Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 19 2

இருந்தாலும்  அவருக்கு பயம் தான்… குழந்தை அல்லவா,,, இறைவா எல்லாம் நல்லபடியாக எல்லாம் நடக்கவேண்டும் என்று…

 வைஷு நாளை நடக்கும்  நடனத்திற்கு அனைத்தையும் ஏற்பாடு பண்ணியவள்..



Advertisement

அவள் அறைக்கு வந்ததும் வீ.பியின்  ஞாபகம் வர.. பாவா, பாவா என்று போனில் உள்ள புகைபடத்தை பார்த்து அவனிடம்  பேசியவள்..

கணவனுக்கு  ‘ஐ மிஸ் யூ பாவா, கம் பாஸ்ட் மீ’ என்று மெஜேஸ் மட்டும் அனுப்பியவள், தூங்கி விட..

Advertisement

Advertisement

வைஷு ஜோடி நடனம்  ஆட கிளம்பினாள்..,, நாளை ஆடும் போட்டியில் கூட அவளுக்கு பயம் இல்லை, இன்று என்று யோசித்தவள்.. அவள் நீண்ட  நாள்  முன்   டி.வியில்  பீட்டி, உஷா  ஒரு பேட்டியில்  பேசியதை நினைத்து பார்த்தாள், அவர் கருவுற்று போது கூட, இந்தியாவுக்காக  ஓடி வின் பண்ணியதை கூறியவர்,, பெண்களுக்கு எதுவும் தடையில்லை, தன் நம்பிக்கை விடாமுயற்சி இருந்தாள் போதும், எந்த நிலமையிலும் சாதிக்கலாம், என்று சொல்லியதை நினைவு படுத்தி கொண்டவள்..

என் பிள்ளைகள் என்னை கைவிட மாட்டார்கள் என்று குழந்தையிடம்  பேசிய படியே கிளம்ப..

Advertisement

வைஷு  சொர்ணமுகியிடம் அவள் நடனம் ஆடும் நடனத்தை பற்றி சொல்ல.. சொர்ணமுகிக்கு மயக்கம் வராத குறைதான்,,

“வேண்டாம் வைஷு, இதுல  ரிஸ்க்கு ரொம்ப ஜாஸ்தி, இந்த டான்ஸ் வேண்டாம், நம்ம ஏற்கனவே  ஆட ரெடி பண்ண ஆண் டான்சர் இருக்காரு, உனக்கு தான் அந்த டான்ஸ் புல்லா தெரியுமே டா, வேண்டாம்டா  வைஷு” என்று பேச..

“இல்ல மேம் அந்த டான்ஸ் ஆடுன கண்டிப்பா நாமா வின் பண்ண முடியாது மேம்” என்றவளை..

“நான் வீ. பிக்கு போன் போட்டு சொல்ல போறேன்… வைஷு” என்று அவளை சொர்ணமுகி மிரட்ட..

“நீங்க சொல்லமாட்டீங்க மேம்,, நீங்க அவர் கிட்ட சொன்னாலும், அவரால இங்கே உடனே வர முடியாது, சோ பயப்படதீங்க, என்னை நல்லா டான்ஸ் ஆடுயின்னு  வாழ்த்துங்க”  என்றவள்… சொர்ணமுகி பாதம் பணிய போக..

“வேண்டாம் வைஷு நல்லா பண்ணு,, உன் வைத்துல இருக்குறது,, இந்திரா தேவி மேடமோட வாரிசுங்க,அத நெனச்சாதான் பயம் எனக்கு, நீயே இவ்வளவு சொல்லும் போது எனக்கு சந்தோஷம் தான் வா”  என்று அவளை  அழைத்து வந்தார் போட்டி நடக்கும் இடத்துக்கு…

போட்டிகள் தொடங்கின.. முதலில் ஆடியது சிங்கப்பூர் ஜோடி டான்ஸ்சர்கள்.. தான் ஆடினார்கள்… நடனமாடுபவர்கள் ஆங்கிலேயர் போல உடை அணிந்து  பனி சருக்கு நடனத்தில் ஆடுவது  போல டைட்டாக உடை அணித்து நடனம் ஆட..

அந்த ஆணும், பெண் டான்சரும் மிக ஒல்லியாக இருக்க.. ஆண் டான்சர் பெண்டான்சரை அவர் தலைக்கு மேல் தூக்கி சுற்றி ஆடி பின்பு இறக்கி விட்டு, பின்பு அந்த இடத்தை   சுற்றி, சுற்றி அழகாய் நடனம் ஆட…

பார்ப்பவர் இவர்கள் தான் இந்த போட்டியின் வின்னர் என்று முடிவு கட்டிவிட.

அடுத்தது கேரளா டான்சர்  இருவரும் காந்தாரா படத்தில் வரும் கடவுள்  போல் மஞ்சள் நிற உடை அணிந்து.. அந்த படத்தில் உள்ள பாட்டிற்க்கே அழகாய்  நடனம் ஆட.. பார்ப்பவர்கள்  பயபக்தியோட நடனத்தை பார்க்க..

முதலில் ஆக்ரோஷமாக ஆட, பின்பு  முடிவில் ஜோடியாக சேர்ந்து ஆடிவிட்டு,  இறுதியாக இவ்வுலகில்  அனைவரும் எந்த ஒரு வேறு பாடு இல்லாமல் ஒன்றாக   இருக்கவேண்டும் என்று  ஆடிகாட்டியதை பார்த்து அனைவருக்கும் கண்ணீல்  நீர் வந்து விட்டது,, அவர்களின் நடிப்பும், டான்ஸும், கதை சொல்வது போல்  இருந்தது.

அடுத்தது வைஷு மேடை ஏறினாள்..

அவள் ஒரு இருபது வயது சின்ன பையன் கூட கைகோர்த்த படி ஜோடியாக  நிற்க..

பார்த்த அனைவருக்கும், என்ன இது  ஜோடி நடனத்துக்கு  தன்னை விட சின்ன பையனை அழைத்து வந்திருக்கிறாள் என்று.. அதுவும் அவர்களின் உடையை பார்த்து என்ன நடனம் என்று புரியாமல் முளிக்க..

வைஷு ரெட்கலர் டாப், கருப்பு நிற முட்டிக்கு கீழ் வரை டைட்டாக பேட் அணிந்து இருந்தாள்,, அதே போல தான் அவள் கூட ஆட வந்த நேபாளத்தை சேர்ந்த பையனும் உடை அணிந்திருக்க..

எல்லாரும்  இவர்கள் என்னத்தை ஆடி கிழிக்க போறார்கள் என்று பார்க்கலாம் என்று ஆவலாக இருக்க..

அவர்களுக்கு தலைக்கு  மேலே இருந்து வெண்ணிற உடை சீலைபோல் கீழே  இருவருக்கும்  வர.. அதை பிடித்துக்கு  கொண்டு  இருவரும் நடன மேடைக்கு   முன்னால் வந்து நிற்க.. பின்னாடி வைலின் இசை சத்தம் இதமாக ஒலிக்கும் சத்தம்  வர..

வைஷு அவள் பிடித்து இருந்த  வெண்ணிற   ஊடையை பிடித்துக்கொண்டு, அந்த  நேபாள் பையனின் கைபிடித்து, கால் தரையில் இல்லாமல் ஸ்கை டான்ஸ் ஆட..

பார்ப்பவர்களுக்கு  ஒரு கவிதை போல்,  இருந்தது இவர்களின் நடனம்.  மனதை மயில் இறகால் வருடுவது போல்  நடனம் இருக்க..

இருவரும் கைகளை கோர்த்து கொண்டு நடனமேடையில்  கால் கீழே படமால் மேல் கைபிடித்து  ஆகாயத்தில் சுற்றி வருவது போல் சுற்றியவர்கள்… பின்பு இருவரின்  கைகளை விட்டு அந்த ரோப்பை மட்டும்  பிடித்துக்கொண்டே ஆகாயத்தில் இசைக்கு ஏற்றவாரு ஒரு நிமிடம்  நடனம் ஆடிவிட்டு..

பின்பு ரோப்பில் இருந்து  கீழ் இறங்கி அந்த துணியை பிடித்து தன்னை, தானே சுற்றிக் கொண்டு  வித, வித மான நடன போஸ் கால் தரையில் படமால் ஆடிகொண்டே போஸ் குடுக்க..

இருவரும் தனி, தனியா ஒருவருக்கு, ஒருவர் மேலே கீழே என்று ஆட..

பார்ப்பவர்களுக்கு  வியப்பாக இருக்க… சொர்ணமுகிக்கு  வேர்க்க ஆரம்பித்து விட்டது.. எதும் விபரீதமாக நடந்து விட கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டார்..

பின்னாடி ஒலிபெருக்கியில் பட்டாபூச்சியில் பாடல் ஒலிக்க, வைஷுவும் அந்த நேபாள் பையணும், ரோப்பை தன்மீதும் இறுக்கமாக  சுற்றி கட்டி   கொண்டு ஆகாயத்தில் பட்டம்பூச்சி பறம்பதும்  போல் இருவரும்  பறந்து காட்ட..

பார்த்திருந்த அனைவரம் எழுந்து நின்று கைதட்டினர்,, அவ்வளவு அழுகாய் இருந்தது இருவரின் நடனம்.. கைதட்டல் நிற்காமல்  வர.. இருவரும் மேலே இருந்து கைபிடித்தபடியே ஜோடி பட்டம்பூச்சி பறப்பது போல் பறந்து கீழே பறந்து  வந்து பிறகு மேலே சென்று   வட்டம் அடிக்க .

அவர்கள் ஆடிக்கொண்டு இருக்கும் போதே.. வரிசையாக வண்ண, வண்ண கலர் கோல பொடிகள் கோபுரம் போல்  இடைவேளை விட்டு, விட்டு வைஷுசு  சொல்லியது போல் கலர்களை ஒருவர்  வந்து வைத்து விட்டு செல்ல..

வைஷு ரோப் வலியாக கீழே தரையில் இறங்காமல்.. தன் கால் கடைவிரல் மட்டும் பயன் படுத்தி வண்ண கலர் பொடியை சிதறி, தன்  காலை  மட்டும் பயன் படுத்தி ஓவியம் வரைய..

அவள் என்ன செய்கிறாள் என்று யாருக்கும் தெரியவில்லை.. ஏதோ செய்கிறாள், வரைகிறாள் என்று மட்டும் தெரிய..

வைஷு ரோப்பை வைத்து சுற்றி ஆடிக் கொண்டே ஓவியம் போல் வண்ணம் தீட்டினாள்.. அவள் தன் கட்டைவிரல் மட்டும் தீட்டியதால், கட்டை விரலில்  இருந்து இரத்தம் வர ஆரம்பித்து இருந்தது,, .. அவள் ஒவ்வொருமுறை காலை அழுத்தி, மேலே சென்று ஆடி விட்டு மீண்டும் கீழே வந்து  ஓவியம் வரைவதால்   வந்த விளைவு..

அவள் ஓவியம் வரைந்து முடிந்ததும் விசில் அடித்து ஆண் டான்சருக்கு  தகவல் செல்ல. அவனோ அவனுடைய. ரோப்பை விட்டு வைஷு ரோப்பை பறந்து வருவது போல் தாவி பிடிக்க..

வைஷு ரோப்பை பிடித்து தன் இடப்பை சுற்றியவள்.. அமர்வது போல் கண்முடி ஆகாயத்தில் பறப்பது போல் கண்மூடி அமர்ந்து விட..

ஆண் டான்சர் பையன் வைஷு ரோப்பை தன் கையால்  பிடித்து  அந்த ஓவியந்தை சுற்றி வந்து சாலாம் வைப்பதும் போல்   அவளையும் சேர்த்து இழுந்துக்கொண்டு  அந்த ஓவியத்தை சுற்றி வந்து சாலாம் வைக்க..

இருவருக்கும் மேலே கேமரா பறந்து வந்து அவர்களை வீடியோ எடுத்து ,,  நேரடியாக திரையில் காட்ட..வைஷு  வரைந்தது அகாடமி நம்பர்  ஒன் கோப்பையை தத்துருமாக  வரைந்ததை பின்திரையில் இவர்கள் நடனம் ஆடுவதை  சேர்த்து காண்பிக்க அவ்வளவு அழகாய் இருந்தது அந்த காட்சி, கைதட்டல் ஓயாமல் அடித்து கொண்டே இருக்க..

நேபாளத்து பையன் அவன் ரோப்புக்கு தாவி சென்று விட..

வைஷுவும், அந்த நேபாள் பையனும் ரோப்பை தன் உடம்பில் சுற்றிகொண்டே  மேலே நுனி  வரைக்கு சென்றவர்களா..  பின்பு சட்டென ரோப்பை விட..

 ஒலி சத்தம் ஒரு  நிற்று விட..

இருவரும் கீழே விழுவது  ரோப்பில் இருந்தவர் கீழே  கலண்டு  கொண்டே ரோப்  வழியே  சுற்றிக்கோண்டே வர…

பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் உயிரே நின்று விட்டது, எங்கே இருவரும் கீழே விழுந்து விடுவார்களோ என்று, சொர்ணமுகி வாய்விட்டே கத்தி இருந்தார் “வைஷு, பாத்து வைஷு”.. என்று கத்த…

கீழே விழும் ஒரு நொடிமுன் இருவர் ரோப்பை பிடித்து  நின்று. தங்கள் காலால் ரோப்பை   சுற்றிக்கொண்டு,  இருவரும்  புழு போல் குனிந்து.. இதயம் வடிவத்தை கொண்டுவந்தவர்கள், லவ்  என்று பின்திரை இதயம் வடிவம் காண்பிக்க பட.. இருவரும் ரோப்பில் இருந்து கீழே இறங்க.. வைஷுவின் ரோப் முழுவது சில இடங்களில் அவளின் காலில் வடிந்த இரத்தம் தெரிய,,…

பார்த்த அனைவரும் எழுந்து நின்று இவர்கள் ஆடியதர்க்கு   கைதட்டி விசில் அடித்து தங்கள் ஆதரவைக் சொல்ல… வைஷுவும், அந்த ஆண் டான்சரும் தலை குனிந்து கைதட்டும் அனைவருக்கு  நன்றி சொல்ல….

வைஷுவை திரும்பி பார்த்த அந்த நேபாளத்து டான்சர்  வைஷுவுக்கு நன்றி சொல்ல, அவனின் தலை மீது கைவைத்தவள்.. “நல்லா வருவடா ஜோ”  என்று அவனை ஆசீர்வாதம் பண்ணியவள்..

கீழே இறங்க..கண்கலங்கி பயத்தோடு நின்ற  சொர்ணமுகியை அணைத்துக்கொண்ட வைஷு..

“எப்படி மேடம் டான்ஸ்,,”. என்று கேட்க “என் உயிரே போயிடுச்சு வைஷு”  என்றவர்..

“உன்  டான்சும், திறமையும் வேற லெவள் வைஷு, உன்ன வின் பண்ணுறது  ரொம்ப கஷ்டம்”…

போட்டியின் முடிவுகள் இந்திரா தேவியின் ஐ. டி. டி அகாடமி வின் பண்ணியதாக நடுவர், சொல்ல..

சிங்கப்பூர் நடன கலைஞர்கள் கோபமாக வைஷுவை பார்த்து.. நாளை தெரியும் யாரு வின் பண்ண போறாங்களாண்ணு என்று வைஷுவை பார்த்து கூற..

“என்ன வைஷு அவங்க தோத்துட்டு  இப்படி பேசுறாங்க”

“அவனுங்க நாளைக்கு ஜெயிச்சிட்டா அவங்களுக்கு  தான் கப்பு மேம்,, அதனால தான்  அப்படி சொல்லிட்டு  போறானுங்க, “..

“அது  எப்படி  வைஷு நம்மலும், கேரளாவும் தானே, ஒரு, ஒரு போட்டி வின் பண்ணி இருக்கோம், அப்பறம் எப்படி என்று?”.. சொர்ணமுகி கேட்க..

“மேம் மொத்தமா வின் பண்ணதுல  சிங்கப்பூர் காரணுங்க தான் பாய்ட் படி பார்த்த  முன்னாடி இருக்குகாணுங்க.. நாளைக்கு அவனுக்கு  போட்டியில வின் பண்ணா கண்டிப்பா கோப்பை  அவங்களுக்கு தான்” ..என்றதும்.

“என்ன வைஷு அப்போ நீ இவ்வளவு கஷ்டபட்டது?”.

“கண்டிப்பா பலன் கிடைக்கும் மேம்”.. என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!