரா குலாபி இதெல்லாம்…. மெல்ல அதட்டினான்.

செத்துடணும் போல தோணுச்சு! எதுக்கு இந்த காதல் கருமாந்திரம்னு தோணுச்சு… இன்னும் விம்மினாள்.

அப்புறம்…. அடர்ந்த புருவங்களை மேலேற்றி அழகாய் சிரித்தவனை கை விரல் நகம்கொண்டு பிராண்டி வைத்தாள்.

ஏய் குலாபி.. இதையெல்லாம் பார்த்தால் வேறென்னவோ நடந்திருக்குன்னு வெளியில் இருக்கவங்க நக்கலா சிரிப்பாங்கடி … அவளின் நக கீறல்களை வருடிக் கொண்டே கண் சிமிட்டினான்.

ச்சீய்… சிணுங்கி கொண்டே அவன் மடி சாய்ந்தாள்.

சரி இப்போ சொல்லு…. எப்போ விவாகம் வச்சுக்கலாம்… அவள் அணிந்த கண்ணாடி வளையல்களை நிரண்டி மருதாணியில் சிவந்த விரல் நுனிகளை ஆசையாய் வருடிக் கொண்டே அதீத காதலுடன் கேட்டான்.

இப்போவே… அவன் வயிற்றை கட்டிக் கொண்டாள். இந்த நொடி அவனை பிரிய அவள் மனம் தயாராய் இல்லை.

நான் ரெடி என்று அவன் சல்லாபித்து சிரிக்கவும் பக்கென்று எழுந்து கொண்டாள்.

நீ தானே அம்மாயி சொன்ன…? இப்போவே பண்ணிக்கலாம்னு சொன்ன?

நீங்க இருக்கீங்களே… நீங்க ரொம்ப மோசம்…பல்லைக் கடித்துக் கொண்டு அவன் தலையில் குட்ட வந்தாள்.

ஏய் மிர்ச்சி நீ பேசினா ரொமான்ஸ் அதே டயலாக்கை நான் பேசினா வயலன்ஸா…? அவள் கரம் பற்றி மீசை முள் குத்த முத்தமிட்டான்.

அவனிட்ட முள் முத்தம், மோக முத்தமாய் அவளுக்குள் மின்சாரம் பாய்ச்சி குறுகுறுத்தது.

வாங்க போகலாம்?

எங்கே…?

ம்ம்ம்ம்… ஹனிமூனுக்கு … வெட்கசிவப்பில் லேசாய் சடைத்துக் கொண்டாள்.

என் குலாபி புல்ஃபார்ம்ல இருக்கா… நோ எங்கேஜ்மெண்ட் டைரக்ட்டா விவாகம் தான்.

அடச்சீ… பேச்சை பாரு… அவன் வாயில் ஒன்று போட்டாள் (கையால் தான் )

பேசறதெல்லாம் நீ பேசிட்டு என்னை டர்ட்டி ஃபெலோ ரேஞ்சுக்கு திட்டுற… கேடி தாம்மா நீ…! வலிக்க அவள் கன்னம் கிள்ளி கொஞ்சினான்.

என்ன இப்படி கண்ணுக்கு கீழே கருவளையம் எல்லாம் வந்திருக்கு? பளிச்சுன்னு இருக்குற முகம் கறுத்து கிடக்கு….கன்னம் வத்தி போச்சு…வேதனையுடன் வருடிப் பார்த்தாள்.

என் அம்மாயியை பார்க்காத கண்ணு ஏங்கி ஏங்கி தூக்கமே வராம இப்படி ஆகிடுச்சு! அவன் கர கரத்த குரலில் காதலுடன் உரைத்தது அவள் உயிரில் சென்று தைத்தது உணர்வை கொஞ்சம் வதைத்தது.

நான் பண்ணது தப்பு தான்…. சாரி….நீங்க என்னை புரிஞ்சிகிட்டீங்க தானே…? மீண்டும் கண்ணீர் கசிந்தது.

பவிம்மா நீ இன்னும் என்னை புரிஞ்சுக்கலன்னு இப்போ புரியுது!

நீ விளக்கம் சொல்லி எனக்கு புரிய வேண்டிய அவசியம் என்னைக்குமே இருக்காது.

உன் ஒத்த பார்வைக்கு மொத்த விளக்கமும் சொல்லிடுவேன்.

நம்ம காதலுக்கு நாம போராடாம…? ஈஸியா கிடைக்குறது ஹேப்பியா இருக்காதுரா பங்காரம். நாளைக்கு நம்ம குழந்தைங்களுக்கு சொல்ல திரில்லிங்கான லவ் ஸ்டோரி வேண்டாமா?

நீ தனியா, நான் தனியா வலி சுமக்கலை நாம சுமந்தோம் அவ்வளவு தான்.

ஆறுமாசம் வருத்தப்பட்டோம் இனி ஆயுளுக்கும் சந்தோஷமா இருப்போம். இனி இதை பற்றி பேச மட்டுமில்ல யோசிக்க கூட செய்யக் கூடாது சரியாரா செல்லம்மா…

ம்ம்ம்ம்…. என்பதாய் தலை அசைத்தாள்.

நடந்ததை விடு! நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு! மனசுக்குள்ள எதையாவது போட்டு உழப்பிக்காம இரு!

அப்புறம் சொல்ல மறந்துட்டேன் பாரு… இந்த புடவையில் நீ ரொம்ப அழகா இருக்க…. கீற்றாய்  தெரிந்த இடையை குறு குறுப்பாய் பார்த்து ரசித்தான்.

அவன் பார்வையின் திக்கை புரிந்து கொண்டவள் அவசரமாய் புடவையை இழுத்து மூடிக் கொண்டாள்.

எத்தனை நாளைக்கு….? கண்சிமிட்டினான்.

போடா…. நாணம் அவளை வெகுவாய் அவஸ்தை படுத்த முகத்தை மூடிக் கொண்டாள்.

நீ வெட்கப்பட வெட்கப்பட இந்த ஹரி கெட்ட பையன் ஆகிடுவான்போல…

நான் நல்ல பிள்ளையா வெளியில் போறேன்…!

அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகினான்.

அய்யோ பாவா… இங்கே வாங்க? அவன் கரம் பற்றி இழுத்தாள்.

எ… என்ன?அவன் இதழ் கடித்து குறு குறுத்து ஏதோ எதிர்பார்க்க… டிரஸ்ஸிங் டேபிளில் இருந்து சீப்பை எடுத்து தலை வாரி விட்டாள்.

இதுக்கு தான் கூப்பிட்டியா? பொய்யாய் முகம் சுணங்கினான்.

அடி வாங்காம போய் சேருங்க தொங்கா… சிரிப்புடன் விரட்டினாள்.

“——————–“

அண்ணையா வதன ஓகே தானே…? அதுக்குள்ளவா பேச்சு வார்த்தை முடிஞ்சுது..? தேவ்  ரகசியமாய் கண்சிமிட்டினான்.

அடங்கி உட்காருடா….!

அண்ணையா வாட்ச் பக்கத்தில் நகக் கீறல் இருக்கு நான் எதுவும் பார்க்கல… வேற யாரும் பார்க்க மாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன்…. சொல்லிவிட்டு நான்கடி தள்ளி நின்று கொண்டான்.

ச்சீ போடா…ஹரிக்கு வெட்கம் வெட்கமாய் வந்தது. மானம் போகுதே… கெத்தான ஹரி குப்புற விழுந்துட்டானே… உள்ளுக்குள் அழகிய கோபம் அவனுக்கு.

டேய் இங்கே வந்து உட்காரு… அவன் உனக்கு அண்ணன் ஞாபகம் இருக்கா?சும்மா அவனை சீண்டிக்கிட்டு… அவன் உங்களை மாதிரி வால் பையன் இல்லை. அவனை போய் எந்நேரமும் பிராண்டிக்கிட்டு ஷியாமளா மகனை கடிந்து கொண்டார்.

அய்யோ ம்மா பிராண்டினது நான் இல்ல…. அது வதி…. அவன் சொல்லி முடிப்பதற்குள் தட்டில் இருந்த வாழைப்பழத்தை தோலோடு எடுத்து அவன் வாயில் அழுத்தி இருந்தான் ஹரி.

“—————–“

நிச்சயதார்த்தத்தை கிராண்டா பண்ணிடணும்! வெங்கி மீசையை முறுக்கிக் கொண்டார்.

தமயந்தி அண்ணன் முகத்தையே கலக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

மணவாளன் என்ன பேச என்று தயங்கிக் கொண்டிருந்தார்.

இவர்கள் அந்தஸ்த்திற்கு பங்ஷன் செய்ய பல லட்சம் வேண்டுமே….?  நிச்சயதார்த்தம் மொத்தம் பெண் வீட்டு செலவு அல்லவா?

ஷியாம்மா நம்ம வசதிக்கு அவங்க பெரிய மண்டபம் பார்த்து வித விதமா ரெசிபி செய்ய பெரிய கேட்டரிங் தேடி எல்லா அரேஞ்ச்மெண்டும் பண்ண அவங்களுக்கு சரிவராது. ப்ளீஸ் சின்நயனாக்கு ஏதாவது சொல்லி சமாளிங்க… ஷியாமளாவின் காதில் கிசுகிசுத்தான் ஹரி.

மகனின் மனவோட்டம் புரிந்த தாரணி. நிச்சயதார்த்தத்தை சிம்பிளா பண்ணிக்கலாம் என்றார்.

நம்ம ராம் விவாகமே சிம்பிளா பண்ணிட்டோம். நம்ம வீட்டு மூத்த வாரிசுக்கு விவாகம் பண்ணபோறோம் ஒவ்வொரு சடங்கும் ஊரே வியக்குற மாதிரி இருக்க வேண்டாமா? குறைபட்டுக் கொண்டார் சுப்பு.

இன்னும் மூனு மாசத்துக்குள்ள விவாகம் பண்ணிடணும்னு நம்ம ஜோசியர் சொன்னாரில்லையா?  விவாகத்துக்கு ரெடி பண்ணவே நமக்கு நேரம் போதாது இதுல நிச்சயத்துக்கு எங்கிருந்து நேரம் ஒதுக்க? தாரணியின் முணுமுணுப்பு கேட்டு மறுப்பாரா சுப்பு.

நம்ம நெருங்கின சொந்தங்களை மட்டும் வைத்து நிச்சயம் பண்ணிடுவோம் என்றார் சுப்பு.

அண்ணே மத்த விஷயங்களை பேசிடுண்ணே என்றார் தமயந்தி.

எதுவும் பேச வேண்டாம் என்று மணவாளனிடம் கண்மூடி  ஜாடை காண்பித்தான் ஹரி.

என்ன பேசுவார்கள் என்று ஆவலாய் எதிர்பார்த்திருந்தார் ஜெயலட்சுமி.

என்ன சீர் செய்வாங்க?என்று ஹரியின் உறவுக்கார அவ்வா கேட்டு வைக்க…

அவஸ்தையுடன் தாயை ஓரக் கண்ணால் பார்த்தான்.

எங்க மருமக பொண்ணுக்கு விலை மதிப்பே இல்ல பின்னி . நாம என்ன வியாபாரம் பேசவா வந்தோம்? நம்ம கிருஷ்ணா குடும்பத்துல என்ன குறைவா இருக்கு…? தாரணி போட்ட போடில் யாரும் வாய் திறக்கவில்லை.

அடுத்த மாதம் 23 ம் தேதி புதன் கிழமை நல்ல நாள் என்று எங்க ஜோசியர் சொன்னார் உங்களுக்கு ஓகே தானே…? வெங்கி கேட்டார்.

நீங்க சொன்னா சரி தான் என்றார் மணவாளன்.

எப்படி குறைச்சு லிஸ்ட் எடுத்தாலும் எங்க சைடில் ஒரு நூறு பேராவது வருவோம். சாப்பாடு மட்டும் நல்ல ருசியா போட்டுருங்க என்றார் சுப்பு.

நீங்க சொல்லணுமா? ஆந்திரா ஸ்பெஷல் செய்து அசத்திடுவோம் என்றார் மணவாளன்.

அது தான் இல்ல… எங்களுக்கு உங்க ஊர் ஸ்பெஷல் தான் வேணும்! சுப்பு மகிழ்வாய் சிரித்தார்.

“———————-“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!